வணக்கம் மக்களே...
செவ்வாடை தொண்டர்கள் சிலர் கட்டாயம் இந்த பதிவை படித்தே தீர வேண்டுமென்ற உயரிய நோக்கத்தில் இந்த பதிவை தேர்ந்தெடுத்தேன். இந்த சமூகத்தின் மீது நான் கொண்ட கோபத்தின் காரணமாக சில இடங்களில் முறையற்ற வார்த்தைகளை தவிர்க்க முடியவில்லை. தவறாக இருந்தால் மன்னித்தருளுங்கள்.
தலைப்பு கொண்ட கருத்துக்கு செல்வதற்கு முன்னால் சில உப கருத்துக்கள்...
தலையிலேயே குட்டுகிறார்கள்...
சரி நம்ம தல தானே என்று அவ்வப்போது நான் அஜித்தைப் பற்றி கிண்டலாகப் பேசி விமர்சிப்பது உண்டு. அவையனைத்தும் தல மீது நான் கொண்ட பாசத்திலும் உரிமையிலும் மட்டுமே. ஆனால் அஜித்தை மற்றவர்கள் தூற்றும்போது பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஜாக்குவார் தங்கம், டங்குவார் தகரம் என்று ஆளாளுக்கு தலையை கலாயத்ததில் நான் ரொம்பவே அப்செட். அதிலும் "எனது பக்கங்கள்" என்ற பெயர்கொண்ட அந்த வலைப்பூவில் அஜித் மீது தொடுக்கப்பட்ட வார்த்தைகள் என்னை மிகவும் பாதித்தது.
சம்பந்தப்பட்ட அந்த இடுகைகளுக்கான இணைப்புகள்:
குட்டியாய் ஒரு குட்டி விமர்சனம்
திரைக்கதை என்னவோ சினிமாத்தனமும் மசாலாத்தனமும் நிரம்பி வழிந்தாலும் கதை கொண்ட கரு மட்டும் என் மனதை கடுமையாக கவர்ந்துவிட்டது. ஒருதலைக்காதலின் மகத்துவத்தை படம் கவிதையாய் வாசித்தது. தனுஷின் நடிப்பில் யதார்த்தம் ரொம்ப குறைவு. ஆனாலும் தனுஷை மிகவும் ரசித்தேன். தனுஷின் மேனரிசங்களும் மவுத் ஆர்கன் வாசிக்கும் விதமும் நண்பன் பாண்டீஸ்வரனை நினைவுபடுத்தியது. தனுஷ் - ஆர்த்தி நட்பு புதுசாக இருந்தது. "குட்டிக்கு வார்னிங்" காட்சி சொன்ன கருத்துகள் அனைத்தும் அற்புதம். "feel my love" என்ற வார்த்தையே ஒரு புதுக்கவிதை. நேரம் கிடைத்தால் நீங்களும் பார்த்து feel பண்ணுங்க.
ஆட்டோ சங்கரின் அத்தியாயம்
சில வாரங்களுக்கு முன்பு தபூ சங்கரை புரட்டிய நான் இந்த வாரம் ஆட்டோ சங்கரை புரட்டினேன். படித்த பத்து பக்கங்களிலேயே தன் மொத்த கோபத்தையும் சமூகத்தின் மீது கொட்டியிருந்தான். உண்மைதான். "பிறக்கும்போது யாருமே நல்லவர்களாகவோ கெட்டவர்களாகவோ பிறப்பதில்லை. எல்லோருமே குழந்தைகளாகத்தான் பிறக்கின்றனர்". ஆட்டோ சங்கருக்கு நல்ல பெற்றோர் கிடைத்திருந்தால் அவன் இப்படி ஒரு நிலைக்கு ஆளாகியிருக்கமாட்டான். புத்தகத்தை முழுமையாய் முடித்தபின் இதுபற்றி தனிப்பதிவு ஒன்றைப் போடுகிறேன்.
வேதியியலா...? வேசியியலா...?
நீண்ட நாட்களாகவே தியான சாமியார்கள் பற்றி இருந்துவந்த மனக்குழப்பம் இப்போது தீர்ந்திருக்கிறது. "மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்", "கதவைத் திற காற்று வரட்டும், மனதைத் திற மகிழ்ச்சி பொங்கட்டும்", அத்தனைக்கும் ஆசைப்படு", "ரஞ்சிதா ***க்கும் ஆசைப்படு" என்று மையமாக எதையாவது கூறி தியான வியாபாரம் செய்து வந்த கும்பலின் குட்டு இப்போது வெளிவந்திருக்கிறது. எப்படியோ என் தமிழ் மக்களுக்கு இதன் மூலமாக கொஞ்சமாவது விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருந்தால் மகிழ்ச்சிதான். ஆனால் "நித்தி சரியில்லை ஜக்கியிடம் போவோம்" என்று சென்றால் பிள்ளைவரம் வாங்கிக்கொண்டு திரும்பவேண்டியதுதான்.
இதுவரை தரிசனம் காணாத பக்தர்களுக்காக:
எப்படியோ தேடிக்கண்டுபிடித்து நித்யானந்தர் - ரஞ்சிதா உல்லாச லீலைகளை பார்த்து பாவ விமோட்சனம் அடைந்துவிட்டேன். காட்சிகளை விட நக்கீரனின் "நகிர்தனா... திரனனா..." பேக்ரவுண்ட் பாடல் மனதை மிகவும் கவர்ந்தது. என்னைப்போல நீங்களும் கவரப்பட்டிருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லின்க்கை சொடுக்கி அந்த பாடலை பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.
நடுத்தர வயதினர் சிலர் பர்மா பஜாரில் திருட்டு முழியோடு சுற்றிக்கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. வீடியோவில் நித்யா துள்ளிக்குதித்து எழுந்தருளிய காட்சியை பார்த்தீர்களா...? ச்சே... சான்சே இல்லை... நித்திக்கும் ரஞ்சிதாவிற்கும் அப்படி ஒரு அன்னியோன்யம். பேசாமல் கெளதம் மேனன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை நித்தியானந்தரையும் ரஞ்சிதாவையும் வைத்து எடுத்திருக்கலாம். நித்தியாவது டைட்டிலில் "யங் சூப்பர் ஸ்டார்" என்று போட வேண்டுமென அடம் பிடித்திருக்க மாட்டார். நித்திக்கும் ரஞ்சிதாவிற்கும் இடையில் இருப்பது வேதியியலா வேசியியலா என்று புரியவில்லை.
யார் அடுத்த நித்தியானந்தர்...?
பிரேமானந்தா, சதுர்வேதி, ஜெயந்திரர், தேவநாதன், நித்தியானந்தர் இவர்களது வரிசையில் அடுத்து வரப்போவது யார்...? (புட்டபர்த்தி சாய் பாபாவை ஏற்கனவே ஊடகங்கள் வெட்டவெளிச்சமாக்கி விட்டாலும் மக்கள் இன்னமும் திருந்திய பாடில்லை). ஜக்கி வாசுதேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சிவசங்கர் பாபா, அமிர்தானந்தமயி, என்று ஆயிரம் பேர் இருந்தாலும் நம்ம பேவரிட் கங்காரு... ஸாரி பங்காரு அடிகளார் பற்றி பேசுவோம்.
இப்பொழுதே பங்காருவைப் பற்றி பேசுவதற்கு காரணம் இருக்கிறது. அம்மாவுக்கு இப்பொழுதே வயது எழுபதை கடந்துவிட்டது. இன்னும் ஒருசில ஆண்டுகளில் இறைவனடி சேர்ந்துவிடுவார். அதுமட்டும் நடந்துவிட்டால் இப்போது சாமியாராக திரிபவரை சாமியாக்கி விடுவார்கள். அந்தக் கொடுமை நடப்பதற்குள் விழித்துக்கொள்வோம்.
ஏற்கனவே ஜெயலலிதாவும் அமிர்தானந்தமயியும் அம்மா என்ற வார்த்தைக்கு பெருமை தேடித்தந்தது போதாதென்று பங்காருவும் தன் பங்குக்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் தனது 72வது பிறந்தநாளில் 100 கோடியை நலத்திட்டங்களுக்காக மட்டுமே செலவிட்டிருக்கிறார். (எல்லாம் நம்ம வீட்டு பணம்தான்). நலத்திட்டதிற்கே இவ்வளவு தொகை என்றால் அடிகளாரின் சொத்துமதிப்பு எவ்வளவு இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். (ஐயோ எண்ண முடியாதுங்க... நினைத்து பாருங்கள்) முன்பொரு காலத்தில் அருள்வாக்கு சொல்வதில் ஆரம்பித்தவர் இன்று ஒரு ஊரையே சொந்தமாக்கி இருக்கிறார்.
அம்மா பங்காருவின் காலைக் கழுவி விடுவதற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். அவரது காலைக் கழுவி விடுவதற்கு 25.000, 30,000 என்று நன்கொடை கட்ட வேண்டுமாம். காலைக் கழுவுவதற்கு ஐம்பதாயிரம் வாங்கினால் குண்டியைக் கழுவி விட எவ்வளவு வாங்குவார் என்று தெரியவில்லை.
என்றைக்கும் சாமியார்களில் இரண்டே வகைதான்... நல்ல சாமியார், போலி சாமியார் என்கிறீர்களா...? இல்லை... சாமியார் என்றாலே போலி தான்... பின்னே என்ன இரண்டு வகை...?
1. போலீசில் மாட்டிய சாமியார்
2. போலீசில் மாட்டாத சாமியார்
செவ்வாடை தொண்டர்கள் யாராவது வாதாட விரும்பினால் வாருங்கள்.
என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN
NR PRABHAKARAN
|
|




