21 January 2013

பிரபா ஒயின்ஷாப் - 21012013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நேற்று புத்தகக்காட்சியில் செவனே என்று சுற்றிக்கொண்டிருந்தவனை முக்தா ஸ்ரீநிவாசன் அழைத்தார். என்னை மட்டுமல்ல போகிற வர எல்லாரையும் தன்னுடைய கடைக்குள் அழைத்துக்கொண்டிருந்தார். பொதுவாக இந்தமாதிரி அழைப்புகளை நான் சீண்டுவதில்லை. ஆனால் முன்னாள் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என்றில்லை. ஒரு என்பது வயது முதியவர் ஆதரவில்லாமல் தனித்தனியாக அமர்ந்திருப்பதை பார்க்கும்போது பாவமாக இருந்தது. உள்ளே சென்றேன். படிக்கிற மாதிரி புத்தகங்கள் எதுவும் இல்லை. இருப்பினும் பெரியவரின் திருப்திக்காக விரும்பி வாங்குவதைப் போலவே நடித்து ஏதோவொரு புத்தகத்தை வாங்கினேன். வருங்காலத்தில் “சிங்கத்துக்கு தீனி போடவில்லை...” என்று கமல் மாதிரி ஆட்கள் அறிக்கை விட்டாலும் விடுவார்கள்.


இவனும் பாதிக்கப்பட்டிருக்கிறான்...!
சனிக்கிழமை இரவு போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஏதோவொரு திரையரங்கிற்குள் நுழைந்துவிட்டேன். உள்ளே நுழைந்தால் அனுஷ்கா ஓடி வந்துக்கொண்டிருக்கிறார். அவரது மூக்கை வேறு லோ-ஆங்கிள் ஷாட்டில் காண்பித்து... கொடுமைடா...! அப்புறம் ஏதோ சண்டையாம்... சின்னப்பிள்ளை பார்த்தா கூட கெக்கே பிக்கேன்னு சிரிக்கும். சரியாக பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும். தெளிவாகிவிட்டது. சுதாரித்து வெளியே வந்துவிட்டேன். திரையரங்க உரிமையாளர் மணி செட்டியார், “தம்பி... ஏம்பா போற...”ன்னு பின்னாடியே தொறத்திக்கிட்டு வந்தார். ம்ஹூம் நிக்கலையே. அலெக்ஸ் பாண்டியன் - போதையில் கூட பார்க்க முடியாத சூரசம்ஹார மொக்கை...! 60ரூ கொடுத்து டிக்கெட் எடுத்ததை நினைக்கும்போது வெட்கமாக இருக்கிறது. புட்டத்துளை.

அடடா, வேட்டி சட்டை என்பது எவ்வளவு அருமையான உடை. இத்தனை ஆண்டுகள் தவற விட்டிருக்கிறேன் என்பது வருத்தமளிக்கிறது. கல்லூரியில் பயின்றபோது நண்பர்கள் குழு ஒருசேர வேட்டி அணிவார்கள். அப்பொழுதெல்லாம் கூட நான் அரை டவுசர் தான். பொங்கலன்று அலுவலகத்திற்கு வேட்டி சட்டையில் சென்றேன். அங்குதான் சிக்கல் ஆரம்பித்தது. ஏன் பாஸ் கருப்பு சட்டையில வந்திருக்கீங்கன்னு சிலர் கேட்கிறார்கள். இதற்கு பதிலளிக்கும்போது அதனை விரும்புபவர்கள் / வெறுப்பவர்கள் / விவாதம் செய்பவர்கள் வேறு விஷயம். ஆனால் அலுவலக சூழலில் நம் உயரதிகாரிகளுக்கு விருப்பமில்லாத செயல்களை செய்யும்போது நமக்கு வேறு வகையில் சுண்ணாம்பு தடவி குப்பியடிக்கும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே வழக்கம்போல பல்லிளித்துக்கொண்டேன்.

புத்தகக்காட்சியில் நீங்க என்ன பொஸ்தவமெல்லாம் வாங்கினீங்க ? லிஸ்டு கொடுங்கன்னு காமன் மேன் காத்தவராயன் தொடர்ந்து மெயில் அனுப்பி கேட்டுக்கொண்டே இருக்கிறார். அவருக்காக என்னுடைய பரிந்துரை லிஸ்ட் இதோ :-

1. ஆரஞ்சு பழங்கள் ஆரஞ்சு நிறத்தில்தான் இருக்கின்றன
2. எனக்கு நான் என்றும் பெயர்
3. சாராய போதையில் உழன்றபடி
4. புளியமரத்திலிருந்து தொங்கும் கொங்கைகள்
5. கோவணம் அணிந்த கொசுக்கள்
6. மழைநாளில் குடையை மறந்துவந்த குரங்குக்குட்டி
7. பகல் பஸ் ஸ்டாண்டில் பறக்கும் ரயில்
8. குசுக்கதைகள்
9. ஷகீலா படங்களுக்கு குரல் கொடுப்பவள்
10. ஒரு சாதா தோசையும் கொஞ்சம் கெட்டி சட்டினியும்
11. எருமையின் நிறம் கருப்பு
12. பசுமாடுகள் பல்லிளிப்பதில்லை
13. ஆபிரகாம் லிங்கன் ஆப்பிள் சாப்பிட்டதில்லை

தனக்கு ஒரு புத்தகம் படிக்க தர முடியுமா என்றும் கேட்டிருந்தார். அவருக்கு ஒரு சாதா தோசையும் கொஞ்சம் கெட்டி சட்டினியும் தரலாம் என்றிருக்கிறேன்.

சமீபத்தில் ஆச்சரியமூட்டிய தகவல்: http://www.telegraph.co.uk/science/9814620/I-can-create-Neanderthal-baby-I-just-need-willing-woman.html

போர்க்காய் என்கிற தஞ்சை தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் குறும்படத்தின் ட்ரைலர். மெயின் பிக்சர் 25ம் தேதி ரிலீஸ். காத்திருங்கள்.



என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

8 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அந்த எருமையின் நிறம் கருப்பு நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் ஸ்ஸ்ஸ் அபா....

Ponmahes said...

அப்போ இனிமேல் profilela இருக்கிற அரை வேக்காட்டு படத்துக்கு வேல இல்லன்னு சொல்லு.....

காமன் மேன் காத்தவராயன் கொடுத்த லிஸ்ட் இருக்கட்டும்... நான் கொடுத்த லிஸ்ட் என்னாச்சு பிரபா .....

அது என்ன சூரசம்ஹார மொக்கை???? கொஞ்சம் வெளக்கவும் ........

//60ரூ கொடுத்து டிக்கெட் எடுத்ததை நினைக்கும்போது வெட்கமாக இருக்கிறது. புட்டத்துளை.

கோடிய கொட்டி படம் எடுத்தவனுக்கு இல்லாத வெட்கம் வெறும் 60 ரூபா கொடுத்தவனுக்கு எதுக்குடா தம்பி .....


//சரியாக பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும். தெளிவாகிவிட்டது.

படத்த பார்த்த உடனே போதை தெளிந்து விட்டதா... இல்ல படத்த பத்தி தெளிவாக தெரிந்து விட்டதா தம்பி

arasan said...

அலெக்சுவ திருட்டு சிடில கூட பாக்க முடியாது பிரபா ...?
எப்படியோ தப்பி வந்திகளே அதுவே பெரும்பாக்கியம்...

வேட்டி சட்டை கச்சிதம் .. கல்யாணத்துக்கு முந்திய ஒத்திகை என்று எடுத்துக்கொள்ளலாமா ?

கவியாழி said...

காமன் மேன் காத்தவராயன் கொடுத்த லிஸ்ட் இருக்கட்டும்... நான் கொடுத்த புத்தகம் என்னாச்சு பிரபா ? அதை பத்தி சொல்லவில்லை ?

வவ்வால் said...

பிரபா,

அலெக்ஸ் பாண்டியனை எல்லாம் ஒரு கொண்டாட்டமான மனநிலையில் அனுபவிக்கணும், ஆராயக்கூடாது,ஒன்னுக்கு நாலா பிகர்களை போட்டு இயக்குனர் வித்தை காட்டியும் ரசிக்க தெரியவில்லை எனில் வயோதிக எண்ணங்கள் தலை தூக்குவதன் அறிகுறி :-))

# கருப்பு சட்டை,வெள்ள வேட்டினு சும்மா இளையப்பெரியார் போல தக தகன்னு சொலிக்குறீர்,எனவே இன்று முதல் இணையத்தின் இளையப்பெரியார் என அழைக்கப்படுவீராக!!!

கார்த்திக் சரவணன் said...

புக்கு பேரு நல்லாருக்கு....

Philosophy Prabhakaran said...

பொன் மகேஸ், ப்ரோபைல் படமாக இதுவே நீடிக்கும்...

நாம் தமிழர் கட்சி எங்கே போகிறது வாங்கிவிட்டேன்... வென்றது ஆரியம் துணை நின்றது திராவிடம் கிடைக்கவில்லை... அப்படி ஒரு புத்தகம் இருப்பதாகவும் தெரியவில்லை... தமிழா நீ ஒரு இந்துவா திடலில் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்... கிடைத்தவுடன் இரண்டையும் சேர்த்து அனுப்புகிறேன்...

aavee said...

அடுத்த வருஷம் ஆஸ்கருக்கு போக வேண்டிய படத்த இப்படி விமர்சனம் பண்ணிடீங்களே?

கார்த்தி கார்ல இருந்துகிட்டே அருவாளால எதிர்ல வர்ற ஸ்கார்பியோ டயர வேட்டுவாரே.. இந்த மாதிரி காட்சி உலக சினிமா எதுலயாவது வந்திருக்கா?