அன்புள்ள வலைப்பூவிற்கு,
அஜீத்:
“படிங்க, வேலைக்குப் போங்க. உங்களுடைய தினசரி வேலைகளைப் பாருங்க. என் படம் நல்லா இருந்தா, தியேட்டரில் வந்து பாருங்க. அது போதும்!'' – இப்படி தன்னுடைய ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்திருப்பவர் ஷாட்ஷாத் நம்ம தல அஜீத் தான். நான் ஒரு அஜீத் ரசிகன் என்று சொல்லிக்கொள்வதில் மீண்டும் மீண்டும் பெருமைப்படுகிறேன்.
நடிகப்பசங்க பின்னாடி வராதீங்கடான்னு அன்னைக்கு எம்.ஆர்.ராதா சொன்னதையே தல கொஞ்சம் டீசண்டா, டீடைல்டா சொல்லியிருக்கார். ஆமாம் அஜீத்துக்கு தொப்பை இருக்கு, அவருக்கு ஒழுங்கா நடிக்கத் தெரியாது, அவருக்கு டான்ஸ் ஆடத்தெரியாது, அவருக்கு தமிழ் உச்சரிப்பு சரியா வராது, அவருக்கு காமெடி பண்ணத்தெரியாது, அவருக்கு கதை தேர்வு செய்யத்தெரியாது – ஆனாலும் நான் அஜீத் ரசிகன்தான். நீங்க ஒரு ஜென்டில்மேன் தல.
நடிகப்பசங்க பின்னாடி வராதீங்கடான்னு அன்னைக்கு எம்.ஆர்.ராதா சொன்னதையே தல கொஞ்சம் டீசண்டா, டீடைல்டா சொல்லியிருக்கார். ஆமாம் அஜீத்துக்கு தொப்பை இருக்கு, அவருக்கு ஒழுங்கா நடிக்கத் தெரியாது, அவருக்கு டான்ஸ் ஆடத்தெரியாது, அவருக்கு தமிழ் உச்சரிப்பு சரியா வராது, அவருக்கு காமெடி பண்ணத்தெரியாது, அவருக்கு கதை தேர்வு செய்யத்தெரியாது – ஆனாலும் நான் அஜீத் ரசிகன்தான். நீங்க ஒரு ஜென்டில்மேன் தல.
அழகர்சாமியின் குதிரை:
அழகர்சாமியின் குதிரை படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. படம் கிட்டத்தட்ட முடியும்வரையில் படத்தில் வரும் கிராமத்தைப் போல வறட்சியாகவே இருந்தது. பாஸ்கர் சக்தியின் வசனங்கள் மட்டும் ஆங்காங்கே தூறல் போட்டுக்கொண்டிருந்தது. அதேமாதிரி, தம்பியுடன் சத்துணவை பகிர்ந்துக்கொள்ளும் சிறுவன், திருவிழாவிற்கு பணம் வசூல் செய்ய வந்திருக்கிறார்கள் என்று தெரிந்துக்கொண்டு காது கேட்காதது போல நடிக்கும் கிழவி என்று திரைக்கதையிலும் சில சாரல்கள். ஆனால் ஒட்டுமொத்த படமாக பார்த்தால் மொக்கையாகவே இருந்தது. ஒருவேளை கழுதையாக இருக்குமோ என்று சந்தேகமாக இருந்தது. அப்படி இருந்தால் சிவாவிற்கு போன் போட்டு திட்டவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். இறுதிக்காட்சியில் நச்சென்று நறுக்கென்று கலப்பு திருமணம் பற்றிய ஒரு கருத்தைச் சொல்லி படத்தில் மழை பெய்ததைப் போல என் மனதிலும் மழை பெய்ய வைத்துவிட்டனர்.
இருந்தாலும் “குதிக்கிற குதிக்கிற குதிரைக்குட்டி...” பாடலை பார்த்து கொஞ்சம் ஏமாந்துவிட்டேன் என்றே சொல்லவேண்டும். படத்தில் மிருகங்களுடனான பாசம், பிணைப்பு பற்றி ஏதாவது சொல்லியிருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். அதே மாதிரி சரண்யா மோகனை வெறும் இரண்டு மூன்று காட்சிகளில் மட்டும் நடிக்கவைத்து வீணாக்கிவிட்டார்கள்.
அழகர்சாமியின் குதிரை படத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு வசனக்காட்சி,
சிறுமி: டேய்... கோடங்கிக்கு பேயா பிடிச்சிருக்கு...?
சிறுவன் 1: இல்ல சாமி வந்திருக்கு...
சிறுவன் 2: ஹேய்... ரெண்டும் ஒன்னுதேன்...
100% உண்மை. சாமியாடுறவங்கள்ல ரெண்டு வகை இருக்கு. ஒன்று, நாம் என்ன செய்கிறோம் என்பதை மறந்து சாமியாடுபவர்கள். இவர்கள் மனநோயாளிகள். இவர்களை கன்னத்தில் அறைந்தால், ஏன் சிவகாசி படத்தில் வருவதுபோல சரவெடி வைத்தால் கூட சமயங்களில் அசரமாட்டார்கள். இன்னொன்று தெரிந்தே ஊரை ஏமாற்றும் அயோக்கியர்கள். (இந்தப்படத்தில் வரும் கோடாங்கி மாதிரி). இவர்களை பிடித்து பொளேர்ன்னு கன்னத்துல நாலு அறை விட்டுப்பாருங்க. அப்புறம் சாமியாவது, மாமியாவது...
ஆனா, ஆயிரம்தான் சொல்லுங்க... மைக்கேல் ஜாக்சன், பிரபு தேவா இன்னும் எத்தனை பேர் வந்தாலும் சாமியாடுறவங்க மாதிரியும், சாவுக்கு முன்னாடி சரக்கடிச்சிட்டு ஆடுறவங்க மாதிரியும் யாராலும் ஆடமுடியாது. எல்லாம் அந்த அழகர்சாமியின் திருவிளையாடல்தான்.
மங்காத்தா:
இன்னைக்கு மங்காத்தா பாடல் ரிலீஸ். ஏற்கனவே நெட்டில் வெளியாகிவிட்டது. பாட்டிலை திறப்பதற்காக காத்திருக்கிறேன். மேட்டர் அது இல்லை. மங்காத்தா – ஓஷன்ஸ் லெவன் படத்தின் காப்பி என்று சிலர் பேசிக்கொள்கிறார்கள். ஓஷன்ஸ் லெவன் படம் பார்த்தேன், மங்காத்தா ட்ரைலர் பார்த்தாலும் அப்படித்தான் தோன்றுகிறது. ஐயாம் சாமை காப்பி அடித்த தெய்வத்திரு(ட்டு)மகளை காறித்துப்பினோம். சீன் பென்னை அட்டகாசமாக இமிடேட் செய்திருக்கும் விக்ரமிற்கு சிறந்த மிமிக்ரி நடிகருக்கான தேசிய விருது கிடைக்கும் என்று கலாய்த்தோம். ஆனால் இப்போது அஜீத்தின் முறை என்றதும் கொஞ்சம் நெருடுகிறது. எதற்காக இவ்வளவு பீடிகை என்று கேட்பவர்களுக்கு – ஓஷன்ஸ் லெவன் பற்றிய பதிவு இன்று மாலை வெளிவருகிறது.
தல... அஞ்சலியோட ரொமான்ஸ் பண்ண உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கல போல...
மாலை மங்கும் நேரம்:
இசைப்பிரியர்களுக்கு இன்னுமொரு பாம்பே ஜெயஸ்ரீ கிடைத்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஜீவா – ஷ்ரேயா நடிப்பில் வரவிருக்கும் ரெளத்திரம் படத்தில் மாலை மங்கும் நேரம் என்றொரு அற்புதமான பாடல். மீண்டும் மீண்டும் அந்தப்பாடலைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
பாடியவர் பெயர் ரனைனா ரெட்டியாம். இதுவரை தமிழில் சரோஜா படத்தின் கோடான கோடி, கோ படத்தின் அகநக மற்றும் இன்னும் சில பாடல்களையும் பாடியிருக்கிறார். இசையமைப்பாளர் புதியவர் - பெயர் பிரகாஷ் நிக்கி.
![]() |
| ரனைனா |
பாடியவர் பெயர் ரனைனா ரெட்டியாம். இதுவரை தமிழில் சரோஜா படத்தின் கோடான கோடி, கோ படத்தின் அகநக மற்றும் இன்னும் சில பாடல்களையும் பாடியிருக்கிறார். இசையமைப்பாளர் புதியவர் - பெயர் பிரகாஷ் நிக்கி.
இந்தப்பாடல் குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். பெண்களை டார்கெட் செய்து ரொமான்டிக்காக பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். இந்த சாம்பிளை பாருங்கள் –
“நான் சமையல் செய்திடுவேன்...
நீ வந்து அனைத்திடுவாய்...
என் பசியும் உன் பசியும்
சேர்ந்தே ஒன்றாய் அடங்கும்...”
(அது ஏன் இந்த சமையல்கட்டு மேட்டர் எல்லாப்பொண்ணுங்களுக்கும் பிடிக்கிறது... யோவ் சிபி ஒரு ஆராய்ச்சி பதிவை போடுறது...)
இவ்வளவு ரொமாண்டிக்கான பாடலை தாமரையை தவிர வேற யார் எழுதியிருக்க முடியும்ன்னு நினைக்கிறீங்க. இந்தப்பாடலை மேலே உள்ள இணைப்பை கிளிக்கி கேளுங்கள். இப்போ நீங்க என்ன செய்யனும்னா இந்தப்பாடலை உங்கள் இணைக்கு அனுப்பி அவரையும் கேட்கச்சொல்லுங்கள். (நான் செய்தது போலவே...)
- என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
|













