29 December 2012

கனவுக்கன்னி 2012 - பாகம் 2

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பாகம் 1


5. மீனாட்சி தீட்சித்
“தொட்டுக் கொள்ளவா... தொட்டுக்கொள்ள வா...” என்ற சைட் டிஷ் விளம்பரத்தில் தோன்றிய மெயின் டிஷ். பில்லாவின் மதுரை பொண்ணு பாடலில் ஆட்டம் போட்ட மும்பை பொண்ணு. மூன்று நிமிட பாடலில் நம்மை மூச்சுத்திணற வைத்துவிட்டார். தொடர் வாய்ப்புகள் கிடைக்காதது நமது துர்பாக்கியம்.


4. தன்ஷிகா
கட்டைக்குரலழகி, குரலில் மட்டுமல்ல. அரவமில்லாமல் வெளிவந்த அரவான் படத்தில் ரவிக்கையில்லாமல் தோன்றி விய(ர்)க்க வைத்தவர். பாலா பட கெட்டப்பில் கூட அழகாகத் தெரியும் பேரழகி.


3. மனிஷா யாதவ்
வழக்கு எண் படத்தில் பள்ளி சீருடையுடன் தோன்றிய குட்டி தேவதை. சமகாலத்தில் பக்கத்து வீட்டுப்பெண் என்ற பதத்திற்கு மிகச்சரியாக பொருந்துபவர். முதல் படமே கலைப்படமாக அமைந்துவிட்டதால் குட்டியின் கலைகளை இனிவரும் படங்களில் எதிர்பார்க்கலாம்.


2. சமந்தா
இளைஞர்களின் ஏகோபித்த ஓகோ பித்த ஆதரவு பெற்றவர். காஜலை, அஞ்சலியை, அனுஷ்காவை பிடிக்காதவர்கள்  கூட இருக்கலாம். ஆனால் சமந்தாவை பிடிக்காதவர்கள் யாருமில்லை. சந்தேகமிருந்தால் நான்கு பேரில் யாருக்கு உதடுகள் ஒட்டுகிறது என்று உச்சரித்து பாருங்கள்.


1. காஜல் அகர்வால்
காஜல் ரசிகர்களுக்கு அக்டோபரில் ஒன்று, நவம்பரில் ஒன்று என இரட்டை தீபாவளி. படங்களை விட்டுத்தள்ளுங்கள், ஒரு ஆறு பாடல்களில் தோன்றி இன்ப ஆறு ஓட வைத்தவர். மாற்றான் என்ற மொக்கை படத்திற்கு கிடைத்த பக்க விளைவுகள் இல்லாத எனர்ஜியான் - காஜல். ரசிகர்களின் மனதில் ஸ்லீப்பர் செல்.

தொடர்புடைய சுட்டிகள்: 2011 - I, 2011 - II, 2010 - I, 2010 - II


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

7 comments:

கும்மாச்சி said...

காஜல் ஜொள்ளர்மன்றத்தின் சார்பாக உங்களுக்கு பாராட்டுகள்.

வவ்வால் said...

பிரபாகர்ரா,

தலைப்பே தப்பாக்கீது ஓய்,

"எனது கனவுக்கன்னி!!??-2012 என தான் வைக்கணும்.


உமது கனவில் வந்து பாயை பிறாண்ட வச்சதுக எல்லாம் எமது கனவிலும் வரும் என உத்திரவாதமில்லையே!

இதென்ன இன்செப்ஷன் போல டிரீம் ஷேரிங்க் மெக்கானிசமா?

படையப்பால "தல சூப்பர்" சொன்னது போல பிரச்சோதகம்,பயானகம் தான் பட்டியலில் இருக்கு, சாத்வீகம் ஒன்னியும் காணோம்... அது இல்லாத கனவு கன்னி பட்டியல் எல்லாம் போங்காட்டம்,

சீக்கிரம் "மலபார் அசின்" படம் போட்டு ஒரு தீர்ப்பு எழுதினா நான் நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பேன்...ஹி..ஹி... பதிவுக்கு தான்!

aavee said...

மறுபடியும் காஜல் புராணமா?? நாடு தாங்காதுப்பா..

கனவு "கண்ணிகளை" பற்றி சூப்பரா ஜொள்ளி இருக்கிறமாதிரி தெரியுது!!

Anonymous said...

சமந்தாவுக்கு இரண்டாவது இடமா? நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன்
என்றுமே சமந்தா தான் no 1

ஜெட்லி... said...

nee thaan kajal aatharavalar oorukkae theriyum... ethukku athukku thani pathivu???....

M (Real Santhanam Fanz) said...

ஹீ ஹீ.. ஓகே பாஸ்...

Avargal Unmaigal said...


உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்