வணக்கம் மக்களே...
சில நாட்களுக்கு முன்பு எந்தெந்த ப்ளேயர்களை எந்தெந்த அணிகள் தக்கவைத்துக்கொள்ளும் என்பது குறித்த பதிவொன்றை எழுதியிருந்தேன். இப்போது ப்ளேயர்களை தக்கவைக்கும் படலம் முடிந்திருக்கும் நிலையில் அதுகுறித்த ஒரு அலசல்.
Mumbai Indians:
Malinga, Pollard, Sachin, Harbhajan என்று பிளேயர்கள் பிடிமானத்தில் தன்னுடைய பங்கினை மிகச்சரியாக செய்துள்ள அணி என்று குறிப்பிடலாம். குறிப்பாக போல்லார்ட் மற்றும் மலிங்கா ஆட்டத்தையே புரட்டிப்போடக் கூடியவர்கள். சச்சினை விட்டிருந்தால் கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கும். மேலும் மும்பை என்றாலே சச்சின் ஒரு ட்ரேட்மார்க் என்பதால் மும்பை ரசிகர்கள் அணியின் மீதுகொண்ட ஆதரவை கைவிட்டுருப்பார்கள். நான்காவது பிளேயரை தக்க வைத்துக்கொள்ள 0.5 million USD மட்டுமே தேவை என்ற நிலையில் ஹர்பஜனை வைத்துக்கொண்டது நல்ல முடிவு.
Chennai Super Kings:
Dhoni, Raina, Vijay, Morkel. தோனியையும் ரைனாவையும் தக்க வைத்துக்கொண்டது சரியான முடிவு. பொலிங்கரை தக்க வைப்பதற்கு ஐ.பி.எல் விதிகள் இடமளிக்காதது துரதிர்ஷ்டவசமானது. நல்லதொரு வேகப்பந்து வீச்சாளர் இல்லாதது சென்னை அணிக்கு ஒரு மிகப்பெரிய குறைபாடு. ஆனால் எப்போதாவது ஒருமுறை சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தும் மார்கலை நம்ப முடியாது. மார்கலை தக்க வைத்ததற்கு பதிலாக ஏலத்தில் வேறு ஏதாவதொரு வேகப்பந்து வீச்சாளரை எடுத்திருக்கலாம். சென்னை வீரர் விஜய்யை தக்க வைத்திருப்பது குறித்து மகிழ்ச்சிதான் ஆனால் அது சரியான முடிவா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Rajasthan Royals:
Warne, Watson. வார்னே ஒரு நல்ல கேப்டன், திறமைசாலி. இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆடுவாரா என்பது மட்டும் சந்தேகம். வாட்சனும் அரிதான ஆல்-ரவுண்டர். இந்த இருவரை மட்டும் தக்க வைத்திருக்கும் ராஜஸ்தான் அணி யூசூப் பதானை தவறவிட்டது முட்டாள்தனமாக இருக்கிறது. இத்தனைக்கும் மூன்றாவது வீரரின் விலை 0.9 million USD மட்டுமே என்ற நிலையில் அவரை அருமையாக தக்க வைத்திருக்கலாம். மூன்றாவதாக ஒரு வெளிநாட்டு வீரரை தக்க வைத்துக்கொள்ள விதிகள் அனுமதிக்காத நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளரான முனாப் படேலை வைத்திருக்கலாம்.
Delhi Dare Davils:
Seheag. அடிமுட்டாள்த்தனம் என்றே எண்ணத் தோன்றுகிறது. Dilshan, Warner, Nannes, De Villiers, Gambhir என்று நட்சத்திர பட்டாளத்தையே வைத்துக்கொண்டு ஒரே ஒரு வீரரை தக்க வைத்திருப்பதை வேறு எப்படி சொல்வது. ஆரம்ப ஆட்டத்தில் சேவாக்கிற்கு பக்க பலமாக இருந்துவந்த கம்பிரை தவற விட்டிருக்கக் கூடாது. மேலும் வேகப்பந்து வீச்சில் திறமையை வெளிப்படுத்திவந்த Nannes மற்றும் அதிரடி ஆட்டத்தோடு அவ்வப்போது சுழற்பந்து வீசும் Dilshan இருவரையும் அருமையாக தக்க வைத்திருக்கலாம்.
Royal Challengers Bangalore:
டிராவிட், கும்பிளே, உத்தப்பா போன்ற சீனியர் வீரர்கள் இருக்கும்போது கோலியை தக்க வைத்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இருப்பினும் அவர் தற்போது நல்ல பார்மில் இருக்கிறார். நியூசிலாந்து அணியின் மோசமான பார்மை மனதில் வைத்துக்கொண்டு ராஸ் டெய்லரை தவற விட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அது அவ்வளவு பெரிய தவறு என்பதை டெய்லர் வேறு ஒரு அணிக்கு சென்று பொளந்து கட்டும்போது உணர்ந்துக்கொள்வார்கள். ஆக, டெய்லர், டிராவிட், கும்பிளே ஆகிய மூவரையும் தக்க வைத்திருக்கலாம். நான்காவது வீரராக உத்தப்பா அல்லது கோலியை வைத்திருக்கலாம்.
மற்ற மூன்று அணிகளும் எந்தவொரு வீரரையும் தக்க வைத்துக்கொள்ளவில்லை. கொல்கத்தா அணி கெய்லை தக்க வைத்துக்கொள்ள நினைத்து கடைசி நேரத்தில் அந்த எண்ணத்தை கைவிட்டதாக தெரிகிறது.
கிரிக்கெட்டை பொறுத்தவரை ஒரு சிறந்த ப்ளேயர் எல்லா ஆட்டத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று சொல்ல முடியாது. ஆனால் சில வீரர்கள் பெரும்பாலான சமயத்தில் சிறப்பாக ஆடுவார்கள். அப்படிப்பட்ட நட்சத்திர வீரர்களை சிலரை அவர்களது அணிகள தவற விட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட வீரர்களின் லிஸ்ட்:
- Adam Gilchrist
- Tilakaratne Dilshan
- David Warner
- Gautam Gambhir
- Kumar Sangakkara
- Yuvraj Singh
- Chris Gayle
- Yusuf Pathan
- Ross Taylor
அட., யாருப்பா அங்க ரொம்ப நேரமா கங்குலி கங்குலின்னு கத்திக்கினு இருக்குறது...
என்றும் அன்புடன்,
|
|






























