29 March 2011

பவர் ஸ்டார் சீனிவாசனின் லத்திகா விமர்சனம் - விரைவில்

நாள்: 28.03.2011

நேரம்: காலை 7.30 மணி

***** தொலைபேசி உரையாடல் *****

நான்: ஹலோ மச்சி... தூங்கிட்டு இருக்கியா...

எதிர்முனை: இல்லடா வேலைக்கு கிளம்பிட்டு இருக்கேன்.

நான் (மனதிற்குள்): தப்பாச்சே...

நான்: லீவ் போட்டுட்டு வா மச்சி... படத்துக்கு போகலாம்...

எதிர்முனை: டேய் சும்மா இருடா...

நான்: ஆமாம்டா... நான் சும்மாதான் இருக்கேன்... அதனாலதான் கூப்பிடுறேன்...

எதிர்முனை: ஆபீஸ் போகலைன்னா பிரச்னை ஆயிடும்டா...

நான்: நீ இப்போ லீவ் போடலைன்னா அதைவிட பெரிய பிரச்சனை ஆயிடும் மச்சி... நீ எல்லாம் ஒரு நண்பனா...

எதிர்முனை: இப்ப என்ன உனக்கு லீவ்தானே போடணும்.... சரி போடுறேன்... போதுமா...

நான்: நண்பேண்டா...

எதிர்முனை: நீ சரியான $%&* டா... அதுசரி எந்த படத்துக்கு போறோம்...

நான்: நீ நேர்ல வா மச்சி சொல்றேன்... சஸ்பென்ஸ்...

**************************************************

நேரம்: காலை 11 மணி

நண்பன்: டேய்... இப்பயாவது எந்த படத்துக்கு போறோம்ன்னு சொல்லித்தொலைடா...

நண்பன்: இதுக்கு ஏன்ப்பா நீ இத்தனை முறை திரும்புற...? இதுக்கு அந்த சாமியாரே தேவலை போல இருக்கே...

நான்: இல்ல மச்சி... அது உனக்கு கொஞ்சம் சஸ்பென்சா இருக்கட்டும்ன்னு பார்த்தேன்... வெயிட் பண்ணு...

நண்பன்: நீ மட்டும் இப்ப சொல்லலைன்னா என் தலையே வெடிச்சிடும்...

நான் (மனதிற்குள்): நான் சொன்னாலும் அதேதான் நடக்கும்... பரவாயில்லையா...

நண்பன் (திரையரங்க இணையதளத்தில் செக் செய்துக்கொண்டே): ஒருவேளை தூங்கா நகரமா...? அந்தப்படத்தை நான் ஏற்கனவே பார்த்துட்டேனேடா...

நான் (மனதிற்குள்): இது தூங்கா நரகம் மச்சி...

நண்பன்: நான் பாட்டுக்கு நாய் மாதிரி கத்திட்டு இருக்கேன்... ஏதாவது பதில் சொல்லேண்டா...

நான்: டேய் சஸ்பென்ஸ்ன்னு சொன்னா உனக்கு பொறுக்காதே... கொஞ்ச நேரம் மூடிக்கிட்டு இரு... தியேட்டருக்கு போனதும் உனக்கே தெரியும்...

நண்பன்: சரி... போய்த்தொலை...

**************************************************

சென்னை அபிராமி மெகா மால் வாசலில்...

நேரம்: மாலை 3 மணி

நான் (தானைத்தலைவர் பவர் ஸ்டார் சீனிவாசனின் லத்திகா திரைப்பட பேனரை காட்டியபடி): மச்சி... இந்தப்படத்துக்கு தான் நாம போகப்போறோம்...

நண்பன் (ஜெர்க்காகி): மச்சி... ஆபீஸ்ல இருந்து கால் வந்துச்சு... நான் அவசரமா போகணும்...

நான்: ஆபீஸ்ல இருந்து கால் மட்டும்தான் வரும்... இப்ப என்கிட்ட இருந்து செருப்பு வரும்... எப்படி வசதி...?

நண்பன்: டேய்... சொன்னாக்கேளுடா இந்தப்படத்துக்கு எல்லாம் எவனும் போகமாட்டான்...

நான்: அப்ப நாம போவோம்...

நண்பன்: ஒரு பெரிய மனுஷனை இப்படி கட்டாயப்படுத்தி கூட்டிட்டு போறது அவ்வளவு நல்லா இல்லை...

நான்: சொல்லிக் கூப்பிட்டா நீ வரமாட்ட... சொல்லாம கூப்பிட்டதால தான் நீ வந்த...

நண்பன்: நீ யா...?

நான்: ஆமாம்யா...

நண்பன்: யா வா...?

நான்: ஆமாம்டா...

நண்பன்: டா வா...?

நான்: கழுதை வயசாகுது லத்திகா படம் பார்க்க பயப்படுற... உனக்கென்ன மரியாதை...

நண்பன்: நீ கெட்டவார்த்தைல திட்டினாலும் நான் உள்ளே வரமாட்டேன்...

நண்பனை வலுக்கட்டாயமாக நான் இழுத்துச்செல்ல...

நண்பன்: போயிறலாம் மாப்பு... உள்ளே இல்ல வெளியே...

**************************************************

நேரம்: மாலை 3.30 மணி

ஒருவழியாக பல தடைகளை கடந்து திரையரங்கினுள் சென்று அமர்ந்தோம்... மற்றவை விமர்சன வடிவில் விஷமாக கூடிய விரைவில்...

லத்திகா படத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டு அறுக்கப்பட்ட ஆடு:
ஹிஸ்டடின்னா வரலாறு தானே...

டிஸ்கி: இந்தமுறை "மெட்ராஸ் பவன்" சிவக்குமார் ஆடு தப்பித்துக்கொண்டது... ஆனந்தத்தொல்லை வெளிவரும் வேளையில் அறுத்துட வேண்டியதுதான்...

Post Comment

24 February 2011

நாட்டுநடப்பு – 24022011


வணக்கம் மக்களே...

லாட்வியா நாட்டில் 27 வயது இளைஞர் ஒருவர் சினிமா பார்க்கச் சென்றிருக்கிறார். போன இடத்தில் சும்மா இருக்காமல் பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த 42 வயது மதிக்கத்தக்க நபரை சுட்டுக்கொன்றிருக்கிறார். என்ன காரணம் என்று தெரியுமா...? பாப்கார்னை சத்தம் போட்டு சாப்பிட்டாராம்.

(மேலே இருக்கும் நடிகை படம் எதுக்கா...? இவங்க நடிச்ச படம் பார்க்கும்போது தான் சம்பவம் நடந்திருக்கு. அப்போ கொல்ல வேண்டியதுதான்)
********************

கலைஞர் குடும்பத்த விட பெரிய்ய்ய்ய குடும்பமா இருக்கும்போல...
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் ஜியோனா சாணா (Ziona Chana) என்ற 66 வயது ஆசாமி (வயோதிகர்ன்னு சொல்ல மனசு வரலை) இதுவரைக்கும் 39 பெண்களை திருமணம் செய்திருக்கிறாராம். அதைவிட கொடுமை, இவர், இவரது 39 மனைவிகள், 94 குழந்தைகள், 33 பேரக்குழந்தைகள் அனைவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்களாம்.

(இப்பக்கூட நாற்பதாவது திருமணத்திற்கு தயாராக இருப்பதாக திருவாய் மலர்ந்திருக்கிறார் மனிதர்)
********************

மேலே பார்க்கும் இந்த கருவியில் டோஸ்ட் செய்வதோடு மட்டுமல்லாமல் பாடல்களையும் கேட்டுக்கொள்ளலாம். சமையலறையில் ஒரு பொழுதுபோக்கு தேவை என்ற நோக்கில் இதை தயாரித்துள்ளதாக சீன நிறுவனம் கூறுகிறது. இதன் விலை 50 அமெரிக்க டாலர்கள் மட்டுமே.

(இந்தியாவிற்கு இன்னும் வரவில்லை. வந்தாலும் வரவேற்பை பெறாது. ரேடியோவை தனியாவும், டோஸ்டரை தனியாவும் வாங்கிக்க தெரியாதா நம்மளுக்கு)
********************

அச்சாப் கவ்ரா (Assaf Gavra) என்னும் இஸ்ரேலிய புகைப்பட கலைஞர் இந்த புகைப்படத்தை சில மணிநேரங்கள் நதிக்கரையில் காத்திருந்து எடுத்திருக்கிறார்.
********************

மலேசிய சிங்கப்பூரில் தைப்பூசத் திருவிழா...

(இதையெல்லாம் பார்த்தா என்ன சொல்றதுன்னே தெரியல. நீங்களே ஏதாவது சொல்லிட்டு போங்க)

டிஸ்கி: 
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment