21 October 2012

பீட்சாஅன்புள்ள வலைப்பூவிற்கு,

வசீகரமாய் ஒரு தலைப்பு, ட்ரைலர் பார்க்கும் முன்பு வரை புஷ்கர் - காயத்ரி, வெங்கட் பிரபு ஸ்டைலில் கலாட்டா படமாக இருக்குமென்று நினைத்திருந்தேன். ட்ரைலர் பார்த்தபிறகு ஏதோ க்ரைம் த்ரில்லரோ, சைக்கோ த்ரில்லரோ கிடைக்கப்போகிறது என்று இன்னும் ஆர்வமானேன். தேவி கலா திரையரங்கம், முதல் வரிசை. படம் தொடங்குவதற்கு முன்பு ஏனோ பொல்லாங்கு நினைவுக்கு வந்தது


வழக்கமாக திரைக்கதை முழுவதையும் எழுதிவிடும் பதிவர்கள் கூட பீட்சாவிற்கு ஸ்பாய்லர் எழுதி விடக்கூடாது என்று மிகவும் கவனமாக இருப்பதே படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. நானும் அதையே பின்பற்ற விரும்புகிறேன். படம் ஏற்படுத்திய தாக்கத்தை மட்டும் பிட்ஸ் அண்ட் பீசஸாக பதிவு செய்கிறேன்.

விஜய் சேதுபதியை சுந்தர பாண்டியனில் பார்த்துவிட்டு ஏதோ ஹீரோ நண்பர், அமெரிக்க மாப்பிள்ளை ரேஞ்சுக்கு வைத்திருந்தேன். அவரோ படு இயல்பான நடிப்பில் பின்னியெடுத்திருக்கிறார். நிறைய காட்சிகளில் அவருடைய இடத்தில் நம்மை ஃபீல் பண்ண வைக்கிறார்.


கண்ணுக்கு அழகாக ரம்யா நம்பீசனும், எஸ்.எஸ்.மியூசிக் செல்லக்குட்டி பூஜாவும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை ரசிப்பதற்கு கூட நேரம் தராமல் திகில் நம்மை சூழ்ந்துக்கொள்கிறது.

ஆரம்ப நிமிடங்களில் விஜய்யும் ரம்யாவும் ரொமாண்டிக்கான காதல் ஜோடியை எந்த பாசாங்கும் இல்லாமல் பிரதிபலித்திருக்கிறார்கள்.

விஜய், ஸ்மிதா பங்களாவுக்குள் நுழைந்த பிறகு சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் ரோலர் கோஸ்டரில் ஏறியது போல ஜிவ்வென்று இருக்கிறது.

எப்படா, இடைவேளை விடுவாங்க'ன்னு வாட்சை பார்க்கவைக்கும் படங்களுக்கு மத்தியில் இப்ப ஏண்டா இடைவேளை விட்டாங்க'ன்னு யோசிக்க வைக்கிறது பீட்சா.

கடைசி பத்து நிமிடம் வரை சஸ்பென்ஸை மெயின்டெயின் செய்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ். ரம்யா லெட்டர் எழுதி வைப்பதில் ஆரம்பித்து இறுதியில் விஜய் நெற்றியிலிருக்கும் சோட்டானிகரை அம்மன் குங்குமத்தை அழிப்பது வரை, “ஒங்க அடுத்த சீனு இதானே ராசா...!என்று நினைக்க வைத்து நினைக்க வைத்து ஏமாற்றியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். அந்த பொண்ணே ஒரு கற்பனையாக இருக்கலாம்...என்று ஒரு கேரக்டர் சொல்லும்போது நான் இதுவரை பார்த்த சைக்கோ த்ரில்லர் படங்களை நினைத்து தலை சொறிந்தேன். ஒரு கட்டத்தில் சிசு கொலை பற்றி ஏதோ கருத்து சொல்ல முனைகிறார்களோ என்று யோசித்து மறுபடியும் ஏமாந்தேன். ஆனால் அந்த ஏமாற்றம் மிகவும் பிடித்திருந்தது.

ஹீரோ, ஹீரோயினுடைய அப்பா அம்மா, குடும்பம், காதல் கல்யாண சிக்கல் என்று வழக்கம்போல அரைமணிநேர ஃப்ளாஷ்பேக் எதுவும் வைக்காமல் ஒரேயொரு புகைப்படத்தில் சுருக்கென்று முடித்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியத்தில் ஒரு சோறு.

கோபியும் சந்தோஷும் இணைந்து படத்தை நம் கண்களுக்கும் காதுகளுக்கும் பிடித்த மாதிரி கொடுத்திருக்கிறார்கள். எடிட்டர் லியோ புண்ணியத்தில் படத்தில் தேவையற்ற காட்சிகள் என்று எதுவும் தென்படவில்லை. முழுதாக வந்த ஒரு பாடல்காட்சி கூட விஷுவல் கவிதையாக இருந்ததே ஒழிய வேகத்தடையாக தோன்றவில்லை.


கார்த்திக் சுப்புராஜ் இதுவரை பத்து குறும்படங்களுக்கு மேல் இயக்கியிருக்கிறாராம். இனி ஒவ்வொன்றையும் தேடிப்பார்க்க வேண்டும். கார்த்திக், பாலாஜி மோகன், தியாகராஜன் குமாரராஜா போன்றவர்கள் தான் நான் தமிழ் படமெல்லாம் பாக்குறதில்லை...என்று திசை மாறும் இளைஞர்களை கவனஈர்ப்பு செய்கிறார்கள்.

ரம்யா நம்பீசனுடைய முகப்பரு மாதிரி படத்தில் சிற்சில குறைகள் இருக்கலாம். ஆனால் அவை நம்மை உறுத்தவில்லை.

மிகவும் எதிர்பார்த்து காத்திருந்து மாஸ் ஹீரோக்களின் படங்களை பார்த்துவிட்டு எரிச்சலில் யாரும் படத்தை பார்த்துடாதீங்கன்னு பத்து நண்பர்களுக்காவது எஸ்.எம்.எஸ் அனுப்பிவிடுவோம். ஆனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு யாரும் மிஸ் பண்ணிடாதீங்க'ன்னு குரூப் எஸ்.எம்.எஸ் அனுப்ப வைத்திருக்கிறது பீட்சா...!

Paranormal Activity மூன்று பாகங்களையும் சேர்த்தால் கூட பீட்சாவிடம் நெருங்க முடியாது...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

25 comments:

Thozhirkalam Channel said...

பார்த்துடலாம்,,,

rajamelaiyur said...

கதாநாயகியை கூட அதிகமா வர்னிக்கவில்லை. இதில் இருந்தே தெரிகிறது படம் பயங்கர சஸ்பென்ஸ் என்று..

Robert said...

அப்போ தைரியமா படத்தை பார்க்கலாம்றீங்க.... ம்ம்ம்ம்ம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ம்ம்.. அப்போ பாத்துடனும்....!

தமிழ்வாசி பிரகாஷ் said...

பிரபா விமர்சனமா?

ஆச்சர்யம் தான்....

வவ்வால் said...

பிரபா,

படம் நல்லா இருக்குன்னு சொல்லியிருப்பது ஆச்சர்யமா இருக்கே?

ஹாண்டட் ஹவுஸ் என்ற களத்தில் வைரத்திருட்டு என ஒரு டிவிஸ்ட் கொடுத்து இருப்பதை பாராட்டலாம்.

நிறைய ஆங்கில ஹாண்டட் ஹவுஸ் டைப் ஹாரர் படம் பார்த்துவிட்டதால் கொஞ்சம் பெப் குறைவு தான்.

தமிழில் முதல் பட இயக்குனர் எனும் போது ,பாரட்டவேண்டியது தான்.

பட்டிகாட்டான் Jey said...

த்ரில்லர் படம்னு சொல்லிருக்கே. நான் பாக்கப் போலாமா பிர்ப்பா. இதுவரை இந்தப் படம் பற்றி சொன்னவர்கள் நல்லவிதமாக எழுதி இருக்கிரார்கள்.

சின்னப் பரு இருக்கிறது எக்ஸ்ட்ரா அழகு மக்கா.... அதை ஏன் குறையாச் சொல்றே...:-)))

பட்டிகாட்டான் Jey said...

அப்புரம் எனக்கு எஸ் எம் எஸ் வரலை...:-))

Unknown said...

//கார்த்திக் சுப்புராஜ் இதுவரை பத்து குறும்படங்களுக்கு மேல் இயக்கியிருக்கிறாராம். இனி ஒவ்வொன்றையும் தேடிப்பார்க்க வேண்டும். //

அவரோட 'துரு' படம் பார்த்திருக்கிறேன் செம்ம! :-) விஜய் சேதுபதிதான் நடித்திருப்பார்!

Philosophy Prabhakaran said...

வவ்வால்,

காட்சிகள் வேறுசில ஆங்கில படங்களை நினைவூட்டுவதால் காப்பி என்றோ இயக்குனருக்கு சொந்த சரக்கு இல்லை என்றோ சொல்லிவிட முடியாது...

ஆங்கில திகில் நாவல்கள், திரைப்படங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சி ஆகியவற்றின் கூட்டு கலவை என்று அவர்களே சொல்லிவிடுகிறார்கள்...

Philosophy Prabhakaran said...

// அப்புரம் எனக்கு எஸ் எம் எஸ் வரலை...:-)) //

பதிவர்களுக்கு எஸ்.எம்.எஸ் தேவை இல்லை பட்டிக்ஸ்... அதான் பதிவு இருக்கே...

எனக்கு தமிழே படிக்க தெரியாது, நீ ஏதோ ஆன்லைனில் எழுதுறியே அது தமிழ் தானே, நீ எழுதுறதை படிச்சு பார்த்தேன் ஒன்னுமே புரியல என்றெல்லாம் சீன் போடும் அப்பாட்டாக்கர்களுக்கு மட்டும் எஸ்.எம்.எஸ்...

Philosophy Prabhakaran said...

// அவரோட 'துரு' படம் பார்த்திருக்கிறேன் செம்ம! :-) விஜய் சேதுபதிதான் நடித்திருப்பார்! //

நானும் நேத்துதான் அவரோட படங்கள் சிலவற்றை தேடிப் பார்த்தேன்... ப்ளாக் அண்ட் வொயிட் பாருங்கள்...

Sathish said...

பீட்சா - மசால் வடை பிரியர்களும் சாப்பிடலாம்

http://www.sathivenkat.blogspot.in/2012/10/blog-post.html

Anonymous said...

////விஜய் சேதுபதியை அமெரிக்க மாப்பிள்ளை ரேஞ்சுக்கு ////

தப்பாச்சே..

ArjunaSamy said...

//விஜய் சேதுபதியை சுந்தர பாண்டியனில் பார்த்துவிட்டு ஏதோ ஹீரோ நண்பர், அமெரிக்க மாப்பிள்ளை ரேஞ்சுக்கு வைத்திருந்தேன்.//

Sorry Prabha....

Vijay Sethupathi is not in that Movie
"Sundara Pandian"

His name is Inico Prabhakaran.

Vijay Sethupathi acted in "Thenmerku Paruvakatru"

'பரிவை' சே.குமார் said...

அப்ப படம் பார்க்கலாம்ன்னு சொல்றீங்க...
பார்த்துடுறோம்.

வவ்வால் said...

பிரபா,

இயக்குனருக்கு திறமையில்லைனு எல்லாம் சொல்லவில்லை, நல்ல முயற்சி தான், நமக்கு தான் எந்த படம் பார்த்தாலும் எங்கோ பார்த்த மாதிரி இருக்கேன்னு மனசுக்குள்ள எண்ணம் ஓட ஆரம்பிச்சுடுது, பச்சையாக காப்பி அடிக்கும் தெய்வதிருகள் படங்களால் வந்த பக்க விளைவாக இருக்கலாம் :-))

ஹி...ஹி ஆக்ட்சுவலா எந்த எந்த படம்னு சீன் பை சீன் பிரபா சொல்லிடுவார், தெரிஞ்சுக்கலாம்னு ஒரு எதிர்ப்பார்ப்பில் இருந்தேன் :-))

Philosophy Prabhakaran said...

அர்ஜுன சாமி,

சுந்தர பாண்டியனில் லட்சுமி மேனனுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையாக, க்ளைமாக்ஸில் சசிகுமாரை போட முயற்சி செய்வாரே... மறந்துவிட்டீர்களா...?

Philosophy Prabhakaran said...

வவ்வால்,

நான் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவில் தான் உலக சினிமாக்கள் பார்த்திருக்கிறேன்... Cannibal movies மாதிரி நம்மை உலுக்கி எடுத்து வித்தியாசமான அனுபவம் தரும் படங்களை மட்டும் செலக்டிவாக பார்ப்பேன்...

aavee said...

Good Review.. Please don't compare with paranormal activity.. An amateur atttempt got hit and they promed their sequels based on that success!!

Unknown said...

படம் நல்ல கிடுக்கிப்பிடி போல பார்ப்பவனுக்குள் ஊடுருவி சென்று இருக்கிறது...நச்சுன்னு ட்விஸ்ட்....யோவ் ரெம்ப நாள் கழிச்சி படத்த உடைக்காம படிக்கப்பட்ட விமர்சனம்...நல்லா இருக்கு...நன்றி

சீனு said...

படம் சூப்பர் பிரபா.... ரம்யா முகப்பரு அழகாத் தானே இருந்தச்சு #டவுட்டு

vimalanperali said...

கண்டிப்பாக படம் பார்த்து விடுகிறேன்.

Aravinthan said...

உங்களின் திரைப்பட விமர்சனங்களை விரும்பிப்படிப்பதுண்டு. அழகாக விமர்சிக்கிறீர்கள்.

Anonymous said...

யய்யா!

முகப்பரு இருந்தாதான் பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இயற்கையா இருக்கும். ஹீரோயினிக்கெல்லாம் முகப்பரு வரவே வராதா என்ன?

நல்ல விமர்சனம். பாக்கனும்னு ஆசையா இருக்கு. இதுக்கு முன்னாடி ஆரண்ய காண்டம் மட்டும் ரொம்ப யோசிச்சு விமர்சனம் எல்லாம் படிச்சுட்டு போய் பாத்தேன். அதுக்கு அப்புறம் நான் பஸ்ல வரப்போ வேற வழியில்லாம கலகலப்பு பாத்தேன். soul kitchenதான் அந்த படத்தோட இன்ஸ்பிரேஷன். பிட்சா பாக்கனும். பாத்துட்டு சொல்றேன் தோழரே.