3 January 2014

ஏதாவது ஒரு நல்ல விஷயம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

வருடத்தின் முதல் பதிவிலேயே யாரையாவது அல்லையில் போட்டு மிதித்துக்கொண்டிருந்தால் நன்றாகவா இருக்கும்...? எனவே ஏதாவதொரு நல்ல விஷயத்தைப் பற்றி ஒரு பதிவை எழுதிவிடலாம். ஆனால் எதைப்பற்றி எழுதுவது என்றுதான் பிரச்சனை. எதைப்பற்றி எழுதினாலும் அதில் யாரையாவது வம்பிற்கிழுத்து முகத்தில் ஒரு குத்துவிட தோன்றுகிறது. இணையவெளியில் யாரையும் வம்பிற்கு இழுக்காமல் எழுத வேண்டுமென்றால் சமையல் குறிப்பு தான் எழுத வேண்டும் போலிருக்கிறது.

வாழ்த்துக்கள்'ன்னு சொன்னேன்
பேசாமல் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் நல்ல விஷயம் என்று நான்கு பத்திகளுக்கு எழுதி வைத்தால் என்ன...?

பாருங்கள். சென்ற பத்தி முழுவதும் நல்ல விஷயம் தானே எழுதினேன். ஆனால் குறிப்பிட்ட ஒருவரை பகடி செய்தது போலாகிவிட்டது பார்த்தீர்களா...? 

கடந்த ஒரு வாரகாலமாக டாப் டென் மயமாக இருந்த வலையுலகம் தற்போது புத்தாண்டு வாழ்த்துகளாலும் சபதங்களாலும் நிறைந்திருக்கிறது. என்ன பெரிய புத்தாண்டு சபதங்கள்....? சில டிப்ளமேட்டுகள் சொல்வது போல காலண்டர் மட்டும்தானே மாறியிருக்கிறது...? ஆமாம் ஆனால் இல்லை. புத்தாண்டு என்பது ஒரு லேண்ட்மார்க். எல்லாவற்றிற்கும் ஒரு ஆரம்பம் தேவை தானே...? சில நல்ல விஷயங்களை செய்ய நினைக்கிறோம். உதாரணத்திற்கு, சிகரெட்டை நிறுத்துவது, மாதச் சம்பளத்தில் ஒரு பகுதியை நலப்பணிகளுக்கு தருவது etc etc. ஆனால் நம்முடைய கட்டுப்பாட்டை மீறி அவற்றை செய்ய முடியவில்லை என்று வைத்துக்கொள்வோம். அதுவே புத்தாண்டிலிருந்து செய்ய வேண்டும் என்று நினைக்கும்போது ஒரு உத்வேகம் பிறக்கிறது இல்லையா...? அதை பெரும்பாலானவர்கள் வருடம் முழுவதும் பின்பற்றுவதில்லை என்பது வேறு விஷயம். என்னைப்பொறுத்தவரையில், புத்தாண்டு சபதங்களை ஒரேயொரு நாள் கடைபிடித்தால் கூட அது நமக்கு லாபம்தான். பூஜ்ஜியம் என்பதைவிட ஒன்று பெரியது தானே...?

நிகழ் வருடத்தில் எனக்கென பெரிதாக ஏதும் சபதங்கள் கிடையாது. ஆனால் சின்னச் சின்னதாக நிறைய இருக்கிறது. அவற்றில் தனிப்பட்ட விஷயங்கள் தவிர்த்து வலையுலகிற்கு என இருக்கும் அஜெண்டாக்களை காணலாம் :-

1. நிறைய படிக்க வேண்டும்.
2. வலையுலக நண்பர்களை வாசிப்பதோடு மட்டுமில்லாமல் பின்னூட்டமிட வேண்டும்.
2a. பின்னூட்டமிடுவது என்றால் DD போல அல்லாமல் வவ்வால், ராம்ஜி யாஹூ போல பெயர் சொல்லும்விதமாக பின்னூட்டமிட வேண்டும்.
3. புதிதாக ஐந்து நண்பர்களையாவது பதிவுலகிற்குள் இழுத்துப்போட வேண்டும்.
4. கலவைப் பதிவுகள், சினிமா விமர்சனங்கள் தவிர்த்து காத்திரமான எழுத்துகளை சமைத்திட வேண்டும்.
5. அடுத்த புத்தகக் காட்சிக்குள் நாவல் வெளியிட வேண்டும்.
6. எப்படியாவது ஏதாவது ஒரு ஜீப்பில் ஏறியமர்ந்து ரெளடியாகிவிட வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

17 comments:

உலக சினிமா ரசிகன் said...

‘அல்லையில் மிதிக்கப்போவதில்லை’ என்பதை முன்னுரையாக்கி...
ஒரே பதிவில்,ஏகப்பட்ட பேரை மிதிச்சு சாணியாக்கிட்டு...
என்னா வில்லத்தனம்!.

sethu said...

7.அடுத்த வருடம இந்த சபதங்களை
மறுபடி எழுதாமல் இருக்க வேண்டும்

இரா திலீபன் said...

//அடுத்த புத்தகக் காட்சிக்குள் நாவல் வெளியிட வேண்டும்//அப்ப... எப்பிடியாவது ஒரு எலக்கியவாதி ஆயிரனும்ங்ஙறீங்க... இல்ல.

கலாகுமரன் said...

அஜெண்டாக்கள் அண்டா நிறைய இருக்கு இரைச்சு கொட்ட வழி தான் தெரியல...

சீனு said...

இருக்கின்ற அத்தனை சபதங்களிலும் ஆறாவது சபதம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று, ஆனால் என்ன ஒன்று நாவல் என்பதற்கு இந்த ஆங்கிலச் சமுதாயம் வேறு ஒரு அர்த்தத்தையும் கண்டுபிடித்துத் தொலைதுள்ளது என்பதை நினைக்கும் போது அல்லு கிளம்புது :-)

திண்டுக்கல் தனபாலன் said...

ஆறாவது தவறு... ஏற்கனவே... பாராட்டுக்கள்...

சின்ன சின்ன அஜெண்டாக்கள் நிறைவேற எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

கும்மாச்சி said...

\\பின்னூட்டமிடுவது என்றால் DD போல அல்லாமல் வவ்வால், ராம்ஜி யாஹூ போல பெயர் சொல்லும்விதமாக பின்னூட்டமிட வேண்டும்.//

என்ன ஒரு வில்லத்தனம்.

ஹூம் நடத்துங்க, உங்களது நாவலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

சீனு said...

அய்யோயோ எசமான் தப்பு நடந்து போச்சு.. அது ஆறு இல்ல அஞ்சு..

சசிமோஹன்.. said...

எப்படியாவது ஏதாவது ஒரு ஜீப்பில் ஏறியமர்ந்து ரெளடியாகிவிட வேண்டும்.///// அப்போ நீங்க இன்னும் ரவுடி ஆகவே இல்லையா ?

அனுஷ்யா said...

அன்பின் பி,

அம்முக்குட்டியின் வாழ்த்து என்பதால் எழுத்துப்பிழையை கணக்கிலெடுக்காமல் தவிர்க்கிறேன்.

என்றோ வாங்கி வாசிக்காமல் வைத்திருந்த "எக்ஸைல்" பேரிலக்கியத்தை சமீபத்தில் வாசித்துள்ளீர் என்ற துர்சம்பவத்தைத் தங்களின் சமீப பின்னூட்டங்கள்/பதிவுகள் வாயிலாய் அறியமுடிகிறது.கடவுள் அந்த பாதிப்பிலிருந்து விரைவில் உங்களை மீட்பாராக.(எக்ஸிஸ்டென்ஷியலிஸம், தேகம், ஸீரோ டிகிரி வரை அவரைப் பொறுத்துக்கொண்டோராலும் எக்ஸைலை ஏற்கமுடியவில்லை.இருந்தும் அது குறித்து உங்களின் கருத்தினை விவரிக்க.அறிய அவா.)

அடுத்த புத்தக காட்சிக்குள் நாவல்? முதல் படைப்பு. take ur own time.

வாழ்த்துகளுடன்,
அ.



r.v.saravanan said...

ஐந்து அஜெண்டாக்கள் வரவேற்க பட வேண்டியவை

வாழ்த்துக்கள் பிரபா

Unknown said...

அன்பின் ம
அண்ணன் மூன்று வருடங்களுக்கு முன்னே எக்ஸைலை வாங்கி பாதி படிக்கும் போதே பேதி பிடுங்கிவிட்டதாக ஒரு பதிவிட்டிருக்கின்றார்.

aavee said...

அஜெண்டாவிலும் எதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரியுதே?

aavee said...

அஜெண்டாவிலும் எதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரியுதே?

'பரிவை' சே.குமார் said...

ஏதாவது நல்ல விஷயம்ன்னு சொல்லிட்டு உள்குத்து வச்சி எழுதியிருக்க மாதிரி தெரியுது.... ம்
நடக்கட்டும்...

வவ்வால் said...

Praba,

I think I'm late !

//2a. பின்னூட்டமிடுவது என்றால் DD போல அல்லாமல் வவ்வால், ராம்ஜி யாஹூ போல பெயர் சொல்லும்விதமாக பின்னூட்டமிட வேண்டும்.//

I think you supposed to be joking , what ever it is ,i feel it as a complement, usually Most of the people got infuriated by my comments ,but you look otherway with positive notion,thanks!

# don't take any kind of resolutions that's my all time resolution ,avv!

all the best for your resolutions come true!

unmaiyanavan said...

தங்களின் கடைசி சபதம் நிறைவேற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.