27 May 2012

பதிவர் சந்திப்பு தருணங்கள்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தாநாள் இரவு சக சாப்ட்வேர் ஊழியர்களுடன் கு.கு.கு அடித்துவிட்டு ஹேங் ஓவரில் படுத்திருந்தவனை பலவந்தப்படுத்தி பதிவர் சந்திப்பிற்கு அழைத்தவர் அஞ்சாசிங்கம் செல்வின். அவசர அவசரமாக கிளம்பி அவருடைய அலுவலகத்திற்கு சென்றால் அங்கே ரமணா பட விஜயகாந்த் மாதிரி சிவந்த கண்களுடன் மானிட்டரை பார்த்துக்கொண்டிருந்தார். (அவசரப்படாதீங்க இது அந்த மானிட்டர் அல்ல) பதிவர் சந்திப்பை நேரடி ஒளிபரப்பு செய்வதற்காக அவர் மடிக்கணினியை தயார் செய்து என் கையில் கொடுக்க, பட்ஜெட் தாக்கல் செய்யும் ப.சிதம்பரம் மாதிரி அதனை கையில் சுமந்துக்கொண்டு புறப்பட்டோம். ஓவர் டூ டிஸ்கவரி புக் பேலஸ்...!

சக விழா அமைப்பாளர்கள் சிவகுமார், ஆரூர் மூனா செந்தில் மற்றும் உணவு உலகம் சங்கரலிங்கம் சார் ஆகியோர் தீயாக வேலை செய்துக்கொண்டிருந்தனர்.

நம் பதிவுலக நண்பர்களின் நேரம் தவறாமை குறித்து ஏதுமறியாமல் சரியாக நான்கு மணிக்கே வந்திருந்தார்கள் அப்பாவி சத்தியம் தொலைக்காட்சி நண்பர்கள். பின்னர் பொறுமையாக காத்திருந்து தங்கள் தொலைக்காட்சிக்கான செய்தியை சேகரித்துச் சென்றார்கள்.

வழக்கமாக பதிவர் சந்திப்புகளை தனக்கே உரிய பாணியில் தொகுத்து வழங்கும் சுரேகா தமிழகத்து எல்லைக்குள் இல்லாத காரணத்தினால் எவர்யூத் (எவர் யூத்?) பதிவர் கேபிள் சங்கருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது அல்லது அவராகவே எடுத்துக்கொண்டார்.

கடந்த 25 வருடங்களில் ஒரு லட்சத்திற்கும் மேலான மரங்களை நட்டு வளர்த்துவரும் பசுமைப்போராளி யோகநாதன் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார். CNN-IBN சேனலுடைய ரியல் ஹீரோஸ் அங்கீகாரம் பெற்ற அவர், தான் கடந்து வந்த பாதையை பற்றி சுருக்கமாக பேசினார். யோகநாதனுடைய இணையதளம்.

மற்றொரு சிறப்பு விருந்தினராக ஐ.க்யு லெவல் 225 கொண்ட கின்னஸ் சாதனை சிறுமி திருநெல்வேலியின் பெருமை விஷாலினி வந்திருந்தார். உலக அரங்கில் தன்னுடைய மகளுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற தன்னுடைய ஆதங்கத்தை பதிவு செய்தார் விஷாலினியின் அம்மா. விஷாலினியின் அறிவாற்றலை சோதிக்கும் விதமாக (!!!) நுண்ணறிவு கொண்ட பதிவர்கள் சிலர் அவரிடம் கேள்வி கேட்டு தெளிவு பெற்றார்கள்.

எதிர்பாரா இன்ப அதிர்ச்சியாக நண்பர் கோகுல் அவர்களுக்கு சிறந்த இளம் பதிவர் விருது வழங்கப்பட்டது. அதுகுறித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர் தன்னுடைய திருமண அழைப்பிதழையும் அனைவருக்கும் கொடுத்து வரவேற்றார். 

சர்ச்சை நாயகன் ஜாக்கி சேகர் தன்னுடைய படை பரிவாரங்களுடன் அல்லாமல் சிங்கிளாக கூட பதிவர் சந்திப்பிற்கு வராதது மாபெரும் ஏமாற்றம்தான். இருப்பினும் தன்னுடைய சிஷ்யகேடி சதீஷ் மாஸை அனுப்பி வைத்திருந்தார்.

கடந்த பதிவர் சந்திப்பில் இந்த சதீஷ் மாஸ், ஜாக்கி சேகரை கூச்சத்தில் நெளிய வைத்தது நினைவிருக்கலாம். அதேபோல இந்தமுறை பாலகணேசன் என்ற பாலகனை கேபிள்ஜி செட்டப் செய்து அழைத்து வந்திருந்தார். சும்மா சொல்லக்கூடாது பையனும் கொடுத்த காசுக்கு மேலேயே வேலை செய்யுறான்.

நான்கைந்து மொபைல் போன்களை தன்னுடைய உடலில் ஆங்காங்கே சொருகிக்கொண்டு ஒரு மனித வெடிகுண்டு போலவே ஆபத்தாக வந்திருந்தார் நாய் நக்ஸ். அவர் என்னை பார்த்து “நான் உன் மேல கோபமா இருக்கேன்... பேசமாட்டேன்...” என்று சொன்னதும் எனக்குள் ஒரு நிம்மதி பெருமூச்சு. (உபரித்தகவல்: வழக்கமாக எல்லோரையும் First Name சொல்லி அழைக்கும் அஞ்சாசிங்கம் ஒரு ஃப்ளோவில் அந்த நாயை கூப்பிடுங்கப்பா என்று சொன்னது செம காமெடி)

பெரும்பாலான பதிவர்கள் தங்களுடைய ப்ரோபைல் படமாக பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தையே வைத்திருக்கிறார்கள் புலவர் சா.ராமானுசம் உட்பட. வீடு சுரேஷ் அண்ணனை முதல்முறையாக சந்தித்ததும் ஏனோ எனக்கு மேலே உள்ள புகைப்படம் ஞாபகத்திற்கு வந்தது. என்னுடைய வலைப்பூவை டாட் காமாக மாற்றிக்கொடுத்த போர்வாள் தமிழ் பேரன்ட்ஸ் சம்பத் அவர்களுக்கு என்னுடைய நன்றிக்கடனை செலுத்தினேன். 

பின்னூட்டத்தில் குறிப்பிட்டபடியே தானொரு ஒரிஜினல் யூத் என்று நிரூபிக்கும் பொருட்டு மீசை, தாடி ட்ரிம் செய்து, ஒரு வாரம் “ஒர்க் அவுட்” செய்து உருக்குலைந்து போய் வந்திருந்தார் தண்டோரா மனிஜி.

அரங்கு வாயிலில் யாரோ குத்தவைத்து அமர்ந்திருப்பது போல தென்பட, யாரென்று பார்த்தால் அட நம்ம யூத்து பதிவர்களின் விடி(யாத) வெள்ளி அண்ணன் அப்துல்லா. உள்ளே வரத்தயங்கிய அண்ணனை அன்புக்கரங்கள் கொண்டு அடக்க வேண்டியதாகி போய்விட்டது.

இந்தியாவின் நம்பர் ஒன் ட்விட்டர் என்பது “பிரபல பதிவர்” என்ற பதத்தை போலவொரு அலங்கார வார்த்தை என்றே நினைத்திருந்தேன், பிரபல பதிவர் கேபிள் சங்கர் அதுபற்றி விளக்கிச் சொல்லும்வரை. அப்பேர்ப்பட்ட பெருமைகொண்ட கார்க்கி வழக்கம்போல தன்னுடைய மொக்கை ஜோக்குகளால் அரங்கினை மசாலா கபே ஆக்கிக்கொண்டிருந்தார்.

ஏற்கனவே நான் பிதாமகருடைய ஹைடெக் மொபைலை பார்த்து புகைந்துக்கொண்டிருக்க, தன்னுடைய புத்தம்புதிய ஐ-பேட் மொபைலை எடுத்துக்காட்டி என்னுடைய அடிவயிற்றில் நெருப்பை பற்ற வைத்தார் உண்மைத்தமிழன். உண்மைத்தமிழன் (மொபைல் வால்பேப்பராக) வைத்திருந்த கிழக்கு பார்த்த வீடு பட ஹீரோயின் தமளியை பார்த்து நானும் மணிஜியும் வாயை வாட்டர்ஃபால்ஸ் ஆக்கினோம்.

சென்னை பித்தன், மின்னல் வரிகள் கணேஷ், புலவர் சா.ராமானுசம் போன்ற மூத்த, மூத்த மூத்த பதிவர்களும் யூத் பதிவர் சந்திப்பிற்கு வந்திருந்தார்கள். புலவர் இந்த தள்ளாத வயதிலும் எப்படி தளராமல் கீ-போர்டை தட்டுகிறார் என்று தெரியவில்லை. உண்மைத்தமிழனுக்கே வெளிச்சம்.

வழக்கமாக அக்கப்போரை தன்னுடன் அழைத்துவரும் பழைய பதிவர் இந்தமுறை அதிரடி பதிவர் ஓஹோ ப்ரொடக்ஷன்ஸ் அவர்களை அழைத்துவந்திருந்தார். அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும் “ஓ நீங்கதானா அது” என்று அரங்கம் முழுவதும் சலசலப்புகள். என்னா கொலவெறி...!

விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் தன்னுடைய அன்புப்பரிசாக ஜெயமோகன் எழுதிய யானை டாக்டர் என்கிற விலையில்லா புத்தகத்தை கொடுத்து பிறவிப்பயன் அடைந்தார் அரங்க உரிமையாளர் வேடியப்பன்.

சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசாக பேச்சியப்பன் பாத்திரக்கடையில் வாங்கிய கேடயமும் நல்லதொரு புத்தகமும் வழங்கப்பட்டது.

கடந்த பதிவர் சந்திப்பிற்கு வந்திருந்து இந்தமுறை ஆப்சென்ட் ஆன சர்புதீன், குடந்தை அன்புமணி, கவிதை வீதி செளந்தர், வேடந்தாங்கல் கருண், தம்பி கூர்மதியான், நா.மணிவண்ணன், நரேன், யுவகிருஷ்ணா, ஜாக்கி சேகர், ந.ர.செ.ராஜ்குமார், ரதியழகன், எல்கே, மயில் ராவணன், சாம்ராஜ்ய பிரியன், ரெட்ஹில்ஸ் பாலா, சுரேகா, விஜய் ஆர்ம்ஸ்ட்ராங் ஆகியோருக்கு எங்கள் குழுவின் சார்பாக கடும் கண்டனங்கள்.

விழா முடிந்ததும் என்னிடம் நிறைய பேர் வந்து “இது வழக்கமான பதிவர் சந்திப்பை போல வெட்டியாக இல்லாமல் உருப்படியாக இருந்தது... கலக்கிட்டீங்க...”என்று கைகுலுக்கினார்கள். அதாவது நானும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவன் என்ற நம்பிக்கையில். ஆனால் உண்மையில் விழாவின் பின்புலத்தில் இருந்து முழுமையாக செயல்பட்டவர் சிவகுமார் என்பதை இங்கே சொல்லிக்கொள்ள விழைகிறேன். அவரோடு இணைந்து செயலாற்றிய ஆரூர் மூனா, செல்வின், சங்கரலிங்கம், சம்பத், வீடு சுரேஷ் ஆகியோருக்கும் பழைய தலைமுறை பதிவர்கள் கே.ஆர்.பி.செந்தில், கேபிள் சங்கர் ஆகியோருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

விழாவிற்கு வந்திருந்த அனைவருடைய பெயரையும் குறிப்பிட்டு எழுத முடியவில்லை. மன்னிச்சூ...!

கு.கு.கு - குழுவாக குடித்துவிட்டு கும்மியடித்தல்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

38 comments:

கேரளாக்காரன் said...

சரி அடுத்த மீட்டிங் ஆவது வரமுடியுதா பாக்கலாம் :)

Unknown said...

/////அதாவது நானும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவன் என்ற நம்பிக்கையில். ஆனால் உண்மையில் விழாவின் பின்புலத்தில் இருந்து முழுமையாக செயல்பட்டவர் சிவகுமார் என்பதை இங்கே சொல்லிக்கொள்ள விழைகிறேன்./////

எங்க தல சிவாவுக்கு பெரிய விசில் அடிங்க

Unknown said...

////கு.கு.கு - குழுவாக குடித்துவிட்டு கும்மியடித்தல்////

மன்னிச்சுகோபா மொத படிச்சோடன தப்ப நெனச்சுட்டேன் ,ஒரு வேல அப்படி இருக்குமோன்னு

அனுஷ்யா said...

//ஜெயமோகன் எழுதிய யானை டாக்டர் என்கிற விலையில்லா புத்தகத்தை//

அது ஒரு குப்பை... இருந்தாலும் அன்பளிப்பு என்பதால் நோ கலாய்...

Unknown said...

அடப்பாவி! புரபைல் படம் யாருய்யா ஒரிஜினலா வைக்கிறாங்க தானை தலைவன் சிபிய தவிர!
ககபோ.....

Anonymous said...

//வீடு சுரேஷ் அண்ணனை முதல்முறையாக சந்தித்ததும் ஏனோ எனக்கு மேலே உள்ள புகைப்படம் ஞாபகத்திற்கு வந்தது. //

ஒரு பூனையை கலாய்த்த உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்..

அனுஷ்யா said...

//வீடு சுரேஷ் அண்ணனை முதல்முறையாக சந்தித்ததும் ஏனோ எனக்கு மேலே உள்ள புகைப்படம் ஞாபகத்திற்கு வந்தது. //

ஒரு பூனையை கலாய்த்த உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்..

அனுஷ்யா said...

//அதாவது நானும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவன் என்ற நம்பிக்கையில். ஆனால் உண்மையில் விழாவின் பின்புலத்தில் இருந்து முழுமையாக செயல்பட்டவர் சிவகுமார் என்பதை இங்கே சொல்லிக்கொள்ள விழைகிறேன். //

பட் உங்க நேர்ம எனக்கு புடிச்சிருக்கு...

அனுஷ்யா said...

//நான்கைந்து மொபைல் போன்களை தன்னுடைய உடலில் ஆங்காங்கே சொருகிக்கொண்டு ஒரு மனித வெடிகுண்டு போலவே ஆபத்தாக வந்திருந்தார் நாய் நக்ஸ். அவர் என்னை பார்த்து “நான் உன் மேல கோபமா இருக்கேன்... பேசமாட்டேன்...” என்று சொன்னதும் எனக்குள் ஒரு நிம்மதி பெருமூச்சு. //

படிக்கும்போது சிரித்து கொண்டே இருந்த இடம் இது... செம்ம..:)

அனுஷ்யா said...

இந்த மாதிரி மகிழ்வான தருணங்களில் பங்கேற்கும் கொடுப்பினை இல்லாமலே போய்விடும் போல..
வைத்தெரிச்சல் கலந்த வாழ்த்துக்கள் பிரபா...

ராஜ் said...

ரொம்ப நல்லா வர்ணனை பண்ணி இருக்கேங்க.
குரூப் போட்டோ ஒன்னும் எடுகலையா பாஸ்...??

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////முந்தாநாள் இரவு சக சாப்ட்வேர் ஊழியர்களுடன்////////

பார்ரா.............?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கு.கு.கு அடித்துவிட்டு ஹேங் ஓவரில் படுத்திருந்தவனை////////

குமட்டில் குத்தும்வரை குடித்து விட்டு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அவசர அவசரமாக கிளம்பி அவருடைய அலுவலகத்திற்கு சென்றால் அங்கே ரமணா பட விஜயகாந்த் மாதிரி சிவந்த கண்களுடன் மானிட்டரை பார்த்துக்கொண்டிருந்தார் (அவசரப்படாதீங்க இது அந்த மானிட்டர் அல்ல) .//////////

எந்த மானிட்டரா இருந்தா என்ன, இது எப்பவும் நடக்கறதுதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நம் பதிவுலக நண்பர்களின் நேரம் தவறாமை குறித்து ஏதுமறியாமல் சரியாக நான்கு மணிக்கே வந்திருந்தார்கள் அப்பாவி சத்தியம் தொலைக்காட்சி நண்பர்கள். //////////

ரெண்டு அரசியல் மீட்டிங் அட்டெண்ட் பண்ணாவே போதுமே, தெளிஞ்சிடுவாங்களே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நான்கைந்து மொபைல் போன்களை தன்னுடைய உடலில் ஆங்காங்கே சொருகிக்கொண்டு ஒரு மனித வெடிகுண்டு போலவே ஆபத்தாக வந்திருந்தார் நாய் நக்ஸ். ///////

மீதி போன்லாம் வீட்ல வெச்சிட்டு வந்துட்டாரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அவர் என்னை பார்த்து “நான் உன் மேல கோபமா இருக்கேன்... பேசமாட்டேன்...” என்று சொன்னதும் எனக்குள் ஒரு நிம்மதி பெருமூச்சு. ////////

இதை படிச்சிட்டு நாய்-நக்ஸ் ஆக்ரோஷமா கெளம்ப போறார்....... கெளம்பனும், கெளம்பிடுவார்........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ஆனால் உண்மையில் விழாவின் பின்புலத்தில் இருந்து முழுமையாக செயல்பட்டவர் சிவகுமார் என்பதை இங்கே சொல்லிக்கொள்ள விழைகிறேன். அவரோடு இணைந்து செயலாற்றிய ஆரூர் மூனா, செல்வின், சங்கரலிங்கம், சம்பத், வீடு சுரேஷ் ஆகியோருக்கும் பழைய தலைமுறை பதிவர்கள் கே.ஆர்.பி.செந்தில், கேபிள் சங்கர் ஆகியோருக்கும்////////

வாழ்த்துகள்.......... கலக்கிட்டீங்க, எல்லாரும்!

MANO நாஞ்சில் மனோ said...

நானும் என் பிராபைல்ல இப்போதைய போட்டாதான் வச்சிருக்கேன்ய்யா, நான் என்ன விக்கி மாதிரி பயந்தாகொள்ளி இல்லை [[விக்கி இப்போ அருவாளோட வந்துருவான் ஹி ஹி]]

MANO நாஞ்சில் மனோ said...

பதிவர்கள் எல்லாருக்கும் வாழ்த்துகள்...!!!

Unknown said...

அன்பரே!
தங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள வாறு, வந்தோரில் வயதில், மூத்த,மிக மூத்த(யூத்)வன்
யான் என்பதில் ஐயமில்லை!
இந்த தள்ளாத வயதிலும் தட்டச்சு
செய்ய சக்தியைத் தருவது நான் உண்ணும் உணவோ உட்கொள்ளும்
மருந்தோ காரணம் அல்ல!
உங்களைப் போன்ற நம் வலையுலக உறவுகள் காட்டும் அன்பும்
எழுதும் மறுமொழிகளுமே ஆகும்
என்றால் அது மிகையல்ல!


சா இராமாநுசம்

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////அவர் என்னை பார்த்து “நான் உன் மேல கோபமா இருக்கேன்... பேசமாட்டேன்...” என்று சொன்னதும் எனக்குள் ஒரு நிம்மதி பெருமூச்சு. ////////

இதை படிச்சிட்டு நாய்-நக்ஸ் ஆக்ரோஷமா கெளம்ப போறார்....... கெளம்பனும், கெளம்பிடுவார்......//

பார்'ன்னு நினைச்சுட்டு கல்யாண மண்டபம் போகமாட்டார் போகமாட்டார் போகமாட்டார் அண்ணன்...

MARI The Great said...

சந்திப்பு தித்திப்பாய் அமைந்திருக்கிறது அப்படித்தானே ..?

உண்மைத்தமிழன் said...

என்னையும் மறக்காமல் பெயர் குறிப்பிட்டு எழுதியமைக்காக மிக்க நன்றிகள் தம்பி..!

Anonymous said...

வாழ்த்துக்கள் ...
புலவர் அய்யாவுக்கு சிறப்பு வாழ்த்துக்கள் ...
பதிவுலக கேர்ள்ஸ் ஆருமே வரலியா

Philosophy Prabhakaran said...

@ மௌனகுரு
// சரி அடுத்த மீட்டிங் ஆவது வரமுடியுதா பாக்கலாம் :) //

வெளியூர்ல இருக்கிறவங்க வழக்கமா சொல்ற டயலாக்... போங்க பாஸ்...

Philosophy Prabhakaran said...

@ N.Mani vannan
// மன்னிச்சுகோபா மொத படிச்சோடன தப்ப நெனச்சுட்டேன் ,ஒரு வேல அப்படி இருக்குமோன்னு //

கு'ன்னு ஆரம்பிச்சாலே கெட்டவார்த்தை தானா... ஏன்யா இப்படி..?

Philosophy Prabhakaran said...

@ மயிலன்
// அது ஒரு குப்பை... இருந்தாலும் அன்பளிப்பு என்பதால் நோ கலாய்... //

ஓ அதானா மேட்டர்...

// ஒரு பூனையை கலாய்த்த உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்.. //

புலி, சிங்கத்தோட படமெல்லாம் கிடைக்கலையே... நான் என்ன செய்வேன்....?

// படிக்கும்போது சிரித்து கொண்டே இருந்த இடம் இது... செம்ம..:) //

ஓ நீங்களும் பாதிக்கப்பட்டு இருக்கீங்களா...

// இந்த மாதிரி மகிழ்வான தருணங்களில் பங்கேற்கும் கொடுப்பினை இல்லாமலே போய்விடும் போல..
வைத்தெரிச்சல் கலந்த வாழ்த்துக்கள் பிரபா... //

அப்படியெல்லாம் விட்டுட மாட்டோம்டி... கூடிய சீக்கிரம் கெடாவெட்டு வைக்கிறோம்...

Philosophy Prabhakaran said...

@ வீடு சுரேஸ்குமார்
// அடப்பாவி! புரபைல் படம் யாருய்யா ஒரிஜினலா வைக்கிறாங்க தானை தலைவன் சிபிய தவிர!
ககபோ..... //

அதுக்காக இப்படியா... ஆள் அடையாளமே தெரியல...

Philosophy Prabhakaran said...

@ ராஜ்
// ரொம்ப நல்லா வர்ணனை பண்ணி இருக்கேங்க.
குரூப் போட்டோ ஒன்னும் எடுகலையா பாஸ்...?? //

எங்களுக்குள்ள குரூப் எல்லாம் எதுவுமில்லை என்பதால் நாங்க குரூப் போட்டோ எடுத்துக்கொள்வதில்லை ராஜ்...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// குமட்டில் குத்தும்வரை குடித்து விட்டு? //

அப்படியும் வச்சிக்கலாம் ப.ரா...

// எந்த மானிட்டரா இருந்தா என்ன, இது எப்பவும் நடக்கறதுதானே? //

அண்ணன் லோக்கல் சரக்கு அடிச்சிட்டாருன்னு வரலாறு தப்பா பேசக்கூடாதுல்ல...

// ரெண்டு அரசியல் மீட்டிங் அட்டெண்ட் பண்ணாவே போதுமே, தெளிஞ்சிடுவாங்களே? //

நம்ம அதவிட மோசமானவங்கன்னு அவங்களுக்கு தெரியல பாவம்...

// இதை படிச்சிட்டு நாய்-நக்ஸ் ஆக்ரோஷமா கெளம்ப போறார்....... கெளம்பனும், கெளம்பிடுவார்........ //

அதுதானே எங்களுக்கும் வேணும்...

// வாழ்த்துகள்.......... கலக்கிட்டீங்க, எல்லாரும்! //

நன்றி தல...

Philosophy Prabhakaran said...

@ MANO நாஞ்சில் மனோ
// நானும் என் பிராபைல்ல இப்போதைய போட்டாதான் வச்சிருக்கேன்ய்யா, நான் என்ன விக்கி மாதிரி பயந்தாகொள்ளி இல்லை [[விக்கி இப்போ அருவாளோட வந்துருவான் ஹி ஹி]] //

இப்ப எதுக்குய்யா அந்த மனுஷன இழுக்குறீங்க...

// பதிவர்கள் எல்லாருக்கும் வாழ்த்துகள்...!!! //

நன்றி தல...

Philosophy Prabhakaran said...

@ புலவர் சா இராமாநுசம்
// இந்த தள்ளாத வயதிலும் தட்டச்சு
செய்ய சக்தியைத் தருவது நான் உண்ணும் உணவோ உட்கொள்ளும்
மருந்தோ காரணம் அல்ல!
உங்களைப் போன்ற நம் வலையுலக உறவுகள் காட்டும் அன்பும்
எழுதும் மறுமொழிகளுமே ஆகும்
என்றால் அது மிகையல்ல! //

உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை அய்யா... தொடருங்கள்...

Philosophy Prabhakaran said...

@ வரலாற்று சுவடுகள்
// சந்திப்பு தித்திப்பாய் அமைந்திருக்கிறது அப்படித்தானே ..? //

கரெக்ட் தல... உங்களுடைய வாக்கியத்தை வேறொரு சமயத்தில் பயன்படுத்திக்கொள்கிறேன்...

Philosophy Prabhakaran said...

@ உண்மைத்தமிழன்
// என்னையும் மறக்காமல் பெயர் குறிப்பிட்டு எழுதியமைக்காக மிக்க நன்றிகள் தம்பி..! //

உங்களை மறக்க முடியுமா தல...

Philosophy Prabhakaran said...

@ கலை
// வாழ்த்துக்கள் ...
புலவர் அய்யாவுக்கு சிறப்பு வாழ்த்துக்கள் ...
பதிவுலக கேர்ள்ஸ் ஆருமே வரலியா //

அதென்னவோ தெரியல மேடம்... பதிவுலக கேர்ள்ஸ் ஆண் பதிவர்களை பார்த்தாலே பதறியடிச்சு ஓடுறாங்க...

Prem S said...

பதிவுலகின் நிஜமான யூத் நீங்க தாங்கோ

Anonymous said...

அதென்னவோ தெரியல மேடம்... பதிவுலக கேர்ள்ஸ் ஆண் பதிவர்களை பார்த்தாலே பதறியடிச்சு ஓடுறாங்க...///


ஹ ஹ ஹா ...உங்க மேக் அப்ஸ்ஐ பக்கத்துல பார்த்து பயந்து ஓடி இருப்பாங்களோ (ஜும்மா ஜூம்மா )....