17 November 2010

காதலும் காமமும் - Y Mama Tu Tambien (18+)

வணக்கம் மக்களே... 

முன் குறிப்பு: இது பாலுறவுக் காட்சிகள் மற்றும் நிர்வாண காட்சிகள் நிறைந்த ஒரு உலகத்திரைப்படத்தின் விமர்சனம். எனவே படிக்க விரும்பாதவர்கள், சமூகக் காவலர்கள் எல்லாம் ஒன் ஸ்டேப் பேக். படத்தின் கதை கொஞ்சம் ஓவராகவே இருந்ததால் அடுத்த சில நாட்களுக்கு மட்டும் என் வலைப்பூவில் நுழையும்போது Adult Content Warning வரும்படி வைத்திருக்கிறேன். ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிக்கவும்.

கொஞ்ச நாளாகவே சில பதிவர்கள் புண்ணியத்தில் உலக சினிமா பார்க்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது. அந்த ஆர்வத்தில் எனது நெருங்கிய நண்பர்களான கூகிள், விக்கிபீடியா, imdb இவர்களுடன் சேர்ந்து வித்தியாசமான அல்லது புதுமையான படங்கள் ஏதாவது கிடைக்குமா என்று ஆராய்ந்துக் கொண்டிருந்தேன். இந்த தேடலில் பல படங்கள் கிடைந்தன. அவற்றில் இருந்து குத்துமதிப்பாக ஒரு படத்தை செலக்ட் செய்தேன். அது தான் Y Mama Tu Tambien என்ற ஸ்பானிஷ் மொழி திரைப்படம். படத்தை பதிவிறக்கி பல மாதங்கள் ஆனாலும் இன்றுதான் பார்த்து உணர்ந்து பதிவெழுத முடிந்தது.


Title: Y Mama Tu Tambien
a.k.a.: And Your Mother Too
Country: Mexico
Language: Spanish
Year: 2001
Genre: Erotica, Romance
Cast: Gael Garcia Bernal, Diego Luna, Maribel Verdu
Director: Alfonso Cuaran
Cinematographer: Emmanuel Lubezki
Editor: Alex Rodriguez

இரு பதின பருவ இளைஞர்கள், ஒரு முப்பது வயதை ஒத்த பெண் இவர்களை சுற்றியே கதை நகர்கிறது.

ஜூலியோ, டெணோச் இருவரும் பதின்பருவ இளைஞர்கள். இவர்கள் இருவரும் தத்தம் காதலியை அவர்கள் விடுமுறைக்காக இத்தாலி செல்வதற்கு முன்பு கடைசியாக ஒருமுறை புர்வதாக படம் ஆரம்பிக்கிறது. பின்னர் காதலி இல்லாத தனிமையில் இருக்கும் இளைஞர்கள் புகை பிடிப்பதும் சுய இன்பம் கொள்வதாகவும் கதை நகர்கிறது. போகிறப்போக்கில் இருவரது நட்பைப் பற்றியும் விவரிக்கிறார்கள். அவர்களது குணம், குடும்பம் போன்றவற்றை பேக்ரவுண்ட் வாய்ஸ் ஓவர் மூலமே சொல்கிறார்கள். பின்னர் ஒரு திருமண விழாவில் டெணோச் தனது உறவினரான ஜேனோவை சந்திக்கிறான். அவரது மனைவியான லூயிஸா தான் கதையின் நாயகி. அதே திருமண விழாவில் லூயிஸாவை சந்திக்கும் இளைஞர்கள் அவளை கவர முயல்கின்றனர். சொர்க்க வாசல் (Heaven’s Mouth) என்று ஒரு பீச் இருப்பதாகவும் அங்கே அவளை அழைத்துச் செல்வதாகவும் கூறுகின்றனர். ஆனால் அவள் அவர்களின் பேச்சுக்கு மயங்குவதாக இல்லை. ஆனால் அடுத்த நாள் லூயிஸாவுக்கும் அவளது கணவன் ஜேனோவுக்கும் ஏற்படும் மனக்கசப்பில் லூயிஸா இளைஞர்களுடன் டூர் போவதென்று முடிவு செய்கிறாள். இது இளைஞர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைய மூவரும் சேர்ந்து ஒரு காரில் பயணம் செல்கின்றனர்.

பயணம் முழுவதும் இளைஞர்கள் இருவரும் தத்தம் செக்ஸ் அனுபவங்களையும் பெருமைகளையும் லூயிசாவிடம் பகிர்ந்தபடி வருகிறார்கள். லூயிசாவும் தான் பள்ளிப்பருவத்தில் ஒருவனை காதலித்தது பற்றியும் பின்னர் அவன் சாலை விபத்தில் இறந்து போனது பற்றியும் சொல்கிறாள். சில நாட்கள் பயணத்தில் நகர மூவரும் ஒரு விடுதியில் தங்குகிறார்கள். அங்கே குளிக்கும்போது ஷாம்பூ கிடைக்காததால் லூயிசாவின் அறைக்கு ஷாம்பூ வேண்டி செல்கிறான் டெணோச். அங்கே லூயிஸா அவனை கிளர்ச்சியடைய செய்து அவனுடன் உறவு கொள்கிறாள். இதை ஜூலியோ பார்த்து மனம் நொந்துப்போகிறேன். கோபத்தில் டெணோச்சிடம் தான் ஒரு முறை அவது காதலியுடன் உறவு கொண்டுள்ளதாக கூறுகிறான். மறுநாள் காலை மறுபடி மூவரும் பயணத்தை ஆரம்பிக்க முந்தய நாள் சம்பவங்கள் உல்டாவாக நடக்கிறது. அதாவது லூயிஸா ஜூலியோவுடன் உறவுக்கொள்ள அதை டெணோச் பார்க்க நேரிடுகிறது. பதிலுக்கு டெணோச்சும் ஜூலியோவின் காதலியை தான் முன்பொருமுறை புர்ந்துள்ளதாக குறிப்பிடுகிறான். இந்த சம்பவத்தால் நெருங்கிய நண்பர்களாக இருந்த இருவரும் சண்டையிட்டு கொள்கின்றனர்.

இருவரும் சண்டையிட்டு கொள்வதால் லூயிஸா அவர்களை விட்டு விலக முயற்சி செய்கிறாள். இருவரும் இணைந்து அவளை சமாதானப்படுத்துகின்றனர். மறுநாள் மூவரும் ஒரு வழியாக சொர்க்கத்தின் வாசல் கடற்கரைக்கு சென்றடைகின்றனர். அங்கே ஒரு மாலைப்பொழுதில் மூவரும் போதையில் அவரவர் செக்ஸ் வாழ்க்கையை பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர். லூயிஸா செக்ஸில் இளைஞர்கள் இருவரையும் ஒப்பிட்டு பேசுகிறாள். மேலும் இளைஞர்கள் இருவரும் மற்றவருடைய காதலியுடன் செக்ஸ் வைத்த கதையை பேசிக்கொள்கிறார்கள். இளைஞர்கள் இருவரும் மீண்டும் மனக்கசப்புகளை மறந்து நட்பாகின்றனர். பின்னர் அறையில் லூயிஸா, ஒரே நேரத்தில் இளைஞர்கள் இருவருடனும் செக்ஸ் வைத்துக்கொள்கிறாள். லூயிஸா இருவருடனும் வாய்வழி கலவியில் ஈடுபட இளைஞர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் முத்தமிட்டு கொள்கின்றனர். மறுநாள் இளைஞர்கள் இருவரும் இல்லம் திரும்ப லூயிஸா மட்டும் தனது பயணத்தை தொடர்கிறாள். நாளடைவில் இளைஞர்கள் இருவரது வாழ்விலும் பல மாற்றங்கள் நிகழ இருவரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கின்றனர். இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது டெணோச் ஜூலியோவிடம் லூயிஸா கேன்சரில் இறந்துவிட்டதாகவும் நம்முடன் சுற்றுப்பயணம் வரும்போதே அவளுக்கு அது பற்றி தெரிந்திருந்ததாகவும் கூறுகிறான். அத்துடன் கதை முடிகிறது.

இந்தக் கதையில் ஆங்காங்கே மெக்சிகோ நாட்டின் அரசியலை காலத்து கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

மெக்சிகோ நாட்டின் அரசியலையும் வரலாற்றையும் நன்கு அறிந்தவர்கள் அல்லது படித்தவர்கள் மட்டுமே இந்தப் படத்தை ரசிக்க முடியும். மற்றவர்களுக்கு இது ஒரு மேற்படி டைப் படமாகத் தான் இருக்கும் நான் உட்பட. ஹாரி பாட்டர் திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தை எடுத்த இயக்குனர் தான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் என்பதை நம்ப முடியவில்லை. படத்தில் சர்வசாதாரணமாக நிர்வாண, அரை நிர்வாண காட்சிகள் வருகின்றன. படத்தில் ஐந்து கலவி காட்சிகள் ஆனால் ஐந்திலுமே ஏதோ விமானத்தை பிடிக்கும் அவசாரத்தில் இருப்பவர்கள் போலவே செயல்படுகிறார்கள். இறுதியாக இளைஞர்கள் இருவருக்கும் அறிவுரைக்கும் விதமாக லூயிசா ஒரு தத்துவம் சொல்கிறாள். அதுதான் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் மெசேஜ் : -
"LIFE IS LIKE THE FOAM OF SEA...
YOU MUST DIVE INTO IT..."

மொத்தத்தில் இது நம்மூர் கலாச்சாரத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத ஒரு திரைப்படம். எனவே நான் படத்தை பார்க்கச்சொல்லி உங்களை வலியுறுத்தவில்லை. படத்தில் வரும் காட்சிகளை ஏற்றுக்கொள்ள மனமிருந்தால் மட்டும் பாருங்கள். பதிவிறக்க லிங்குகள் இங்கே:
டோரன்ட் லிங்க்: Y Mama Tu Tambien (DVD RIP)
நேரடி லிங்குஸ்:

ஆங்கில சப்-டைட்டில்கள் இணைக்கப்பட்டுள்ளன.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

46 comments:

எல் கே said...

நலல் விமர்சனம்

Philosophy Prabhakaran said...

@ LK
நன்றி... ஹி... ஹி... ஹி... எழுத்துப்பிழை ஆகிவிட்டது...

Unknown said...

உண்மைல இந்த sex விஷயத்துல நம்ம நாடு இன்னும் old fashion ல தான் இருக்கு. அதனாலதான் இன்னும் பாலின குற்றங்கள் நடந்துகிட்டிருக்கு.

எப்படிப்பா கலவிக்கு இன்னா அருமையா விமர்சனம் எழுதறீங்க.

Philosophy Prabhakaran said...

@ விக்கி உலகம்
// உண்மைல இந்த sex விஷயத்துல நம்ம நாடு இன்னும் old fashion ல தான் இருக்கு. அதனாலதான் இன்னும் பாலின குற்றங்கள் நடந்துகிட்டிருக்கு //
ஆமாம் ஆனா அதைப் பத்தி எழுதினா கலாச்சார சீரழிவு அது இதுன்னு கத்துறானுங்க...

// எப்படிப்பா கலவிக்கு இன்னா அருமையா விமர்சனம் எழுதறீங்க //
எல்லாம் கேள்வி ஞானம் தான் நண்பரே... வம்புல மாட்டி விடாதீங்க...

சைவகொத்துப்பரோட்டா said...

சிறந்த சினமா விமர்சகர்களுள், நீங்களும் ஒருவர் என்று சொல்லும் அளவுக்கு விமர்சனம் நல்லா இருக்கு பிரபாகர்.

nis said...

இந்த படத்தை பார்த்தே தீரணும் ;)))

NaSo said...

ஆபாசமில்லாத விமர்சனம்.

Romeoboy said...

விமர்சனம் நல்லா இருக்கு. எதுக்கோ நீங்களும் பத்து பேரை சேர்த்து வச்சுகோங்க கலாசார காவலர்கள் வந்து மொச்சா அடிச்சி விரட்டணும்ல

எஸ்.கே said...

ஆபாசம் இல்லாமே படங்கள் போடாம நல்ல விமர்சனம்!

ஜெய்லானி said...

போற போக்க பார்த்தா சாரு ரேன்ஜ் தெரியுது..!! :-))

'பரிவை' சே.குமார் said...

ஆபாசமில்லாத விமர்சனம்.

Unknown said...

super

அருண் பிரசாத் said...

http://imsaiarasan-babu.blogspot.com/2010/11/blog-post_16.html
http://nagarajachozhan.blogspot.com/2010/11/blog-post_17.html

பாஸ், ரஜினி தொடர்பதிவுக்கு கூப்பிட்டாச்சு... கலக்குங்க... ஸ்டார்ட் மியூசிக்....

இப்போ பதிவை படிச்சிட்டு வரேன்

அருண் பிரசாத் said...

தொடரட்டும் உமது சேவை :)

Unknown said...

ரொம்ப அருமையா விமர்சனம் பண்ணியிருக்கீங்க நண்பா..

அடவுல்ஸ் ஒன்லி படத்தை ஆபாசம் இல்லாம நீங்க விமர்சித்த விதம் ரொம்ப நல்லாயிருக்கு..

Unknown said...

தொடர்ந்து உலகப்பட விமர்சனங்களை எழுதுங்கள்.. நன்றி..

இம்சைஅரசன் பாபு.. said...

தலைவா உங்கள ரஜினி டாப் 10 தொடர் பதிவு எழுத என்னோட வலை தளத்தில் அழைத்திருக்கிறேன்

Philosophy Prabhakaran said...

@ சைவகொத்துப்பரோட்டா
உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி சை.கொ.ப... தொடர்ந்து எழுதுவதற்கு இதுப்போன்ற ஊக்கங்கள் தான் அச்சாணி...

@ nis
பாருங்க... இன்னும் இதே மாதிரி நிறைய படங்கள் நம்ம கைவசம் இருக்கு...

@ நாகராஜசோழன் MA, எஸ்.கே, சே.குமார்
ஆபாசத்தை பற்றி வாசகர்கள் என்ன சொல்லிவிடுவார்களோ என்றுதான் அஞ்சினேன்... உங்கள் ஊக்கத்திற்கு நன்றி...

Philosophy Prabhakaran said...

@ ♥ RomeO ♥
நன்றி... நீங்க இருக்கும்போது எனக்கு என்ன கவலை நண்பரே... தவிர எனக்காகவும் பதிவர்கள் குரல் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது...

@ ஜெய்லானி
நாசமா போச்சு... இதுக்கு பதிலா நீங்க என்னை கேட்ட வார்த்தைல திட்டி இருக்கலாம்... ஏன் அப்படி சொன்னீங்கன்னு சீக்கிரமா சொல்லுங்க.... எனக்கு பதறுது...

@ இரவு வானம்
நன்றி...

Anonymous said...

Nalla vimarsanam. Oru padathukku vimarsanam ezhudhinale adhu porn site endru endha pudungiyum solla mudiyadhu. indha kalachara kavalar,kavaligal, sexually starved people.Aagave enneram sex,sex endru alari kondiruppargal. parvaiyil mattume ulladhu aabasam.neengal ungal manadhukku sari endru paduvadhai ezhudhungal.

Philosophy Prabhakaran said...

@ அருண் பிரசாத்
அட... ரெண்டு இடத்துல கூப்பிட்டாச்சா... ரொம்ப நன்றி நண்பரே... எழுதுவதற்கு ஒரு வாரம் டைம் கொடுப்பீங்க தானே....

@ பதிவுலகில் பாபு
உங்கள் வாழ்த்துக்கு விலை அதிகம்... மட்டற்ற மகிழ்ச்சி... உங்கள் ஊக்கம் என்னை மென்மேலும் எழுத தூண்டுகிறது...

@ இம்சைஅரசன் பாபு..
அழைத்ததற்கு நன்றி... கண்டிப்பா எழுதுறேன்... எழுதுவதற்கு ஒரு வாரம் டைம் கொடுப்பீங்க தானே....

Philosophy Prabhakaran said...

@ Anonymous
// Nalla vimarsanam // - நன்றி...

// Oru padathukku vimarsanam ezhudhinale adhu porn site endru endha pudungiyum solla mudiyadhu //
ம்ம்ம்... உண்மைதான்... இரண்டு நாட்களுக்கு மட்டும்தான் இப்படி அதன்பின்னர் "Adult Content Warning" ஐ நீக்கிவிடுகிறேன்...

// neengal ungal manadhukku sari endru paduvadhai ezhudhungal //
உங்கள் ஊக்கத்திற்கு மனமார்ந்த நன்றிகள்...

அருண் பிரசாத் said...

//அட... ரெண்டு இடத்துல கூப்பிட்டாச்சா... ரொம்ப நன்றி நண்பரே... எழுதுவதற்கு ஒரு வாரம் டைம் கொடுப்பீங்க தானே....//
தாராளமா எடுத்துக்கோங்க... ஆனா யாரையாவது கூப்பிடனும்...

karthikkumar said...

நன்று பங்காளி தொடருங்கள்

மாணவன் said...

அருமையாக விமர்சனம் செய்து ஆபாசமில்லாமல் அழகாக பதிவு செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்...

நன்றி

Philosophy Prabhakaran said...

@ அருண் பிரசாத்
ஒ.கே... அப்படின்னா அடுத்த வாரம் இதே நாள் அதாவது நவம்பர் 24ம் தேதி காலை 8 மணிக்குள் பதிவை வெளியிட்டுவிடுகிறேன்... கூப்பிடுவதற்கும் ஆட்கள் தயாராக இருக்கிறார்கள்.... கவலை வேண்டாம்...

@ karthikkumar, மாணவன்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தாருங்கள்...

Arun Prasath said...

அதெல்லாம் சரி, இந்த படத்ல எப்டி தல புடிச்சீங்க.... லைப் என்ஜாய் பண்ணும்னு சொல்ல வராங்களோ?

சசிகுமார் said...
This comment has been removed by the author.
சசிகுமார் said...

உங்களுக்கு தவறாக கமென்ட் வந்துள்ளது நீக்கவும்.

Unknown said...

பிரபா கொன்னுடீங்க போங்க .பொதுவா இந்த மாதிரி படத்தையெல்லாம் மேற்படி விஷயத்துக்காகத்தான் நான் பார்ப்பேன் . ஆனா கலைகன்னோட இந்த படத்தை அணுகனும் சொல்லறீங்க. சும்மா சொல்லகூடாதுங்க விமர்சனம் பிரிச்சிட்டீங்க . ஒரு ரகசியம் சொல்லுங்க இன்னும் இது மாதிரி எத்தனை படம் வச்சிருக்கீங்க .

அப்பறம் இது ஒரு சின்ன correction நெனைக்கிறேன் லூயிஸா அவனை கிளர்ச்சியடைய செய்து அவனுடன் உறவு கொள்கிறாள். இதை ஜூலியோ பார்த்து மனம் நொந்துப்போகிறேன். கோபத்தில் டெணோச்சிடம் தான் ஒரு முறை அவளது(அவனது)காதலியுடன் உறவு கொண்டுள்ளதாக கூறுகிறான்

Prasanna said...

ப்ளோ அருமை.. எழுத எழுத உங்களின் எழுத்து மெருகேறுகிறது.. நிறைய எழுதவும் :)

எப்பூடி.. said...

வீட்டுக்க வந்தா கதவை லாக் பண்ணி வச்சிருக்கிறீங்களேன்னு பாத்தா அப்புறம்தான் தெரிஞ்சிது உங்க முன்ஜாக்கிரதை :-)

விமர்சனம் நல்லாயிருக்கு, படத்தை வீடிலையா வெளியிலையா பார்த்தீங்க? :-)

18 + படத்தை பார்த்துகிட்டே அதில மேட்டர் கூட ஐக்கியமாகாம அதில கதையா தேடி, கதையை ஞாபகம் வச்சிருந்து அப்பாலிக்கா விமர்சனம் எழுதிறதின்னா சும்மாவா? நீங்க கலக்குங்க சித்தப்பு :-)

Unknown said...

பாஸ் இதையும் கொஞ்சம் பாருங்க

http://iravuvaanam.blogspot.com/2010/11/l.html

அன்பரசன் said...

//முன் குறிப்பு: இது பாலுறவுக் காட்சிகள் மற்றும் நிர்வாண காட்சிகள் நிறைந்த ஒரு உலகத்திரைப்படத்தின் விமர்சனம். எனவே படிக்க விரும்பாதவர்கள், சமூகக் காவலர்கள் எல்லாம் ஒன் ஸ்டேப் பேக். படத்தின் கதை கொஞ்சம் ஓவராகவே இருந்ததால் அடுத்த சில நாட்களுக்கு மட்டும் என் வலைப்பூவில் நுழையும்போது “Adult Content Warning” வரும்படி வைத்திருக்கிறேன். ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிக்கவும்.//

நீங்க ரொம்ப நல்லவர்ங்க.

அன்பரசன் said...

//மொத்தத்தில் இது நம்மூர் கலாச்சாரத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத ஒரு திரைப்படம். எனவே நான் படத்தை பார்க்கச்சொல்லி உங்களை வலியுறுத்தவில்லை. படத்தில் வரும் காட்சிகளை ஏற்றுக்கொள்ள மனமிருந்தால் மட்டும் பாருங்கள்//

நீங்க ரொம்ப ரொம்ப நல்லவர்ங்க.

Philosophy Prabhakaran said...

@ Arun Prasath
அதான் சொன்னேன்ல... விக்கிபீடியா, கூகிள் மற்றும் imdb.... அப்படின்னு சொல்ல முடியாது... வாழ்க்கைல எதுவா இருந்தாலும் பட்டு திருந்தணும்னு சொல்றாங்க...

@ சசிகுமார்
வாங்க நல்லவரே... நீங்க இங்க என்ன பண்ணீங்கன்னு நான் பாத்துட்டுதான் இருந்தேன்... விடிஞ்சதும் உங்களுக்காக எழுதி வச்சிருக்குற தனிபதிவை வெளியிடுகிறேன்... நன்றி...

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன்
நன்றி நண்பரே... என்னை ரொம்ப புகழ்றீங்க... இப்போதைக்கு இது ஒண்ணு மட்டும்தான் ஆனால் விக்கிபீடியாவில் தேடினால் எக்கச்சக்கமாக கிடைக்கும்...

மாற்றிவிட்டேன் நண்பா... சுட்டிக்காட்டியதற்கு நன்றி...

@ Prasanna
பாராட்டுகளுக்கு நன்றி...

Philosophy Prabhakaran said...

@ எப்பூடி..
ம்ம்ம்... நாளைக்கு கதவை திறந்துவிடுகிறேன்...
வீட்டில்தான் பார்த்தேன்... நமக்கு தனி அறை இருக்கிறது...

@ இரவு வானம்
கண்டிப்பா வரேன்...

@ அன்பரசன்
இரண்டு பின்னூட்டம் போட்ட நீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவங்க...

Unknown said...

// மெக்சிகோ நாட்டின் அரசியலையும் வரலாற்றையும் நன்கு அறிந்தவர்கள் அல்லது படித்தவர்கள் மட்டுமே இந்தப் படத்தை ரசிக்க முடியும். மற்றவர்களுக்கு இது ஒரு மேற்படி டைப் படமாகத் தான் இருக்கும் நான் உட்பட.//

நான் உட்பட.(yes when i saw this movie,i thought the same.)

//18 + படத்தை பார்த்துகிட்டே அதில மேட்டர் கூட ஐக்கியமாகாம அதில கதையா தேடி, கதையை ஞாபகம் வச்சிருந்து அப்பாலிக்கா விமர்சனம் எழுதிறதின்னா சும்மாவா? நீங்க கலக்குங்க//

-gaja

சி.பி.செந்தில்குமார் said...

>>>எனவே நான் படத்தை பார்க்கச்சொல்லி உங்களை வலியுறுத்தவில்லை.>>>

யோவ் பிரபா,அதான் டீட்டெயிலா எல்லாம் சொல்லீட்டீங்க,இதைப்படிச்ச பிறகும் பாக்காம இருக்க முடியுமா?உலகப்பட விமர்சனம் எழுத ஆரம்பிச்சுட்டிஒஇங்க.இனி நீங்க சாதா பதிவர் அல்ல உலகப்பட விமர்சக பதிவர்...எப்பூடி பட்டப்பேரு?

Anonymous said...

பிரபா தங்களின் எழுத்து நடை அருமை.
Gael Garcia bernal என்னுடைய அபிமான நடிகர் (Amerros Perros, Babel, Motorcycle diaries, el pasado etc...). நானும் இந்தப் படத்தை download போட்டு விட்டேன்... பார்த்துவிட்டு சொல்கிறேன். Y Tu Mama Tambien = And Your mother also(spanish படிக்கிறேனாம்..:) ) .

Philosophy Prabhakaran said...

@ thangaraju
நன்றி... IMDB user reviews படித்தால் ஓரளவிற்கு புரிந்துக்கொள்ள முடியும்...

@ சி.பி.செந்தில்குமார்
இப்படி சொன்னாதான் எல்லோரும் மொதல்ல பாப்பீங்கன்னு தெரியும்...

@ மோடுமுட்டி
அப்படியா... மிக்க மகிழ்ச்சி... நான் கூட சில காலம் Japanese படித்தேன்...

ஜோதிஜி said...

போட்டிக்கு நீங்கள் கொடுத்த தலைப்பு பார்த்து உள்ளே வந்தேன். சிறப்பாகவே உள்ளது. வெற்றி பெற வாழ்த்துகள்.

Unknown said...

evvalavu nalla padam irunthalum yen sila per intha mathiri padangalai vimarchanam seigireergal

கவிதை பூக்கள் பாலா said...

சிறந்த சினமா விமர்சகர்களுள், நீங்களும் ஒருவர் என்று சொல்லும் அளவுக்கு விமர்சனம் நல்லா இருக்கு பிரபாகர்.

Anonymous said...

you can see this movie full in youtube.but you want register .........