6 February 2013

தஞ்சை கோவில்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தய பகுதிகள்:
ஆதினங்களின் ஆன்மிக சுற்றுப்பயணம்
வேளாங்கண்ணி தேவாலயம்
நாகூர் தர்கா
காரைக்கால் கட்டிங்

ஞாயிறு காலை பட்டுக்கோட்டை அருகில், மயிலனின் திருமண விழா மிக பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் நடைப்பெற்றது. அங்கிருந்து விடைப்பெற்றோம். மதியம் மூன்று மணி வாக்கில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றடைந்தோம். இப்போது ஆதினங்களுடன் மருத்துவர் மாலடிமையின் அடிமை ஒருவர் இணைந்திருந்தார்.



தமிழர்களின் பெருமையாய் வீற்றிருக்கிறது தஞ்சை ஆலயம். பெரிய கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கோவில் கோபுரத்தின் நிழல் தரையில் விழாது என்று பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். ஆனால் அது வெறும் கட்டுக்கதையே. கோபுர கலசத்தின் நிழல் மட்டுமே கீழே விழாது என்று ஆதினம் விளக்கினார். அதுவும் கூட உண்மையா என்று தெரியவில்லை.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், அறிவியல் வளர்ச்சி ஏதுமில்லாத காலகட்டத்தில், எப்படி இத்தனை பிரம்மாண்டமான கோவிலை கட்ட முடிந்தது என்று எண்ணி வியக்கிறேன். படிக்க.



லிங்க தரிசனம் ???
கோவிலின் சிறப்புகளை சொல்ல பக்கங்கள் போதாது. எனவே எங்கள் தனிப்பட்ட அனுபவங்களை மட்டும் பகிர்கிறேன். ஆதினம் தன்னுடைய வரலாற்று சொற்பொழிவை வாசலிலிருந்தே தொடங்கிவிட்டார். ஆதினத்தின் பேச்சை கேட்ட மற்ற சுற்றுப்பயணிகள் “இன்னும் கொஞ்சம் சொல்லுங்க பாஸ்...” என்கிற தொனியில் எங்களை குழும ஆரம்பித்துவிட்டார்கள். இங்கே பக்தர்கள் என்று சொல்லாமல் சுற்றுப்பயணிகள் என்று சொன்னதை கவனிக்கவும். வழக்கமான கோவில்களை போல இங்கே இறைவன் தரிசனம் வேண்டி பெரிய கூட்டம் வருவதில்லை. மாறாக சுற்றுலா பயணிகள், ஆராய்ச்சிக்கல்லூரி மாணவர்கள், புகைப்பட கலைஞர்கள் போன்றவர்கள் அதிகம் தென்படுகிறார்கள்.

உள்ளே நுழைந்து இடப்பக்கம் திரும்பியதும் பிரசாத கடை இருக்கிறது. திருமண வீட்டில் நாகரிகம் கருதி குறைவாக சாப்பிட்டிருந்ததால் பசி பிரட்டியது. படக்கென்று இரண்டு புளிசாத பொட்டலங்களை வாங்கி லபக்கினோம். குடிநீர் லிங்கமாக காட்சியளித்த சின்டெக்ஸ் டேங்க் தாகம் தணித்தது.



என்னுடைய கைவண்ணம் (ஐ மீன் புகைப்படம்)
இடமிருந்து வலம்வர தயாரானோம். வழிநெடுக ஏகப்பட்ட கற்சிலைகள். அவற்றிற்கு பின்னால் பொதிந்திருந்த வரலாற்றுக்கதைகள். சோழ பாரம்பரியம். பழங்கால போர்முறைகள். பின்னர், ஒரு இடத்தில் வரிசையாக நிறைய சுவர் சித்திரங்கள். ஒன்றோடொன்று தொடர்போடோ அல்லது தொடர்பில்லாமலோ. எனினும், நாங்களாகவே ஓவியங்களை வைத்து அவரவர் கற்பனைக்கு எட்டிய கதைகளை அனுமானித்துக்கொண்டோம்.

கோவிலின் சுவர்கள் முழுக்க சிற்ப மயம். வழக்கம்போல நம்மவர்கள் ஆங்காங்கே தங்களுடைய பெயரை தங்கள் முன்னாள், இந்நாள் காதலி பெயர்களுடன் சேர்த்து கிறுக்கி வைத்திருக்கிறார்கள். கிறுக்கர்கள்.

ஒரு வலம் வந்து முடித்தபோது மணி நான்கை நெருங்கியிருந்தது. தரிசன நேரம் நான்கு மணிக்கு தொடங்க இருப்பதால் மக்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்திருந்தார்கள். நாங்களும் இணைந்துக்கொள்ள எத்தனித்தோம். ஏனோ திடீரென கடவுள் நம்மோடு தானே இருக்கிறார் என்ற உணர்வு ஏற்பட்டது. பையில் இருக்கும் மார்பியஸ் புட்டிகளை நினைத்துக்கொண்டேன். எங்களுக்கு கடவுள் தரிசனம் தேவைப்படவில்லை.

(முற்றும்)

தஞ்சை  கோவில் பற்றிய காணொளி:




என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

14 comments:

வவ்வால் said...

சோழர் காலத்து சிலைகளின் அருமையை விளக்கும் வண்ணம் நடமாடும் சிலைகள் எதுவும் கண்ணில் படவில்லையா?

தஞ்சைக்கோவில் என ஒரு "க்" வைத்து எழுத வேண்டும் ,ஹி...ஹி இப்போலாம் தமிழ் உணர்வு தாறுமாறா பொங்குது :-))

கவியாழி said...

எவ்வளவு அழகான சிறப்பு மிக்க கோயில் .அரசியல்வாதிகளின் மடத்தனத்தால் புகழ் மங்கி காணபடுகிறது.பதிவு அருமை வாழ்த்துக்கள்

Anonymous said...

அபச்சாரம்...அபச்சாரம்...

Philosophy Prabhakaran said...

வவ்வால், மலையாள ஃபிகர் ஒன்று SLR கேமராவை வைத்துக்கொண்டு இங்குமங்கும் உலவி இளசுகள் மனதை கெடுத்துக்கொண்டிருந்தது... மற்றபடி ஃபிகர் நடமாட்டம் மிகவும் குறைவு தான்...

ஒற்று பற்றிய தகவலுக்கு நன்றி...

Philosophy Prabhakaran said...

Chilled Beers, இதுக்கே இப்படியா... இன்னொரு ஃபோட்டோ இருக்கிறது... வெளியிட்டால் சட்ட ஒழுங்கு சீர்குலைய வாய்ப்பு இருப்பதால் தவிர்த்துவிட்டேன்....

Anonymous said...

யம்மாடி எவ்ளோ பெரிய லிங்கம்???

Unknown said...

அட்டுழியம் எல்லை மீறி போயிட்டு இருக்கு...!

Ponmahes said...

அருமை... அருமை...//திடீரென கடவுள் நம்மோடு தானே இருக்கிறார் என்ற உணர்வு ஏற்பட்டது. பையில் இருக்கும் மார்பியஸ் புட்டிகளை நினைத்துக்கொண்டேன். எங்களுக்கு கடவுள் தரிசனம் தேவைப்படவில்லை.



//இத்தனை பிரம்மாண்டமான கோவிலை கட்ட முடிந்தது என்று எண்ணி வியக்கிறேன். படிக்க.
இதில் படிக்க லிங்க் ஓபன் ஆகவில்லை .ஏன் ??????????

அஞ்சா சிங்கம் said...

ஐயோ .......மானத்தை வாங்குறானே .........அது என்ன லிங்க தரிசனம் .

வவ்வால் said...

ஸிங்கத்தா விட லிங்கம் பெருசா இருக்கே ,அவ்வ் :-))

அஞ்சா ஸிங்கம் ,லிங்கத்தின் தாத்பரியம் சொன்னால் இப்பதிவுக்கு 18+ போட வேண்டியதாகிடுமே :-))

உங்களுக்காக லிங்கம் பற்றிய சிறு விளக்கம்(தவறாக கூட இருக்கலாம்,நினைவில் இருந்து சொல்கிறேன்)

லிங்கம்= லிங் + அம்

லிங் என்றால் லயம், அம் என்றால் முடிவு, லயித்து முடிவது லிங்கம், அதுவே அனைத்து உயிர்களின் ,உலகின் தோற்றத்தின் ஆதிமூலம் (புரியுதா)

உலகின் தோற்றமும்,முடிவும் ஒரே புள்ளியில் நிகழ்கிறது என்ற பிரபஞ்ச தத்துவத்தை லிங்கம் சொல்கிறது.

குழவி வடிவ மேல் மேகம் சிவ (ஆண்)பாகம்.

அதன் அடியில் வட்ட வடிவில் இருக்கும் தட்டு ஆவுடை எனப்படும் சக்தி(பெண்) பாகம். இதனாலேயே சிவனக்கு ஆவுடையப்பன் என்ற பெயர்.

அடியில் உள்ள தண்டு விஷ்ணு பாகம், கீழ் உள்ள பீடம் பிரம்ம மாகம்.

எனவே லிங்கத்தில் மும்மூர்த்திகளும், சக்தியும் உள்ளார்கள், உலகின் ஆக்கல்,அழித்தல்,காத்தல் என அனைத்தையும் தாத்பரியமாக விளக்குவதே லிங்கம்.

இப்போ லிங்க தரிசனம் படத்தை மீண்டும் ஒரு முறைப்பார்க்கவும் :-))
------------

பிரபா,

மலபார் சிலையை படமெடுத்திருக்கலாம், கலைக்கண் கொண்டு காணத்தெரியவில்லையே :-))

Philosophy Prabhakaran said...

பொன் மகேஸ், சுட்டிக்காட்டியமைக்கு நன்றி... இப்போது கிளிக் செய்து பார்க்கவும்...

சிங்கம், நீங்கதான் ஆர்வக்குட்டியா வந்து போஸ் கொடுத்தீங்க... ஞாபகம் இல்லையா...

சிங்கத்திற்கு ஏற்கனவே லிங்க புராணம் பற்றி சொல்லியிருக்கிறேன்... நான் படித்த புராணத்தில் விஷ்ணு, பிரம்மம் இல்லை... ஒன்லி சிவன், பார்வதி...

arasan said...

மருத்துவர் மாலடிமையின் அடிமை ஒருவர் இணைந்திருந்தார்.
//

அண்ணே யாருண்ணே அந்த அடிமை ...

arasan said...

ஏனோ திடீரென கடவுள் நம்மோடு தானே இருக்கிறார் என்ற உணர்வு ஏற்பட்டது. பையில் இருக்கும் மார்பியஸ் புட்டிகளை நினைத்துக்கொண்டேன். எங்களுக்கு கடவுள் தரிசனம் தேவைப்படவில்லை.//

கிரேக்க கடவுளா? அவரை அள்ளிப் பருக வாய்ப்பு தந்த உமக்கு என் நன்றிகள் பிரபா ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

திவ்ய லிங்க தரிசனம் செஸ்த்துனாடு.........