7 October 2013

பிரபா ஒயின்ஷாப் – 07102013


அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பார்க்கச்சொல்லி சிங்கம் வற்புறுத்தியது. பதிவுலகம் என்பது சற்றே விந்தையானது. இங்கே ஒரு திரைப்படத்தை எடுத்துக்கொண்டால் சிலருக்கு பிடிக்கலாம் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் ஏறத்தாழ எல்லோருக்குமே ஒரு திரைப்படம் பிடிப்பது அபூர்வ நிகழ்வு. அந்த வகையில் ஓ.ஆ.வை தவறவிட விரும்பவில்லை. கூடவே சிங்கத்தையும் அழைத்துக்கொண்டேன். ஒன்றுமில்லை, ஏதேனும் குறியீடுகள் தென்பட்டால் எடுத்துக்கொடுப்பார் அதற்குத்தான். ஆரூர் மூனாவையும் அழைத்தோம். சாய் சாந்தி திரையரங்கம். ஒரு புறம் சிங்கம், மறுபுறம் ஆரூர் மூனா, இடையில் அடியேன்.

சத்யம் திரையரங்கில் சிறுநீர் கழிக்கும்போது நமக்கு முன்பாக ஒரு டிஜிட்டல் போர்டு இருப்பதை பார்த்திருக்கலாம். அதில் இதுவரைக்கும் எதுவும் படம் காட்டி பார்த்ததில்லை. ஒருவேளை எதிர்காலத்தில் விளம்பரங்கள் காட்டவேண்டி வடிவமைத்திருக்கலாம். ஆனால் சாய் சாந்தியிலே இப்பொழுதே விளம்பரங்கள் பார்க்கலாம். டிஜிட்டலில் இல்லை. ஐட்டம், மாமா போன்ற குறியீடுகளுடன் பத்து இலக்க எண்கள் கிறுக்கப்பட்டுள்ளன. ஆரூர் மூனா நின்றுக்கொண்டிருந்த இடத்திற்கு நேரே சுவற்றில் “குதி” என்று எழுதியிருந்ததை நல்லவேளையாக அவர் பார்க்கவில்லை. ஒருவேளை அவர் குதித்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

படம் முடிந்து வெளியேறும்போது நிசப்தம். பார்க்கிங்கில் வந்து அவரவர் வண்டிகளை கிளப்பும் வரைக்கும் யாரும் பேசிக்கொள்ளவில்லை. வண்டியை முறுக்கிவிட்டு “எங்கே ?” என்றபடி மெளனத்தை கலைத்தார் ஆரூர் மூனா ! “எக்மோர்” என்றது சிங்கம். சென்னையில் பிரசித்தி பெற்ற அரசாங்க மதுக்கூடம் அது. “தெரிலையே மச்சி... ஒரு குவாட்டர் சொல்லேன்...!” காட்சி படமாக்கப்பட்ட மதுக்கூடம். “படம் ஒன்னும் அவ்வளவு சூப்பரால்லாம் இல்ல பாஸு...!” என்று ஆரம்பித்தேன். வெகு நாட்களாக அனைவரையும் “ஜீ” என்று விளித்து சலிப்படைந்திருந்தமையால் பாஸுக்கு மாறியிருக்கிறேன். ஆரூர் மூனா தான் விளக்கினார். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு குறுக்கெழுத்து புதிரை போன்றது. நிரப்பியவர்களுக்கு பிடிக்கிறது என்றார். அப்படியெனில் எனக்கு நிரப்பத் தெரியவில்லை என்பதை என்னால் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பற்றி விவாதிக்க நிறைய இருந்தாலும் கூட அதை நான் விரும்பாததால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

அக்டோபர் மாத அந்திமழை இதழ் சமூக ஊடகங்களில் செயல்படும் புதிய மற்றும் திறமையான இளைஞர்களை அடையாளம் காட்டியிருக்கிறது. அவர்களில் அடியேனும் ஒருவன். உடன் கோவை நேரம் ஜீவா, கார்க்கி, தோட்டா, சோனியா, டிமிட்ரி ஆகியோரைப் பற்றிய பத்திகளும் இடம் பெற்றிருக்கின்றன. இந்த வாய்ப்பினை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த அதிஷாவிற்கும் அந்திமழை நிர்வாக ஆசிரியர் அசோகன் அவர்களுக்கும் என்னுடைய நன்றிகள்.

விக்ரம் நடித்த சாமுராய் படத்தில் ஆகாயச்சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் என்றொரு பாடல் கேட்கக் கேட்க பிடிக்கக்கூடியது. பாடலுக்கு இடையே ஆண்குரல் இப்படி பாடுகிறது – என்னைக் கண்டதும் ஏன் நீ ஒளிகிறாய் ? டோரா போரா மலை சென்றாலும் துரத்தி வருவேனே ! அதென்ன டோரா போரா மலைகள் ? புதிதாக ஏதேனும் ஒன்றைக் கேள்விப்பட்டதும் அதனை கூகிளிடுவது தானே ஒலகவழக்கம். செய்தேன். டோரா போரா (Tora Bora) என்பது ஆப்கானிஸ்தானிலுள்ள ஒரு மலைக்குகை. செப்டம்பர் 11 சம்பவத்தின் காரணமாக அமெரிக்கா ஆப்கன் மீது படையெடுத்த போது தாலிபான், அல்-காயிதாவிற்கு டோரா போரா நல்லதொரு மறைவிடமாக அமைந்திருந்தது. குறிப்பாக ஒசாமா இங்கே தான் மறைந்திருந்ததாக நம்பப்படுகிறது. ஆகாயச்சூரியன் பாடலை எழுதியவர் வைரமுத்து. இரட்டை கோபுரம் தாக்குதல் நிகழ்ந்த வருடம் 2001. சாமுராய் வெளிவந்தது ஜூலை 12, 2002. வைரமுத்து ரொம்ப ஃபாஸ்ட் !

போலவே, போரா போரா (Bora Bora) என்றொரு தீவு இருக்கிறது. நேரமிருப்பின் கூகுளிட்டு பார்க்கவும்.

பாரதிராஜா, பாலச்சந்தரெல்லாம் டொக்கு ஆகிவிட்டால் ஓரமாக உட்கார வைத்துவிடுகிறோம். ஆனால் சச்சினை மட்டும் இன்னமும் நிறைய பேர் பிடித்து தொங்கிக்கொண்டிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. சாம்பியன்ஸ் லீக்கில் சச்சினுடைய அணி வென்றுவிட்டது என்று சொல்வதெல்லாம் அபத்தம். நிற்க. நான் ஒன்றும் “சச்சின் ஹேட்டர்” கிடையாது. சும்மா சொல்லணும்’ன்னு தோனுச்சு. நேற்றோடு சச்சினுடைய T20 வாழ்க்கை முடிந்திருக்கிறது. சச்சினுக்காக ஒரு ட்ரிப்யூட் வீடியோ (பழையது தான்) :-


தலைவா படத்தில் இடம்பெற்ற இந்த மெலடியை கொஞ்சம் தாமதமாகத் தான் கேட்க முடிந்தது. ஆனால் கேட்டால் அன்று முழுக்க முனுமுனுக்க வைக்கிற ரகம். பாடியிருப்பவர்கள் பொருத்தமாக ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி.

இந்த பாடலை படமாக்கும்போது இயக்குநர் விஜய்யின் ரியாக்ஷன் என்னவாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறேன் – வேணாம் ப்ரோ... ஊரான் வீட்டு மாங்காயில ஊறுகா போடுறது தப்பு ப்ரோ !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

11 comments:

கார்த்திக் சரவணன் said...

சாமுராய் வெளிவந்தது 2012 அல்ல, 2002. திருத்திக்கொள்ளவும்...

சீனு said...

அந்திமழை அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் பாஸு :-))))))))

ஜீவன் சுப்பு said...

ஸ்கூல் பையன் சொல்றாப்புலைல திருத்துங்கப்பு ....!

ப்ரோ ::::::::::::::::-))))))))))

Philosophy Prabhakaran said...

திருத்தியாயிற்று... நன்றி ஸ்கூல் பையன் :)

Unknown said...

கலக்குங்க ப்ரோ

Anonymous said...

அந்திமழை பக்கத்திற்கு வாழ்த்துக்கள்...

கோவை நேரம் said...

வாழ்த்துக்கள் பாஸ்....
அப்புறம் பாத்ரூம் மேட்டர்..சூப்பர்...

Harini Resh said...

supper bro :)

r.v.saravanan said...

அந்திமழை அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

arivuindia said...

AMS முன்னடி எழுதியிருந்தது உஙலுக்கு எப்டி தெரின்சுது!!!!

Ponmahes said...

டோரா போரா ....போரா போரா...தகவல்கள் அருமை...மென் மேலும் வளர வாழ்த்துக்கள் லே...நல்லா.... இருப்ப டே.....