28 November 2011

மயக்கம் என்ன...?


அன்புள்ள வலைப்பூவிற்கு,

என்னுடைய எதிர்பார்ப்பு லிஸ்டில் நீண்ட நாட்களாகவே இருந்த படம். ஆணிகள் காரணமாக கொஞ்சம் தாமதமாகவே பார்க்க முடிந்தது. ராயபுரம் ஐட்ரீம் திரையரங்கில் நேற்று மாலை பார்த்தேன்.

இதுவரைக்கும் படத்தின் கதை என்ன என்று தெரியாதவர்களுக்கு: தனுஷ் ஒரு போட்டோகிராபர். அவர், அவருடைய தங்கை, நண்பர்கள் எல்லாம் சேர்ந்து குடியும் கும்மாளமுமாக வாழ்ந்து வருகிறார்கள். நண்பனின் பெண் தோழியாக (சரியாத்தான் சொல்றேனா...?) அறிமுகமாகும் ரிச்சா தனுஷிடம் ஈர்க்கப்பட்டு அவரை காதலித்து கை பிடிக்கிறார். (கை மட்டும்தான் பிடிக்கிறாரான்னு கேட்கக்கூடாது). தனுஷ் தனது ஆதர்சன போட்டோகிராபரான மாதேஷ் கிருஷ்ணசாமியிடம் உதவியாளராக சேர முயல்கிறார். ஆனால் அவர் தனுஷை போட்டோவை “காப்பி-பேஸ்ட்” செய்து புகைப்படக்கலையில் உயரிய விருதினை வாங்கிவிடுகிறார். இந்த செய்தியை படித்த அதிர்ச்சியில் தனுஷ் மாடியில் இருந்து கீழே விழுகிறார். அதிர்ச்சியிலும், அடிபட்டதாலும் மனப்பிறழ்வு ஏற்பட்ட தனுஷ் இறுதியில் என்ன ஆனார்...? தனுஷின் மனைவி ரிச்சாவின் நிலை என்ன என்பதே மீதிக்கதை.

தனுஷ் எப்போதும் போலவே அசால்ட்டான கேரக்டர். தண்ணியடித்துவிட்டு புலம்புவது, ஹீரோயினை சகட்டுமேனிக்கு திட்டுவது, காதல் தோல்வி பிலாசபி பேசுவது என தனுஷ் ஒரு இமேஜ் வட்டத்தில் சிக்கிவிட்டார். இப்போதைக்கு இளைஞர்கள் அவரை ரசிக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து இதே மாதிரியே நடித்து வந்தால் வேலைக்கு ஆகாது. (அதாவது தனுஷ் நடிப்பை பார்க்க பிடிக்கும். ஆனால் பார்க்க பார்க்க பிடிக்காது) 

ரிச்சாவிற்கு (ஹீரோயினி சர்நேம் என்னன்னு யாராவது கேட்டா கடிச்சு வச்சிடுவேன்) முதல் படத்திலேயே கனமான வேடம். (அதனால தான் க்ளைமாக்ஸுல தனுஷ், இரும்பு மனுஷின்னு சொல்றாரு போல) கொடுத்த கனத்தை தூக்க முயற்சி செய்திருக்கிறார். (Comparatively better) வேறு யாராவதாக இருந்தால் சொதப்பியிருப்பார்கள். அழகைப் பற்றி குறிப்பிட வேண்டுமென்றால் மணிஜி சொன்னதுபோல “பொன்னுக்கு வீங்கி” வந்தது மாதிரி இருக்கிறார். சதா கொஞ்சம் சதை போட்டால் இப்படித்தான் இருப்பார். சிரித்தால் நன்றாக இருக்கிறார். ஆனால் படத்தில் சிரிக்கும் வாய்ப்புகள் குறைவு.

ஹீரோவின் நண்பர்கள், நண்பிகளாக வருபவர்கள் ஹீரோவை தாங்கோ தாங்கென்று தாங்குகிறார்கள். இந்தமாதிரி நண்பர்கள் நிஜத்தில் எங்கேயாவது இருந்தா சொல்லுங்கப்பா. அந்த நண்பர்கள் குழுவில் பத்மினியாக நடித்திருப்பவர் Selena Gomez மாதிரி செம அழகாக இருக்கிறார். வழக்கமாக ஹீரோயினின் ப்ரெண்ட்லி அப்பாவாக நடிக்கும் அந்த நடிகர் (பெயர் தெரியவில்லை) இந்த படத்தில் நெகடிவ் கேரக்டரில் நடித்திருக்கிறார். படத்தில் வேற கதை உள்ளதால் ஹீரோ, ஹீரோயினின் அப்பா அம்மா போன்ற டம்மி பீஸ் கேரக்டர்கள் படத்தில் இல்லை.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. தீம் மியூசிக்கில் வரும் கிடார் இசையை சரியான இடத்தில் கச்சிதமாக பயன்படுத்தியிருக்கிறார். “காதல் என் காதல்...” பாடலை படமாக்கிய விதம் செம காமெடி. (சோழ மன்னன குத்தாட்டம் ஆடியதை விட காமெடின்னா பாத்துக்கோங்க). ஆடியோவில் இருந்த “என்னென்ன செய்தோம் இங்கே...” என்ற பாடல் மிஸ்ஸிங். இருந்தாலும் திணிக்கப்பட்டது போல் இருந்திருக்கும். 

ராம், பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் பணியாற்றிய ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். போட்டோகிராபி சம்பந்தப்பட்ட கதை என்பதால் ஒளிப்பதிவாளருக்கு செம தீனி என்று சொல்லலாம். “ஓட... ஓட...” பாடலின் ஒளியாக்கம் பிரமாதமாக இருந்தது.

இளைஞர்களின் உணர்ச்சியை உசுப்பேற்றுவதில் கில்லாடியான செல்வராகவன் அவர்களுக்கு தகுந்தபடி வசனங்களையும் எழுதி தள்ளியிருக்கிறார். சம்பந்தமே இல்லாமல் ஹீரோயினை “திருட்டு மூதேவி, முண்டகலப்பை” என்று திட்டினால் கூட தியேட்டரில் பயங்கர ஆரவாரம். அதே சமயம் நிறைய நல்ல வசனங்களும் இருக்கின்றன. ஹீரோவும் நண்பனும் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருக்கும்போது தனுஷ் நண்பரிடம் “கேமை ரீஸ்டார்ட் பண்ணு... அப்படியே முடிஞ்சா லைபையும் ரீஸ்டார்ட் பண்ணு...” என்று சொல்லும் வசனம் ஒரு நல்ல உதாரணம். “வாழ்க்கையில நாம என்ஜாய் பண்ற வேலையை செய்யனும்... இல்லைன்னா செத்துடனும்...” என்ற வசனத்தை ஆட்டோக்களுக்கு பின்னால்கூட எழுதலாம். ஹீரோயினிடம் தனுஷின் நண்பன் தவறாக பேசும்போது, “ஆம்பிளை இல்லையா... அதான்...” என்று சொல்லும்போது அந்த வசனத்தை விட வசனத்திற்கு இடையே கொடுக்கும் இடைவெளி, ஏற்ற இறக்கம் செம ஷார்ப்.

சில காட்சிகள் கொஞ்சம் எல்லை மீறுகின்றன. ஹீரோயினை தனுஷ் நிர்வாணமாக போஸ் கொடுக்கச் சொல்லி அடிக்கும் காட்சி சாட்சி. கர்ப்பிணியாக இருக்கும் ஹீரோயினை கீழே தள்ளிவிட்டு ரத்தம் கொட்டும் காட்சி – இரண்டாவது முறை படம் பார்க்கும்போது உச்சா போகும் சாக்கில் வெளியே வந்துவிட்டேன். படத்தில் ஒன்றிரண்டு விரசமான காட்சிகள் வந்தாலும் செல்வா படம்ன்னாலே இப்படித்தான் என்று சலித்துக்கொள்வது தவறு. 

படத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அவரவர் செய்கிற வேலையை ரசித்து செய்யச் சொல்லியிருக்கிறார் செல்வராகவன். Plagiarism பற்றி சொல்லியிருக்கிறார்கள். (இதைப் பற்றி நெல்லை நண்பனின் விரிவான விமர்சனம்). இறுதிக்காட்சியில் மாதேஷ் கிருஷ்ணசாமியிடம் தனுஷ் Thanks சொல்வது. இதைவிட அவருக்கு மிகப்பெரிய தண்டனை என்ன இருக்க முடியும்.

ஏதோ ஒரு திசையில் குத்துமதிப்பாக போய்க்கொண்டிருக்கும் படம் கடைசி இருபது நிமிடத்தில் ஓவர்நைட் டர்ன் அடிக்கிறது. ஒரு பாட்டுல ஹீரோ பெரிய ஆளாகுற மாதிரி ஒரு குமுதம் அட்டைப்படத்தில் அடிங்.... இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் பிரமாதமாக வந்திருக்க வேண்டிய படம் சராசரி படமாக வெளிவந்திருக்கிறது. ஒரு முறை பார்க்கலாம்.

என்றும் அன்புடன்,
N.R.Prabhakaran

Post Comment

47 comments:

Philosophy Prabhakaran said...

சினிமா விமர்சனத்துக்கு தலைப்பு வைக்கக்கூட தெரியாத அளவிற்கு கடுமையான கற்பனை வறட்சி... பிரபாகரா நீ இன்னும் வளரணும்...

Unknown said...

தத்து பித்துன்னு இல்லாம தெளிவான நடை ...
ஒரு தடவ பார்க்கலாம் !

Philosophy Prabhakaran said...

இன்று வெளிவர வேண்டிய பிரபா ஒயின்ஷாப் நாளை வெளிவரும்... அதனால் வாசகர்கள் யாரும் வீட்டில் சோறாக்காமல் இருக்க வேண்டாமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்...

Philosophy Prabhakaran said...

@ ஆகாயமனிதன்..
// தத்து பித்துன்னு இல்லாம தெளிவான நடை ... //

படத்தை சொல்றீங்களா... அடியேன் பதிவை சொல்றீங்களா...

Unknown said...

விமர்சனம் தான் !

ஷைலஜா said...

அப்போ பாக்கலாம் படத்தை இல்லையா?(கேள்வி புரியுதா?:))

Prem S said...

சரியான விமர்சனம் அருமை

சி.பி.செந்தில்குமார் said...

என்னது? பிரபா ஒயின் ஷாப் இன்ன்னைக்கு வர்லையா? அய்யயோ விக்கி தக்காளீ இன்னைகு ஆஃபீஸ் போகமாட்டானே?

சி.பி.செந்தில்குமார் said...

விமர்சன ரீதியாக ஜனரஞ்சக பத்திரிக்கைகளில் இப்படம் பாராட்டைப்பெற்றாலும் ஜனரஞ்சக ரீதியாக இந்தப்படம் செல்வாவுக்கு செம அடிதான்

pichaikaaran said...

நண்பனின் பெண் தோழியாக (சரியாத்தான் சொல்றேனா...?)"

தோழி என்றாலே அவர் பெண் தான் என புரிந்து விடுமே.. அது என்ன பெண் தோழி ? !!

இதை தவறாக சொல்லி இருக்கிறீர்கள்.. விமர்சனத்தை சரியாக சொல்லி இருக்கிறீர்கள்..

உங்கள் சினிமா ஆசான்களுக்கு பாராட்டுகளையும், தமிழ் ஆசான்களுக்கு ... வேண்டாம்.. அவர்கள் நன்றாகத்தான் சொல்லி கொடுத்து இருப்பார்கள்.. நீங்கள் கவனித்து இருக்க மாட்டீர்கள்

Unknown said...

என்னய்யா எதிர்மறை கருத்துக்களை கம்மியா சொல்லி இருக்க போல...நல்லா எழுதி இருக்கே வாழ்த்துக்கள்!

தமிழ்வாசி பிரகாஷ் said...

நல்ல விமர்சனம். ஆனா படம் சுமார் தான்.
நேத்து தான் படம் பார்த்தேன்.....
செல்வா இரண்டாம் பாகம் சொதப்பல்.

Anonymous said...

ரிச்சா கங்கோபாத்யாய (சரியாத்தான் சொல்றேனா) அழகினை பற்றிய உமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும்படி கங்கையில் கரைந்தவர்கள் அடச்சே, கங்கோபாத்யாயவின் அழகில் கரைந்தவர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில் திருவொற்றியூரில் சங்கத்தின் சார்பாக வரும் ஞாயிறன்று மது அருந்தும் போடராட்டம் நடைபெறும் என்பதை போதையுடன் தெழிவித்துக் கொழ்கிறேன்.

நாய் நக்ஸ் said...

Vimarsanathirkku.....
Nanri.....

அஞ்சா சிங்கம் said...

அவர் தனுஷை போட்டோவை “காப்பி-பேஸ்ட்” செய்து புகைப்படக்கலையில் உயரிய விருதினை வாங்கிவிடுகிறார்...............////////////////////
/////////////////////////////
காப்பி பேஸ்ட் பண்ணுவது என்ன அவ்ளோ பெரிய தப்பா?

நாளை படம் பார்க்கலாம் என்று இருக்கிறேன் .........................

Unknown said...

2nd positive review

Jayadev Das said...

\\தோழி என்றாலே அவர் பெண் தான் என புரிந்து விடுமே.. அது என்ன பெண் தோழி ? !!\\ பிரபா...!! வசமா மாட்டிக்கினியா..???? ஹா..ஹா..ஹா......

Jayadev Das said...

கேட்டு குட்டிச் சுவரைப் போய்கிட்டு இருக்கும் ஊரை, மேலும் வேகமா கெட்டுபோக செல்வராகவன் மாதிரி ஆட்கள் எடுக்கும் படங்கள் உதவும்.

Philosophy Prabhakaran said...

@ ஷைலஜா
// அப்போ பாக்கலாம் படத்தை இல்லையா? //

நான் ரிச்சாவை சொல்லலை மேடம்... அவங்களை எல்லாம் பாக்குறது ரொம்ப கஷ்டம்...

Jayadev Das said...

பிரபா, சமீபத்துல ரோஜா படம் பார்த்தேன், அதில அரவிந்த சாமி பொண்ணு பார்க்க வரும் போது இந்தியன் படத்தில வரும் டெலிபோன் மணிபோல்.... பாட்டு மெட்டு பின்னணியில இந்த படத்திலேயே ரஹ்மான் பயன்படுத்தியிருக்காறு. இந்த வீடியோ லிங்குல 3:53 நிமிஷத்தில் பாரேன்!!!!

http://www.youtube.com/watch?v=BJjE5Mmq95w

Anonymous said...

சினிமா விமர்சனத்துக்கு எதுக்குய்யா தலைப்பு. படத்தோட பேர் மட்டும் இருந்தா போதாதா. ராஸ்கோல். உங்க ஸ்டைல்ல தலைப்பு வக்கிறேன். டேக் இட். "ரிச்சாவின் மயக்கமும், தனுஷின் தயக்கமும்".

Anonymous said...

//இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் //
கேபிள், பிரபா. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டால் 'மெனக்கெட்டிருந்தால்' வார்த்தைக்கு சப்ஸ்டிட்யூட் வார்த்தையை கண்டுபிடிக்கலாம்.

Philosophy Prabhakaran said...

@ பார்வையாளன்
// தோழி என்றாலே அவர் பெண் தான் என புரிந்து விடுமே.. அது என்ன பெண் தோழி ? !!

இதை தவறாக சொல்லி இருக்கிறீர்கள்.. //

ஆமால்ல... நன்றி சார்...

// விமர்சனத்தை சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.. //

நீங்கள் யுத்தம் செய் படத்தை ப்ளு பிலிம் என்று சொன்னதை பதிவுலகம் இன்னும் மறக்கவில்லை...

Philosophy Prabhakaran said...

@ ஆரூர் முனா செந்திலு
// ரிச்சா கங்கோபாத்யாய (சரியாத்தான் சொல்றேனா) அழகினை பற்றிய உமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும்படி கங்கையில் கரைந்தவர்கள் அடச்சே, கங்கோபாத்யாயவின் அழகில் கரைந்தவர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். //

ம்ஹூம்... நமக்கு காஜல், தன்ஷிகா தான்...

Philosophy Prabhakaran said...

@ ஆரூர் முனா செந்திலு
// இல்லையெனில் திருவொற்றியூரில் சங்கத்தின் சார்பாக வரும் ஞாயிறன்று மது அருந்தும் போடராட்டம் நடைபெறும் என்பதை போதையுடன் தெழிவித்துக் கொழ்கிறேன். //

சிம்பாலிக்கா வர்ற ஞாயிற்றுக்கிழமை சரக்கடிக்க கூப்பிடுறீங்க... ஆனா எனக்கு வரும் சனி, ஞாயிறு ஆபீஸ் டூர் இருக்கிறது...

Philosophy Prabhakaran said...

@ இரவு வானம்
// 2nd positive review //

முதலாவது யாருடையது... நிறைய பேர் நடுத்தரமாக எழுதியிருந்தார்களே...

Philosophy Prabhakaran said...

@ Jayadev Das
// பிரபா, சமீபத்துல ரோஜா படம் பார்த்தேன், அதில அரவிந்த சாமி பொண்ணு பார்க்க வரும் போது இந்தியன் படத்தில வரும் டெலிபோன் மணிபோல்.... பாட்டு மெட்டு பின்னணியில இந்த படத்திலேயே ரஹ்மான் பயன்படுத்தியிருக்காறு. இந்த வீடியோ லிங்குல 3:53 நிமிஷத்தில் பாரேன்!!!! //

கண்டிப்பா பாக்குறேன் சார்... ரெண்டும் அவர் படம்தானே அப்புறமென்ன...

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
// சினிமா விமர்சனத்துக்கு எதுக்குய்யா தலைப்பு. படத்தோட பேர் மட்டும் இருந்தா போதாதா //

தலைப்பு வைக்காம எழுதுறதுக்கு நான் என்ன கேபிள் சங்கரா...? இல்ல சிவகுமாரா...?

// உங்க ஸ்டைல்ல தலைப்பு வக்கிறேன். டேக் இட். "ரிச்சாவின் மயக்கமும், தனுஷின் தயக்கமும்". //

இது என் ஸ்டைல் இல்லை... சிபி ஸ்டைல்...

Anonymous said...

Philosophy Prabhakaran said...

//@ ஆரூர் முனா செந்திலு

சிம்பாலிக்கா வர்ற ஞாயிற்றுக்கிழமை சரக்கடிக்க கூப்பிடுறீங்க.. ஆனா எனக்கு வரும் சனி, ஞாயிறு ஆபீஸ் டூர் இருக்கிறது...//

இவர் கூப்புட்டா அவரு போக மாட்டாரு. அவரு கூப்புட்ட இவரு போக மாட்டாரு. பில்லு கட்ட ஒரு இளிச்சவாயன தேடறீங்க போல. அஞ்சாசிங்கத்துக்கு வலை போடுங்க.

Anonymous said...

Philosophy Prabhakaran said...

//இது என் ஸ்டைல் இல்லை... சிபி ஸ்டைல்...//

இதெல்லாம் நீங்க எழுதலையா சார்?

அறப்பளீஸ்வரர் கோவிலும் ஆகாய கங்கையும்.

ஒரு பிறந்தநாள் விழாவும் சில சர்ச்சைகளும்.

மூணு குவாட்டர் மார்பியஸும் பிராப்ள பதிவர்களும்

மனைவி கிடைத்தாள் குறுநாவலும் காஜல் அகர்வாலும்.

ஆனந்த தொல்லையும் ஏஞ்சலினா ஜோலியும்.

Unknown said...

நான் இன்னும் பாக்கல பாஸ்! நீங்க பாசிடிவ்வா சொல்லியிருக்கிறத பார்த்தா பார்க்கலாம்னு தோணுது!
ஆனா முதல்ல 'பாலை' பார்க்கணும்!

Jayadev Das said...

@! சிவகுமார் !

நீ கலக்கு சித்தப்பு.......

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
//
இவர் கூப்புட்டா அவரு போக மாட்டாரு. அவரு கூப்புட்ட இவரு போக மாட்டாரு. பில்லு கட்ட ஒரு இளிச்சவாயன தேடறீங்க போல. அஞ்சாசிங்கத்துக்கு வலை போடுங்க. //

உங்களை தான் கூப்பிடலாம்ன்னு இருந்தேன்... சிக்க மாட்டீங்க போல...

//
இதெல்லாம் நீங்க எழுதலையா சார்?

அறப்பளீஸ்வரர் கோவிலும் ஆகாய கங்கையும்.

ஒரு பிறந்தநாள் விழாவும் சில சர்ச்சைகளும்.

மூணு குவாட்டர் மார்பியஸும் பிராப்ள பதிவர்களும்

மனைவி கிடைத்தாள் குறுநாவலும் காஜல் அகர்வாலும்.

ஆனந்த தொல்லையும் ஏஞ்சலினா ஜோலியும். //

இப்படி அநியாயமா நோட் பண்றீங்களே... Anyway, அது வேறு இது வேறு... எனக்கு படத்தைப் பற்றிய என்னுடைய கமெண்ட்டை ஒரே வார்த்தையில் சொல்ற மாதிரி தலைப்பு வேணும்... அரைமயக்கம், குடிமயக்கம் போன்ற தலைப்புகளை ஏற்கனவே வச்சிட்டாங்க...

Philosophy Prabhakaran said...

@ Jayadev Das
// நீ கலக்கு சித்தப்பு....... //

சார்... நாங்க ரெண்டு பேருமே உங்களை பெரியப்பான்னு கூப்பிடுற அளவுக்கு சின்ன பசங்க...

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
சிவா... என்னுடைய முந்தைய பதிவை படியுங்கள் ப்ளீஸ்...

ராம்குமார் - அமுதன் said...

அருமையான விமர்சனம்... மற்றுமொரு பார்வை...

Plagiarism - என்னுடைய விமர்சனத்தைக் குறிப்பிட்டு எழுதியமைக்கு நன்றி நண்பரே..

Jayadev Das said...

\\சார்... நாங்க ரெண்டு பேருமே உங்களை பெரியப்பான்னு கூப்பிடுற அளவுக்கு சின்ன பசங்க... \\ நீங்க கூடத்தான் "பத்த வச்சிட்டியே பரட்டை" ன்னு சொன்னீங்க, "அப்ப நான் என்ன பரட்டையா"ன்னு உங்களைத் திருப்பி கேட்டேனா? சினிமாவுல வர்ற வசனத்துகெல்லாம் நேரடி அர்த்தம் பாக்கப் படாது, contextual equivalence மட்டும் தான் பாக்கணும். [ உங்களை சித்தப்புன்னு சொல்ல முடியாவிட்டாலும், நிச்சயம் உங்க அப்பாவையாச்சும் அப்படிச் சொல்ல முடியும். :)] ஆனா, சிவக்குமார் உங்களை நல்ல கும்முறாரு....ஹா...ஹா...ஹா...

டிராகன் said...

மயக்கம் என்ன - A BEAUTIFUL MIND

தனுஷ் - RUSSEL CROWE

ரிச்சா - JENNIFER கனோல்லி

IPC அவார்ட் - NOBEL

PHOTOGRAPHY - MATHEMATICS

நடுவுல மூளை கோளாறு - அதுல ஆரம்பத்துலேயே

சுந்தர் , விந்தியா அண்ட் FREINDS - CLASS MATE

செல்வராகவன் - RON HOWARD

அனுஷ்யா said...

நானும் facebookல இதே type விமர்சனம்தான் எழுதியிருந்தேன்...முக்கியமா அந்த dialog and its calculated pause...
also the sharing of flavour between this movie and 'a beautiful mind'

Unknown said...

மயக்கிய விமர்சனம்.. அருமை

அனுஷ்யா said...

real review...well balanced...
தனுஷ் மாதிரி இந்த படமும் பாக்க பாக்க புடிக்கும் எல்லார்க்கும்...

Anonymous said...

விமர்சனம் அருமை...சரி பார்த்து தொலைவோம்...-:)

Thooral said...
This comment has been removed by the author.
Thooral said...

ஒரு படைப்பாளியின் வாழ்க்கை பயணமாக இந்த படம் இருப்பதால் என்னவோ
நீ சொன்ன அதனை குறைகளையும் மீறி இந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கிறது..

கார்த்தி said...

// பொன்னுக்கு வீங்கி” வந்தது மாதிரி இருக்கிறார்.
இதுதான் சரியான உவமை ரிச்சாவுக்கு!!
எனக்கு படம்பிடிச்சிருந்திச்சு! ஆன இன்னும் படத்தை வேகமாக்கியிருக்கலாமோ எண்ணு தோணுது!

ananthu said...

நேர்மையான விமர்சனம்....எனது பதிவில் போராளி - புதிய போர் பழைய களம் ...http://pesalamblogalam.blogspot.com/2011/12/blog-post.html

Unknown said...

நல்ல கலக்கல் விமர்சனம்.