12 August 2011

வகுப்பறைக்குள் அலப்பறை - பாகம் 2


அன்புள்ள வலைப்பூவிற்கு,

இன்னுமா வகுப்பறை வயதை தாண்டவில்லை என்று கேட்பவர்களுக்கு, “வாழ்க்கையே ஒரு வகுப்பறை...” என்றெல்லாம் பின்நவீனத்துவ மொக்கையை போட விரும்பவில்லை. வகுப்பறை நேரம் முடிந்துவிட்டது. ஆனால் அலப்பறைதான் முடிந்த பாடில்லை. இது சுமார் ஆறேழு மாதங்களுக்கு முன்பு வகுப்பறையில் என்னை வசப்படுத்திய ஒரு பெண்ணை பற்றிய பதிவு. (நம்புங்க... ஒரே ஒரு பொண்ணு தான்...).

குளிக்காமல் கொள்ளாமல்
வகுப்பறைக்கு வருகிறேன்...!
உன் கூந்தல் அருவியில்
குளிப்பதற்காக...!

பிடித்திருந்தது...!
நீ என் கைகளை
பிடித்திருந்தது...!

ஏய் பெண்ணே...!
என்னைச் சிலுவையில் அறைந்துவிடு...!
அந்தச் சிலுவை
உன் கழுத்துச்சங்கிலியில்
இருந்தால் மட்டும்...!

இவற்றுள் முதல் கவிதை முற்றிலும் உண்மை. (வகுப்பறை முழுவதும் நாரி நசநசத்துவிட்டது).

இரண்டாவது கவிதை முழுக்க முழுக்க கற்பனையே. அந்தப்பெண் என் முகத்தை கூட முழுமையாக பார்த்திருக்க மாட்டாள். (ஆம், ஒன் சைட் ஃபீலிங்க்ஸ்).

மூன்றாவது கவிதையின் முதல் வரியில் அவளின் பெயரை குறிப்பிட வேண்டுமென்று கொள்ளை ஆசை. அனுமதியில்லாமல் அவளது பெயரை எழுதுவது நாகரிகமில்லாததால் டன் கணக்கான வருத்தத்துடன் “பெண்ணே” என்று மையமாக எழுதிவிட்டேன்.

நடிகையின் படங்கள் கற்பனைக்காக மட்டுமே. மற்றபடி கவிதைகள் அவளைப் பற்றி மட்டுமே.

மூன்றாவது கவிதைக்கு டாப்சி சிலுவை அணிந்த படத்தை சிரமம்கொண்டு தேடினேன், கிடைக்கவில்லை. (அவள் ஒரு ஜாடையில் டாப்சி போலவே இருப்பாள். ஐயாம் கே.பி.கருப்பு)

மலரும் நினைவுகள்: இதன் முதல் பாகத்தை எழுதியபோது அதை கிண்டலடித்து உல்டா செய்து ஒரு கும்பல் காறித்துப்பியதை மறக்க முடியாது. என்னுடைய பதிவுலக வாழ்க்கையின் மோசமான நாள் அது. இந்தமுறை எத்தனை பேர் துப்ப போறாங்களோ...???

முந்தய பதிவுகள்:
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

8 comments:

பலே பிரபு said...

//பிடித்திருந்தது...!
நீ என் கைகளை
பிடித்திருந்தது...!//

நாலே வார்த்தையில் கவிதை. மிக அருமை.....

பலே பிரபு said...

இந்த வாரத்துல என் பதிவ விட உம்ம பதிவதான்யா அதிகம் திரட்டிகள்ள இணைச்சு இருக்கேன். (இப்போ எந்த புண்ணியவானோ இன்டலில மட்டும் இணைச்சுட்டாரு)

இது லீவ் லெட்டர்

நான் ஊருக்கு போவதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு வேறு யாரிடமாவது சொல்லவும்.

பலே பிரபு said...

// ஐயாம் கே.பி.கருப்பு //

அதாவது தேசிய விருது கிடைக்கிற அளவுக்கு நடிக்கிறீங்க. பாவம்யா அந்த பொண்ணு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடேடே... ஃபீலிங்ஸ் ஸ்டார்ட் ஆயிடுச்சுப்பா......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல கவிதைகளும், பொருத்தமான படங்களும்...

ஜீ... said...

//அந்தச் சிலுவை
உன் கழுத்துச்சங்கிலியில்
இருந்தால் மட்டும்..//
இங்க பார்ரா!
கலக்குங்க பாஸ்!

சி.பிரேம் குமார் said...

kavithai eluthavum sairingala super 3rd kavithai adult 18+ ah

Ponmahes said...

அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி !!!