16 February 2014

பிரபா ஒயின்ஷாப் – 17022014

அன்புள்ள வலைப்பூவிற்கு,

புத்தகக்காட்சியில் நித்தியானந்தா கடையில் நுழைந்து ஆனந்த கீர்த்தன் என்ற ஒலிநாடா வேண்டுமென கேட்டு, அவர்கள் ஒரு கொட்டையை கொடுத்து அனுப்பியதை எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சி. அடுத்த வாரம் சொல்லி வைத்திருந்த ஒலிநாடா வந்துவிட்டதா என்று கேட்பதற்காக சென்றிருந்தேன். ம்ஹூம் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக இன்னொரு கொட்டையையும் கொடுக்க முயற்சித்தார்கள். அய்யா, போன வாரமே வாங்கியாயிற்று என்று சொல்லி தப்பித்துவிட்டேன். என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அவர்கள் என்னை விடமாட்டார்கள் போல. சென்ற வாரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து பேசுறோம் என்றது ஒரு அம்மையார் குரல். வார்த்தைக்கு வார்த்தை அடியேனை அய்யா என்று விளித்தார். ஏற்கனவே அவர்களிடம் என்னுடைய முகவரி கொடுத்திருந்தேன். அதை வைத்துக்கொண்டு அய்யா, திருவான்மியூரில் வகுப்பு நடக்குது. வந்தீங்கன்னா வகுப்பில் கலந்துக்கிட்டு சிடியையும் வாங்கிட்டு போயிடலாம் என்றார். என்ன வகுப்பு என்று தெரியவில்லை. அம்மாடி நான் வசிப்பது திருவான்மியூர் அல்ல, திருவொற்றியூர். அது தெற்கு, இது வடக்கு என்று சொல்லி புரியவைத்தேன். அப்படியும் அம்மையார் விடுவதாக இல்லை. விரைவில் மணலியில் வகுப்பு நடைபெற இருப்பதாகச் சொல்லி கலந்துகொள்ள பணித்திருக்கிறார். பேசாமல் ஒரு எட்டு போய்தான் பார்த்துவிடலாமா என்றுகூட தோன்றுகிறது. நகிர்தனா திரனனா னா...!
*

ஐ.பி.எல் ஜூது ஏலத்தை பார்த்து கடுப்பாகிவிட்டது. நிறைய நல்ல வீரர்களை யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. அரசியல் காரணங்களுக்காக பாகிஸ்தானை ஆட்டத்தில் சேர்த்துக்கொள்வதே இல்லை. சென்றமுறை நிகழ்ந்த கூத்துகளுக்காக இலங்கை வீரர்களை யாரும் பெரிதாக சீண்டவில்லை. இங்கிலாந்து வீரர்களை ஏன் தவிர்க்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. போனியாகாத வீரர்களில் Rusty Theron என்பவர் எனக்கு முக்கியமானவராக தோன்றுகிறார். அபாரமான மிதவேக பந்து வீச்சாளர். குறிப்பாக இறுதி நேரத்தில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். ஏற்கனவே ஹைதரபாத் அணிக்காகவும் (டெக்கான் கிரானிக்கல் வசமிருந்தபோது), பஞ்சாப் அணிக்காகவும் விளையாடியிருக்கிறார். அசம்பாவிதமாக தெரான் ஐ.பி.எல்லில் அதிக போட்டிகளில் சோபிக்கவில்லை. இருப்பினும் சில போட்டிகளில் அபாரமாகவும், மற்ற போட்டிகளில் மோசமில்லை என்ற வகையிலும் தான் விளையாடியிருக்கிறார். தற்சமயம் கொள்ளை விலைக்கு வாங்கியிருக்கும் வெளிநாட்டு பந்து வீச்சாளர்களை விட தெரான் எவ்வளவோ பரவாயில்லை. அதே போல பேட்ஸ்மேன்களில் Richard Levi. ஏற்கனவே மும்பைக்காக விளையாடியிருக்கிறார். லெவிக்கு கிடைத்த வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால் தென் ஆப்பிரிக்க உள்ளூர் போட்டிகளை பொறுத்தமட்டில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். தென் ஆப்பிரிக்கா அணியைப் போலவே, அதன் விளையாட்டு வீரர்களுக்கும் ராசி இல்லையோ என்னவோ...? அவரைத் தவிர்த்து Cameron White, David Hussey, Jesse Ryder போன்றவர்களும் விலை போகவில்லை. ஆசிஷ் நெஹ்ராவை சென்னை வாங்கியிருக்கிறது. ஆனால் முனாப் படேல், ஆர்.பி.சிங் போன்றவர்களை யாரும் வாங்கவில்லை. இருக்கட்டும் ப்ரீத்தி ஜிந்தா இருக்கும்வரையில் நமக்கு கவலையில்லை.
*

விஜய் டிவியில் Connexions என்றொரு நிகழ்ச்சி வாராவாரம் ஞாயிறு மதியம் ஒரு மணிக்கு ஒளிபரப்பாகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தை மனதில் பதிய வைத்துக்கொண்டு தவறாமல் பார்க்கிறேன். ஹண்ட் ஃபார் ஹின்ட் பாணியில் ஆனால் அதிக கஷ்டமில்லாமல் கேள்விகள் கேட்கப்படுகின்றன. முதல் சுற்றில், இரண்டு புகைப்படங்கள் காட்டப்படுகின்றன. இரண்டிற்கும் பொதுவான வார்த்தையை கண்டுபிடிக்க வேண்டும். வார்த்தை ஆங்கிலம் அல்லது தமிழ் அல்லது இரண்டும் கலந்தும் இருக்கலாம். மற்ற சுற்றுகளும் இதே போல புகைப்படங்களை வைத்து தான். முக்கியமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நண்டு ஜெகன் போட்டியாளர்களை நன்றாக கலாய்த்து தள்ளுகிறார். அதே சமயம் போட்டியாளர்கள் யாராவது டென்ஷன் ஆகிவிட்டால் அந்த சூழ்நிலையை நன்றாக கையாள்கிறார். சென்ற வாரத்தில் தொலைக்காட்சி நடிகை சூசன் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார். ஒரு கட்டத்தில் சூசன் துப்பட்டா அணிந்திருந்த பாங்கை ஜகன் கிண்டலடித்தார். சூசன் டென்ஷனாகி கத்த ஆரம்பித்துவிட்டார். இதுவே விஜய் டிவியின் வேறு நிகழ்ச்சியாக இருந்தால் இதையே சாக்காக வைத்து டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்தியிருப்பார்கள். ஆனால் ஜகன் சாமர்த்தியமாக பேச்சை மாற்றி நிலைமை மோசமாவதை தவிர்த்துவிட்டார். Connexions முடிந்ததும் ஒளிபரப்பாகும் நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம் என்ற நிகழ்ச்சியும் நன்றாக இருக்கிறது.
*

இப்போது கனெக்ஷன்ஸ் பாணியில் சில கேள்விகள்.

One by Two: இரண்டு படங்களுக்கும் பொதுவான வார்த்தையை கண்டுபிடிக்க வேண்டும்.

 


Joint Family: இரண்டு அல்லது மூன்று படங்கள் குறித்த வார்த்தைகளை சேர்த்து விடை கண்டுபிடிக்க வேண்டும்.மொக்கையாக இருப்பின் தனிமடலுக்கு வந்து திட்டவும். நன்றாக இருந்தால் தெரியப்படுத்தவும். வாராவாரம் தொடரலாம்.
*

பிரியாணியில் இடம்பெற்ற மிஸ்ஸிஸிப்பி பாடல் தான் ரீப்பீட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒளி வடிவத்தில் மந்தி டக்கராக செய்த வேலையை ஒலி வடிவத்தில் ப்ரியா ஹிமேஷ் செய்திருக்கிறார். கடைசி காலத்தில் வாலி எழுதிய பாடலில் கூட வாலிபால் விளையாடியிருக்கிறார்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

19 comments:

வவ்வால் said...

பிரபா,

படத்த போட்டு கண்டுப்பிடினு சொல்ற படப்புதிர்லாம் ஆதிகாலத்து வெளாட்டு, பழைய "ஸ்டைல்" எல்லாம் புதுசா திரும்ப வருவது "வாழ்க்கை ஒரு வட்டம்னு" காட்டுது அவ்வ்!

நான் சின்ன புள்ளையா இருக்கச்சொல்லோ "கோகுலம்"னு ஒரு சிறுவர் இதழ்ல இப்படித்தான் படப்புதிர்னு போட்டு பரிசுப்போட்டி வைப்பாங்க,

உதாரணத்துக்கு ஒன்னு சொல்லுறேன்,

ஒரு மூடின கதவு, கண்ணீர் சிந்தும் கண்ப்படம் போட்டிருந்தாங்க அதுக்கு ஒரு குறள் பதிலாம்,

பதில் ,

"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்"

இப்படி படம் போடுறவன் ஒன்ன நெனைச்சிக்கிட்டு புத்திசாலித்தனமா மொக்கை போட வேண்டியது தான் அவ்வ்!

நானெல்லாம் படம் போட்டு கேள்விக்கேட்டா லோகத்துல ஒருத்தன் கூட பதில் சொல்ல முடியாது அவ்வ்!

# இப்படி புதிர் போடும் போது , உதாரணமா ஒன்னு காட்டி என்ன அனலாஜினு படிக்கிறவங்களுக்கு சாம்பிள் காட்டணும் என்பது பாலப்பாடம்.

ஹி...ஹி முதப்படம் மட்டும் நல்லா இருக்கு என்பதால் ஒரு பதில சொல்லுறேன்,

ஆங்கிள் அல்லது வளைவு என்பதே பொது சொல்லா இருக்கலாம்.

வேற எதுவும் கிளூ கிளுனு வேண்டும்னாலும் சொல்வோம் பொது வெளியில் நல்லவன் மாதிரி நடிப்பது ஒரு சமூக கடமை அவ்வ்!

மத்ததுக்குலாம் பதில் சொல்ல "மூளைக்காரங்க வருவாங்க" :-))

Anonymous said...

நீ எழுதுர இந்த குப்பையவே தாங்க முடியல, இதுல புதிர் வேற. போயி புள்ள குட்டிய படிக்க வை சாரே.

ப்வே

சனா குனா said...

பொது வார்த்தை கொஞ்சம் கஷ்டம் போல இருக்கிறது...

3. போதை (சந்தேகமா இருக்கு)

கூட்டு படங்கள்:

2. வெண்ணிலா கபடிக் குழு
3. டாம் க்ரூஸ்

சரியா?

Ponchandar said...

படம் 1-க்கு ’CLOSE BUTTON" என்று நினைக்கிறேன்

படம் 2- தேன் கலர்

படம் 3 - மயக்கம்

படம் 4 - அறுக்கும் (மரத்தை, உயிரை)

அஞ்சா சிங்கம் said...

முதல் படத்திற்கு பதில் மூடு ...
இதோடு நானும் மூடிக்கிறேன் .

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கமே,

எங்கய்யா ஆளே காணோம் ,வண்டலூர் ஸூல புடிச்சுப்போட்டாங்களா :-))

நீர் தான்யா நம்ம கட்சி ,நானும் மூடு ,எக்ஸ் வச்சு தான் யோசிச்சேன்,ஆனால் அம்புக்குறி "எக்ஸ்" டச் பண்ணாம பார்டரில் தானே நிக்குது அப்புறம் எப்படி?

மூளைக்காரங்க யாராவது நல்ல பதில் சொல்வாங்களானு பார்த்துட்டு மேற்கொண்டு சொல்லிக்கலாம்னு விட்டாச்சு.

#பெண்ணின் தலை முடி +பிளாக் டீ = சாயம் அல்லது கறுப்பு

# மல்லி +மில்லி = வாசனை குப்புனு தூக்கும் :-)) அல்லது மயக்கும் மணம்!

# saw +dum = சாதம் (சோறு)

மத்தது எல்லாம் மக்களே சொல்லிட்டாங்க!வவ்வால் said...

அந்த பொண்ணு பேரு மொதலில் நியாபகம் வரலை, என்கேயோ பார்த்த மூஞ்சு ஆச்சேனு யோசிச்சிட்டே இருந்தேன் ,

ஹி...ஹி அப்போ "good tea" ராதிகானு புதிர் சொல்றீரா?

அப்போ எதுக்கு பிளாக் டீ படத்த போடணும்? ராங்க் க்ளு ஆச்சே?

வவ்வால் said...

அடடா பொண்ணு பேரு நியாபகம் வந்த பின்னர் தான் ,நடிச்ச முதல் படம் இயற்கைனு நியாபம் வருது,அப்போ நேச்சுரல் டீயா அது அவ்வ்,

அப்போ பொது வார்த்தை "இயற்கை" :-))

Ponmahes said...

பதிவு சுமாராத் தான் இருக்கு தம்பி...

குட்டிபிசாசு said...

//நகிர்தனா திரனனா னா...!//

:))

Philosophy Prabhakaran said...

சரவணன்,

வெண்ணிலா கபடிக் குழு, டாம் க்ரூஸ் இரண்டும் சரியான விடைகள் :)

Philosophy Prabhakaran said...

பொன் சந்தர்,

வவ்வால் கூறியபடி ஒரு உதாரணம் போட்டு காட்டியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

Philosophy Prabhakaran said...

அஞ்சா சிங்கம்,

மூடு என்பது சரியான விடை :)

Philosophy Prabhakaran said...

வவ்வால்,

சாதம் என்பது சரியான விடை :)

அந்த குட்டி ராதிகா பற்றிய படப்புதிரில் கொஞ்சம் சொதப்பிவிட்டேன் என்று நினைக்கிறேன்... குட்டி / Good Tea என்பதை மனதில் வைத்துதான் அதனை தயாரித்தேன்... ஆனால் அது கருந்தேநீர் ஆகிவிட்டது... ஆனால் ஒருவழியாக அதையும் கண்டுபிடித்துவிட்டீர்கள் :)

அடுத்த முறையில் இருந்து ஒரு உதாரணம் போட்டு விளக்கிடுறேன்...

மல்லிகைப்பூ, மது கேள்விக்கு நிறைய பேர் மயக்கம், போதை'ன்னு சொல்லியிருக்காங்க... அதுவும் ஒரு வகையில் சரி.... ஆனால் நான் நினைத்த பதில் அதுவல்ல... மதுபானத்தை தமிழில் அன்னஃபீஷியலாக சரக்கு என்று சொல்வது போல ஆங்கிலத்தில் ஒரு அன்னஃபீஷியல் வார்த்தை இருக்கிறது... அது என்ன என்று யோசிக்கவும்....

வவ்வால் said...

பிரபா,

// மதுபானத்தை தமிழில் அன்னஃபீஷியலாக சரக்கு என்று சொல்வது போல ஆங்கிலத்தில் ஒரு அன்னஃபீஷியல் வார்த்தை இருக்கிறது... அது என்ன என்று யோசிக்கவும்....//

மல்லிகைப்பூவிற்கு "மூன் ஷைன்" எனப்பேர் உண்டு அதே போல கள்ளத்தனமாக காய்ச்சின சாராயத்துக்கு "மூன் ஷைன்' எனப்பேர் உண்டு,அந்த அளவுக்குலாம் பெயரியல் ஆராய்ச்சி செய்ய மாட்டீர்னு நினைச்சேன், மல்லி வாசம் ,மில்லிவாசம் என "வாசத்தினை தான் சொல்ல வரதா நினைச்சேன்!

# மூடு என்பதையும் யோசித்தேன் என சொல்லி இருந்தேன்,ஆனால் அம்புக்குறி "எக்ஸ்" தொடலையேனு தான் கோணத்தினை(ஆங்கிள்" )சொன்னேன்.

#//ஆனால் அது கருந்தேநீர் ஆகிவிட்டது... ஆனால் ஒருவழியாக அதையும் கண்டுபிடித்துவிட்டீர்கள் :)//

பிளாக் டீயாக குடிக்கும் ஒன்றினை ஹெர்பல் டீ (கிரீன் டீ)அல்லது நேச்சுரல் டீ என விற்கிறார்கள், அதில் செம்பருத்தி டீ முதல் கொண்டு மல்லிகை பூ டீ வரைக்கும் இருக்கு, நானும் சில பல ஃப்ளேவர்ஸ் வாங்கி குடிச்சு பார்த்து கொமட்டி இருக்கேன் அவ்வ்!


திநகர் ரங்க நாதன் தெருவில் ,ஜெயச்சந்திரன் ஸ்டோர்ஸ் ஜவுளிக்கடைக்கு பக்கத்தில இருக்க ஒரு கடையில 22 மணத்துல நேச்சுரல்ஸ் டீனு, டீ பேக் முன்ன வித்தாங்க ,இப்ப கடை இருக்கானு தெரியலை!

கோத்தகிரில இருந்து டீ லீவ்ஸ் கூட வாங்கி வந்து டீ போட்டுக்குடிச்சு இருக்கேன் அவ்வ்!

வவ்வால் said...

"mine"/mines என்பதும் பொதுவாக சரக்கை குறிக்க பயன்ப்படுத்தப்படும் ஸ்லாங்க் ,அதுக்கு காரணம் மல்லிப்பூ இல்லை ,சுரங்கத்தொழிலாளிகள் "கள்ளச்சாரயம் குடிப்பதை" சொல்ல!

அமெரிக்க ஸ்லாங்கில் தமிழ்நாட்டில் புதிர் போடும் உம்மை எல்லாம் டைட்"டானிக்"ல தான் ஏத்தி அனுப்பி இருக்கனும் அவ்வ்!

ஹி..ஹி நாங்கலாம் டானிக்" "மருந்து"னு சொல்வோமே அவ்வ்!

Philosophy Prabhakaran said...

வவ்வால்,

மூன் ஷைன், mines என்று அநியாயத்துக்கு யோசிக்கிறீர்கள்...

Booze என்ற வார்த்தையை கேள்விப்பட்டதில்லையா ?

முதல் படத்தில் இருப்பது பூஸ் (பூக்கள்), இரண்டாவதில் இருப்பது Booze...

வவ்வால் said...

பிரபா,

//Booze என்ற வார்த்தையை கேள்விப்பட்டதில்லையா ?

முதல் படத்தில் இருப்பது பூஸ் (பூக்கள்), இரண்டாவதில் இருப்பது Booze...//

எல்லாம் நேரம்யா நேரம், முதலில் இதான் நினைச்சேன் ,இந்தளவுக்கு சிம்பிளா நீர் யோசிக்க மாட்டீர் என நினைத்து ,அதுவும் குறிப்பா மல்லிகைப்பூவ ஏன் போடணும்னு கொஞ்சம் எக்ஸ்ட்"ராவா"மூளைய கொழப்பிக்கிட்டேன் அவ்வ்!

வெளிநாட்டில பூக்கள்,பழங்களை அடிப்படையாக வச்சு சரக்கு தயாரிக்கிறாங்க,எனவே பேரிலவே அப்படி வரும்,இல்லை எப்படியாவது ரிலேட் செய்திருப்பாங்கனு யோசிச்சு மல்லிகைக்கு ,மூன்ஷைன்னு பேரு கண்டுப்பிடிச்சு அதுக்கு சரக்கு பேரு என்னனு கூகிள் செய்தேனய்யா அவ்வ்!

உ. ம்: பிளடி மாரினா தக்காளில செய்யணும் ,வோட்கா என்றால் ஒரு வகை ஸ்வீட் கிராஸ்(இனிப்பு புல்) இல் செய்யணும்.

சாமந்திப்பூ அடிப்படையில கூட சரக்கு இருக்கு அவ்வ்!

டக்கிலானா கற்றாழையில செய்வது.

ஜீவன் சுப்பு said...

Well Try ...! I could not find any answer ... :(

continue with one or two per post ..