16 October 2012

பேஜ் 3...!

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மேலைநாட்டு பல்சுவை சஞ்சிகைகளில் பேஜ் 3 என்றொரு சமாச்சாரம் உண்டு. நம்மூர் வண்ணத்திரை, சினிக்கூத்து நடுப்பக்கங்கள் மாதிரி என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் சற்றே கவர்ச்சி தூக்கலாக மேலாடைகள் இல்லாத பாலாடைகளின் புகைப்படங்கள் வெளியிடப்படும். மேற்படி மூன்றாம் பக்க கலாசாரத்தை மங்களகரமாக துவக்கி வைத்த பெருமை ப்ரிட்டனில் வெளியாகும் 'தி சன்' என்ற பத்திரிக்கையையே சாரும். லண்டன் குமுதம் என்று அடைமொழி தரவல்ல குறும்புத்தனமான சஞ்சிகை. மூன்றெழுத்து நடிகையின் முன்னழகு ரகசியம், பார்ட்டிக்கு உள்ளாடை அணிய மறந்துவந்த நடிகை போன்ற செய்திகள் தான் சன்னில் முன்னிலை பெறும். 

 
1969ம் ஆண்டு சன்னின் நிறுவனர் ரூப்பர்ட் மர்டாக்குக்கு அந்த குஜாலான யோசனை தோன்றியது. முதல் பதிப்பின் மூன்றாம் பக்கத்தில் உல்லா லிண்ட்ஸ்ட்ராம் பட்டனில்லாத சட்டையணிந்து காட்சியளித்தார். அதைக்கண்ட அந்தக்கால பெல் பாட்டம் இளைஞர்கள் “வாவ்...! சட்டை மேலே எவ்ளோ பட்டன்ஸ்...!” என்று வாய் பிளந்தனர். சம்பவம் நடந்து மிகச்சரியாக ஓராண்டு கழித்து இருபது வயது ஆர்வக்கோளாறு ஸ்டெபானி தன்னுடைய பிறந்தநாள் ஆடையுடன் போஸ் கொடுத்தார். பக்கவாட்டில் இருந்து பக்காவாக எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் இலைமறை காயாக கவர்ச்சி இருந்தது.

ஸ்டெபானி அடிகோலிட்ட சேவையை சன் மற்ற மாடல்களின் துணையோடு செவ்வனே தொடர்ந்தது. அதைக்கண்டு கிளர்ச்சியடைந்து சமூக காவலர்களும் பெண்ணியவாதிகளும் பொங்கல் வைக்க ஆரம்பித்தார்கள். எனினும் ச்சீ... பொம்பளை படம் போட்டு பொழப்பு நடத்துறாங்களே’ன்னு பொங்கியவர்கள் கூட கக்கிஸ் பக்கம் ஒதுங்கி கள்ளத்தனமாக பேஜ் 3 பெண்களை ரசித்ததால் சன்னின் விற்பனை பிரதிகள் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது.

சன்னின் ஒளிவு மறைவில்லாத உத்தி கண்டு இங்கிலாந்தில் “தின” என்று ஆரம்பிக்கும் மற்ற சராசரி பத்திரிக்கைகளும் கவர்ச்சியில் தொபுக்கடீர் என்று குதித்தன. இருப்பினும் சன்னிடம் ஒரு தனித்துவம், க்ரியேட்டிவிட்டி இருந்தது, கவர்ச்சிப்படத்தை அன்றாட நிகழ்வுகளோடு தொடர்பு படுத்தியது. உதாரணத்திற்கு கலைஞர் கருப்பு சட்டை அணிந்தது பரபரப்பு என்றால் அன்றைய மாடல் கருப்பு நிற பேண்டீஸ் அணிந்திருப்பார். படத்திற்கு கீழே லூஸுப்பையனின் நக்கல் கமென்ட் இடம் பெற்றிருக்கும். கால்பந்து உலக கோப்பை நடந்தால் மாடல் இரண்டு கால்பந்துகளை கையில் ஏந்தியபடி காட்சியளிப்பார்.

பின்னர் எழுபதுகளில் தொடங்கி சுமார் இருபது ஆண்டுகள் வரை மூன்றாம் பக்கத்தில் படத்திற்கு பொருத்தமான இரட்டை அர்த்த கேப்ஷன் பிரசுரிக்கப்பட்டது. கவர்ச்சியை பார்த்து கிறங்காதவர்கள் கூட கேப்ஷனை பார்த்து மெர்சலானார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் தங்களுடைய கேப்ஷன்கள் எல்லை மீறிப்போவதை உணர்ந்த சன் மாடல்களின் ஊரு, பேரு, வயதோடு நிறுத்திக்கொண்டது.

அத்தோடு சன் அறிமுகப்படுத்திய புதிய விதிமுறை சில மாடல்களை அலற வைத்தது. தன்னை இயற்கை ஆர்வலராக காட்டிக்கொள்ள முனைந்த அப்போதைய சன்னின் சீப் எடிட்டர், சிலிக்கானை அறவே தடை செய்தார். அதன் விளைவாக அதுவரை பேஜ் 3யில் உச்சத்தில் இருந்த கேட்டி ப்ரைஸ், மெலிண்டா போன்ற போலிகளின் மார்க்கெட் தொங்கிப்போனது.

தொண்ணூறுகளின் இறுதியில் ஐரோப்ப நாடுகளில் தலைவிரித்தாடிய இணைய புரட்சி, பேஜ்3 அழகிகளுக்ககவே தனி இணையதளம் தொடங்க அடிக்கோலிட்டது. சஞ்சிகையில் இடம்பெற்றதை விட அதிக கிளுகிளுப்பு விகிதத்துடன் மாடல்கள் வெவ்வேறு கோணங்களில் இணையங்களில் வெளியாகி இளசுகளின் கணையங்களில் ஹார்மோன் சுரக்கச் செய்தது. நாளுக்கு நாள் சன்னுடைய புகழ் சிகரம் தொட, சன்னின் அடுத்த அதிரடி - உங்களில் யார் அடுத்த பிரபுதேவா போல பேஜ் 3 மாடல்களுக்கான தேடல் நடத்தியது. அதாவது விருப்பப்பட்டு அனுப்பும் பெண்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தி இறுதியில் அந்த ஆண்டிற்கான அழகியை தேர்வு செய்வார்கள். அதன் சமீபத்திய வெற்றியாளர் இருபத்தி இரண்டு வயது இஞ்சி இடுப்பழகி லூஸி.

என்னதான் வாசகர்கள் அரை ஆடை அழகிகளை பார்த்து அகமகிழ்ந்தாலும் அழகிகளின் பர்சனல் வாழ்க்கையில் கவலை, தனிமை, புறக்கணிப்பு, அவமதிப்பு என்று பல்வேறு பாதிப்புகள் படர்ந்திருந்தன. அவர்களில் பலர் போதையின் பிடியிலும், தவறான செக்ஸ் உறவுகளிலும் விரும்பியோ விரும்பாமலோ திணிக்கப்பட்டிருந்தனர். அதனை மையமாக வைத்து The curse of Page 3 என்கிற ஆவணப்படம் 2003ம் ஆண்டு வெளியாகி அதிர வைத்தது. (இந்தியாவில் கூட பாலிவுட் பிரபல இயக்குனர் மதுர் பண்டர்க்கர் கைவண்ணத்தில் பேஜ் 3 என்ற திரைப்படம் வெளியானது).

அதனை தொடர்ந்து க்ளேர், என்ற பெண் எம்.பி பேஜ் 3 கவர்ச்சியை தடை செய்ய போராடினார். ஆனால் ஆணாதிக்க சண்முகம் அவரை கேலி செய்தது. தனியொரு ஆளாக போராடிய அவருடைய மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. அப்போது அந்த பெண் எம்.பியின் தலையை டாப்லெஸ் மாடலின் உடலோடு ஒட்டி பிரசுரித்து சன் தன்னுடைய வக்கிர புத்தியை வெளிக்காட்டிக் கொண்டது. இருப்பினும் க்ளேரின் பெருமுயர்சிக்கு சிறுபலனாக பதினெட்டு வயதிற்கு உட்பட்ட மாடல்களை பயன்படுத்தக்கூடாது என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டு அப்போதைய ஸ்வீட் சிக்ஸ்டீன்களான சமந்தா ஃபாக்ஸ், டெபி ஆஷ்பி போன்றவர்களுக்கு ஆப்படித்தது, கூடவே சன்னுக்கும்.

சன்னுக்கே சில பெண் எடிட்டர்கள் நியமிக்கப்பட்டபோது அவர்கள் மூன்றாம் பக்கத்திற்கு முடிவு கட்ட நினைத்தனர். எனினும் அதில் பல நடைமுறை சிக்கல்கள் இருந்ததாலும், அதனை நிறுத்தினால் சன் தன்னுடைய தனித்துவத்தை இழந்துவிடும் அபாயம் இருந்ததாலும் கவர்ச்சி மழை இன்றளவும் தொடர்ந்துக்கொண்டிருக்கிறது.

வழக்கமாக ஒரேயொரு மாடல் சிங்கிள் சிங்கமாக காட்சியளிக்கும் மூன்றாம் பக்கத்தில், சமீபத்தில் சன் நாற்பதாவது ஆண்டுவிழாவை கொண்டாடிய போது மட்டும் ஒரு சேர பதினைந்து அழகிகள் பிகினியில் போஸ் கொடுத்து வாசகர்களை ஜொள்ளருவியில் நனைய வைத்துவிட்டார்கள்.


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

17 comments:

முத்தரசு said...

எல்லா பக்கமும் 'சன்' இந்த வேலையத்தான் செய்யுதா? படத்தை பாத்து எதோ உள்ளாடை வியம்பரம்னு நெனச்சேன் சன் ஆண்டுவியா வா.

முத்தரசு said...

நீர் கொடுத்துள்ள லிங்க்: ஆத்தீ

Prem S said...

ஓ இப்படி ஒன்னு இருக்கா இதுவரைக்கு தெரியாதே பாஸ்

படங்களை பதிவில் இணைக்காமல் லிங்காக கொடுத்த உங்கள் பெருந்தன்மைக்கு பாராட்டுக்கள்

aavee said...

ஆகா.. என்னே பயனுள்ள பதிவு!! ;-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆஹா..... என்ன ஒரு பதிவு என்று பாராட்ட விரும்பும் இந்த சமயத்திலே... பிரபா ஒயின்ஷாப்பில் வந்து கொண்டிருந்த கவர்ச்சிப்படத்தை நிறுத்தியதை இங்கே கண்டிக்க விரும்புகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்....!

Unknown said...

ஆஆஆ ........................

Unknown said...

லூசி ரொம்ப பல்கா இருக்காங்க .....

Anonymous said...

படங்களோடு இணையதளத்துக்கான சுட்டியை கொடுத்த புரிந்துணர்வை பாராட்டுகிறேன்.லண்டனில் மூணுமாசம் குப்பை கொட்டியபோது ஒருக்கா இந்த பத்திரிக்கை வாங்கினேன்.இலைமறை காய்மறைவெல்லாம் இல்லை.கம்ப்ளீட் டாப்லெஸ் படம்தேன் இருந்தது. இதேபோல ஆண்கள் நிர்வாண படம் வருகிற பத்திரிக்கையும் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.எது விற்கிறதோ அதை விற்பதுதானே வியாபாரம்.நல்ல நடையில் கட்டுரை வந்திருக்கிறது....

அஞ்சா சிங்கம் said...

மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் இந்த பதிவை படித்து முடிக்க உங்கள் எல்லோருக்கும் எவ்வளவு நேரம் பிடித்தது .
எனக்கு 1 .45 மணி நேரம் ஆனது ..............நல்லா கருத்தூன்றி படிதேன் ..........வாழ உங்கள் சமூக சேவை

arasan said...

சிங்கம் அண்ணே ,.. நான் உங்க கருத்தோடு ஒத்து போகிறேன் ..
எனக்கு ரெண்டு மணி நேரம் ஆச்சு

Sivakumar said...

//அரசன் சே said...
சிங்கம் அண்ணே ,.. நான் உங்க கருத்தோடு ஒத்து போகிறேன் ..//

ஜஸ்ட் மிஸ்...!!

M (Real Santhanam Fanz) said...

அடடே.. என்னே ஒரு சர்வதேச கண்ணோட்டம்...

இந்திரா said...

நல்ல்ல்லதொரு பதிவு..
உங்க சேவை நாட்டுக்குத் தேவை பிரபா..

தொடரட்டும் உங்கள் தொண்டு.
;-)

Riyas said...

பேஜ் 3 படத்த பற்றித்தான் சொல்றாராக்கும்னு இந்தப்பக்கம் வந்தா இது வேற! எத்தன லிங்கு..பயபுள்ள ரொம்பத்தான் ஆராய்ச்சி பண்ணிருக்கு..

இருந்தாலும் முழுமையானதொரு கட்டுரை!

arasan said...

ஜஸ்ட் மிஸ்...!!//

இது எதுக்கு என்று புரிகிறது சிவா அண்ணே ,, நான் அவனில்லை

Unknown said...

அதன் விளைவாக அதுவரை பேஜ் 3யில் உச்சத்தில் இருந்த கேட்டி ப்ரைஸ், மெலிண்டா போன்ற போலிகளின் மார்க்கெட் தொங்கிப்போனது.
//////////////////////////////
பிரபா கெட்ட பய சார்....!

வவ்வால் said...

பிரபா,

இந்த வேலையை ஒரு ஜெர்மன் மேகசைன் தான் முதலில் ஆரம்பிச்சது ,ராபர்ட் முர்டோக், வெற்றிகரமான வியாபார சிந்தனைகளை அப்படியே கையாள்வதில் வல்லவர் என்பதால் பிரபலமாக்கிட்டார்.

ஹி...ஹி நான் இது போல மேகசைன் எல்லாம் தற்செயலாக மட்டுமே இணையத்தில் பார்க்கும் பழக்கமுள்ளவன் :-))

ஆனாலும் இந்த மேட்டரை வைத்து பதிவு போடணும்னு ஐடியா வந்தது பாரு அங்கே தான் நிற்கிறாப்பள பிரபா, நல்ல பகிர்வு, வாலிப,வயோதிக அன்பர்கள் வாழ்த்து நிச்சயம் கிடைக்கும் :-))