22 September 2012

3Dயில் பிபாஷா

அன்புள்ள வலைப்பூவிற்கு,

“மே ஹிந்தி நஹி ஜாந்தா” என்பதையே கூகுள் மொழிபெயர்ப்பான் மூலமாக தெரிந்துக்கொள்ளும் அளவிற்கே என்னுடைய வடமொழியறிவு. அதனால் ஹிந்தி படங்களெல்லாம் பார்ப்பதில்லை. இருப்பினும் அவ்வப்போது சில ஹிந்தி பட போஸ்டர்கள் மெர்சலாக்கும். சமீபத்திய மெர்சல் - ராஸ் 3. இதுபோல போஸ்டரடிக்கும் பெரும்பாலான படங்களில் பெரும் பலான காட்சிகள் இருக்காது என்று தெரிந்தாலும் கூட, கடந்த வாரம் கள்ள பருந்து என்ற கசப்பு மருந்து சாப்பிட்ட வாய்க்கு பிபாஷா சர்க்கரை போடுவார் என்று நம்பினேன். வீண் போகவில்லை.

முதலில் பிபாஷாவை பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய இன்ட்ரோ:- பிப்ஸ் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் பிபாஷா பாசு, தன்னுடைய பதின்பருவத்தில் மாடலிங் உலகில் தொபுக்கடீர் என்று குதித்தவர். உள்ளாடை விளம்பரமொன்றில் தன்னுடைய அப்போதைய காதலனுடன் பிப்ஸ் கொடுத்த கசமுசா போஸ் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அப்போது அட்டைப்படத்தில் பிபாஷா அச்சாகாத மேகஸின் எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை. பாலிவுட் பெருந்தலைகள் வெத்தலாக்கு வைத்து அழைத்தும் கூட மசியாத பிபாஷா முதல்முறையாக ஒப்புக்கொண்டது வில்லி கேரக்டர்...! அடுத்தது திகில் படம் - இப்போது வெளிவந்திருக்கும் ராஸ் படத்தின் முதல் பாகம். அதற்குப்பின் சில துக்கடா படங்களில் நடித்த பிபாஷா “ஜிஸ்ம்” என்ற செம ஆச்சாரமான... ச்சே சமாச்சாரமான த்ரில்லர் படத்தின் மூலம் பெரும்புகழ் அடைந்தார். காமப்பார்வை, காந்தக்குரல், கார்வண்ணம் என்று ரசிகர்களை அந்தமாதிரியாக கிறங்கடித்த பிப்ஸ் மீது செக்ஸ் சிம்பல் முத்திரை பதிந்தது. பாலிவுட் செக்ஸ் அணுகுண்டுகள் ஜீனத் அமன், பர்வீன் பாபி வரிசையில் பிபாஷா கல்வெட்டுக்களில் பதியப்பட்டார்.

இரண்டாயிரங்களின் மத்தியில், வங்காள ரசகுல்லா பிபாஷா தமிழில் நடிக்கும் வாய்ப்பு தமிழ் சினிமாவிற்கு கிடைத்தது. சச்சின் படத்தில் பிபாஷா நடிக்கும் செய்தியறிந்த போலி தமிழ் தேசியவாதிகள் சிலர் அவர் கருப்பாக இருப்பதாக துவேஷித்தனர். அவர்கள் செய்த அக்கொடுஞ்செயலின் வினையாக சச்சின் படத்தில் பிபாஷா “கெளரவ தோற்றம்" தந்த “டேய் டேய் டேய் கட்டிக்கோடா...” பாடல் வெட்டி எரியப்பட்டது. பின்னர் போனால் போகட்டும் என்று சேர்த்துக்கொண்ட பாடல் இப்போது யூடியூபிலும் கிடைக்கிறது. ஆனாலும் பிபாஷா தமிழ் ரசிகர்களை மட்டும் இன்றுவரை மன்னிக்கவில்லை. பின்னே, “என்னைப்போல கட்டுடல் மெயின்டெயின் பண்ண முடியுமா...?” என்று ஐஸ்வர்யா ராய்க்கே பகிரங்க சவால் விட்டவர், ஆசியாவின் செக்ஸியான பெண் பட்டத்தை இருமுறை பெற்றவர், அவரையே அழகில்லை என்று சொன்னால் அடுக்குமா...!

சரி, இப்போது ராஸ் 3 படத்தின் கதைக்கு வருவோம். படத்திலும் பிபாஷா பிரபல நடிகை. திரைத்துறையின் உயரிய விருதொன்றை பிப்ஸ் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும்போது புதுமுக நடிகை இஷா வாங்கிவிடுகிறார். உடனே, பிப்ஸ் திடீர் கடவுள் மறுப்பாளராக மாறி விநாயகர் சிலையை மண்ணுக்குள் புதைத்துவிட்டு ஒரு அமானுஷ்ய சக்தியின் உதவியை நாடுகிறார். அவரும் மந்திரிச்சி விட்ட பன்னீர் ஜோடா பாட்டில் ஒன்றை பிப்ஸிடம் கொடுக்கிறார். எதிரிக்கு அந்த திரவத்தை கொடுத்தால் அவர் மன உளைச்சல் அடைவாராம். பன்னீர் ஜோடா ப்ராஜெக்டை முடிக்க தன்னுடைய காதலன் இம்ரான் ஹஸ்மியை அனுப்பி வைக்கிறார் பிப்ஸ். அவர் பன்னீர் ஜோடா கொடுக்கப் போன இடத்துல பாலை குடிச்சிடுறார். அப்புறமென்ன அவதார் பட ஹீரோ மாதிரி அங்கிட்டு தாவின ஹீரோ இஷாவை காப்பாற்றினாரா அல்லது பிப்ஸுடைய பழி வாங்கும் படலம் நிறைவேறியதா என்பதே மீதிக்கதை.

இறுதியில், பக்ரீத் அன்னைக்கு அனைவரும் குர்பானி கொடுக்க வேண்டுமென்ற கருத்தை வலியுறுத்திவிட்டு படம் நிறைவடைகிறது.

படத்தோட ஹீரோ இம்ரான் ஹஸ்மி. அவரைப் பற்றி சொல்லனும்னா, ம்ம்ம்ம் அவர் ஒரு... சரி வேண்டாம் விடுங்க அவரைப்பற்றி நினைத்தாலே வசையருவி பாய்கிறது. (பொறாமை... லைட்டா....)

நம்ம பிபாஷாவுக்கே வருவோம். படத்தின் தொடக்கத்தில் “ப்ளாக் மேஜிக்” என்று அடிக்கடி சொல்லுவது என்னவென்று பிபாஷா தன்னுடைய கருப்பு நிற உள்ளாடையை வெளிப்படுத்தும்போது தான் புரிகிறது. உள்ளாடை மட்டுமில்லாமல் மேலாடை, கீழாடை, பாலாடை, தேனாடை அதுவும் போதாதென்று தன்னுடைய கார்வண்ண கூந்தலையும் கட்டவிழ்த்துவிட்டு ஷாம்பூ விளம்பர தேவதை போல வலம் வருகிறார் பிபாஷா. ஆனால், அசப்பில் கறுப்புநிற கட்டழகியான பிபாஷா மேக்கப் மகிமையால் பபாஷா மாதிரி பளிச்சென்று தோற்றமளிக்கிறார். பிபாஷா திரையில் தோன்றும் காட்சிகளில் நம்முடைய கண்கள் கேரம்போர்டு காயின் போல அல்லோலப்படுகின்றன.

மர்ஹபா... மர்ஹபா... என்றொரு பாடல். குட்டியூண்டு டிரஸ் போட்டுக்கொண்டு குதித்து குதித்து கும்மாளம் போடுகிறார் பிபாஷா. அப்பாடல் காட்சியின் நடுவினிலே பிபாஷா நீச்சல் குளத்திலிருந்து எழுந்து வருவதை தரிசித்தால் பாலைவனத்தில் கூட ஊற்றெடுக்க வாய்ப்புண்டு. அப்புறம் கிஸ். நம்மூர் படங்களை மாதிரி பொடணியில் கேமராவை வைக்கும் மலிவான யுக்தியெல்லாம் இல்லை, எல்லாமே மேலை நாட்டு பாணியில் பாலை வார்க்கிறது.

ராஸ் 3 பார்க்கும்போது பிபாஷாவோடு இஷா குப்தா என்ற இலவச இணைப்பும் கிடைக்கிறது. ஆனால், கனியிருப்ப காய் கவர்ந்தற்று என்று வள்ளுவரே சொல்லியிருப்பதால் நாம் சலனப்பட தேவையில்லை.

ஏற்கனவே பிபாஷாவை புறக்கணித்த தமிழின துரோகிகள் தேவி பாலாவில் பத்து ரூபாய் டிக்கெட் எடுத்தாவது ராஸ் 3 பார்த்து அல்லது இனிவரும் பிபாஷா படங்கள் நிச்சயமாக 3Dயில் மட்டுமே வெளிவர வேண்டுமென்று ஜனாதிபதிக்கு ஒரு கருணை மனு போட்டு உங்களுடைய பாவத்தை கழுவிக்கொள்ளுங்கள்...!

 
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

16 comments:

Prem S said...

ஹா ஹா செமையா ரசித்து இருக்கீங்க போல

நகைச்சுவை ததும்பும் விமர்சனம்

Unknown said...

இந்த பயலுக்கு பிபாஷா ஃபீவர் புடிச்சிருச்சு....இனி தொடர்ந்து பிபாஷா படமா பார்த்தாத்தான் ஃபீவர் குறையும்.மன்மதன்ல அம்மணி இருக்குதுன்னு நெனைக்கிறேன்.

Anonymous said...

ரேஸ்கல். 'சாட்டை'யால அடிக்கணும்!!

முரளிகண்ணன் said...

செம கலக்கல் விமர்சனம். இனைப்புகளும் அருமை

பட்டிகாட்டான் Jey said...

பிப்ஸ் ரசிகனாப்பா நீயி...

பிப்ஸ் அழகுதான்யா....ஹிஹி...

பட்டிகாட்டான் Jey said...

இன்னிய தேதிக்கு பிப்ஸ் யாரோட கேர்ள் ஃபிரண்ட்-னு சொல்லலியே பிரபா........... :-)))

Anonymous said...

//மர்ஹபா... மர்ஹபா... என்றொரு பாடல். குட்டியூண்டு டிரஸ் போட்டுக்கொண்டு குதித்து குதித்து கும்மாளம் போடுகிறார் பிபாஷா. அப்பாடல் காட்சியின் நடுவினிலே பிபாஷா நீச்சல் குளத்திலிருந்து எழுந்து வருவதை தரிசித்தால் பாலைவனத்தில் கூட ஊற்றெடுக்க வாய்ப்புண்டு.//
This one?
http://www.youtube.com/watch?v=cijMbPsDX4o
Looks to me template song.


Katz said...

//பிபாஷா திரையில் தோன்றும் காட்சிகளில் நம்முடைய கண்கள் கேரம்போர்டு காயின் போல அல்லோலப்படுகின்றன.//

// ஜனாதிபதிக்கு ஒரு கருணை மனு போட்டு உங்களுடைய பாவத்தை கழுவிக்கொள்ளுங்கள்...!//


:-)

Philosophy Prabhakaran said...

@ வீடு சுரேஸ்குமார்
// மன்மதன்ல அம்மணி இருக்குதுன்னு நெனைக்கிறேன். //

மாம்ஸ் அவங்க மந்திரா பேடி... அவங்களுக்கு தனியா இன்னொரு பொங்கல் வைக்கணும்...

Philosophy Prabhakaran said...

@ பட்டிகாட்டான் Jey
// இன்னிய தேதிக்கு பிப்ஸ் யாரோட கேர்ள் ஃபிரண்ட்-னு சொல்லலியே பிரபா........... :-))) //

துக்க செய்திகளை தவிர்ப்போம் தல...

Philosophy Prabhakaran said...

@ Anonymous
// Looks to me template song. //

நான் அதிக ஹிந்தி படங்கள் பார்த்திராததால் எனக்கு ஸ்பெஷலாக தெரிந்திருக்கலாம் தல...

தவிர மற்றவர்கள் ஆடினால் தான் டெம்ப்ளேட்... பிபாஷா ஆடினால் பிரியாணி ப்ளேட்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்த யூடியூப் லிங்ல டாகுடரோட இந்தி எஃபக்ட்டை பார்த்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பிப்ஸ் அழகுதான், மூஞ்சிய தவிர........

Anonymous said...

படத்துல ரொம்பவே க்ரிப் இருக்கும் போலருக்கே... உங்க ரசனையோ ரசனை..

Anonymous said...

//டாகுடரோட இந்தி எஃபக்ட்டை பார்த்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை....///

பிபாசா இருக்கும்போது எதுக்குண்ணே டாக்டர பார்க்குறீங்க?

Vadakkupatti Raamsami said...

எவ்வளவோ ஹிந்தி படங்கள் இருக்கையில் இதுதான் உம்ம கண்ணில் பட்டுதா?அது சரி அதிசய உலகம் பார்க்குற பிரபாவுக்கு இதுவே போதும் அனுராக் காஷ்யப் படமா பார்க்க போற?
ஆமா சப் டைட்டில் என்ற வஸ்து இருப்பதே உனக்கு தெரியாதா ஒய்?