27 November 2011

பாலை – தமிழனின் (ஒரிஜினல்) பெருமை


அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஒவ்வொரு முறை மாஸ் ஹீரோக்களின் படங்கள் வெளியாகும்போது வலியச்சென்று ஆப்பில் அமர்ந்துக்கொண்டு அய்யய்யோ குத்துதே... குடையுதே... என்று புலம்புவதாலும், அதே சமயம் சில நல்ல படங்களை (தென்மேற்கு பருவக்காற்று, வெங்காயம்) தவற விடுவதாலும் என் மேலேயே எனக்கு ஒரு கோபம் உண்டு. நேற்று வரை இந்த படத்தைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எங்கேயோ ஒரு விளம்பரத்தில் “சங்ககாலத்திற்கு ஒரு பயணம்” என்று வாசித்ததின் விளைவாக திடுமென படம் பார்க்க முடிவு செய்து கிளம்பினேன். தண்டையார்பேட்டை எம்.எம்.திரையரங்கம், சென்னையின் பழமையான திரையரங்குகளில் ஒன்று. மழை வேறு பெய்துக்கொண்டிருந்ததால் சொற்ப நபர்களே வந்திருந்தார்கள். இருப்பினும் வந்திருந்தவர்கள் அனைவருமே எங்கேயோ எப்படியோ படத்தைப் பற்றி தெரிந்துக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்று அவர்களிடம் பேசியபோது தெரிந்துக்கொண்டேன்.

மனித இனம் வீடு கட்ட, சமைக்க, ஆடை நெய்ய கற்றுக்கொள்ளாத காலத்தில் அத்தனை பெருமையோடு வீடு கட்டி, ஆடை உடுத்தி, சமைத்து நாகரிகமாக ஆயர்குடி எனும் பகுதியில் வாழ்ந்துவருகிறார்கள் தமிழ் பேசும் ஒரு குழு மக்கள். அவர்கள் ஒரு சமயத்தில் வடக்கில் இருந்து (தமிழ் அல்லாத பிறமொழி பேசும்) வந்தேறிகளால் முல்லைக்குடி என்ற பகுதிக்கு விரட்டியடிக்கப்படுகிறார்கள். முல்லைக்குடி பகுதியில் கிடைத்த வாழ்வை வாழ்ந்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு பாலை எனும் கொடிய வாழ்வாதார சூழல் வந்து அதிர்ச்சியை கொடுக்கிறது. இப்போது ஒன்று கொள்ளையடித்து பிழைக்க வேண்டும், அல்லது இழந்த ஆயர்குடியை மீட்க வேண்டும். இறுதியில் ஆயர்குடியை மீட்பது என்று முடிவாகி போரில் இறங்கும் தமிழர்கள் வென்றார்களா...? என்பதே மீதிக்கதை.

இந்தக்கதையை படித்ததுமே உங்களுக்கு ஒரு இனத்தின் வரலாறு நினைவிற்கு வரக்கூடும். அதை உறுதிப்படுத்தும் விதமாக “அவங்க சிங்கம்... நாம புலி...” என்ற வசனம் வந்ததும் தான் கதை புரிய ஆரம்பித்து சீட்டில் நிமிர்ந்து உட்கார்ந்தேன். அதன் பிறகு வந்த காட்சியமைப்புகளை, வசனங்களை, போர் தந்திரங்களை அப்படியே வரிவரியாக எழுத வேண்டுமென்று அத்தனை ஆசையாக இருக்கிறது. இருந்தாலும் அதை திரையில் பார்க்கும்போது இன்னும் இன்னும் பரவசப்படுவீர்கள். எனவே தயவு செய்து இந்த படத்தை (தூக்குவதற்கு முன்பு) திரையரங்கிற்கு சென்று பார்க்கவும். திரையரங்குகள் லிஸ்ட்.

பயங்கர ஷார்ப்பான வசனங்கள். “பிழைப்போமா... அழிவோமா... என்று தெரியாது. வாழ்ந்தோம் என்று பதிவு செய்ய விரும்புகிறோம்...” என்ற வசனத்தில் ஆரம்பித்து, “போரில் வெல்ல வீரம் மட்டும் போதுமானதல்ல... சூழ்ச்சியும் அவசியம்...” என்று தொடர்ந்து, “நாம் காலடி வைக்கும் ஒவ்வொரு அடி மண்ணுக்காகவும் நம் முன்னோர்கள் போராடியிருக்கிறார்கள்...” என்று முடிவது வரை நிறைய பளிச் டைப் வசனங்கள். 

இது மட்டுமில்லாமல் பண்டைய தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகள், சமூகநிலை, அவர்களின் காதல், காமம், திருமணம் செய்யும் முறை போன்றவற்றை போகிறபோக்கில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது பாலை. 

காஞ்சிவரம் படத்தில் நடித்த ஷம்மு – காயாம்பூ என்ற பெண் போராளி பாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் கூட நடித்திருக்கிறார் என்பது கூடுதல் செய்தி. அதேபோல நாயகனாக நடித்திருக்கும் சுனிலும் தன் பங்கிற்கு சிலம்பம் கற்று, ஈட்டி எரியப் பயின்று படத்தில் நடித்திருக்கிறார்.

இதை அப்படி செய்திருக்கலாம், அது சரியில்லை, இந்த காட்சியை இதைவிட நன்றாக எடுத்திருக்கலாம் என்று சுலபமாக சொல்லிவிடலாம். ஆனால் இப்படியொரு படத்தை துணிச்சலாக எடுப்பது சுலபமல்ல. அந்த வகையில் இயக்குனர் செந்தமிழன் வெற்றி பெற்றிருக்கிறார். 

இப்ப சொல்லுங்க, ஏழாம் அறிவு வந்தபோது தமிழனின் பெருமை என்று துள்ளி குதித்தவர்கள் எத்தனை பேர் இந்த படத்தை பார்த்தீங்க....?

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

29 comments:

அப்பாவி தமிழன் said...

இப்ப சொல்லுங்க, ஏழாம் அறிவு வந்தபோது தமிழனின் பெருமை என்று துள்ளி குதித்தவர்கள் எத்தனை பேர் இந்த படத்தை பார்த்தீங்க....?//////// பாக்கணும் ன்னு ஆசையா இருக்கு ஆனா வெளிநாட்டில இந்த படத்த யாருமே வெளியிடல , dvd வர்ற வரிக்கும் வெயிட் பண்ணனும்

Sharmmi Jeganmogan said...

கண்ட கண்ட டப்பா படமெல்லாம் இங்கே லண்டன் தியட்டரில் ஓடும். ஆனா இந்தப் படத்தைப் போட மாட்டானுக... திருட்டு டிவிடி தான் உடனே கிடைக்கும். பின் எப்படி இந்த மாதிரி படங்கள் வர்த்தக ரீதியாக வெற்றி பெறும்? தமிழர்கள் தலை குனிய வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று...

Suthershan said...

not released in singapore also

கோகுல் said...

நல்ல படம் வரும் போது தேடிப்பிடித்து பார்த்து பதிவேற்றும் உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன்.

vimalanperali said...

வணக்கம் பிரபகரன் சார்.நலம்தானே.
பிரபாகரனின் தத்துபித்துவங்கள் என்கிற சொல்லாக்கம் இந்தபடத்தை அறிமுகம் செய்த விதத்தில் இருந்து அடிபட்டுப்போகிறது.
உங்களது பதிவை தலை தாழ்த்தி வணங்கி வரவேற்றுக்கொள்ளுகிற எளியவர்களில் நானும் ஒருவனாய்.
கண்டிப்பாக படத்தை பார்த்து விடுகிறேன்.நன்றி வணக்கம்.

சி.பி.செந்தில்குமார் said...

மயக்கம் என்ன விமர்சனம் போடாமல் பாலை விமர்சனம் போட்டதற்கு பாராட்டுக்கள், இங்கே ஈரோட்டில் படம் ரிலீஸ் ஆகலை.. லெட் வெயிட்டிங்க்

கும்மாச்சி said...

பிரபாகரன் நல்ல படங்களை இனம் கண்டு எழுதுவதற்கு நன்றி.

antony1432000 said...

வணக்கம் நண்பரே, கண்டிப்பாக ஈரோடு மக்கள் பாலை திரை படத்திற்காக காத்திருப்பார்கள், ஏன் என்றால் பாலை பாடல்களை ஈரோட்டில் தான் வெளிட்டர்கள். கண்டிப்பாக ஈரோட்டை நோக்கி பாலை வரும்.

Anonymous said...

ya Its Me.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான தகவலுக்கு நன்றி நண்பரே!

சாமக்கோடங்கி said...

கண்டிப்பாக பார்த்து விடுகிறேன்..:)

Anonymous said...

ஹீ ஹீ... இன்னுமா ஏழாம் அறிவ மக்கள் நம்பிகிட்டு இருக்காங்க!! போங்க சார், போங்க போய் பாலை மாதிரி படங்கள பார்த்தாவது முருகதாஸின் சூழ்ச்சியை புரிஞ்சிகிங்க....

Unknown said...

ஏழாம் அறிவு வந்தபோது தமிழனின் பெருமை என்று துள்ளி குதித்தவர்கள் எத்தனை பேர் இந்த படத்தை பார்த்தீங்க....?/////////////

இன்னும் இல்லை சார். பார்த்து விடுகிறேன்...

தமிழ்வாசி பிரகாஷ் said...

பாலை அப்படின்னு ஒரு ரிலீஸ் ஆகியிருக்குன்னு பதிவை படிச்ச போது தெரிஞ்சுக்கிட்டேன். பார்க்கிறேன்...


நம்ம தளத்தில்:
"வொய் திஸ் கொலவெறி டி" - Why This Kolaveri Di

Prem S said...

உங்களுக்கு உலக அறிவு அதிகம் பாஸ் பாத்துடுவோம்

கோவை நேரம் said...

லிஸ்டுல எங்க ஊரையே காணோம் .எப்படி பார்க்கிறது..?

MANO நாஞ்சில் மனோ said...

இப்ப சொல்லுங்க, ஏழாம் அறிவு வந்தபோது தமிழனின் பெருமை என்று துள்ளி குதித்தவர்கள் எத்தனை பேர் இந்த படத்தை பார்த்தீங்க....?//

சாட்டையடி கேள்வி பதிவுலகிற்கு, ஆனாலும் வீரியமுள்ள விதை முளைக்காமல் இருக்காது, பாலை, பாலை வார்க்கும் நிச்சயம்...!!!

ananthu said...

உங்கள் விமர்சனமே படத்தை பார்க்க வேண்டுமென்ற ஆவலை தூண்டுகிறது ... திரையரங்குகளின் பட்டியலை வெளியிட்டமைக்கும் நன்றி ...எனது மயக்கம் என்ன - அரை மயக்கம் ... விமர்சனத்தை படிக்க வருமாறு அழைக்கிறேன் ...http://pesalamblogalam.blogspot.com/2011/11/blog-post_26.html

Thooral said...

இப்ப சொல்லுங்க, ஏழாம் அறிவு வந்தபோது தமிழனின் பெருமை என்று துள்ளி குதித்தவர்கள் எத்தனை பேர் இந்த படத்தை பார்த்தீங்க....?////////
unmai than .. kandippa intha padatha theather la poi paakanum

இராஜராஜேஸ்வரி said...

“அவங்க சிங்கம்... நாம புலி...” என்ற வசனம் வந்ததும் தான் கதை புரிய ஆரம்பித்து சீட்டில் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

நெல்லை கபே said...

படத்தைப் பற்றிய பேச்சு பாஸிடிவ்வாக இருக்கிறது. இருந்தாலும் சீக்கிரம் போய் பார்க்கணும்.நன்றி.

இன்று என் வலையில்;

யானை ஆடி நின்றிருந்த காலியான கொட்டில்...!

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,

சூப்பரான பட விமர்சனத்தை தந்திருக்கிறீங்க.

தமிழர் தம் வாழ்வின் வரலாற்றுப் படமாகவும் இதனைக் கொள்ளலாம்.

வியாபார தந்திரங்களால் நம் மக்கள் இது போன்ற நல்ல படங்களைத் தவற விடுகின்றார்கள்.

வலைப் பூக்கள், மற்றும் இதர ஊடகங்கள் தான் இப்படியான படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதனை உணர்ந்து
அசத்தலான விமர்சனம் தந்திருக்கிறீங்க.

வாழ்த்துக்கள்!

சுதா SJ said...

ஆச்சரியமாவும் பெருமையாவும் இருக்கு...... பாலை படம் பார்த்து விமர்சனம் எழுதவும் ஒரு பதிவர் இருக்கார் எண்டு... தேங்க்ஸ் பாஸ்

அஞ்சா சிங்கம் said...

இப்ப சொல்லுங்க, ஏழாம் அறிவு வந்தபோது தமிழனின் பெருமை என்று துள்ளி குதித்தவர்கள் எத்தனை பேர் இந்த படத்தை பார்த்தீங்க.........
/////////////////////////

இதுதான்யா செருப்படி ...................

Unknown said...

பார்த்துடுவோம்....
இந்த மாதிரி படங்களை வெற்றி பெறச் செய்வது நமது கடமை.

கவிதை பூக்கள் பாலா said...

ஆச்சரியமாவும் பெருமையாவும் இருக்கு...... பாலை படம் பார்த்து விமர்சனம் எழுதவும் ஒரு பதிவர் இருக்கார் ,
போயா உன்ன பார்த்தா பொறாமையா இருக்கு , உன்னால மட்டும் இப்படி இந்த மாதிரி படங்கல பார்த்து விமர்சனம் எழுதனுன்னு தோனுவதற்கே பாராட்டனும் . உண்மை எங்க பிரபா விளங்குது . மசாலா தின்னு பழக்க பட்டவனுக்கு இந்த மாதிரியும் வலிகளையும் பதிவு செய்யும் துணிவு அனைவருக்கும் வரணும் . நன்றி பிரபா

Cable சங்கர் said...

தம்பி.. ஏதோ ஒரு படத்தை பார்த்துப்பிட்டு சும்மா ஓவராத்தான் பில்டப் பண்றே...நாங்கெள்ளாம் கடந்த பத்து வருஷத்தில ரீலீஸே ஆகாத பல நூறு படங்களை பார்த்து போய்ட்டேயிருக்கோமில்லை.. :)

Philosophy Prabhakaran said...

@ சங்கர் நாராயண் @ Cable Sankar
// தம்பி.. ஏதோ ஒரு படத்தை பார்த்துப்பிட்டு சும்மா ஓவராத்தான் பில்டப் பண்றே...நாங்கெள்ளாம் கடந்த பத்து வருஷத்தில ரீலீஸே ஆகாத பல நூறு படங்களை பார்த்து போய்ட்டேயிருக்கோமில்லை.. :) //

தல... அது விற்பனைத்தமிழ்... இது கற்பனைத்தமிழ்...

Riyas said...

//இதை அப்படி செய்திருக்கலாம், அது சரியில்லை, இந்த காட்சியை இதைவிட நன்றாக எடுத்திருக்கலாம் என்று சுலபமாக சொல்லிவிடலாம். ஆனால் இப்படியொரு படத்தை துணிச்சலாக எடுப்பது சுலபமல்ல.//

இது கேபிளாரை குத்தி காட்டுவது போல் இருக்கே.. இருந்தாலும் நீங்கள் சொல்வதுதான் உண்மை... இலகுவாக சொல்லிடலாம் செய்து காட்டனுமே..