14 October 2012

மாற்றான்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தமிழின் முதல் சயமீஸ் ட்வின்ஸ் திரைப்படம் என்று பிரகடனப்படுத்தப்பட்டு, சற்றே தாமதமாக மூன்றாவது படமாக வெளிவந்திருக்கிறது. இனி இயக்குனர்கள் விஜய், பாலா, கே.வி.ஆனந்த் போன்ற ஆபத்பாந்தவர்கள் படைப்புகளை மறந்தும் பார்க்கமாட்டேன் என்று மாரியாத்தா மீது சத்தியம் செய்திருந்தாலும் கன்னுக்குட்டி நடித்திருக்கும் ஒரே காரணத்திற்காக திரையரங்கிற்கு விரைந்தேன். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்று சொல்வது இதுதான் போல...!

திரையரங்கம் சென்று பார்த்தே தீருவேன் என்று அடம் பிடிக்கும் சிங்கக்குட்டிகள் சிகப்பு பத்தியை புறக்கணிக்கலாம்.

சூர்யாக்களுடைய அப்பா உலகம் போற்றும் ஜெனிடிக் விஞ்ஞானி. அவருடைய ஆராய்ச்சியின் விளைவாக அவரது மனைவிக்கு ஒட்டிக்கொண்டு இரட்டைக்குழந்தைகள் பிறக்கின்றன. ஒன்னு அராத்து, இன்னொன்னு அம்மாஞ்சி. அளப்பறையாக ஒரு ஓபனிங் சாங். அதாவது பாடலின் தொடக்கத்தில் குழந்தையாக இருப்பவர்கள், நாலரை நிமிடத்தில் சூர்யாக்களாக மாறிவிடுகிறார்கள். பார்ட்டியொன்றில் காஜலை பார்த்து லவ்வுகிறார்கள். ஆனால் பார்ட்டி அம்மாஞ்சியை தேர்வு செய்கிறது. பிறிதொரு அமங்கல தினத்தில் அம்மாஞ்சி சூர்யாவை போட்டுவிடுகிறார்கள். இரண்டாம் பாதியில் தனியாள் சூர்யா, தன் சகாவின் மரணத்திற்கு காரணமானவர்களை, அதாவது அம்பு, அம்பு எய்தவன், டிக்கெட் கிழிப்பவர், பாப்கார்ன் விற்பவர் என்று அனைவரையும் சகட்டுமேனிக்கு பழி வாங்கித்தள்ளுகிறார்.

சூர்யா, தோணி கிரிக்கெட் ஆடுவதுபோல ஆர்ப்பாட்டம் எதுவுமில்லாமல் சர்வசாதாரணமாக நடித்துக் கொடுத்திருக்கிறார். மற்றபடி சூர்யாக்களை ஒட்டுக்கா திரையில் காட்டிய தொழில்நுட்பமும், தொ.நு கலைஞர்களும் தான் ரியல் ஹீரோஸ்.

கன்னுக்குட்டியின் கேரக்டர் படத்தில் தெளிவாக சொல்லப்படவில்லை. கலீல் ஜிப்ரான் கவிதை விரும்புகிறார், பார்ட்டியில் கூத்தடிக்கிறார், ஒரு சூர்யாவை லவ்வுகிறார், ஆனால் இருவருடனும் ரொமான்ஸ் செய்கிறார், ஒரு சூர்யா இறந்ததும் இன்னொரு சூர்யாவை லவ்வுகிறார். ஆனால் இரண்டு பெரிய முட்டைக்கண்களை காட்டி நம்மை ஹாஃப்பாயில் மாதிரி அப்படியே சாப்பிடுகிறார். சூர்யாவிற்கு பதில் கன்னுக்குட்டியை ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக நடிக்க வைத்திருந்தால் நான்கு முறைகூட படம் பார்க்கலாம். கன்னுக்குட்டிக்கு குரல் கொடுத்த சின்மயியுடைய நிஜத்தொழிலே மொழிபெயர்ப்பு என்பதால் இலகுவாக தமிழ், ஆங்கிலம், ரஷ்யன் என்று கலந்துகட்டி அடித்திருக்கிறார்.

சச்சின் கேட்கர் என்ற மராத்தி நடிகர் வில்லனாக நடித்திருக்கிறார். பிரகாஷ் ராஜ் நடிக்க வேண்டிய கேரக்டராம். அவரை விடபெட்டர் என்று சொல்லுமளவிற்கு உருவமும் நடிப்பும் பொருந்தியிருக்கிறது. சார் அஜித், விஜய், ஹீரோவுக்கு ஃப்ரெண்ட்லியான அப்பா கேரக்டர் என்று ஒரு ரவுண்ட் வருவார். (அதற்குப்பின் காணாமல் போய்விடுவார்). சூர்யாஸ் அம்மா கேரக்டரில் நடித்திருப்பவர் தேசிய விருது நடிகை, நாயகன் படத்தில் கமலுக்கு தங்கையாக நடித்தவர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தீயே தீயே பாடல் முதல்முறை கேட்கும்போதே பிடிக்கும் ரகம். இரண்டு மாதங்கள் தாங்கும். மற்றவை சுமார். நானி கோனி விஷுவலில் ரசிக்கலாம். பின்னணியிசையை பொருத்தமட்டில் ஏழாம் அறிவை தாண்டி ஒரு மைல்கல் வந்துவிட்டார் என்று சொல்லலாம். க்ளைமாக்ஸ் காட்சி நெருங்கும்போது சம்பந்தமே இல்லாத டமுக்குடப்பாங்மியூசிக் உறுத்துகிறது.

படம் முழுவதுமே லாஜிக் என்ற வஸ்து கிஞ்சித்தும் இல்லாமல் நம்முடைய காதுகள் மட்டுமில்லாமல் எங்கெல்லாம் சொருக முடியுமோ அங்கெல்லாம் சாமந்தியை சொருகுகிறார்கள். உதாரணம் சூர்யா ரஷ்ய ராணுவ அதிகாரியிடம் எஸ்.ஏ.ராஜ்குமார் மியூசிக் போட்டு எஸ்ஸாகும் காட்சி. அது சரி, கன்னிவெடியில் கால் வைத்தவர் உயிர் பிழைத்ததாக காட்டியவரிடமிருந்து என்ன எதிர்பார்க்க முடியும் ?

இடைவேளைக்குப்பின் ஏதோ ஞாயிறு காலை தேவாலயத்திற்குள் நுழைந்த உணர்வு நம்மை பீடிக்கிறது. ரஷ்ய மொழியிலும் தமிழிலும் மாறி மாறி அல்லது ஒருசேர பேசி எழவெடுக்கிறார்கள். அதையும் மீறி திரையரங்கில் உட்கார்ந்திருப்பவர்களை குஜராத்தி பெண்கள் துடைப்பத்தால் அடித்துவிரட்ட முற்படுகிறார்கள். அதிலும் அசராதவர்களை இறுதியில் எலிகளை விட்டு கடித்தே கொல்லுகிறார்கள்.

அரசியல், கம்யூனிசம் என்று ஜல்லியடிக்காமல் ஒரு மொக்கை மசாலா படத்தை எடுத்ததற்காக கே.வி.ஆனந்துக்கு ஒரு பொக்கே ஷாப்பையே கொடுக்கலாம். இதான் சார் உங்க ஏரியா...! இனி இதேமாதிரி மொக்கைப்படங்களா எடுத்து தள்ளுங்க. ஆனாக்கா ஹீரோயினா மட்டும் காஜல் அகர்வாலை நடிக்க வைத்து பார்த்தே ஆகவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு எங்களை தள்ளிவிடாதீர்கள்.

மாற்றான் - சராசரிகளுக்காக எடுக்கப்பட்ட சராசரி சினிமா...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

32 comments:

Philosophy Prabhakaran said...

Off the records:

வடசென்னை மகாராணி திரையரங்கில் படம் பார்த்தேன். வெப்சைட், ஆன்லைன் புக்கிங் என்றெல்லாம் அசத்த ஆரம்பித்தாலும் திரையரங்கம் அதேமாதிரி தான் இருக்கிறது. புதிதாக ஏசி போட்டிருக்கிறார்கள்.

படம் எப்படியும் ஒருவாரத்திற்கு மேல் தாங்காது என்று தயாரிப்பாளருக்கே தெரிந்திருப்பதால் AGS திரையரங்கில் Ticket + Combo என்று 200ரூ கொள்ளையடிக்கிறார்கள். அந்த Ticket + என்ன மயிறு Combo’ன்னு அடிச்சு கேட்டாக்கூட சொல்ல மாட்டாங்க.

கன்னுக்குட்டிக்காக ஒரு கண்டத்தை தாண்டியாச்சு. அடுத்து துப்பாக்கி என்ற அணு ஆயுதம் காத்திருக்கிறது.
லாஜிக்கு மயிரே இல்லாமல் முட்டாள்த்தனமான ஒரு படத்தை எடுத்துவைத்திருக்கும் கே.வி.ஆனந்த் ஒரு முட்டாப்பய என்று நினைப்பவர்களுக்கு நட்புக்காக திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த நகைச்சுவை காட்சியை அர்ப்பணிக்கிறேன்...! மொக்கையான படத்திற்கு மாஸ் ஓபனிங் கொடுக்க வைத்து, தமிழ் சினிமா ரசிகர்களை முட்டாளாக்கிய கே.வி.ஆனந்த் ஒரு மாமாமேதை...!!
http://www.youtube.com/watch?v=WV2lqJuOBUA

Prem S said...

//ஹீரோயினா மட்டும் காஜல் அகர்வாலை நடிக்க வைத்து பார்த்தே ஆகவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு எங்களை தள்ளிவிடாதீர்கள்.
///

உங்களுக்காக துப்பாக்கி காத்து கொண்டு இருக்கிறது

Philosophy Prabhakaran said...

ஆமாம் ப்ரேம்... I'm waiting...

முத்தரசு said...

கன்னுகுட்டி புலம்பல்

முத்தரசு said...

சரி வுடுங்க பாக்கணுமா வேணாமா

Philosophy Prabhakaran said...

@ முத்தரசு
// சரி வுடுங்க பாக்கணுமா வேணாமா //

யோவ் ரெண்டு பக்கத்துக்கு மாங்கு மாங்குன்னு எழுதினாலும் இப்படி மனசாட்சியே இல்லாம ஒரு கேள்வி கேக்குறீங்களேய்யா...

Anonymous said...

பாண்டி பஜார் துணிக்கடை பொம்ம மாதிரி இருக்கு..கன்னுக்குட்டியாம். என்னமோ போயா..!!

அனுஷ்யா said...

சராசரிய சராசரின்னு பிரகடனப் படுத்துனா பரவா இல்ல...

என்னோட off the records...

இடைவேளையில் 144 மார்க் கைலி விளம்பரம் போட்டார்கள்... கடற்கரை ஓரத்தில் ஓர் இளம்பெண் அந்த கைலியை அணிந்து கொண்டு வருவதாய் ஒரு அபார காட்சியமைப்பு... எனக்கு அச்சம் கலந்த ஐயம்-ஒரு வேளை கே.வி.ஆனந்த் விளம்பரமும் எடுக்க ஆரம்பிச்சுட்டாரான்னு?

Philosophy Prabhakaran said...

// பாண்டி பஜார் துணிக்கடை பொம்ம மாதிரி இருக்கு..கன்னுக்குட்டியாம். என்னமோ போயா..!! //

உங்களுக்கு காஜல் பிடிக்காதது எனக்கு பிடிச்சிருக்கு... ஏன்னா ஏற்கனவே நிறைய பேர் போட்டிக்கு இருக்காங்க... நீங்களும் சேர்ந்தா எப்படி ?

Anonymous said...


//ஆனால் இரண்டு பெரிய முட்டைக்கண்களை காட்டி நம்மைஹாஃப்பாயில் மாதிரி அப்படியே சாப்பிடுகிறார்.//

எலேய்ய்ய்ய்யய்...........!!

அனுஷ்யா said...

மிஸ்டர் சிவகுமார்ர்ர்ர்ரர்ர்ர்ர்...
எங்க சங்கத்து ஆள அடிச்சது யாரு....

Philosophy Prabhakaran said...

@ மயிலன்
நீங்களும் ஏதோ துக்கடா தியேட்டரில் பார்த்திருக்கிறீர்கள் போல... இங்கே அதே பழைய விஸ்வரூபம், அலெக்ஸ் பாண்டியன் ட்ரைலர் போட்டு கடுப்பேற்றினார்கள்...

Unknown said...

ஒரு டொக்கு பிகருக்கு...இரண்டு பேரு படம் பார்க்க போய் மாட்டிக்கிட்டாங்க......ஐ...ஜாலி...!ஜாலி....!

@சிவா

சியர்ஸ்..........

Philosophy Prabhakaran said...

// ஒரு டொக்கு பிகருக்கு...இரண்டு பேரு படம் பார்க்க போய் மாட்டிக்கிட்டாங்க......ஐ...ஜாலி...!ஜாலி....! //

மாம்ஸ்... ரெண்டு பேர் மட்டுமில்லை... பார்த்ததுல பாதி பேரு குட்டிக்காக தான் பார்த்திருக்காங்க...

அனுஷ்யா said...

திருப்பூருக்கு ஒரு புல்டோசர் பார்சல்...

வீடு தரைமட்டமாக்கப்படும்

பட்டிகாட்டான் Jey said...

அப்ப கேபிள் அண்ணேன் படம் பார்க்கலாம் நல்லாயிருக்கு மிஸ்பன்னிடாத ஜெய்னு உசுப்பேத்தி விட்டது.....?????

நீ சொல்றதப் பார்த்தா 25 ஊவா டிவிடிக்கி கூடபடம் ஒர்த்த் இல்லைபோலயே....

பட்டிகாட்டான் Jey said...

ஹிஹிஹி.. என்ன இருந்தாலும் காஜல் அழகுச் சிலைதான்யா.....:-)))

Philosophy Prabhakaran said...

@ பட்டிகாட்டான் Jey
// அப்ப கேபிள் அண்ணேன் படம் பார்க்கலாம் நல்லாயிருக்கு மிஸ்பன்னிடாத ஜெய்னு உசுப்பேத்தி விட்டது.....????? //

பட்டிக்ஸ்... பழக்கடைகாரன் பழம் அருமையா இருக்குன்னு சொன்னா கண்ணை மூடிக்கிட்டு வாங்கிடுவீங்களா ???

Anonymous said...

தக தக தாரகை தமன்னா வாழி. அவளுக்கு போட்டியா எவ வந்தாலும் காலி.

ஹாலிவுட்ரசிகன் said...

நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன்...என் காசை English Vinglishல் செலவளித்து விட்டேன்.

அப்போ டிவிடிக்கே வெயிட் பண்ணுவோம். இல்ல வேணாம் ... ஏதாச்சு இங்கிலிஷ் படம் பார்த்து பொழச்சிக்குவோம். :)

Anonymous said...


மாற்றான் தெலுங்கு ரீமேக்ல பன்னிகுட்டியும், இளையதளபதியும் ஒட்டி நடிச்ச மாதிரி நேத்து நைட் கெனா வந்தது.

Unknown said...

@மயிலன் said...
திருப்பூருக்கு ஒரு புல்டோசர் பார்சல்...

வீடு தரைமட்டமாக்கப்படும்
////////////////////
பட்டுக்கோட்டைய்க்கு ஷகிலாவை பார்சல் பண்ணிருவோம்....பீகேர்புல்!

arasan said...

இந்த மைதா மாவை இப்படி போட்டு அலைப்பறைய கூட்டுவது சரியில்ல ..
அப்புறம் அஞ்சலி ரசிகர் மன்றம் சார்பாக பெரிய உண்ணும் நோன்பு போராட்டம் நடத்தப்படும் என்பதை அடக்கத்துடன் தெரிவித்து கொள்கிறேன் ...(யாரு அங்கே தமன்னா பேரை சொன்னது .... சிவா சாரா ...)

அஞ்சா சிங்கம் said...

! சிவகுமார் ! said... தக தக தாரகை தமன்னா வாழி. அவளுக்கு போட்டியா எவ வந்தாலும் காலி...../////////
//////
தம்பி தமன்னா விலாசம் வேணும்னா என்கிட்ட கேளு தரேன் ....பொது இடத்துல இப்படி அசிங்கம் பண்ண கூடாது .

Anonymous said...

இந்த படதுக்க இப்புடின்னா..... தீபாவளிக்கு சிஸ்டர் காஜல் அகர்வால் நடித்து வெளிவர இருக்கும் படத்த பார்த்துட்டு வந்து என்னாத்த சொல்ல போறீங்களோ? ஐ ஆம் வெயிடிங்...

வவ்வால் said...

பிரபா,

ஒவ்வொரு புதுப்பட அறிவிப்பு வரும் போதும் ,இந்தப்படத்தை தியேட்டருக்கு போய் கண்டிப்பா பார்க்கணும்னு நினைப்பேன்... ஆனால் விமர்சனங்கள் படிச்சா கழுவி..கழுவி ஊத்துறாங்க...மாற்றான் பார்த்திடனும்னு நினைச்சேன் இப்படி எல்லாருமே சொல்லிட்டிகளே... அப்போ தியேட்டர் பக்கம் போகணும்னு ஆசையே படக்கூடது போல இருக்கே ...:-((

இனிமே நான் எந்த காலத்தில் தியேட்டருக்கு போகிறப்போல படம் வருமோ?

Philosophy Prabhakaran said...

@ வவ்வால்
// இனிமே நான் எந்த காலத்தில் தியேட்டருக்கு போகிறப்போல படம் வருமோ? //

வவ்வால்...

அப்படியே கொஞ்சம் பக்கவாட்டுல பாருங்க... சக்ரவர்த்தி திருமகன் வருது... வெறியோட காத்திருக்கோம்...

ananthu said...

சூர்யாஸ் அம்மா கேரக்டரில் நடித்திருப்பவர் தேசிய விருது நடிகை, நாயகன் படத்தில் கமலுக்கு தங்கையாக நடித்தவர். தகவலுக்கு நன்றி ...

MANO நாஞ்சில் மனோ said...

ஐயோ அப்போ தலைவலி மாத்திரையும் சேர்த்தே கொண்டுபோய் படத்தை பாருங்கப்பூ....

aavee said...

Typical பிரபாகரன் விமர்சனம்.. Good!
அந்த கொடூர கிளைமக்சைப் பற்றியும் ஒரு எச்சரிக்கை கொடுத்திருக்கலாம்.. ;-)

இந்திரா said...

//அவருடைய ஆராய்ச்சியின் விளைவாக அவரது மனைவிக்கு ஒட்டிக்கொண்டு இரட்டைக்குழந்தைகள் பிறக்கின்றன.//

“ஹல்க்“ படம் மாதிரியோ??

#டவுட்டு

அஞ்சா சிங்கம் said...

இந்திரா said...

//அவருடைய ஆராய்ச்சியின் விளைவாக அவரது மனைவிக்கு ஒட்டிக்கொண்டு இரட்டைக்குழந்தைகள் பிறக்கின்றன.//

“ஹல்க்“ படம் மாதிரியோ??

#டவுட்டு/////////////////////////

இல்லை இது வேற. அது என்ன அப்படி ஒரு ஆராய்ச்சி .இப்போ நானும் யோசிக்க ஆரம்பிச்சிட்டேன் .