20 February 2012

பிரபா ஒயின்ஷாப் – 20022012


அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஒத்த வார்த்தை
தேனாம்பேட்டை சிக்னல் அருகே வீற்றிருக்கும் ஆனந்தாவில் தான் தினமும் இரவு உணவு. பீக் அவர்ஸில் கூட்டம் அதிகம் இருந்ததால் ஏற்கனவே இருவர் அமர்ந்திருந்த டேபிளில் மூன்றாவதாக அமர்ந்தேன். என் எதிரே அமர்ந்திருந்தவர் “ஸ்லர்ப்...! ஸ்லர்ப்...!” என சவிதா பாபி ப்ளோ ஜாப் செய்யும் சத்தத்தோடு சப்பாத்தி குருமா சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அவர் ஒவ்வொரு வாய் சாப்பிடும்போதும் யாரோ என் காதில் காறித்துப்புவது போல இருந்தது. நான் இட்லியை சாம்பார் கின்னத்திற்குள் முக்கி குளிப்பாட்டுவதை (குஷ்பூ இட்லியாச்சே...!) பார்த்திருந்தால் அவரும் கடுப்பாகியிருப்பார். சர்வர் வந்ததும் சாப்பாத்தி சாப் அவரிடம் இந்தியில் ஏதோ கேட்டார். இவர் பேசுவது அவருக்கும் அவர் பேசுவது இவருக்கும் புரியாமல் ஒரே காமெடி. ஃபாஸ்ட் புட்களிலும், பஞ்சாபி தாபாக்களிலும் இந்திக்காரனுங்க கிட்ட நம்மாளுங்க படுற பாட்டை மனதில் வைத்துக்கொண்டு பழிதீர்த்துக் கொண்டிருந்தார் சர்வர். அவர்களுடைய தகவல் பரிமாற்றத்தை ரசித்துக்கொண்டிருந்தவன் என்னுடைய அடுத்த ஆர்டராக “ஏக் சோழா பூரி...!” என்றேன். கொஞ்ச நேரம் ஹிந்தி கேட்டதில் வாய் தவறி “ஏக்” என்று வந்துவிட்டது. ஹிந்தியில் எனக்கு அந்த ஒரு வார்த்தையை தவிர வேறு எதுவும் தெரியாது. உடனே ஹிந்திவாலாக்கள் எனக்கு ஹிந்தி தெரியும் என்று நினைத்துக்கொண்டு என்னிடம் லபோ திபோ என கத்த ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களை பார்த்து “குச் குச் ஓத்தா ஐ...!” என்று திட்டிவிட்டு கிளம்பிவந்தேன்.

மின்வெட்டு
ஃபேஸ்புக், ட்விட்டர் இன்னபிற மீடியாக்களை தொடர்வதில் இருந்து தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது என்று புரிந்துக்கொள்ள முடிகிறது. ஒருநாளைக்கு ஆறு மணிநேரம், எட்டு மணிநேரம் என்றெல்லாம் மின்சாரம் தடைபடுவதாக பேசிக்கொள்கிறார்கள். இன்னும் சில கிராமங்களில் கரண்ட் சூப்பர்ஸ்டார் மாதிரி எப்ப வரும் எப்படி வரும்ன்னு தெரியலையாம், வரவேண்டிய நேரத்துல கரெக்டா வந்தும் தொலைக்க மாட்டேங்குதாம். உங்கள் அனைவருக்கும் ஒரு ஸ்டொமக் பர்னிங் செய்தியை சொல்லுகிறேன். எங்கள் பகுதியில் தினமும் ஒருமணிநேரம் மட்டுமே மின்சாரம் தடைபடுகிறது. சென்னையின் பல இடங்களில் இப்படித்தான். (திட்டுங்க...! ஒட்டுமொத்த சென்னையையும் கரிச்சுக் கொட்டுங்க...!)

மன்கட் அவுட்
தமிழ், கன்னட சினிமா நட்சத்திரங்கள் விளையாடிய CCL கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியை நிறைய பேர் பார்த்திருப்பீர்கள். பரபரப்பான ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் பெளலர் விக்ராந்த் பெளலிங் போடுவதுபோல பாவ்லா காட்டி அவசரக்குடுக்கை ரன்னரை காலியாக்கிவிட்டார். ரெண்டு அணி வீரர்களும் கல்லி கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள் போல சண்டை போட்டுக்கொண்டார்கள். தொடர் முழுக்க கட்டிக்காப்பாற்றிய ப்ரோபஷனலிசம் காற்றில் பறந்துவிட்டது.

இப்போது சர்ச்சைக்குரிய அந்த ரன் அவுட்டுக்கு வருவோம். In the year of 1947, இந்தியாவின் பழம்பெரும் கிரிக்கெட்டர் வினு மன்கட் ஆஸ்திரேலியா XI அணியுடனான ஒரு பயிற்சி ஆட்டத்தில் Bill Brown என்ற வீரரை இந்தமாதிரி அவுட் ஆக்கினார். அதற்கடுத்து ஆஸ்திரேலியாவுடன் நடந்த சர்வதேச டெஸ்ட் போட்டியில் Bill Brown சொல்ல சொல்ல கேட்காம படிதாண்ட மறுபடியும் அதே முறையில் அவுட் ஆக்கினார். அந்த காலத்தில் இது கிரிக்கெட் உலகில் பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கு. இது ரன் அவுட் தான் என்றாலும் வினு மன்கட் ஆரம்பித்துவிட்டதால் மன்கட் அவுட் என்றும் அழைக்கப்படுகிறது. (ஸ்கூப் ஷாட்டுக்கு தில் ஸ்கூப் என்று பெயர் வந்தது மாதிரி). அதற்கடுத்து அவ்வப்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மன்கட் அவுட் நடந்தேறினாலும் கிரிக்கெட்டில் இது ஒரு கையாலாகத்தனம் என்று கருதப்பட்டிருக்கிறது. நாளடைவில் கிரிக்கெட் விதிமுறைகளில் இருந்து “மன்கட் அவுட்” நீக்கப்பட்டாலும் இன்னமும் கிரிக்கெட் சட்டத்தில் உள்ள ஓட்டைகளின்படி பெளலர் மன்கட் அவுட் செய்யலாம். கடைசியாக 1992ம் ஆண்டு நம்ம கபில் தேவ் தென் ஆப்பிரிக்காவின் பீட்டர் கிறிஸ்டனை மன்கட் பண்ணியிருக்கார். மங்காத்தாடா...!

ஜொள்ளு:
யாரென்று அறியாமல்... பெயர் கூட அறியாமல்... இவளோடு ஒருசொந்தம் உருவானதே...!
ட்வீட் எடு கொண்டாடு:
மொட்டை மாடியின் சுதந்திரம் அதை விட சற்று உயரமான மொட்டைமாடியால் அபகரிக்கப் படுகிறது #அவதானிப்பு.

மொக்கைய விட கொடுமையான விசயங்களும் உலகத்துல இருக்கு! அந்த மொக்கைக்கு சிரிக்குறது..!!

கடவுள் பாரபட்சமில்லாதவர்தான்.... சிறப்பு தரிசன சீட்டு பெற்றவருக்கும் சிலையாகவேதான் காட்சி அளிக்கிறார்

செக்ஸ் டார்ச்சருக்கும் சேல்ஸ் டார்ச்சருக்கும் உள்ள வேற்றுமை பிசிக்கல் டேமேஜ் மட்டுந்தான். #ஹெவியா பாதிக்கப்பட்டவன்

பெண்களின் ஒரு கேள்விக்கு மூன்று விதமான பதில்களை ஆண் வைத்திருக்கிறான்..பெண் எதிர்பார்ப்பதோ நான்காவது பதிலை #முடியல

வானரக்கூட்டம்:
சாகசன் – நகைச்சுவையை விரும்பும் சாதாரண வாசகன் என்ற பெயரில் தமிழ் டிவிட்டர்கள் சிலர் இணைந்து எழுதிவரும் வலைப்பூ. மின்சாரம் - மனைவி டூ காதலி என்ற இடுகையின் மூலமாக இவருடைய வலைப்பூவின் அறிமுகம் கிடைத்தது. அடுத்து படித்தது இலக்கிய உலகின் இளையதளபதி சாருவின் எக்சைல் விமர்சனம். இந்தப் பதிவில் பிரபல பதிவர் ஒருவர் பயங்கர ஊமைக்குத்து வாங்கியிருக்கிறார் பாருங்கள். அணில் ரசிகர்கள் எழுதிய நண்பன் விமர்சனம். இவங்க மட்டும் இல்லைன்னா டிவிட்டரே இல்லையாம்.

கேபிள் vs காஜல்
புத்தகக் கண்காட்சியில் வைத்து கேபிள் இந்தப்பாடலுக்கு டான்ஸ் ஆடிக்காட்ட எனக்கு அப்போதே ஆர்வம் தொற்றிக்கொண்டது. பின்னே, கேபிள் ஆடினாலே கிளுகிளுப்பாக இருக்கிறதே, காஜல் ஆடினால் எப்படி இருக்கும்.

யூடியூபில் சல்லடை போட்டு தேடியும் இந்த பாடாவதி வீடியோதான் கிடைத்தது. காஜல் திரையில் தோன்றியதும் கிர்ர்ர்ர்ர்ர்ருன்னு இருக்கு. அப்புறம், மகேஷ் பாபு டான்ஸ் சான்ஸே இல்லை கவுண்டமணியே கடன் வாங்கணும்...!

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்
முதல் மரியாதை படத்தில் சிவாஜி நடித்த ரோலில் முதலில் நடிக்க தேர்வானவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

விஜயகாந்த் நடித்த “இது எங்க பூமி” படத்திற்கு முதலில் சூட்டப்பட்ட பெயர் விடுதலைப்புலிகள்.

லக்ஸ் விளம்பரத்தில் நீண்ட காலம் தோன்றிய ஒரே தமிழ் நடிகை ஜெயலலிதா.

இவை போன்ற அரிய சினிமா செய்திகளையும் பழைய புகைப்படங்களையும் தருகிறது தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் என்ற ஃபேஸ்புக் பக்கம்.

கோச்சடையான் பஞ்ச்
கண்ணா...! பெரியவங்க கிட்ட ‘ஹம்பிளா’ இரு... குழந்தைகள் நேசிக்க ‘அங்கிளா’ இரு... வாழ்க்கையில் உயர ‘சிம்பிளா’ இரு...!
(குமுதத்தில் தஞ்சை ஆதி சொன்னது)

ஒரேயொரு இலவசக்கொலை...!
சேத்தன் பகத்தின் One Night @ The Call Center படித்துக் கொண்டிருக்கும்போது இப்படியொரு வாக்கியத்தை கடந்து வந்தேன். அதாவது நமக்கு விருப்பமான... அதான் நமக்கு விருப்பமே இல்லாத ஒருவரை தேர்ந்தெடுத்து அவரை கொலை செய்துக்கொள்ளலாம். நம்முடைய நாட்டின் சட்டதிட்டங்கள் அதற்கு இடம் தருகிறது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் யாரை கொல்லுவீர்கள்...???

இந்தமாதிரி மொக்கை பதிவெழுதுற என்னை மட்டும் கொன்னுடாதீங்க...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

61 comments:

Anonymous said...

சூப்பரு. ஜெ. போட்டோவை நான் இப்பதான் பதிவுல போடலாமான்னு யோசிச்சுட்டு இருந்தேன். நீங்க போட்டுட்டீங்க!

மாப்பிள்ளை - நாட்டுப்புற பாலியல் கதை (18+)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பதிவு போடுற நேரமாய்யா இது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////என் எதிரே அமர்ந்திருந்தவர் “ஸ்லர்ப்...! ஸ்லர்ப்...!” என சவிதா பாபி ப்ளோ ஜாப் செய்யும் சத்தத்தோடு சப்பாத்தி குருமா சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.////

நல்ல வெளக்கம்............!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அவர் ஒவ்வொரு வாய் சாப்பிடும்போதும் யாரோ என் காதில் காறித்துப்புவது போல இருந்தது./////

சவீதா பாபிய நெனச்சதுக்கப்புறமுமா....?

Philosophy Prabhakaran said...

@ Chilled Beers
// சூப்பரு. ஜெ. போட்டோவை நான் இப்பதான் பதிவுல போடலாமான்னு யோசிச்சுட்டு இருந்தேன். நீங்க போட்டுட்டீங்க! //

ம்ம்ம்... இந்த வாரம் பூரா தமிழ்நாட்டுல அம்மா பேனர்ஸ் தான்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// எனக்கு அந்த ஒரு வார்த்தையை தவிர வேறு எதுவும் தெரியாது. உடனே ஹிந்திவாலாக்கள் எனக்கு ஹிந்தி தெரியும் என்று நினைத்துக்கொண்டு என்னிடம் லபோ திபோ என கத்த ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களை பார்த்து “குச் குச் ஓத்தா ஐ...!” என்று திட்டிவிட்டு கிளம்பிவந்தேன்.
//////

அடடா நல்ல சான்ச மிஸ் பண்ணிட்டீங்களே? ஏக் காவுன் மே.... ஏக் கிசான்..... ரகதாதா......... ன்னு ஆரம்பிச்சி வெளுத்து வாங்கி இருக்கலாம்....

தமிழ்வாசி பிரகாஷ் said...

பிரபா,
மின் வெட்டுலதமிழ்நாடே வயிறு எறியுது.... அப்போ சென்னை தமிழ்நாடு இல்லையா?

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// பதிவு போடுற நேரமாய்யா இது? //

சூப்பர் ஸ்டாரோடு மோதும் பவர் ஸ்டார் போல ஒரு பிரபல பதிவரோடு முட்டு கொடுக்குறேன்... அதான் இந்த நேரம்...

// நல்ல வெளக்கம்............! //

இது ப்ரின்ஸ் ஸ்டைல்...

// சவீதா பாபிய நெனச்சதுக்கப்புறமுமா....? //

சாப்பிட்டது (நல்லவேளை எழுத்துப்பிழை ஆகலை) ஆண்ட்டியா இருந்தா அப்படி நினைச்சிருக்கலாம்...

Philosophy Prabhakaran said...

@ தமிழ்வாசி பிரகாஷ்
// பிரபா,
மின் வெட்டுலதமிழ்நாடே வயிறு எறியுது.... அப்போ சென்னை தமிழ்நாடு இல்லையா? //

உங்க ஆதங்கம் எனக்கு புரியுது பிரகாஷ்... உங்க சோகத்துல பங்கெடுத்துக்குறதுக்காக நாங்களே கரண்ட் வயரை பிடிங்கி விட்டுக்கவா முடியும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சூப்பர் ஸ்டாரோடு மோதும் பவர் ஸ்டார் போல ஒரு பிரபல பதிவரோடு முட்டு கொடுக்குறேன்... அதான் இந்த நேரம்.../////

அடடடடா..... இந்த பிரபல பதிவர்கள் தொல்ல தாங்க முடிலடா சாமி......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அதான் நமக்கு விருப்பமே இல்லாத ஒருவரை தேர்ந்தெடுத்து அவரை கொலை செய்துக்கொள்ளலாம். நம்முடைய நாட்டின் சட்டதிட்டங்கள் அதற்கு இடம் தருகிறது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் யாரை கொல்லுவீர்கள்...???/////

மரண அவஸ்தையில் கஷ்டப்பட்டுட்டு கிடக்கிற குணப்படுத்த முடியாத நோயாளிகளை....

pichaikaaran said...

One Night @ The Call Center படித்துக் கொண்டிருக்கும்போது'

துரை இங்லீஷ் புத்தகமெல்லாம் படிக்குது.. நடக்கட்டும், நடக்கட்டும்

பால கணேஷ் said...

என்னது... கேபிள் ஆடிக் காட்டினாரா? அடடா... நல்ல (காமெடி) சீனை மிஸ் பண்ணிட்டனே... ‘ஸ்லாப் ஸ்லாப் னு சத்தம்’, ‘மகேஷ்கிட்ட கவுண்டமணி பிச்சை வாங்கணும்’ இப்படி இயல்பான உங்க நையாண்டி பன்ச்கள் அருமை!

சாகசன் said...

@Philosophy Prabhakaran

தல , என் பிலாக் பக்கமும் போய் பாத்ததுக்கு ரொம்ப நன்றி . பிரபல பதிவர் என் பிலாக்க விமர்சனம் பண்ணது எனக்கு கொஞ்சம்(ஹிஹிஹி) விளம்பரம் தானுங்கோவ் .

இன்னொரு மேட்டரு தல , இப்போதைக்கு நான் ஒருத்தன் தான் எழுதிகிட்டு இருக்கன் . ஒரே ஒரு பதிவு மட்டும் நண்பர் எழுதுனாரு

திருப்பியும் தேங்க்ஸ் தல !!! :)))

சாகசன் said...

நம்ம இப்ப பதிவு விமர்சனத்துக்கு போவோம் !!!

முதல் பாராவுக்கு நோ கமெண்ட்ஸ்

எங்கள் பகுதியில் தினமும் ஒருமணிநேரம் //

உங்கள் ஏரியாவில் கூடிய விரைவில் அணு உலை ஒன்றை திறக்க வலியுறுத்துகிறேன்

கேபிள் ஆடினாலே கிளுகிளுப்பாக இருக்கிறதே //

அவர் ஆடிய வீடியோவை கூடிய விரைவில் அப்லோடு செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்.

லக்ஸ் விளம்பரத்தில் நீண்ட காலம் தோன்றிய ஒரே தமிழ் நடிகை ஜெயலலிதா. //

அதனால தான் இன்னமும் லக்ஸ் சோப் ஊருக்குள்ள உசுரோட இருக்கு போல

நீங்கள் யாரை கொல்லுவீர்கள் //

எங்க ஊருல பவரு படத்த ரிலீசு பண்ணாத பாவிய தான்.

துரைடேனியல் said...

Intha vaara sarakku la pothai Nalla Nachunu than earuthu. Pattaiya kelappunga.

Unknown said...

தம்பி பிரபா நான் ஆடு இல்லை யானை உருவத்துக்கு தகுந்த மாதிரி வெட்டுங்கப்பா...!

Unknown said...

என்னது சென்னையில ஒருமணி நேரம்தான் மின்வெட்டா...?

“குச் குச் ஓத்தா ஐ...!” ஹிஹி

Unknown said...

இந்த பாட்டுக்கு கேபிள் ஆடினாரா?

பில்டிங் ஸ்ட்ராங்தானே!அவ்வ்வ்

முத்தரசு said...

ஒத்த வார்த்தை....சர்தான்

முத்தரசு said...

//தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்//

ம்..மா.. புதுசு கண்ணா புதுசு

முத்தரசு said...

//மின்வெட்டு//

எந்த ஏரியா? பீசை புடுன்குறோம்.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்து தகவலும் அருமை சார் !

சமுத்ரா said...

ok...

NKS.ஹாஜா மைதீன் said...

#பேஸ்புக், ட்விட்டர் இன்னபிற மீடியாக்களை தொடர்வதில் இருந்து தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது என்று புரிந்துக்கொள்ள முடிகிறது.#

நண்பா மின்வெட்டு தலையை விரித்து பேயாட்டம் ஆடிக்கொண்டு இருக்கிறது...

Anonymous said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
பதிவு போடுற நேரமாய்யா இது?//

அதானே..ரொம்ப பாஸ்ட்.

Anonymous said...

//கணேஷ் said...
என்னது... கேபிள் ஆடிக் காட்டினாரா? அடடா... நல்ல (காமெடி) சீனை மிஸ் பண்ணிட்டனே...//

என்ன சார்.. கவர்ச்சி சீனை காமடின்னு சொல்றீங்க எல்லாரும்..

Anonymous said...

//NKS.ஹாஜா மைதீன் said...
நண்பா மின்வெட்டு தலையை விரித்து பேயாட்டம் ஆடிக்கொண்டு இருக்கிறது...//

ஹாஜா..அங்க போயி எதுக்கு எட்டி பாத்தீங்க..?

...αηαη∂.... said...

////என் எதிரே அமர்ந்திருந்தவர் “ஸ்லர்ப்...! ஸ்லர்ப்...!” என சவிதா பாபி ப்ளோ ஜாப் செய்யும் சத்தத்தோடு சப்பாத்தி குருமா சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.////

என்ன ஒரு உவமை.., இப்போ புது எபிசோட்லாம் சரியா கிடைக்க மாட்டேங்குது...

//நீங்கள் கெட்டவார்த்தையில் திட்டினாலும் பரவாயில்லை ஆனால் ஒரே பின்னூட்டத்தை 100, 200 முறை காப்பி பேஸ்ட் செய்து தொல்லை கொடுக்காதீர்கள்//

அவ்ளோ பிரச்சனை பண்ணுறாங்களா ??

N.H. Narasimma Prasad said...

இந்த வார 'சரக்கு' அருமை பிரபா. நான் ஜனவரி மாதம் சென்னை வந்திருந்தபோது கூட, எங்க ஏரியாவில் (வில்லிவாக்கம்) ஒரு மணி நேரம் தான் பவர் கட் செய்கிறார்கள்.

ஜேகே said...

//முதல் மரியாதை படத்தில் சிவாஜி நடித்த ரோலில் முதலில் நடிக்க தேர்வானவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.//

அந்த கடுப்புல தான் ராதாவ ஹீரோயினா போட்டு சிகரம் எடுத்தாரோ!!! எஸ்பிபி நடிச்சிருந்தா வித்தியாசாமா இருந்திருக்கும் இல்ல?

யார் அந்த பொண்ணு பாஸ்! எமி ஜாக்சனுக்கு வர வேண்டிய பீலிங் எல்லாம் இந்த பொண்ணுக்கா? ஒங்க ரசனையே தனி பாஸ்!

Jayadev Das said...

\\கொஞ்ச நேரம் ஹிந்தி கேட்டதில் வாய் தவறி “ஏக்” என்று வந்துவிட்டது. ஹிந்தியில் எனக்கு அந்த ஒரு வார்த்தையை தவிர வேறு எதுவும் தெரியாது.\\ சூப்பர் மாப்பு..

\\கரண்ட் சூப்பர்ஸ்டார் மாதிரி எப்ப வரும் எப்படி வரும்ன்னு தெரியலையாம், வரவேண்டிய நேரத்துல கரெக்டா வந்தும் தொலைக்க மாட்டேங்குதாம்.\\ மணிரத்னம் படங்களில் எல்லாவற்றிலும் ஒரு கல்யாண சீன இருக்குமாம், அப்புறம் ஒரு ரயில் சீனாச்சும் இருக்குமாம். உங்க பதிவுல, சூப்பர் ஸ்டாரை காலை வாரும் வரிகள் ஒன்னாச்சும் வந்திடுதே, அது எப்படி மாப்பு!!

\\ஜொள்ளு\\ நல்லாயிருக்குது மாப்பு.

\\தேர்வானவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.\\ அடக்கொடுமையே!! இந்த டேஞ்சர்ல இருந்து நாம தப்பிச்சது எப்படியாம் மாப்பு?

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

unga jollum, antha pen still-um enakku rompa pitichchirunthathu...

Riyas said...

அந்த ரன் அவுட் உண்மையில் கையாலாகத்தனம்தான்.. சர்வதேச போட்டிகளில்கூட அவ்வாறான சந்தர்ப்பங்களை பந்துவீச்சாளர் கவனித்தாலும் இப்போதெல்லாம் ரன் அவுட் செய்வதில்லை..அப்பிடியிர்க்க விக்ராந்த செய்தது ரொம்ப ஓவர்..))

மறற விஷயங்கள் எல்லாம் சூப்பர் பிரபா..
சாப்பிடுற நேரத்திலயுமா சவிதா பாபி நினைவுக்கு வர்றா,,

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// மரண அவஸ்தையில் கஷ்டப்பட்டுட்டு கிடக்கிற குணப்படுத்த முடியாத நோயாளிகளை.... //

Contoversial Issue... நான் உள்ளே வரலை...

Philosophy Prabhakaran said...

@ பார்வையாளன்
// துரை இங்லீஷ் புத்தகமெல்லாம் படிக்குது.. நடக்கட்டும், நடக்கட்டும் //

சேத்தன் பகத் நாவல்கள் படிக்க குறைந்தபட்ச ஆங்கில அறிவு இருந்தாலே போதும்...

Philosophy Prabhakaran said...

@ கணேஷ்
// என்னது... கேபிள் ஆடிக் காட்டினாரா? அடடா... நல்ல (காமெடி) சீனை மிஸ் பண்ணிட்டனே... //

அது நீங்க போனதுக்கு அப்புறம் லேட் நைட்டுல நடந்த சீன்...

// இயல்பான உங்க நையாண்டி பன்ச்கள் அருமை! //

நன்றி...

Philosophy Prabhakaran said...

@ சாகசன்
// இன்னொரு மேட்டரு தல , இப்போதைக்கு நான் ஒருத்தன் தான் எழுதிகிட்டு இருக்கன் . ஒரே ஒரு பதிவு மட்டும் நண்பர் எழுதுனாரு //

அப்படியா...? ஒரு பதிவுல g4guna என்று போட்டிருந்தது... நண்பன் விமர்சனத்துல By அணில் ரசிகர்கள்ன்னு இருந்தது... வலைப்பூவோட தலைப்பே வானரக்கூட்டம்ன்னு இருந்தது... அதனால குழம்பிட்டேன்...

Philosophy Prabhakaran said...

@ சாகசன்
// அவர் ஆடிய வீடியோவை கூடிய விரைவில் அப்லோடு செய்யுமாறு கேட்டுகொள்கிறேன். //

வீடியோ எடுக்கல... ஆனா நேயர் விருப்பம் கேட்டா நிச்சயம் இன்னொரு முறை ஆடிக்காட்டுவார்...

Philosophy Prabhakaran said...

@ துரைடேனியல்
// Intha vaara sarakku la pothai Nalla Nachunu than earuthu. Pattaiya kelappunga. //

நன்றி தல...

Philosophy Prabhakaran said...

@ வீடு K.S.சுரேஸ்குமார்
// தம்பி பிரபா நான் ஆடு இல்லை யானை உருவத்துக்கு தகுந்த மாதிரி வெட்டுங்கப்பா...! //

என்னது யானையா...? உங்களுக்கு பட்டையை போடுறதா நாமத்தை போடுறதான்னு ஒரு பஞ்சாயத்தை நடத்தனுமே...

Philosophy Prabhakaran said...

@ மனசாட்சி
// எந்த ஏரியா? பீசை புடுன்குறோம். //

வந்தாரை வாழ வைக்கும் வடசென்னை...

Philosophy Prabhakaran said...

@ திண்டுக்கல் தனபாலன்
// அனைத்து தகவலும் அருமை சார் ! //

நன்றி சார்...

Philosophy Prabhakaran said...

@ சமுத்ரா
// ok... //

நன்றி தல...

Philosophy Prabhakaran said...

@ NKS.ஹாஜா மைதீன்
//
நண்பா மின்வெட்டு தலையை விரித்து பேயாட்டம் ஆடிக்கொண்டு இருக்கிறது... //

மின்வெட்டு மட்டுமா பேயாட்டம் ஆடுது...

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
// அதானே..ரொம்ப பாஸ்ட். //

வெள்ளிக்கிழமை நைட்டே பாதி டைப்பியாச்சு....

Philosophy Prabhakaran said...

@ ...αηαη∂...
// என்ன ஒரு உவமை.., இப்போ புது எபிசோட்லாம் சரியா கிடைக்க மாட்டேங்குது... //

அப்படியா...? என்னிடம் 1 to 28 எபிசோடுகள் இருக்கின்றன... 23, 27 மட்டும் மிஸ்ஸிங்... Savita Bhabhi in goa 4 பாகங்களும் உள்ளன...

// அவ்ளோ பிரச்சனை பண்ணுறாங்களா ?? //

இப்ப இல்லை...

Philosophy Prabhakaran said...

@ N.H.பிரசாத்
// இந்த வார 'சரக்கு' அருமை பிரபா. நான் ஜனவரி மாதம் சென்னை வந்திருந்தபோது கூட, எங்க ஏரியாவில் (வில்லிவாக்கம்) ஒரு மணி நேரம் தான் பவர் கட் செய்கிறார்கள். //

யோவ்... சென்னை பக்கம் வந்தா தகவல் சொல்லுங்கய்யா...

Philosophy Prabhakaran said...

@ ஜேகே
// எஸ்பிபி நடிச்சிருந்தா வித்தியாசாமா இருந்திருக்கும் இல்ல? //

கெத்து மிஸ் ஆகியிருக்கும்...

//
யார் அந்த பொண்ணு பாஸ்! எமி ஜாக்சனுக்கு வர வேண்டிய பீலிங் எல்லாம் இந்த பொண்ணுக்கா? ஒங்க ரசனையே தனி பாஸ்! //

ஆமாம்... எனக்கு எமியை விட இவரைத்தான் அதிகம் பிடித்திருக்கிறது...

Philosophy Prabhakaran said...

@ Jayadev Das
// மணிரத்னம் படங்களில் எல்லாவற்றிலும் ஒரு கல்யாண சீன இருக்குமாம், அப்புறம் ஒரு ரயில் சீனாச்சும் இருக்குமாம். உங்க பதிவுல, சூப்பர் ஸ்டாரை காலை வாரும் வரிகள் ஒன்னாச்சும் வந்திடுதே, அது எப்படி மாப்பு!! //

ஹி... ஹி... சிரிச்சிட்டே இருக்கேன்...

Philosophy Prabhakaran said...

@ எஸ்.எஸ்.பூங்கதிர்
// unga jollum, antha pen still-um enakku rompa pitichchirunthathu... //

நன்றி பூங்கதிர்... நீங்க ஒரு சமாச்சாரமான ஆள்தான்...

Philosophy Prabhakaran said...

@ Riyas
// அந்த ரன் அவுட் உண்மையில் கையாலாகத்தனம்தான்.. சர்வதேச போட்டிகளில்கூட அவ்வாறான சந்தர்ப்பங்களை பந்துவீச்சாளர் கவனித்தாலும் இப்போதெல்லாம் ரன் அவுட் செய்வதில்லை..அப்பிடியிர்க்க விக்ராந்த செய்தது ரொம்ப ஓவர்..)) //

ஆமாம் டூ மச் தான்... ஃபிரென்ட்லியாக நடந்த ஆட்டத்தில் அப்படி செய்திருக்கக்கூடாது...

cheena (சீனா) said...

பிரபா - நல்லாவே இருக்கு அத்தனையும் நல்லா இருக்கு - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

Anonymous said...

vaaltthukkal

Anonymous said...

vaalltthukkal

Anonymous said...

ஆரம்ப காலப்பகுதியில்
எஸ்.பி.பாலசுப்ரமனியாமுடன் பாரதிராஜா நண்பன் என்ற வட்டதிக்குள் இருந்தபோது சினிமாவிற்க்கு பாரதிராஜாவை அப்போது எம்.எஸ்.வி.இசையில் பாடி பிரபலமான எஸ்.பி.பி.பலரிடம் அறிமுகப்படித்தினார். பின் பாரதிராஜாவின் ஊர் காரரான இளையராஜாவையும் தன் இசைக்குழுவில் எஸ்.பி.பி. இணைத்து
பல உதவி செய்தார்
அந்த நன்றிட்க்காக பின்னாளில்
பாரதிராஜா முதல் மரியாதை படத்தில் நடிக்க எஸ்.பி.பி யை
வேண்டினார்
அப்போது எஸ்.பி.பி.இந்தியில் உள்ட்பட பல மொழிகளில் பிசியாக
பாடிக்கொண்டிருந்தார்
அவருக்கு பாடுவதுக்குகூட நேரம் இல்லாதபடியால் இப்போது நடிக்க முடியாது என்றார் .பின்
பாரதிராஜா சிவாஜியை வைத்துமுதல் மரியாதை படத்தை
எடுத்தார்.
பாஸ்கர்

Anonymous said...

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுவதில் மட்டும் இனிமையானவரள்ளர்
நல்ல நட்புடன் பழகுவதிலும் இனிமையானவர்
கமலே பலதடவை எஸ்.பி.பி.யை பற்றி
சொன்னது
பாடகர் மனோவிட்க்கும் எஸ்.பி.பி.பல உதவிகள் செய்திருக்கிறார் .பாடகர் மனோ பல தடவை இது பற்றி சொல்லி இருக்கிறார்

சதீஸ் மோகன்

Anonymous said...

உலக சாதனைப் பாடகன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ற்காக அண்மையில் மனோ தன் நன்றியை தெரிவிக்குகுமுகமாக எஸ்.பி.பி.இற்கு ஒரு விழா எடுத்தது அசத்தினார்
மனோ எஸ்.பி.பி.பற்றி சொல்லும் போது - பாசமுள்ள அண்ணன் எஸ்.பி.பி. எனும் போது மனோவின் கண்கள்
கலங்குவதை பார்க்கல்லாம் .பல தடவை டி .வி நிகழ்ச்சியில் அவதானித்து இருக்கிறேன் .
என்றும் இர்பான்

Anonymous said...

, அப்போது எழுபதுகளில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் துள்ளும் இளம் குரலாக தமிழ் -தெலுங்கு கன்னட மொழிகளில் புகழ் பெற்ற பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் தன் சொந்த இசை குழு வைத்து மாலை வேலைகளில் மேடை நிகழ்ச்சி நடத்தி வந்தார் (எஸ்.பி.பி ஒரு இஞ்சினியர்).அக்கால கட்டத்தில் கல்லூரி மாணவர்கள் -,மாணவிகள்,எஸ்.பி. பாலசுப்ரமணியம் இளம் குரல் மீது ஈர்ர்ப்பு கொண்டு மேடை இசை நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் கூட்டம் அலைமோதும். அந்த சந்தர்பத்தில்தான் அப்போது எஸ்.பி.பி.இற்கு நண்பனாக இருந்த பாரதிராஜா தன் ஊரை சேர்த்த இளையராஜாவை எஸ்.பி.பி.இற்கு அறிமுகப்படித்தினார்
அப்போது எஸ்.பி.பி.இளையராஜாவை தன் குழுவில் ஹார்மோனியம் வாசிப்பதுக்கு கேட்டுக்கொள்ள .இளையராஜாவும் எஸ்.பி.பி.இசை குழுவில் பனி செய்தார். அப்போது கங்கை அமரனும் ,மலேசிய வாசுதேவனும் எஸ்.பி.பி. இசை குழுவில் பனி செய்தார்கள்
.பின் சில காலம் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இளையராஜாவின் அபார திறமை கண்டு எல்லா இசை அமைப்பாளர்களிடம் சென்று இளையரஜாவிட்கு வாய்ப்பு கொடுக்கும்படி வேண்டினார் .பின் இளையராஜா எம்.எஸ் வி.யுட்பட பலரிடம் வேலை செய்தார் .இளையராஜா,எஸ்.பி.பாலசுப்ரமணியம்,கங்கை அமரன் .மலேசிய வாசு தேவன் ,பாரதிராஜா எல்லோரும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள்.
கங்கை அமரனின் மனைவியும் அவரது தோழிகளும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் யின் பரம ரசிகை -.எஸ்.பி.பி யின் இசைநிகழ்ச்சி எங்கு இருக்குமோ அங்கு கங்கை அமரனின் மனைவி யுட்பட அவரது தோழிகள் சேந்து செல்வது வழக்கம் . அங்குதான் கங்கை அமரன் தன் மனைவியை சந்தித்தார் என்று இது பற்றி கங்கை அமரன் சொல்லியிருந்தார்.
.
அக்காலங்களில் நான் படித்த கல்லூரிகளில் எல்லா ஆண் பெண்களும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற பாடகனின் இனிமையான இளம் குரலுக்கு அடிமை . அந்த கல்லுரி காலம் மறக்கமுடியமா என்ன ?
எஸ்.பி.பி.யின் இளமையான குரலில் அன்றைய பாடல்கள்


இயற்கை எனும் இளையகன்னி.........
பொன்னென்றும் பூ என்றும் .................
பொட்டு வைத்த முகமோ .................
ஓ மைனா .....ஓடும் புள்ளி..............
அன்பு வந்தது எனை ..........
தங்க தொட்டில் பட்டு மெத்தை தாய். வீட்டிலே .......
இறைவன் என்று ...ஒரு கவிஞன் .....
எங்க வீட்டில் தங்க .........
மங்கையரில் மகராணி........
மாதமோ ஆவணி............
காலம் ஏனோக்கொரு பாடேளுதும் ........
ஆயிரம் நினைவு.................
நிலவே நீ சாட்சி ..........
இப்படி பல் பாடல்கள்
ஆயிரம் பசுமை நினைவுகளுடன் - எஸ்.பி.பி.யின் பரம- ரசிகை = வசந்தி உதய குமார்
ரசிகன் = உதயகுமார்

Philosophy Prabhakaran said...

@ பாஸ்கர், சதீஸ் மோகன், இர்பான், எஸ்.பி.பி.யின் பரம- ரசிகை = வசந்தி உதய குமார்
ரசிகன் = உதயகுமார்

விரிவான பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்... நீங்க எல்லோரும் ஒரே குடும்பமா மக்கா...

Anonymous said...

கருத்து ஒன்றாக இருக்கலாம் அதற்க்கு ஒரே குடும்பமா
என்றும் எஸ்.பி.பி.ரசிகை வசந்தி உதயகுமார்