17 January 2013

நாகூர் தர்கா

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சில தினங்களுக்கு முன்பே வெளிவந்திருக்க வேண்டிய பதிவு. சில கேள்விகள் குடைந்தெடுத்தன. சேதாரத்தை தவிர்க்க சாதுவான இஸ்லாமியர் ஒருவரை சாட்டில் மடக்கி என்னுடைய சந்தேகங்களை ஓரளவிற்கு தீர்த்துக்கொண்டேன்.


தர்கா - பள்ளிவாசல் வேறுபாடு ?
பள்ளிவாசல் என்பது உருவ வழிபாடுகளற்ற தொழுகையிடம். பள்ளிவாசல்களில் மாற்று மதத்தினரை அனுமதிப்பதில்லை. பெண்களுக்கு அனுமதி கிடையாது. தர்கா என்பது இஸ்லாமிய மூதாதையர்களின் கல்லறை.

பெரும்பான்மை இஸ்லாமியர்கள் தர்கா வழிபாட்டின் எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருப்பதாக இணையத்தேடலில் தெரிந்துக்கொண்டேன். தர்கா என்பது இந்து மதத்திலிருந்து இஸ்லாமியத்திற்கு மாறியவர்கள் தொடங்கி வைத்தது என்பது அவர்களுடைய வாதம். இந்துக்கள் கோவில்களில் சிலையை நிற்க வைத்து வழிபடுவதைப் போல தர்காவில் பிணத்தை படுக்க வைத்து வழிபடுகிறார்கள் என்று கோபப்படுகிறார்கள்.

சினிமாக்களில் முணுக்குன்னா வழக்கு, போராட்டம் என்று ஆரம்பிக்கும் மத அமைப்புகள் ரஜினி நயன்தாராவை தர்கா என்று அழைத்தபோது பொங்கல் வைக்காததன் அர்த்தம் விளங்கிற்று.

இங்கே ஒரு சிறிய கொசுவத்தி சுருள். அடியேன் பூமியில் அவதரித்து இருபத்தைந்து ஆண்டுகளாக மஸ்ஜித்-ஏ-குத்தூஸ் என்ற பள்ளிவாசலுக்கு நேரெதிரே வசித்து வருகிறேன். எனினும் அதனுள்ளே ஒருமுறை கூட சென்றதில்லை, செல்ல விரும்பியதுமில்லை. அங்கிருக்கும் கணினியில் கோளாறு ஏற்பட்டால் சரிசெய்ய மூத்த ஆதினத்தை தான் அணுகுவார்கள். ஆனால் அவரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. கணினியை வெளியே கொண்டுவந்து கொடுத்து சரி பார்க்கச் சொல்வார்களாம். இது ஆதினமே சொன்ன தகவல். மேலும் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அதனுள்ளே பெண்கள் சென்று வந்து பார்த்ததில்லை.

மேற்படி குற்றச்சாட்டுகளை நம் சாட் நண்பரிடம் தெரிவித்தபோது கடுமையாக மறுப்பு தெரிவித்தார். சுத்த பத்தமாக இருந்தால், அதாவது குளித்தல், குடிக்காமலிருத்தல் உட்பட பல ஆகம விதிகளை கடைபிடிப்பவராக இருப்பின் நிச்சயம் மாற்றுமதத்தினரை அனுமதிப்போம் என்கிறார். தான் புதுக்கல்லூரியில் பயின்றபோது மாற்றுமத சகோதரர்களை பள்ளிவாசலுக்குள் அழைத்துச்சென்றதை சுட்டிக்காட்டுகிறார். தவிர பள்ளிவாசல்களில் பெண்களுக்கென தனி நுழைவு வாயில், தனி தொழுகையிடம் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்கப்படாத பள்ளிவாசல்களில் மட்டும் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

சரி, நம்முடைய தனிப்பட்ட அனுபவத்திற்கு வருவோம். பக்ரீத் திருநாளன்று நானும் மூத்த ஆதினமும் நாகூரில் கால் பதித்தோம். கலவர பூமியில் நுழைந்த உணர்வு. தர்காவிற்குள் எங்களை அனுமதிப்பார்களா என்று குழப்பம். ஒருவேளை யாராவது மடக்கினால், நம்முடைய பெயரை கஸாலி, சிராஜுதீன் என்று சொல்லிக்கொள்ளலாம் என்று பேசிக்கொண்டோம்.


தர்காவை நெருங்கிவிட்டோம். அங்கே கடை வைத்திருந்த பெரியவர் நம்மைக் கண்டதும் பாசத்துடன் இருகரம் கூப்பி அழைக்கிறார். காலணிகளை இங்கே இலவசமாக விட்டுக்கொள்ளலாம் என்று ஆஃபர் கொடுக்கிறார். காலணிகளை கழட்டியதும், அங்கே ஒலைத்தட்டுகளில் அடுக்கி வைக்கப்படிருந்த சில காகித பொட்டலங்களை நம்மிடம் கொடுக்கிறார். (மேலே பார்க்க படம். பெரியவருக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டது). என்ன ஏதென்று புரியவில்லை, வாங்கிக்கொண்டோம். 120ரூ கொடுங்க என்று உரிமையுடன் கேட்டார் பெரியவர். பேந்த பேந்த முழித்தோம். மூத்தவர் பணத்தை எடுத்து கொடுத்தார். இலவசத்திற்கு கிடைத்த சோதனை.

தர்கா கோபுரத்தையும், நுழைவு வாயிலையும் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். உள்ளே நுழைந்ததும் ஏதோ மாமனார் வீட்டிற்குள் மருமகன் நுழைந்ததைப் போல புன்னகையுடன் நம்மை வரவேற்றார் ஒரு முசல்மான். வெளியே வாங்கிவந்த வஸ்துக்களை பறித்துக்கொண்டார். கை, கால் கழுவிட்டு வாங்க என்று குழாயடிக்கு அனுப்பிவிட்டார். எங்களுக்குள் குழப்பம் அதிகரித்தது.


பாய் நம்மை உள்ளே அழைத்துச் சென்று ஓரிடத்தில் அமர வைத்தார். பொட்டலங்களை பிரித்தார். சாம்பல், மண், சர்க்கரை (சீனி), ஊதுபத்தி போன்றவை அவற்றுள் இருந்தன. எல்லாவற்றையும் எங்கள் முன்பு பரப்பி வைத்தார். என்னிடம் பெயர் கேட்டார். அங்கு நிலவிய தெய்வீகம் என்னை மெய்யுரைக்கச் சொன்னது. பிரபாகரன் என்றேன். பெற்றோர் பெயர், தொழில் ஆகியவற்றை கேட்டு தெரிந்துக்கொண்டார். பின்னர் அய்யர் மந்திரம் சொல்வது போல ஏதோ முணுமுணுத்தார். அதாவது என்னுடைய நலம் வேண்டி பிரார்த்திக்கிறார் என்று நானாக புரிந்துக்கொண்டேன். ஆதினத்திடம் பெயர் கேட்டார், ஆனால் பெற்றோர் பெயரை கேட்கவில்லை, மாறாக மனைவியின் பெயர் கேட்டார். எப்படித்தான் கண்டுபுடிக்கிறாய்ங்களோ ? மறுபடியும் முணுமுணுப்பு. முடிந்ததும் ஏதாவது செய்யுங்க என்கிறார். மூத்தவர் தன்னுடைய பையில் இருந்து 150ரூபாயை எடுத்து வைத்தார். ஒத்த ஆளுக்கு போற காசில்லை, இங்குள்ள அனைவருக்காகவும்தான் அதனால் இன்னும் கொஞ்சம் போட்டு கொடுங்க என்கிற தொனியில் சொன்னார். இன்னொரு 50ரூபாய் வைக்கப்பட்டது. இப்போது என் பக்கம் திரும்பினார். “பாஸ்... என்னிடம் நயா பைசா கிடையாது... நான் இவருகூட தான் வந்தேன்...” என்று ஆதினத்தை கை காட்டினேன். ஏற்கனவே இருநூறு ரூபாய் தண்டம் அழுதவரை பார்த்து தலை சொறிந்து, பல்லிளிக்கிறார்.

ஒரு வழியாக அவரிடமிருந்து தப்பித்து எழுந்தோம். தர்காவை ஒரு எட்டு சுற்றி பார்த்துவிட்டு கிளம்பலாம் என்று பாய் திசைக்காட்டிய பாதையை நோக்கினோம். சற்று தொலைவில் இன்னொருத்தர் நின்றுக்கொண்டு “வெளக்கு போடுங்க...” என்று அழைத்தார். நானும் ஆதினமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். திரும்பிப்பார்க்காமல் வெளிவரும் பாதையை நோக்கி நடந்தோம். அந்த மனிதர் விடாமல், “வெளக்கு போடுங்க...” என்று கூப்பிட்டுக்கொண்டே இருந்தார். போங்கடா ங்கொய்யாங்கோ என்று சொல்லிவிட்டு வெளியேறினோம்.

நடைபெற்ற சம்பவத்திலிருந்து ஒரு விடுவிப்பு தேவைப்பட்டது. எங்கள் கால்கள் காரைக்காலை நோக்கி நடை போட்டன.


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

24 comments:

வினையூக்கி said...

எங்கள் கால்கள் காரைக்காலை நோக்கி நடை போட்டன.
//

:) :)

ரஹீம் கஸ்ஸாலி said...

யோவ் என் பேரை எதற்கெல்லாம் உபயோகப்படுத்தறதுனு விவஸ்தை வேணாம். முதல்ல என் பேருக்கு காப்பி ரைட் வாங்கணும்.

Philosophy Prabhakaran said...

கஸாலி, எங்களுக்கு உங்களை விட்டா வேற யாரைத் தெரியும் ?

ரஹீம் கஸ்ஸாலி said...

ஒருவேளை விளக்கு போட நீங்களிருவரும் மாட்டிருந்தீங்கனா...இருந்த பணத்தையெல்லாம் புடுங்கிட்டு உங்கள சென்னைவரை பொடி நடையா நடக்கவே விட்டுருப்பாங்க. நல்லவேளை எஸ்கேப்பாகிட்டீங்க.

Anonymous said...

///

எங்கள் கால்கள் காரைக்காலை நோக்கி நடை போட்டன.
// /

என் இனம் நீ.

Philosophy Prabhakaran said...

ஆரூர் மூனா, இப்பதான் நீங்க எங்க இனம் இல்லையே ?

Anonymous said...

Namma oor perumaal Koil paravaala pola.... oru 5 ruba coin thatla potta pothum thiruneeru koduthu pirasaatham koduthu kannuku kulirchiyaaa paathuttum varalaaam.......

Anonymous said...

//குளித்தல், குடிக்காமலிருத்தல் உட்பட பல ஆகம விதிகளை கடைபிடிப்பவராக இருப்பின்//

:) ;)

Anonymous said...

//அங்கு நிலவிய தெய்வீகம் என்னை மெய்யுரைக்கச் சொன்னது.//

dei dei dei nee yaarunu yenakku theriyum.......

Anonymous said...

வழிபாடு தான் இல்லை. ஆனால் என் குலதெய்வம் அதுதானே

Unknown said...

"காரைக்கால்ல எல்லாம் சீப்பா கிடைக்கும்!" சிவகார்த்திகேயன் சொன்னது ஞாபகமிருக்கு!

Ponmahes said...

உங்க இனம்னா எப்படி மனுசன்ல இருந்து வந்த கொரங்கா பிரபா ...........
அருமையான அனுபவ பகிர்வு ....

கார்த்திக் சரவணன் said...

பதிவு டக்குனு முடிஞ்ச மாதிரி ஒரு பீலிங்....

சீனு said...

//வழிபாடு தான் இல்லை. ஆனால் என் குலதெய்வம் அதுதானே// செந்தில் அண்ணே ஆகச் சிறந்த மனப்பாடம் செய்ய வேண்டிய எளிய கருத்துக்கள்

நான் பள்ளிவாசல் உள்ள சென்றுள்ளேன் பிரபா... என் நண்பன் என்னை அழைத்துச் சென்றுள்ளான்

UNMAIKAL said...

இறைவனின் கடும் எச்சரிக்கைக்கு அஞ்சி தர்கா வழிபாட்டை விட்டொழிப்போம்

தர்கா விடியோ காணுங்கள்

சுட்டிகளை சொடுக்கி விடியோ காணுங்கள்.

>>>>> 1. தர்கா என்றால் என்ன?

>>>>>2. சமாதியை வழிபடுவது ஏன்?

>>>>> 3. தர்கா ஜியாரத் சுன்னத்தா?

>>>>>4. அவ்லியாக்களை வணங்குவது ஏன்?

>>>>>5. நாகூரில் கபுரை வணங்குவது ஏன்?

>>>> 6. பிள்ளை வரம் கொடுக்கும் யானை அவ்லியா? <<<<<<

.

Unknown said...

தர்க்காவுக்கும் எங்க ஊர் மினியப்பன் கோவிலுக்கும் யாதொரு வித்தியாசமும் கிடையாது....! சில சமயம் சாமி கூட ஆடுவாங்க...!முக்கியமா அவங்க கொள்கை பணம் பறிப்பதாகத்தான் இருக்கும் ஆனாலும் அங்கே ஒரு அமைதி கிடைப்பதாக மனம் நினைக்கின்றது!

Anonymous said...

முன்பெல்லாம் நீராவி எஞ்சினுக்கு பயன்படுத்திய நிலக்கரி சாம்பலைத்தான் கொடுப்பார்கள்.இப்போது நாகூரில் வறட்டியும் கிடைப்பதில்லை.உங்களுக்கு என்ன சாம்பல் கொடுத்தார்கள்? நாற்பது வருடங்களுக்கு முன்பே ஒன்றேகால் ரூபாய் கேட்பார்கள்.ரேட் கொஞ்சம் அதிகம்தான்.பாவம் உங்க பாஸ்...நிறையவே தண்டம் அழுதிருக்கிறார்.

அஞ்சா சிங்கம் said...

அட நீ வேறு வெந்த புண்ணில் விரலை பாய்ச்சிக்கிட்டு ...
எனக்கு மூன்று தளத்திலும் தஞ்சை பெரிய கோவில் தான் பிடித்திருக்கு .
அதற்க்கு காரணம் அது நம் மூதாதியர்கள் நினைவை கிளறுவதால் .அடுத்த பகுதி நீர்கோழியும் , உடும்பு கறியுமா ..?

Jayadev Das said...

நாகூர் தர்க்காவுக்கு எல்லா மதத்தவரும் போறாங்கன்னு ஊர் பூராவும் பேசிக்கிறாங்க உனக்குத் தெரியாதா மாப்பு!! சரி, அந்தமான் பதிவு எப்போ?

Unknown said...

என்னய்யா ...நீங்க..! நாகூர் தர்காவுக்கு போயிட்டு நாகூர் மீரான்னு என் பேரு சொல்லி இருந்தீங்கன்னா..காசு அவங்க உங்களுக்கு கொடுத்து இருப்பாங்க..! :-))

Anonymous said...

We have also faced the same fate

Unknown said...

Super Article:)

Thanks

'பரிவை' சே.குமார் said...

அது சரி...
எல்லா இடத்திலும் காசு பிடிங்கித் திங்கிறதுக்குன்னே ஆளுக இருக்கத்தான் செய்யுறாய்ங்க...

புதுகை.அப்துல்லா said...

பள்ளிவாசல்களில் மாற்று மதத்தினரை அனுமதிப்பதில்லை.//

தவறு. நிச்சயம் அனுமதி உண்டு. அனுமதிக்கமாட்டேன் என்று யாரேனும் சொன்னால் நீ உண்மையிலேயே பாய்தானான்னு சட்டையப் பிடிச்சு கேளுங்க.

// பெண்களுக்கு அனுமதி கிடையாது //

ஆண்களுக்கு மட்டுமான பள்ளிவாசலில் மட்டும் அனுமதி கிடையாது.

அப்புறம் நாகூர்... அவர்தான் இது மாதிரி ஆட்களைத் திருத்தணும் :)