வணக்கம் மக்களே...
பதிவுலகில் இதுவரை யாரும் முயற்சி செய்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். சிலருக்கு பிடிக்கலாம் மற்றவர்கள் முட்டாள்தனமாக நினைக்கலாம். எனக்கு ஒரு விசித்திரமான பழக்கம் உண்டு. தூங்கும்போது கனவுகள் ஏதேனும் வந்தால் உடனடியாக நோட்டையும் பேனாவையும் எடுத்து அந்த கனவை எழுதிவிடுவேன். ஆனால் எல்லாக் கனவுகளையும் இதுபோல எழுத முடிவதில்லை. பெரும்பாலான கனவுகள் எழுந்து நோட்டு பேனாவை எடுப்பதற்குள் மறந்துவிடுகின்றன. பெரும்”பலான” கனவுகளை நோட்டில் எல்லாம் எழுதி வைக்க முடிவதில்லை. மேற்கண்ட இரண்டு தடைகளையும் தகர்த்து எறிந்த கனவு ஒன்றினை இந்தப் பதிவில் புனைவுகள் ஏதுமின்றி கண்டதை “கண்டபடி” எழுதுகிறேன். பிடித்திருந்தால் தொடர்ந்து இதுபோல பல விசித்திர கனவுகளை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.
கனவு கண்ட தேதி: ஜூலை 4, 2010
கனவு கண்ட நேரம்: காலை 10.30 (!!!)
நேற்றிரவு நைட் ஷிப்ட் செய்துவிட்டு வந்து படுத்தபோது கண்களுக்குள் நுழைந்த சின்னஞ்சிறிய கனவு. ஆனாலும் ரொம்ப பவர்புல்லான கனவு. கெட்ட கனவாகவே இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஷங்கர் படம் போல மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது.
கனவில், மணி அப்போது தோராயமாக இரவு 8 இருக்கும். ஒரு வயல்வெளி போன்ற நிலத்தில் நானும் என் தங்கையும் கைகளை கோர்த்தபடி நடந்து சென்றுக்கொண்டிருந்தோம். எங்களுக்கு முன்னும் பின்னும் சில மனிதர்கள் தென்பட்டனர். அப்போது ஒரு மிகப்பெரிய ஜெட் விமானம் அபரிமிதமான நெருப்பை கக்கிக்கொண்டு வானில் பல்டியடிப்பதும் செங்குத்தாக பரப்பதுமாக பல சாகசங்களை நிகழ்த்திய வண்ணம் இருந்தது. அது சக்திமான் தொடரில் காட்டப்படும் வேற்றுக்கிரக மனிதர்களின் விண்கலம் போல இருந்தது என்றும் சொல்லலாம். அது தரைமட்டத்திற்கு மிகவும் அருகில், அதே சமயம் எங்கள் தலைக்கு நேரே அல்லாமல் சில கிலோமீட்டர்கள் தள்ளியே பறந்தது. திடீரென அந்த ஜெட் விமானம் கொஞ்சம் கொஞ்சமாக கீழே விழுவது போல தெரிந்தது. நாங்கள் சற்று தொலைவில் இருந்தாலும் அவ்வளவு பெரிய விண்கலம் விழுந்தால் அது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர முடிந்தது. பேரழிவு வரப்போகிறது என்று உணர்ந்த போதிலும் என் மனம் அந்த பிரம்மாண்டமான காட்சியை ரசித்துக்கொண்டிருந்தது. ஆனாலும் எப்படியாவது தங்கையை மட்டும் காப்பாற்றி விட வேண்டுமென துடித்தேன். அந்த வயல்வெளியில் ஓடினாலும் பயனில்லை என்ற காரணத்தினால் நாங்கள் அசையாமல் வானத்தைப் பார்த்தபடி இருந்தோம். சில நொடிகளில் பலமான சத்தத்தோடு அந்த விண்கலம் தரையில் விழுந்து அதன் சுற்றுவட்டாரத்தை நாசமாக்கியது. நல்லவேளையாக அதன் தாக்கம் எங்களை நெருங்கவில்லை. கீழே விழுந்த விண்கலம் அத்தோடு நில்லாமல் பூமியில் இருந்த கார், பஸ், லாரி போன்ற வாகனங்களை எல்லாம் தூக்கி வீசிக்கொண்டிருந்தது. வானத்தில் ஆங்காங்கே வெடிகுண்டுகள் போல ஏதோ வெடித்துக்கொண்டிருக்கின்றன. அப்படியே வயல்வெளியில் அண்ணாந்து படுத்துக்கொண்டு வானத்தில் நடக்கும் வேடிக்கைகளை ரசிக்கலாம் என்று தோன்றியது. ஆனால் அதற்குள்ளாக கனவு கலைந்துவிட்டது.
இந்தப் பதிவிற்கு நீங்கள் பெரும் வரவேற்பை கொடுப்பீர்கள் என்ற...
கனவுகளுடன்,
N.R.PRABHAKARAN
பி.கு: நண்பர் எஸ்.கே எனது இந்தக் கனவிற்கு பின்னூட்டம் மூலமாக விளக்கம் கொடுத்திருக்கிறார். மேலும் அவர் கொடுத்துள்ள விளக்கம் ஏறத்தாழ நூறு சதவிகிதம் சரியாக இருப்பதால் அவரது விளக்கத்தை இந்த இடுகையில் பிற்சேர்க்கையாக இணைக்கிறேன்...
பிற்சேர்க்கை:
எஸ்.கே:
நண்பரே...!
எனக்கு தெரிந்தவரை உங்கள் கனவை விளக்குகிறேன்...
வயல்வெளி பாதுகாப்பான / வசதியான இடத்தை குறிக்கிறது.
ஜெட் / விண்கலம் நீங்கள் தனியாக செயல்பட விரும்புவதை குறிக்கிறது. புதிய வழிகளில் நீங்கள் செயல்பட விரும்புவதை குறிக்கிறது. ஆனால் அது விபத்துக்குள்ளாகிறது. அப்படியானால் நீங்கள் தனியாக செயல்பட சுதந்திரம் கிடைக்கவில்லை. மேலும் அதனால் பிரச்சினைகள் உண்டாகிறது. அல்லது இது உங்கள் வாழ்வில் உங்களை சார்ந்தவர்களின் வாழ்வில் எதிர்மறையான மாற்றங்களை குறிக்கிறது. ஆனால் நீங்கள் விபத்தை ரசிக்கிறீர்கள். உள்மனது பிரச்சினைகளானாலும் பரவாயில்லை எண்ணம்போல் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறது.
இதில் விபத்து நிகழ்கிறது. மேலும் உடன் பிறந்தவரை காப்பாற்ற விரும்புகிறீர்கள். மரணம் மீதுள்ள பயம் மற்றும் உடன்பிறந்தவர் மீதுள்ள அக்கறையை குறிக்கிறது.
உங்கள் வாழ்வில் சமீபத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் / முடிவுகள் குறித்து யோசியுங்கள். மேலும் உடன்பிறந்தவர்களிடன் அன்போடு இருங்கள். நிச்சயம் தெளிவு பிறக்கும். இக்கனவு / இதைப் போன்ற கனவு மீண்டும் வந்தால் தெரிவிக்கவும்.

|
|