27 December 2012

நான் ரசித்த சினிமா 2012

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நிகழ் வருடத்தில் தோனி, மெரினா, கழுகு, நான் ஈ, நீர்ப்பறவை, கும்கி போன்ற சில நல்ல படங்களை தவற விட்டிருக்கிறேன். அதே சமயம், அரவான், 3, சகுனி, பில்லா 2, முகமூடி, மாற்றான் போன்ற மாஸ் மொக்கைகளில் சிக்கியிருக்கிறேன், தாண்டவம் தவிர்த்து. எனினும், ஹரிஷ் நாராயண், பாலாஜி மோகன், கார்த்திக் சுப்பராஜ், பாலாஜி தரணிதரன் போன்ற படித்த இளைஞர்கள் கைவண்ணத்தில் சில நல்ல படங்கள் பார்த்த மனநிறைவு கிடைத்திருக்கிறது. ஆண்டு முழுமைக்கும் நான் பார்த்து ரசித்த படங்களை மட்டும் வரிசை படுத்துகிறேன்.


12. அட்டகத்தி
தனித்தனி காட்சியாக பார்க்கும்போது அட்டகத்தி பளபளப்பாக இருப்பது போல தோற்றமளிக்கிறது. ஆனால் முழுப்படமாக பார்க்கும்போது டல்லடிக்கிறது...! மொத்தத்தில் படத்தினுடைய டைட்டிலையே அதற்குரிய விமர்சனமாக எடுத்துக்கொள்ளலாம்.

11. சுந்தர பாண்டியன்
ஒருவேளை படத்தினுடைய கதை முன்னதாகவே தெரிந்திருந்தாலோ அல்லது எ சசிகுமார் ஃபிலிம் என்ற எதிர்பார்ப்போடு சென்றிருந்தால் படம் பிடிக்காமல் இருந்திருக்கக்கூடும். மற்றபடி மனதிற்கு டூலெட் போர்டு மாட்டிக்கொண்டு சென்றால் சுந்தரபாண்டியன் வசதியாக குடியமர்ந்துவிடுகிறார்.

10. ஒரு கல் ஒரு கண்ணாடி
கருத்து, கத்திரிக்காய் ஈர வெங்காயமெல்லாம் இல்லையென்றாலும் ஓகே ஓகே ஓட்டுமொத்தமாக ஒரு ஃபீல் குட் சினிமா, சினிமாவை சினிமாவாக பார்ப்பவர்களுக்கு மட்டும்.

9. துப்பாக்கி
துப்பாக்கி - ஒரு பக்கா கமர்ஷியல் / மசாலா / டைம்பாஸ் படம் எப்படியிருக்க வேண்டுமோ அப்படியிருக்கிறது. மற்றபடி கில்லியை சாப்ட்ருச்சு, விஜய்'ஸ் பெஸ்ட் ஆக்குசன் மூவி எவர் என்றெல்லாம் அடித்து விடுவது டூ மச்...!

விஜய்யின் ஃபேமிலி, காஜல் காட்சிகளை அதிகப்படுத்திவிட்டு, ஆக்குசனை குறைத்திருந்தால் படம் கில்லியா இருக்கிறதென பாராட்டியிருக்கலாம்.

8. ஆரோகணம்
இரண்டு முக்கியமான விஷயங்களை ஆரோகணம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது. முதலாவது, “உங்க இமேஜ் என்னாகும்...?” என்று அங்கலாய்க்கும் உதவியாளரிடம் “என்னடா பெரிய இமேஜ் ? இன்னைக்கு நான் எவ்வளவு சந்தோஷமா இருந்தேன் தெரியுமா !” என்கிறார் அரசியல்வாதி வி.ஐ.பி. இரண்டாவது அளவுக்கு மீறி ஏற்படும் கோபமும் வைராக்கியமும் அல்லது எந்த ஒரு உணர்ச்சியும் ஆபத்தானது தான், ஆனால் அதையே பாஸிடிவ் எனர்ஜியாக மாற்றிக்கொண்டால் நீங்கதான் பாஸ்...!

ஆரோகணம் - நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் மனநோயாளியை தட்டிக்கொடுத்து, உங்களுக்கு ஒன்னுமில்லை பாஸ்... நீங்க நார்மலா தான் இருக்கீங்க....! என்று ஆறுதலூட்டுகிறது.

7. தடையறத் தாக்க
ஆண்டின் சிறந்த ஆக்ஷன் படம் என்று சொல்லலாம். படத்தில் தேவையில்லாத காட்சிகள் என்று எதுவும் இல்லை. கடைசி நிமிடம் வரைக்கும் த்ரில்.

6. மதுபான கடை
நில அபகரிப்பு, குழந்தை தொழிலாளிகள், சாதி ஏற்றத்தாழ்வுகள், தொழிலாளர் நலன் என்ற பல சமூக அவலங்களை ஊறுகாயாக தொட்டுக்கொண்டாலும் கூட, படம் முடிந்தபிறகும் கூட “ம்ம்ம் சரி அப்புறம்... இதனால் தாங்கள் கூற விரும்புவது...?” என்று இயக்குனரை நோக்கி கேள்விக்கணை தொடுக்க தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. நிற்க, அதான் கதை இல்லையென்று அவர்களே சொல்லிவிட்டார்களே என்று கேட்கலாம். ஆனால் நிறைய கருத்துகளை சொல்ல வாய்ப்பிருக்கும் அருமையான கதைக்களனை வீணடித்துவிட்டார்களே என்று ஒரு சினிமா ரசிகனாக என்னுடைய வருத்தத்தை பதிவு செய்துகொள்கிறேன்.

5. அம்புலி 3D
படம் முழுக்க அடுத்து என்ன நடக்கும், குறிப்பாக அம்புலியை எப்ப காட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்போடு படத்தை நகர்த்தியது இயக்குனர் இணைக்கு மிகப்பெரிய வெற்றி. ஹாரர் படங்களில் இம்மி பிசகினாலும் செம காமெடி ஆகிவிடும். அதாகப்பட்ட Paranormal Activityக்கே விழுந்து விழுந்து சிரித்தவர்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். அப்பேர்ப்பட்டவர்களை இரண்டாம் பாதி முழுக்க கப்சிப் என்று அமர வைத்திருக்கிறார்கள்.

4. நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம்
கதைப்படி நாயகன் தன் பெரியப்பா மகனோடு சண்டைப்போட்டுக்கொள்கிறார். ஒரு வருடத்திற்கு முன்பு நடைபெற்ற இந்த சம்பவம் நாயகனுக்கு மறந்துவிட்டது. தயங்கி தயங்கி மறுபடியும் வீட்டுக்கு வந்திருக்கிறார் பெரியப்பா மகன். நாயகன் அவரைக் கண்டதும் முகமலர்ந்து, கட்டியணைத்து, நலம் விசாரிக்கிறார். பெரியப்பா மகனும் ச்சே பழைய விஷயத்தை எல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல் பாசமாக நடந்துக்கொள்கிறானே என்று நெகிழ்கிறார். படத்தில் இது நகைச்சுவையாகவே சொல்லப்பட்டிருந்தாலும் நாம் தத்துவார்த்தமாக புரிந்துக்கொள்ளுதல் நலம். ஞாபகம் என்பதே ஒரு நோய். சில மனக்கசப்புகளை, கவலைகளை ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் மாதிரி மறந்துவிட்டால் வாழ்க்கையை எளிதாக அணுகலாம் என்று கற்றுக்கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்.

தர்க்க ரீதியாக யோசிக்க முற்படும்போது இது ஒன்றும் அவ்வளவு அருமையான படம் இல்லையே என்று தோன்றினாலும் மூன்று மணிநேரம் முழுக்க நம்மை அறியாமல் நாம் சிரித்திருக்கிறோம் என்பது ந.கொ.ப.கா குழுவினருக்கு கிடைத்த வெற்றி.

3. காதலில் சொதப்புவது எப்படி ?
திரையுலகமே பார்க்காத அதிசயம், இதுவரை யாருமே தொடாத சப்ஜெக்ட், ஹாலிவுட்டையே மிரட்டும் தொழில்நுட்பம் இப்படியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் முப்பத்தி ஆறே நாட்களில் சொதப்பாமல் எளிமையாகவும் அழகாகவும் ஒரு நல்ல பொழுதுபோக்கு சித்திரத்தை தந்திருக்கிறார்கள். சுரேஷ் – சுரேகா வாணி காதலோடு சேர்த்து, திருமணத்திற்கு முன் காதலிப்பவர்களுக்கு மட்டுமில்லாமல் திருமணத்திற்கு பின் காதலிப்பவர்களுக்கும் கருத்து சொல்லியிருக்கிறார்கள். இது படமல்ல பாடம்...!

2. வழக்கு எண்: 18/9
“இதான்யா எங்க நாடு... இங்க இப்படியெல்லாம்தான் நடக்கும்...” என்று எடுத்துச்சொல்லியிருக்கும் வழக்கு எண்: 18/9 திரைப்படத்தை உலக சினிமாவாக கொண்டாடி இருக்கலாம் கடைசி பத்து நிமிடங்களை கத்தரித்திருந்தால்...! கமர்ஷியல் வெற்றிக்காகவும், நம்மூர் ரசிகர்களுக்காகவும் இயக்குனர் கொஞ்சம் காம்ப்ரமைஸ் செய்திருப்பார் போல தெரிகிறது.

வழக்கு எண்: 18/9 – மையப்புள்ளிக்கு மிக அருகாமையில் எய்யப்பட்டிருக்கும் அம்பு...!

1. பீட்சா
உண்மையிலேயே தமிழில் ஒரு ஹாரர் படம் என்று சொல்லலாம். மிகவும் எதிர்பார்த்து காத்திருந்து மாஸ் ஹீரோக்களின் படங்களை பார்த்துவிட்டு எரிச்சலில் யாரும் படத்தை பார்த்துடாதீங்க’ன்னு பத்து நண்பர்களுக்காவது எஸ்.எம்.எஸ் அனுப்பிவிடுவோம். ஆனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு யாரும் மிஸ் பண்ணிடாதீங்க'ன்னு குரூப் எஸ்.எம்.எஸ் அனுப்ப வைத்திருக்கிறது பீட்சா...!

Paranormal Activity மூன்று பாகங்களையும் சேர்த்தால் கூட பீட்சாவிடம் நெருங்க முடியாது...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

21 comments:

சீனு said...

டாப் 12 இன் 2012 அருமை

Unknown said...

பாஸ் உங்க வரிசையும் நல்ல தான் இருக்கு.

Raju said...

உங்க முழு விமர்சனப் பதிவிகளிலிருந்தே கொஞ்ச கொஞ்ச வரிகளை உருவி, தொகுத்துட்டீங்களே!

பை த வே, குட் ஜாப்!

:-))

ரஹீம் கஸ்ஸாலி said...

பிரபா..நான் பார்த்த படங்களை பட்டியல் போட்டிருக்கிறேன். என் தர வரிசையோடு உமது தர வரிசையும் ஒத்துப்போகுது.
பார்க்க....
http://www.rahimgazzali.com/2012/12/top-10-film-of-2012.html

Unknown said...

வழக்கு எண்: 18/9 – மையப்புள்ளிக்கு மிக அருகாமையில் எய்யப்பட்டிருக்கும் அம்பு...!
///////////////////
சரியான விமர்சனத்திற்கு இந்த ஒற்றை பருக்கை போதும்!

CS. Mohan Kumar said...

நான் தயாராய் வைத்துள்ள லிஸ்ட்டில் இதில் ஓரிரண்டு தவிர மற்ற எல்லாமே வருது ! நம் இருவருக்கும் ரசனை பெருமளவு வேறுபாடும் என்று தான் நினைத்திருந்தேன் :)

//உங்க முழு விமர்சனப் பதிவிகளிலிருந்தே கொஞ்ச கொஞ்ச வரிகளை உருவி, தொகுத்துட்டீங்களே//

அட ! ஆமால்ல !

aavee said...

good post.. i liked the order too

Philosophy Prabhakaran said...

@ சீனு
// டாப் 12 இன் 2012 அருமை //

நன்றி சீனு... இந்த 12 - 12 ஒற்றுமையை நான் யோசிக்கவில்லையே...

Philosophy Prabhakaran said...

நன்றி சக்கர கட்டி...

நன்றி ராஜூ... புதுசா எழுதுறதுக்கு நேரமில்லை...

நன்றி கஸாலி... இரவு வந்து பார்க்கிறேன்...

நன்றி வீடு மாம்ஸ்...

நன்றி மோகன் குமார் சார்... உங்க லிஸ்டை எதிர்பார்க்கிறேன்...

நன்றி கோவை ஆவி...

Anonymous said...

சார், கொஞ்ச நாள் பிரேக் எடுத்துட்டு வாங்க. வர வர உங்க போஸ்ட் மொக்கையாக இருக்கு.

Ponmahes said...

//விஜய்யின் ஃபேமிலி, காஜல் காட்சிகளை //அதிகப்படுத்திவிட்டு, ஆக்குசனை //குறைத்திருந்தால் படம் கில்லியா இருக்கிறதென //பாராட்டியிருக்கலாம்.

//ஆரோகணம் - நம் ஒவ்வொருவருக்குள்ளும் //இருக்கும் மனநோயாளியை தட்டிக்கொடுத்து, //உங்களுக்கு ஒன்னுமில்லை பாஸ்... நீங்க //நார்மலா தான் இருக்கீங்க....! என்று //ஆறுதலூட்டுகிறது
இந்த பத்திகளை பழைய பதிவுகளிருந்து சுட்ட மாதிரி தெரியுது தம்பி.

//Paranormal Activity மூன்று //பாகங்களையும் சேர்த்தால் கூட பீட்சாவிடம் //நெருங்க முடியாது...!


படம் கில்லியோ? ஜல்லியோ? but காஜலை கொஞ்சம் கேவலமாகத் தான் காட்டியிருந்தனர் (அறிமுக காட்சியை தவிர்த்து).

சுந்தர பாண்டியன், ஒரு கல் ஒரு கண்ணாடி, துப்பாக்கி தவிர்த்து அனைத்து படங்களும் 10 நாளைக்கு மேல ஓடுன மாதிரி தெரியல............

பட்டிகாட்டான் Jey said...

வரப்போர வீட்டு உயர் அதிகாரி இதை நோட் பண்ணிக்கனும். பயபுள்ளை சம்பாரிக்கிர அம்புட்டு பணத்தையும் இப்படி தேட்டர்காரனுக்கு அழுதுட்டு மிச்சத்தை டாஸ்மாக்குல ஒதரிட்டு வெறுங்கையோட வேடு வரபோறான்.

இதுல அடுத்த வருசம் அல்லா படத்தையும் பாக்கப்போறேனுட்டு டகால்ட்டி வேற.....

வரப்போர வீட்டம்ம இஸ்ட்ரிக்டா இல்லங்காட்டி கஷ்டந்தேன்.... :-)))

பட்டிகாட்டான் Jey said...

// நன்றி ராஜூ... புதுசா எழுதுறதுக்கு நேரமில்லை... //

ஆமா இவரு பெரியாபொபீசரு, நெம்ப பிஸி. குளிக்கக்கூட அந்தமான் பீச் போய்தான் அம்மனக்கட்டையா குளிப்பாரு.

#நம்மளை இனி எப்படியெல்லாம் திட்டப்போறானோ....

எலேய் தகிரியம் இருந்தா என் ஏரியா பக்கம் வாலே.... :-))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

லத்திகா இல்லாத லிஸ்ட்லாம் ஒரு லிஸ்ட்டா? அடுத்த வருசம் பவர்ஸ்டாரோட 10 படம் வருது, அப்ப என்ன பண்ணுவீங்கன்னு பாக்கிறேன்.....!

பிச்சைக்காரன் said...


தர வரிசையையும் , விளக்கத்தையும் பார்க்கையில் , இந்த வயதில் உங்களுக்கு இருக்கும் மெச்சூர்டான மன நிலை மேல் பொறாமை ஏற்பட்டது.. ஆனால் நம்பர் 2 இடத்தைப்பார்த்ததும் கொஞ்சம் ஆறுதல் ஏற்பட்டது

Philosophy Prabhakaran said...

@ Anonymous
// சார், கொஞ்ச நாள் பிரேக் எடுத்துட்டு வாங்க. வர வர உங்க போஸ்ட் மொக்கையாக இருக்கு. //

அனானி சார்... இதெல்லாம் பழைய பதிவுகளில் இருந்து காப்பி பேஸ்ட் செய்யப்பட்டவை... அதனால் அப்படி இருக்கலாம்... மற்றபடி என்னுடைய பிரேக்கை நீங்கள் தீர்மானிக்க வேண்டிய அவசியம் இல்லை...

Philosophy Prabhakaran said...

@ Ponmahes
// இந்த பத்திகளை பழைய பதிவுகளிருந்து சுட்ட மாதிரி தெரியுது தம்பி. //

எல்லாமே பழசுதானுங்ணா...

// படம் கில்லியோ? ஜல்லியோ? but காஜலை கொஞ்சம் கேவலமாகத் தான் காட்டியிருந்தனர் (அறிமுக காட்சியை தவிர்த்து). //

காஜலை எப்படியோ காட்டினாலும் அழகுதான்...

// சுந்தர பாண்டியன், ஒரு கல் ஒரு கண்ணாடி, துப்பாக்கி தவிர்த்து அனைத்து படங்களும் 10 நாளைக்கு மேல ஓடுன மாதிரி தெரியல............ //

பீட்சா படம் வெளிவந்து பல நாட்கள் கழித்து கூட அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது... ந.கொ.ப.கா, காதலில் சொதப்புவது எப்படி படங்களும் நிறைய நாட்கள் ஓடின...

Philosophy Prabhakaran said...

@ பட்டிகாட்டான் Jey
// வரப்போர வீட்டம்ம இஸ்ட்ரிக்டா இல்லங்காட்டி கஷ்டந்தேன்.... :-))) //

பட்டிக்ஸ்... நீங்க என்னை கோர்த்து விடனும்ன்னு ரொம்ப நாளா முயற்சி பண்றீங்க... ஆனால் உங்கள் எண்ணம் இம்மையில் நிறைவேறாது...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// லத்திகா இல்லாத லிஸ்ட்லாம் ஒரு லிஸ்ட்டா? அடுத்த வருசம் பவர்ஸ்டாரோட 10 படம் வருது, அப்ப என்ன பண்ணுவீங்கன்னு பாக்கிறேன்.....! //

லத்திகா 2011... இருப்பினும் ஆண்டுகள் கடந்து ஓடி சாதனை படைத்ததால் சேர்த்திருக்கலாம்...

Philosophy Prabhakaran said...

@ பிச்சைக்காரன்
// தர வரிசையையும் , விளக்கத்தையும் பார்க்கையில் , இந்த வயதில் உங்களுக்கு இருக்கும் மெச்சூர்டான மன நிலை மேல் பொறாமை ஏற்பட்டது.. ஆனால் நம்பர் 2 இடத்தைப்பார்த்ததும் கொஞ்சம் ஆறுதல் ஏற்பட்டது //

ஆமாண்ணே... ஒன்னையும் ஒன்னையும் கூட்டினா மூணு தான்...

Dino LA said...

நல்லபகிர்வு...