Showing posts with label கவிதை முயற்சி. Show all posts
Showing posts with label கவிதை முயற்சி. Show all posts

28 November 2012

பேருந்து தோழி

அன்புள்ள வலைப்பூவிற்கு,


உனக்கான நிறுத்தத்தை கடந்தபிறகு
பேருந்து ஊர்ந்து செல்கிறது

நீ அமர்ந்த ஜன்னலோர இருக்கைக்கு
ஜன்னி வந்துவிட்டதாம் #ஐஸ்

மழை நாட்களில் வேண்டுமென்றே
குடையை மறக்கிறேன்

திருடி ஜாக்கிரதை
என்றுதானே எழுதியிருக்க வேண்டும்


பிடித்திருந்தது - நீ என் கை
பிடித்திருந்தது

வேகத்தடைகளில் விரதம் கலைகிறது

காலேஜ் ஸ்டூடன்ட்ஸின் டப்பாங்குத்து கூட
உன்னிருப்பில் கண்ணே கலைமானே

உன்னெதிரில் வாய்தவறி வந்த கெட்டவார்த்தையை
அசிங்க அசிங்கமாக திட்டினேன்


அனுஷ்கா அப்படியொன்றும் அழகில்லை

அந்த லாங் சைஸ் நோட்டுக்கு மட்டும்
மன்னிப்பே கிடையாது

குழந்தையை ரசித்துக்கொண்டிருந்த
குழந்தையை ரசித்துக்கொண்டிருந்தேன்

ஸ்டெர்லிங் ரோடும் வண்ணாரப்பேட்டையும்
ஒரு ஆயிரம் மைல் தொலைவில் இருந்திருக்கலாம்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

21 September 2011

காண்டம் கவிதைகள்


அன்புள்ள வலைப்பூவிற்கு,


திங்கள்...
செவ்வாய்...
புதன்...
வியாழன்...
என்று விரல்விட்டு எண்ணி
காணவில்லை ஐந்தாவது ஆணுறை என்று
கணக்கு கேட்கும் உன்னிடம்
எப்படிச் சொல்வேன்...
நேற்று மதியம்
உன் தங்கை வந்தாள் என்று...!
***************************************************************
நாமிருவரும் பாவிகளடி...!
தினம் தினம்
வதைக்கிறோம் சிசுக்களை...
சபிக்கத்தான் செய்யும்
ஆணுறையோடு குப்பைத்தொட்டியில்
நாம் வீசியெறிந்த
கருவறை பார்க்காத உயிரணுக்கள்...!
***************************************************************
கலவி முடிந்தபின்
கட்டிலில் கட்டிப்பிடித்தபடி
காதோரம் கிசுகிசுக்கிறாய் நீ...!
ஆணுரை மட்டும் போதும்...
ஆணுறை வேண்டாம் என்று...!


நன்றி: கவிதைகளை டிங்கரிங் செய்துக்கொடுத்த கவிதை வீதி செளந்தருக்கு...!

என்றும் அன்புடன்,
N.R.Prabhakaran

Post Comment

12 August 2011

வகுப்பறைக்குள் அலப்பறை - பாகம் 2


அன்புள்ள வலைப்பூவிற்கு,

இன்னுமா வகுப்பறை வயதை தாண்டவில்லை என்று கேட்பவர்களுக்கு, “வாழ்க்கையே ஒரு வகுப்பறை...” என்றெல்லாம் பின்நவீனத்துவ மொக்கையை போட விரும்பவில்லை. வகுப்பறை நேரம் முடிந்துவிட்டது. ஆனால் அலப்பறைதான் முடிந்த பாடில்லை. இது சுமார் ஆறேழு மாதங்களுக்கு முன்பு வகுப்பறையில் என்னை வசப்படுத்திய ஒரு பெண்ணை பற்றிய பதிவு. (நம்புங்க... ஒரே ஒரு பொண்ணு தான்...).

குளிக்காமல் கொள்ளாமல்
வகுப்பறைக்கு வருகிறேன்...!
உன் கூந்தல் அருவியில்
குளிப்பதற்காக...!

பிடித்திருந்தது...!
நீ என் கைகளை
பிடித்திருந்தது...!

ஏய் பெண்ணே...!
என்னைச் சிலுவையில் அறைந்துவிடு...!
அந்தச் சிலுவை
உன் கழுத்துச்சங்கிலியில்
இருந்தால் மட்டும்...!

இவற்றுள் முதல் கவிதை முற்றிலும் உண்மை. (வகுப்பறை முழுவதும் நாரி நசநசத்துவிட்டது).

இரண்டாவது கவிதை முழுக்க முழுக்க கற்பனையே. அந்தப்பெண் என் முகத்தை கூட முழுமையாக பார்த்திருக்க மாட்டாள். (ஆம், ஒன் சைட் ஃபீலிங்க்ஸ்).

மூன்றாவது கவிதையின் முதல் வரியில் அவளின் பெயரை குறிப்பிட வேண்டுமென்று கொள்ளை ஆசை. அனுமதியில்லாமல் அவளது பெயரை எழுதுவது நாகரிகமில்லாததால் டன் கணக்கான வருத்தத்துடன் “பெண்ணே” என்று மையமாக எழுதிவிட்டேன்.

நடிகையின் படங்கள் கற்பனைக்காக மட்டுமே. மற்றபடி கவிதைகள் அவளைப் பற்றி மட்டுமே.

மூன்றாவது கவிதைக்கு டாப்சி சிலுவை அணிந்த படத்தை சிரமம்கொண்டு தேடினேன், கிடைக்கவில்லை. (அவள் ஒரு ஜாடையில் டாப்சி போலவே இருப்பாள். ஐயாம் கே.பி.கருப்பு)

மலரும் நினைவுகள்: இதன் முதல் பாகத்தை எழுதியபோது அதை கிண்டலடித்து உல்டா செய்து ஒரு கும்பல் காறித்துப்பியதை மறக்க முடியாது. என்னுடைய பதிவுலக வாழ்க்கையின் மோசமான நாள் அது. இந்தமுறை எத்தனை பேர் துப்ப போறாங்களோ...???

முந்தய பதிவுகள்:
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

17 December 2010

வகுப்பறைக்குள் அலப்பறை

வணக்கம் மக்களே...

காதலித்தால் கவிதை வரும் என்று சொல்கிறார்கள். ஆனால் எனக்கு மட்டும் காவலன் படம் ஹிட்டானால் கூட கவிதை வராது என்றே தோன்றியிருந்தது சில நாட்கள் முன்பு வரை. அப்படி இருக்கையில் இரண்டு நாட்களுக்கு முன்பு வகுப்பறையில் அமர்ந்து பிகர்களை முரட்டுத்தனமாக சைட்டடித்ததில் கவிதை போன்ற வரிகள் சில என் மன வானில் உதித்தன.

கவிஞர்கள் யாராவது படித்து கருத்து சொல்லுங்கள். சின்னப்பயலை ஊக்குவிக்கும் நோக்கில் நன்றாக இருக்கிறதென்று போலி வார்த்தைகள் கூற வேண்டாம். அப்புறம் அடிக்கடி இதுபோல எதையாவது எழுதி தொல்லை கொடுப்பேன். எனவே பிடித்திருக்கிறதோ, இல்லையோ உங்கள் மனதில் தோன்றும் வார்த்தைகளை கூச்சப்படாமல் பளிச்சென்று சொல்லிவிடுங்கள்.

வகுப்பறைக்குள் நுழையும்போது
Excuse Me என்கிறாய்...
என் மனவறைக்குள் நுழையும்போது
மட்டும் கேட்க மறுக்கிறாயே...!

உனக்கு அழகாக இருக்குமென்று சொன்னதால்
கூந்தலை விரித்துப்போட்டபடி வந்தாய்...
ஆனால் என் மனதை மட்டும்
கொத்தாக அள்ளி முடிந்துக்கொண்டாயே...!

ஒரு முத்தம் தா... என்றதும் வெட்கப்பட்டு
நீ இடம்புறமாக தலையசைத்து மறுக்க,
உன் காதணிகள் மட்டும்
முன்னும்பின்னுமாக அசைந்து என்னை அழைக்கிறதே...!

டிஸ்கி: மேற்படி கவிதைகள் ஒவ்வொன்றின் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவர்களின் பெயர்களை கூற முடியாத நிலையில் இருக்கிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment