3 October 2012

எல்லாரும் தாழ்வான பகுதியை நோக்கி ஓடுங்க...!

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பதிவின் தலைப்பு போல பல கருத்தாழம் பொதிந்த வசனங்களை டப்பிங் படங்களில் பார்க்கலாம். குறிப்பாக ஆங்கில கொரிய பட மொழிபெயர்ப்புகள் விழி பிதுக்கும்...! கடந்த ஞாயிறன்று பல்லு கூட வெளக்காமல் பேப்பரை பிரித்தபோது எனக்கும் விழி மட்டுமில்லாமல் பலதும் பிதுங்கியது. என்ன ஏதுன்னு ஒரு ரவுண்ட் பார்ப்போம்...!

அதிசய ராட்ஷசி (Ice Queen)
எருவாமாட்டின் என்ற அரியவகை மூலிகையை சேகரிக்க அமேசான் காடு நோக்கி பயணிக்கிறது ஒரு குழு. ஆங்கே ஜுராஸிக் பார்க் கொசு போல பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பனியில் உறைந்து இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றுகின்றனர். அதனை அறிவியல் ஆராய்ச்சிக்காக விமானத்தில் வைத்து கொண்டு வருகின்றனர். விமானம் விபத்தில் சிக்கிவிடுகிறது. அதுவரை பனிக்கட்டிகளுக்கிடையே உறைந்திருந்த பெண்ணின் உடல் உஷ்ணநிலை தாளாமல் விழித்தெழுகிறது...! குழுவினரில் ஒவ்வொருவராக ஐஸ் ராணியால் கொல்லப்படுகின்றனர். உச்சக்கட்ட காட்சியில் ஹீரோ ஐஸு ராணியோடு ஜல்சா செய்து, சாமர்த்தியமாக வெந்நீர் தொட்டியில் அமுக்கி உருக்கி கொல்கிறார்.

ரகசிய தீவு (Dinotopia)
இரு இளைஞர்கள் தங்கள் தந்தையுடன் தனி விமானத்தில் பறந்து தங்கள் விடுமுறையை கொண்டாடுகின்றனர். இங்கேயும் விமானம் விபத்தில் சிக்கி கடலில் விழுந்துவிடுகிறது. துரதிர்ஷ்டவசமாக தந்தை உயிரிழந்துவிட இளைஞர்கள் மட்டும் அருகிலிருக்கும் தீவை சென்றடைகிறார்கள். அங்கே வெளியுலக பரிட்சயம் இல்லாத மனிதர்கள் உடன் டைனோசரும் வாழ்கின்றன(ர்). முக்கியமான விஷயம், மனிதர்களுக்கும் டைனோசர்களுக்கும் சுமூக உறவு நிலவுகிறது. டைனோசர்கள் ஆங்கிலம் பேசுகின்றன. அந்த தீவின் விதிப்படி உள்ளே வந்தவர்கள் யாரும் வெளியே போக முடியாது. விதியை உடைத்து இளைஞர்கள் இருவரும் மீண்டு வந்தார்களா என்பதே மீதிக்கதை...!

தொடர்புடைய சுட்டி: அதிசய உலகம் 3D

பேய் நிலா - தேனாண்டாள் ஃப்லிம்ஸ் வெளியீடு (The Possession)
ஒரு மர்மப்பெட்டி கதையின் மையக்கரு. ஆரம்பக்காட்சியிலேயே பெட்டியை திறக்க முற்படும் கிழவி தூக்கி வீசப்படுகிறாள். 13 வயது நடாஷாதான் பேய் நிலா. ஒரு வீட்டில் பழைய அறைகலன்கள் விற்கப்படும்போது நடாஷா பெட்டியொன்றை பார்த்து கவரப்பட்டு வாங்குகிறாள். அன்றிரவு தனிமையில் பெட்டியை திறக்கிறாள் நடாஷா. உள்ளே ஒரு இறந்துபோன பட்டாம்பூச்சியும் ஒரு மோதிரமும் இருக்கின்றன. மோதிரத்தை கையில் அணிந்தபடி உறங்கிவிடுகிறாள். அதன்பிறகு அந்த வீட்டில் அமானுஷ்ய சம்பவங்கள் நடைபெறுகின்றன. சிறுமி நடாஷா விசித்திரமாக நடந்துக்கொள்கிறாள். அப்புறமென்ன ஆத்மா, தீயசக்தி, நல்லசக்தி எச்சச்ச எச்சச்ச...! மருத்துவத்தால் சாதிக்க முடியாததை மந்திரவாதி சாதிக்கிறார். தீயசக்தி மறுபடியும் பெட்டிக்குள் முடங்குகிறது. பெட்டிக்குள் இருந்து விசும்பல் சத்தம் கேட்பதுபோல இரண்டாம் பாகத்திற்கு லீட் வைத்துவிட்டு திரை இருள்கிறது...!

ஆழ்கடல் அசுரன் (நானே சூட்டிய பெயர்) (Bait)
ஆஸ்திரேலிய பெருநகர் ஒன்றை சுனாமி தாக்குகிறது. அதன் பிடியில் இருந்து தப்பிப்பிழைப்பவர்கள் ஒரு சூப்பர் மார்கெட்டுக்குள் சிக்கிக்கொள்கின்றனர். ஆபத்தில் இருந்து தப்பித்தோம் என்று ஆசுவாசமாகும் போதுதான் அந்த கொடூரத்தை பார்க்கின்றனர் - சுறா...! (விஜய் படம் அல்ல). கொடிய சுறா மீன்கள் இரையை தேடி கடும்பசியில் அலைகின்றன. எஞ்சியிருப்பவர்களை சுறாக்கள் ஒவ்வொருவராக கொல்ல ஆரம்பிக்கின்றன. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற சூட்சுமத்தை உணர்ந்துக்கொள்ளும் மாந்தர்கள் இறுதியாக சுறாக்களுக்கு ரிவிட் அடித்துவிட்டு உயிர் பிழைப்பதே மீதிக்கதை...!

உள்ளூர் மொழிகளில் இருந்து விரைவில் வெளியாகவிருக்கும் டப்பிங் படங்கள் :-
புதுவை மாநகரம்: மம்மூட்டி, டாப்சி, நதியா நடித்த டபுள்ஸ் (மலையாளம்)
பிஸ்னஸ்மேன்: மகேஷ் பாபுவும் கன்னுக்குட்டியும் நடித்தது. (தெலுங்கு)
சத்ரிய வம்சம்: ஸ்ரீகாந்த், ஹனி ரோஸ் நடித்த உப்புக்கண்டம் பிரதர்ஸ் II (மலையாளம்)
சிவாங்கி: சார்மி நடித்த மங்களா (தெலுங்கு)
புதையல்: அப்பாஸ், தபு நடித்த இதி சங்கதி (தெலுங்கு)
ராஜா மகாராஜா: டஷு கவுஷிக் நடித்த ராஜூ மகாராஜூ (தெலுங்கு)

மேற்கண்ட படங்கள் எந்த வெள்ளிக்கிழமை வேண்டுமானாலும் தமிழக திரையரங்குகளில் ஊடுருவும் அபாயம் இருப்பதால் அனைவரும்  அதுவரை தாழ்வான பகுதியிலேயே பதுங்கியிருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


இம்புட்டு வெவரமா பேசினாலும் பிஸ்னஸ்மேன் பட கன்னுக்குட்டி ஸ்டில்லை பார்த்ததும் மனசு டபக்குன்னு ஸ்லிப் ஆகுதே... அது ஏன் சார்...???

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

16 comments:

காட்டான் said...

சினிமாக்காரங்க "சுறா"வை விடமாட்டாங்கபோல.! ;-)

ப.கந்தசாமி said...

கொஞ்ச நேரம் இருதயம் துடிப்பை நிறுத்தி விட்டது?

Anonymous said...

அதெல்லாம் முடியாது, என்னோட ஆள ( காஜல் அகர்வால் ) நீங்க கடத்திட்டு வந்திட்டீங்க.. நான் பதிவுலக பஞ்சாயத்தைக் கூட்டி உங்க மேல பிராது கொடுக்கப் போறேனாக்கும் !!!

Unknown said...

சிபி மாதிரி பதிவு போட ஆரம்பிச்சிட்டியே பிரபா...?

rajamelaiyur said...

தல .. மும்தாஜ் வாழ்கை வரலாறை எழுத போவதாக சொன்னிங்க .. எப்ப ஆரம்பம் ?

முத்தரசு said...

நாட்டுக்கு தேவையான விடயம் பகிர்ந்தமைக்கு நன்னி ச்சே நன்றி பிரபா

rajamelaiyur said...

// இக்பால் செல்வன் said...

அதெல்லாம் முடியாது, என்னோட ஆள ( காஜல் அகர்வால் ) நீங்க கடத்திட்டு வந்திட்டீங்க.. நான் பதிவுலக பஞ்சாயத்தைக் கூட்டி உங்க மேல பிராது கொடுக்கப் போறேனாக்கும் !!!

//

ஏற்கனவே மயிலன் பிராது கொடுத்துடார் ...

Sivakumar said...


//"என் ராஜபாட்டை"- ராஜா said...
தல .. மும்தாஜ் வாழ்கை வரலாறை எழுத போவதாக சொன்னிங்க .. எப்ப ஆரம்பம் ?//

ராஜா..இருங்க சாட்டை சமுத்திரக்கனி கிட்ட சொல்லறேன்.

அஞ்சா சிங்கம் said...

மிஸ்ட் ன்னு ஒரு படம் இருக்கு அதை பாருங்க ஆஹா நம்ம கமல் தோத்திடுவாறு....................

இதை எல்லாம் ஒரு பொது சேவையாக நினைத்து தானே பண்றீங்க ........................?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பேசாம நீங்க பிட்டுப்படத்துக்கு ச்சீ.... டப்பிங் படத்துக்கு வசனம் எழுத போகலாம்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன கன்னுக்குட்டி ஒரு ரவுண்டு ஏறுன மாதிரி தெரியுது......? (உடம்ப சொன்னேன்......)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////"என் ராஜபாட்டை"- ராஜா said...
தல .. மும்தாஜ் வாழ்கை வரலாறை எழுத போவதாக சொன்னிங்க .. எப்ப ஆரம்பம் ?////////

அவருக்கு டீஆர் மாதிரி எப்ப தாடி வளருதோ அப்போ எழுதுவாராம்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////"என் ராஜபாட்டை"- ராஜா said...
// இக்பால் செல்வன் said...

அதெல்லாம் முடியாது, என்னோட ஆள ( காஜல் அகர்வால் ) நீங்க கடத்திட்டு வந்திட்டீங்க.. நான் பதிவுலக பஞ்சாயத்தைக் கூட்டி உங்க மேல பிராது கொடுக்கப் போறேனாக்கும் !!!

//

ஏற்கனவே மயிலன் பிராது கொடுத்துடார் ...////////

நல்ல புரோக்கரா பாத்தா இப்பவே முடிச்சிடலாம்...... அத விட்டுப்புட்டு பிராது கொடுக்கிறேன், பிஸ்கோத்து கொடுக்கிறேன்னு...... போய் வேலைய பாருங்கய்யா.....

ராஜ் said...

ஏற்கனவே இதுங்க (இந்த மாதிரி டப்பிங் படங்க) கலைஞர் டிவி, பாலிமர் டிவி முலமா படை எடுத்து தமிழக மக்களை கதற வச்சு கிட்டு இருக்காங்க, அது பத்தாதுன்னு தியேட்டர் முலமா வேற தாக்க போறாங்களா..?? :) :)
நல்ல எச்சரிக்கை பதிவு.

குட்டன்ஜி said...

கடைசிப்படம்தான் டாப்!
இன்று என் பதிவு ”ஒரு முக சோதிடருடன் நேர்காணல்!”.படியுங்கள்.

Anonymous said...

very good!