29 November 2010

நம்பியார் நண்பர்கள்

வணக்கம் மக்களே...

இது சில உண்மைச் சம்பவங்களின் பாதிப்பில் எழுதப்பட்ட கட்டுரை.

பெரும்பாலான நண்பர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
-          லவ் பண்ண ஆரம்பிக்கும் முன்பு, லவ் பண்ண ஆரம்பித்த பின்பு.
-          MNCயில் வேலை கிடைக்கும் முன், MNCயில் வேலை கிடைத்த பின்.
-          ஆண் நண்பர்கள் மட்டும் இருக்குமிடத்தில், பெண் நண்பர்களுடன் இருக்குமிடத்தில்.
இது போல பல வகையான உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.


நான் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்தபோது நடந்த சம்பவம். எங்களுடன் வேலை பார்த்துக்கொண்டிருந்த நண்பன் ஒருவன் திடீரென பணியில் இருந்து விலகிவிட்டான். சில வாரங்களுக்குப் பின்பு அவனை ஒரு பொது இடத்தில் சந்திக்க நேர்ந்தது. ரீபோக் ஷூ, லெவிஸ் ஜீன்ஸ், கப்பா டீ-ஷர்ட் என்று பயலிடம் பல மாற்றங்கள் தெரிந்தன. தலைமுடி மாவா போட்டு மல்லாக்க படுத்து துப்பிக்கொண்டது போல இருந்தது. (கலரிங்காம்). என்னைப் பார்த்தவன், எங்கேயோ பார்த்தது போல இருக்கே என்ற எண்ணத்தோடு நெற்றி சுருக்கினான். நான் அவனிடம் சென்று ஞாபகப்படுத்தினேன். அவன் என்னைப் பார்த்து, “Oh well, U people will say something like vanakkam ungal sevaikkaaga… in tamil… right…?” என்று அமெரிக்க ஆங்கிலத்தில் பிதற்றினான். அவனை பொளேறென்று அறைய வேண்டும் போல இருந்தது. இயலாமையில் அவனை மேலும் கீழுமாக பார்த்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது நடந்த மற்றொரு சம்பவம். அப்போது நான் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்தேன். அப்போது மொபைல் போன்களின் தாக்கம் பெருமளவில் இல்லாததால் நண்பர்கள் சிலரிடம் மட்டுமே அந்த கருவி இருக்கும். என் அறை நண்பனும் ஒன்றை வைத்திருந்தான். சில சமயங்களில் யாரிடமாவது போனில் ஊரைக் கூட்டும் விதமாக சத்தமாக பேசுவான், பல சமயங்களில் அதே போனில் மிகவும் ரகசியமாக பல மணிநேரங்கள் பேசுவான். பையன் மூலையில் சென்று முட்டை விடும் ரகசியத்தை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கும். சில சமயங்களில் வாய்விட்டே கேட்டிருக்கிறேன். குழந்தையுடன் பேசினேன், கொழுந்தியாளுடன் பேசினேன் என்று ஏதாவது கதை அளப்பான். சில மாதங்களுக்குப் பின்பு அவன் ஒரு மன்மதக்குஞ்சு என்பதை அவனது பழைய அறை நண்பர்கள் மூலம் தெரிந்துக்கொண்டேன். (பொறாமை...? லைட்டா...)

அய்யா... சமூகப் பிணைப்பு தளங்கள் சில இருக்கின்றன. இவற்றில் நம்ம பயல்கள் பண்ணும் அளப்பரைகளுக்கு அளவே இல்லை. முன்பெல்லாம் ஆர்குட் ஆக்கிரமித்திருந்தது, இப்போது சில காலமாக மூஞ்சிப்புத்தகம் மூஞ்சியை காட்ட ஆரம்பித்திருக்கிறது. சில நண்பர்கள் இருக்கிறார்கள், பயல்களின் கடைப்பக்கம் தலை வைத்துக்கூட படுப்பது இல்லை. ஆனால், பொண்ணுங்களின் ப்ரோபைல் பக்கம் சென்று காமெடி என்ற பெயரில் மொக்கை போட்டுக்கொண்டு இருப்பார்கள். நேரில் பார்த்தால் த்தா, பாடு, டோமர் என்று லோக்கலாக பேசுவார்கள். ஆனால் ஆர்குட்டில் dude, buddy, yup, nope என்று புரியாத வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்துவார்கள். Status Update என்ற ஒன்றிருக்கிறது. அட, எங்கிருந்து பிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஏதாவது ஆங்கில தத்துபித்துவத்தை போட்டு அக்கப்போர் செய்கிறார்கள். அதற்கு கீழே நாலு பொம்பளைபிள்ளைகள் கமென்ட் வேற எழுதுராளுங்க. காலக்கொடுமைடா சாமி...

நண்பர்கள் புடைசூழ புகைத்துக்கொண்டிருப்போம். வழக்கமாக நம்மோடு கும்மியடிக்கும் நண்பன் வருவான். என்ன மச்சி... கிங்ஸா பில்டரா...? என்று கேட்டால் ஏதோ விஜய் படம் சூப்பரா இருக்குன்னு சொல்லிட்டா மாதிரி நம்மை ஏற இறங்க பார்ப்பான். அவர் நல்லவராமாம். சரி அதோடு சனியன் ஒழிந்தா என்று பார்த்தால் இல்லை. புகையின் தீமைகளை பற்றி நமக்கு லெக்சர் எடுப்பான். திடீரென அப்பா அம்மாவை பற்றியெல்லாம் பேசி செண்டிமன்ட் மூட் க்ரியேட் பண்ணுவான். சம்திங் இஸ் ராங் என்று திரும்பிப்பார்த்தால் பத்தடி தூரத்தில் ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி ஒன்று நின்றுக்கொண்டிருக்கும். அப்போதெல்லாம் மனம் அவனை செந்திலாக கற்பனை செய்துக்கொண்டு புறமுதுகு காட்டி நிற்கச் சொல்லும். கால்கள் கவுண்டமணியாக மாறி அவன் குண்டியிலேயே எட்டி மிதிக்கும்.

கண்ணம்மாபேட்டையில் இருப்பவன் கனடாவில் இருப்பவனோடு கதைக்க ஊன்றுகோலாக இருக்கும் மூஞ்சிப்புத்தகத்தில் சமீபத்தில் நடந்த ஒரு துயர சம்பவம். வெளிநாட்டுக்கு ஆணி புடுங்க போன நண்பன் ஒருவன் தனது தோழியின் புகைப்படத்தை மூஞ்சிப்புத்தகத்தில் அப்டேட் செய்திருக்கிறான். இதைப் பார்த்த உள்ளூர் நண்பன் ஒருவன் பழக்க தோஷத்தில் யாரு மச்சி... இந்த சப்பை பிகர்... என்று கமென்ட் போட்டுவிட்டு காப்பி குடிக்க போயிருக்கிறான். திரும்பி வந்தவனுக்கு அதிர்ச்சி. தன்னுடைய நண்பர்கள் பட்டியலில் இருந்து அந்த கடல் கடந்த நண்பன் காணாமல் போயிருந்தான். அப்படி இப்படி என்று அவனை தொடர்புகொண்டு கேட்டபோது, என் தோழி உன்னை லிஸ்டில் இருந்து நீக்கச் சொல்லிவிட்டாள்... என்று கூலாக சொல்லியிருக்கிறான். அந்த நண்பனுக்காக கண்ணீர் விட, கோபப்பட,  அவன் என் நண்பனாக தான் இருக்க வேண்டுமா...? ஏன் ஒரு கம்யூனிஸ்டின் நண்பராகவோ, நாத்திகனின் நண்பராகவோ இல்லை யாரோ ஒருவரின் நண்பராகவோ இருக்கக்கூடாதா...?

இவர்கள் எல்லாம் நண்பர்களா..? எதிரிகளா...? துரோகிகளா...? வழக்கம்போல நம்முடைய கேள்விகளுக்கெல்லாம் இந்த சமுதாயம் மெளனம் சாதிக்கிறது.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

45 comments:

Chitra said...

என்ன கொடுமைங்க, இது? சில நேரங்களில் சில மனிதர்கள்........

ஆமாம், இந்த பதிவுக்கு, கமல் போட்டோ எதற்கு என்று புரியலியே.... ம்ம்ம்ம்...

எல் கே said...

இவர்களை நண்பர்கள் என்று சொல்லக் கூடாது

nis said...

//அவனை பொளேறென்று அறைய வேண்டும் போல இருந்தது. இயலாமையில் அவனை மேலும் கீழுமாக பார்த்துவிட்டு//

கொடுமைதான் பிரபா

//பொண்ணுங்களின் ப்ரோபைல் பக்கம் சென்று காமெடி என்ற பெயரில் மொக்கை போட்டுக்கொண்டு இருப்பார்கள்//

இவங்கள திருத்தவே முடியாது.
இவர்களெல்லாம் நண்பர்கள் போன்ற துரோகிகள்

pichaikaaran said...

இந்த பதிவுக்கு கமல் படத்தை போட்ட உங்கள் குறும்பு ரசுக்கும்படி இருந்தது...

உங்கள் கருத்துடன் முற்றிலும் உடன்படுகிறேன்

Kousalya Raj said...

//அவன் என் நண்பனாக தான் இருக்க வேண்டுமா...? ஏன் ஒரு கம்யூனிஸ்டின் நண்பராகவோ, நாத்திகனின் நண்பராகவோ இல்லை யாரோ ஒருவரின் நண்பராகவோ இருக்கக்கூடாதா...?//

இந்த வரிகளுக்காகத்தான் கமல் படம் என்று நினைக்கிறேன்...!

சிவராம்குமார் said...

எல்லாம் சரி!!! தலைவர் படம் இங்கே எதுக்கு.... குசும்புதான!!!

Kousalya Raj said...

இப்படி அல்ப விசயத்துக்கு எல்லாம் நட்பை மறுக்கிறவங்க நட்பு போனது நல்லதுன்னு நினைச்சி சந்தோசபடுங்க....!!

Unknown said...

உன்னை போல் ஒருவன் டயலாக்ல எழுதி இருக்காரு, அதுக்காக கமல் படம் போட்டிருக்காருங்க, மற்றபடி சேம் பீலிங்

எஸ்.கே said...

இது போன்றும் சிலர் இருக்கிறார்கள். அவர்களின் உண்மை முகம் இப்படிப்படவைகள் மூலம் வெளிப்படுகிறது!

KANA VARO said...

பகிர்வுக்கு நன்றி

சேலம் தேவா said...

//பொறாமை...? லைட்டா...//

உண்மைய சொன்னிங்க பாருங்க..!! அங்கதான் நீங்க நிக்கறிங்க..!! ச்சீ..எழுதறீங்க..!!

Unknown said...

சில மாதங்களுக்குப் பின்பு அவன் ஒரு மன்மதக்குஞ்சு என்பதை அவனது பழைய அறை நண்பர்கள் மூலம் தெரிந்துக்கொண்டேன். (பொறாமை...? லைட்டா...)

இந்த மாதிரி எனக்கு ஏகப்பட்ட பொறாமை இருக்கு
அப்பறம் நீங்களும் கிங்க்ஸ் பில்ட்டர் தான் அடிபீங்களா

செந்திலாக கற்பனை செய்துக்கொண்டு புறமுதுகு காட்டி நிற்கச் சொல்லும். கால்கள் கவுண்டமணியாக மாறி அவன் குண்டியிலேயே எட்டி மிதிக்கும்.(ஆஹா என்ன ஒரு இலக்கிய வரி)
என்ன ஒன்னு எங்க ஊர்ல ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி பதிலாக பாவாடை அணிந்த பச்சைக்கிளி இருக்கும்.அதுக்காக இவிங்க காட்டுற பில்டப் இருக்கே (நானும் இந்த மாதிரி அப்பப்ப பில்டப் காட்டுவேன்)

எப்பூடி.. said...

உங்களுக்கிருக்கிற அதே மூட்டுவலி, முழங்கால்வலி எனக்குமிருக்கு :-) இவங்கலஎல்லாம் பைத்தியங்கள் லிஸ்டில சேத்திடனும், இல்லையின்னா இவங்க நம்மள பைத்தியமாக்கிடுவாங்க :-)

Anonymous said...

சப்பை பிகர் என்று சொன்னது சற்று ஜாஸ்தி என தோன்றுகிறது. சச்சின் படத்தில் வடிவேலு சொல்வது நினைவிற்கு வருகிறது...கமல் தன் படங்களில் நாத்திகமும் கம்யுனிசமும் பேசுவதால்தான் அந்த புகைப்படம்...சகோதரி சித்ரா! (பிரபா உங்களுக்கு பதில் நான் பதில் அளித்துவிட்டேன்)

மங்குனி அமைச்சர் said...

பாதிப்பு ரொம்ப ஜாஸ்த்திதான் போல இருக்கே ??

Muthu said...

Pathivu miga nandru Eluthalare.....ovavoru category kum ovavoru nanbar enaku nyabagam vanthar...

'பரிவை' சே.குமார் said...

உங்கள் கருத்துடன் முற்றிலும் உடன்படுகிறேன்.

அருண் பிரசாத் said...

ஓவர் டெமெஜ் போல... விட்டுதள்ளுங்க பிரபா... காரியவாதிகள் அவர்கள்

ஹரிஸ் Harish said...

இயலாமையில் அவனை மேலும் கீழுமாக பார்த்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.//
பல நேரங்கள்ள நானும் இப்படித்தான்..

Anonymous said...

இதுவரை வெறும் பார்வையாளனாக மட்டுமே இருந்த நான் இப்போது பதிவராகவும் இந்த பதிவுலகில் காலடி எடுத்து வைத்துள்ளேன். நடைபயில இல்லை இல்லை தவழ ஆரம்பித்திருக்கும் இந்த குழந்தையையும் வாக்களித்து பின்னூட்டமிட்டு கை தூக்கிவிடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்....

தல தளபதி said...

சிந்திக்க வச்சுட்டீங்களே பாஸ்...

சைவகொத்துப்பரோட்டா said...

சுவராசியமான எழுத்து நடை!

சௌந்தர் said...

“யாரு மச்சி... இந்த சப்பை பிகர்...” என்று கமென்ட் போட்டுவிட்டு காப்பி குடிக்க போயிருக்கிறான். திரும்பி வந்தவனுக்கு அதிர்ச்சி. தன்னுடைய நண்பர்கள் பட்டியலில் இருந்து அந்த கடல் கடந்த நண்பன் காணாமல் போயிருந்தான். அப்படி இப்படி என்று அவனை தொடர்புகொண்டு கேட்டபோது, “என் தோழி உன்னை லிஸ்டில் இருந்து நீக்கச் சொல்லிவிட்டாள்...”//////

ஆமா அப்பறம் இவனையே அவள் பிரென்ட் லிஸ்ட் இருந்து எடுத்து இருப்பா

karthikkumar said...

NICE நீங்கள் எழுதும் விதம்

Ramesh said...

இவர்களை எல்லாம் நண்பர்கள் என்ற நல்ல வார்த்தையின் கீழ் சேர்க்காதீர்கள்.. இவர்கள் எல்லாம் பழக்கப்பட்டவர்கள்... அவ்வளவே...

நல்ல ஃப்ளோ...

Unknown said...

பிரபாகரன்.. ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கீங்க போல.. :-)

நீங்கள் சொல்லியிருக்கற ஒவ்வொரு வரிகளிலும் எல்லாருடைய வாழ்க்கையிலுமே நடக்குதுங்க.. உண்மைகளை நச்சுன்னு சொல்லியிருக்கீங்க..

பிகருக்காக நம்ம ப்ரொஃபைல ரிஜெக்ட் பண்ணினா.. போடான்னுட்டு போக வேண்டியதுதான்.. இதுக்கெல்லாம் வருத்தப்படாதீங்க..

அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்..

Priya said...

படிக்க சுவாரஸியமா இருக்கு!வாழ்த்துக்கள்!!!

கேரளாக்காரன் said...

அந்த தோழி தர்ற சில விசயங்கள அந்த நண்பரால கனவுல கூட தர முடியாது புரிஞ்சுகாங்க அவளை கலட்டி விட்டதும் நன்பர சேத்துக்குருவார்

Unknown said...

அருமையான பதிவு..
கமல் போட்டோ??

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு, ஆனா இதுக்கு போயி நம்பியார் நண்பர்கள் என்று அந்த உத்தமமானவரை அசிங்கப்படுத்தலாம?. தமிழ் நாட்டுல கேவலமான ஒரு படத்தை போட்டு இருக்கின்றீர்கள் அதாவது பரவாயில்லை. ஆனால் பரவாயில்லை நல்ல மனுசன் நம்பியாரின் நடிப்பை வைத்து சொன்னதாக எடுத்துக் கொள்கின்றேன்.

NaSo said...

அட விடுங்க பாஸ். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!!

Harini Resh said...

//அந்த நண்பனுக்காக கண்ணீர் விட, கோபப்பட, அவன் என் நண்பனாக தான் இருக்க வேண்டுமா...? ஏன் ஒரு கம்யூனிஸ்டின் நண்பராகவோ, நாத்திகனின் நண்பராகவோ இல்லை யாரோ ஒருவரின் நண்பராகவோ இருக்கக்கூடாதா...?//

உண்மையில் இந்த Face book இல் நடக்கும் விஷயங்கள் இருக்கே தாங்கல சாமி
அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்.

Unknown said...

since i know d last topic, it doesn't giv me a impact.. andha facebook matter is very true !! u missed a word which cums along wit dude & buddy.. adhu MATE :):)

Philosophy Prabhakaran said...

@ Chitra, LK, nis, பார்வையாளன், Kousalya, சிவா என்கிற சிவராம்குமார், இரவு வானம், எஸ்.கே, KANA VARO, சேலம் தேவா, நா.மணிவண்ணன், எப்பூடி.., சிவகுமார், மங்குனி அமைச்சர், Muthu, சே.குமார், அருண் பிரசாத், ஹரிஸ், ரிஸால் அஹமது, தல தளபதி, சைவகொத்துப்பரோட்டா, சௌந்தர், karthikkumar, பிரியமுடன் ரமேஷ், பதிவுலகில் பாபு, Priya, கேரளாக்காரன் (ஆனாலும் அதிரி புதிரி தமிழன்), பாரத்... பாரதி..., பித்தனின் வாக்கு, நாகராஜசோழன் MA, Harini Nathan, prak

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து எனது வலைப்பூவினை சிறப்பியுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ Chitra, சிவா என்கிற சிவராம்குமார், பாரத்... பாரதி...
// ஆமாம், இந்த பதிவுக்கு, கமல் போட்டோ எதற்கு என்று புரியலியே.... ம்ம்ம்ம்... //

கடைசியில் உன்னைப்போல் ஒருவன் படத்தின் வசனத்தை வைத்து சில வரிகள் எழுதியிருக்கிறேன்... அதற்காகவே கமல் ஸ்டில்...

Philosophy Prabhakaran said...

// அப்பறம் நீங்களும் கிங்க்ஸ் பில்ட்டர் தான் அடிபீங்களா //

நான் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்திவிட்டேன்... அது ஏன் என்று தெரிந்துக்கொள்ள விரும்பினால் இந்த இணைப்பை பார்க்கவும்...

http://philosophyprabhakaran.blogspot.com/2010/08/blog-post_24.html

Philosophy Prabhakaran said...

@ ரிஸால் அஹமது
// இதுவரை வெறும் பார்வையாளனாக மட்டுமே இருந்த நான் இப்போது பதிவராகவும் இந்த பதிவுலகில் காலடி எடுத்து வைத்துள்ளேன். நடைபயில இல்லை இல்லை தவழ ஆரம்பித்திருக்கும் இந்த குழந்தையையும் வாக்களித்து பின்னூட்டமிட்டு கை தூக்கிவிடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்.... //

வாங்க ரிஸால் வலைப்பூ உலகிற்கு உங்களை வருக வருக என வரவேற்கிறேன்... என்னுடைய Full Support உங்களுக்குத்தான்...

Philosophy Prabhakaran said...

@ கேரளாக்காரன் (ஆனாலும் அதிரி புதிரி தமிழன்)
// அந்த தோழி தர்ற சில விசயங்கள அந்த நண்பரால கனவுல கூட தர முடியாது புரிஞ்சுகாங்க அவளை கலட்டி விட்டதும் நன்பர சேத்துக்குருவார் //

நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு சுத்தமா புரியலையே...!!!

Philosophy Prabhakaran said...

@ பித்தனின் வாக்கு
// நல்ல பதிவு, ஆனா இதுக்கு போயி நம்பியார் நண்பர்கள் என்று அந்த உத்தமமானவரை அசிங்கப்படுத்தலாம?. //

தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்... நீங்களே குறிப்பிட்டது போல... நம்பியாரின் தலைசிறந்த நடிப்பிர்காகவே அவரது படத்தை தேர்ந்தெடுத்தேன்...

சி.பி.செந்தில்குமார் said...

hai praba ,congrats for top 10th place in tmilmanam.

சி.பி.செந்தில்குமார் said...

i expect u may make a spl post for tht

சி.பி.செந்தில்குமார் said...

ihis post is different and enjoyable

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
என்ன திடீரென ஆங்கில பின்னூட்டங்கள்...

TOP 10 இல்லை.... நான் பதினோராவது இடத்தில்...

// i expect u may make a spl post for tht //
அந்த எண்ணமெல்லாம் இப்போதைக்கு இல்லை...

// ihis post is different and enjoyable //
நன்றி...

சிங்கக்குட்டி said...

நல்ல ஒரு நடிகர் நம்பியார், திரையில் மட்டுமே அவர் வில்லன் உண்மையில் அவர் ஒரு நாயகன்.

உங்கள் பதிவில் உள்ளது போல நண்பர்களும் ம்ம்ம் :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த மாதிரி ஆளூக எல்லாப் பக்கமும் இருக்காய்ங்க.... !