7 May 2018

பிரபா ஒயின்ஷாப் – 07052018

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மதனின் கி.மு. கி.பி. ஒரு டகால்டி என்று எழுதுவதற்கு போன வாரமே விரல் நுனி வரை வந்துவிட்டது. எதற்கும் முழுவதும் படித்துவிடலாம் என்று நினைத்தேன். 

புத்தகத்தின் உரையில் உலக வரலாற்றின் சுருக்கப்பட்ட வடிவம் என்பது போல பாவ்லா காட்டுகிறார்கள். முதல் சில அத்தியாயங்கள் வரை உலகம், மனிதன், நாகரிகம் தோன்றியது எப்படி என்று போகிறது. அதன்பிறகு மதன் அவருடைய ஆஸ்தான விஷயங்களான ஆண் ராணி, புரட்சி மன்னன், கிறுக்கு ராஜா போன்றவற்றில் புகுந்து கொள்கிறார். அதன்பிறகு வருவதெல்லாம் பாபிலோனியா, எகிப்து, கிரேக்கம், ரோம், பாரசீகம் தான். கடைசியாக போனால் போகட்டும் என்று கொஞ்சூண்டு இந்தியா பக்கம் வருகிறார்.

இது குறித்து வேறு யாராவது எழுதியிருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தேன். சொல்லி வைத்தாற்போல எல்லோரும் வேறொரு உலகத்திற்கு போய் வந்தது போல இருக்கிறது, டைம் டிராவலுக்கு அழைத்துச் செல்கிறார் என்றே சொல்லியிருக்கிறார்கள். ஒரே ஒருவர் மட்டும் மதன் படிக்கும் வரலாறெல்லாம் இந்தியாவுக்கு வெளியே தான் இருக்கும் இந்தியர்களைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை என்று சாடியிருக்கிறார். அது தவறு. அலெக்ஸாந்தரின் வரலாற்றை சொல்லும்பொருட்டு இந்தியாவுக்குள் வருகிறார் மதன். வந்தவர் மெளரிய சக்கிரவர்த்தியான சந்திரகுப்தர் பற்றி சொல்கிறார். சாணக்கியரின் சாதுர்ய குணம் பற்றி குறிப்பிடுகிறார். அதன்பிறகு அசோகருக்கு தாவிவிடுகிறார். இந்த சேர, சோழ, பாண்டியர்கள் எல்லாம் இடை இடையே வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கும் வரலாற்றுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல அவர்களை பத்தோடு பதினொன்றாக ட்ரீட் செய்திருக்கிறார். நேரடியாக சொல்வதென்றால் தமிழர்களின் வரலாற்றை இருட்டடிப்பு செய்திருக்கிறார்.

மேலும் மொத்த புத்தகத்திலும் கி.மு. மட்டும்தான் வருகிறது. இயேசுவின் பிறப்போடு புத்தகம் நிறைவடைந்துவிடுகிறது. ஒருவேளை இரண்டாவது பாகம் இருக்கிறதா ?

கில்காமெஷ்
இப்புத்தகத்தில் நல்ல விஷயங்களே இல்லையா என்றால் ஆம், இருக்கிறது. உலகின் முதல் புனைவான கில்காமேஷ் என்கிற காப்பியத்தைப் பற்றி சொல்கிறார். உலகின் முதல் மருத்துவ நூலான (எட்வின் ஸ்மித்) பாபிரஸ் என்கிற நூலைக் குறித்து சொல்கிறார். தலையில் ஆழமான வெட்டுக்காயம் ஏற்பட்டால் எப்படி சிகிச்சை தர வேண்டும் என்பது போன்ற பல நுணுக்கமான விஷயங்கள் பாபிரஸில் இடம் பெற்றிருப்பதாக சொல்கிறார். கில்காமேஷ் காப்பியம் பெங்குயின் கிளாசிக்ஸ் பதிப்பாக இப்போதும் கூட கிடைக்கிறது. தமிழில் க.நா.சு. எழுதிய வெர்ஷன் சந்தியா பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது.

சில வாரங்களுக்கு முன் லிலித் என்கிற கதாபாத்திரத்தைப் பற்றி பார்த்தோம். இதிலும் லிலித் வருகிறாள். லிலித்தை மெஸபொடமிய இலக்கியங்களில் வரும் செக்ஸ் தேவதை என்கிறார். இச்சை மிகுந்த லிலித் இரவில் ஊர் மீது வட்டமடித்து தூங்கும் ஆண்களை உசுப்பி உடலுறவு கொள்வாள் (சொப்பன ஸ்கலிதம் !) என்கிறார். இப்போதும் கூட ஆணும் பெண்ணும் உறவு கொள்ளும்போது அவர்களது கண்களுக்கு தெரியாமல் அருகே அமர்ந்து ஆணின் உயிரணுக்கள் ஏதேனும் தெறித்து விழுந்தால் அதைக் கொண்டு செயற்கை கருத்தரிப்பு செய்து பூதங்களை உருவாக்குவது அவளது ஹாபி என்று கூறப்படுகிறது. அடுத்த முறை உறவு வைத்துக்கொள்ளும்போதோ அல்லது கூழ் ஊற்றும்போதோ அருகே லிலித் இருக்கிறாளா என்று கவனமாக பார்க்கவும் !

இன்னொரு பக்கத்தில் சாக்ரட்டீஸின் கடைசி நாளை விவரிக்கிறார். இது ‘க்ரேட் டயலாக்ஸ்’ என்கிற புத்தகத்தில் சாக்ரடீஸின் சீடரான ப்ளேட்டோ எழுதியது. சாக்ரடீஸ் விஷக்கோப்பையை வாங்கி அருந்தியபிறகு அவரது சீடர்கள் கதறி அழுகிறார்கள். அவர்களைக் கண்டிக்கும் சாக்ரடீஸ் சொல்லும் கடைசி வாசகம் – மரணத்தின் போது அமைதி நிலவுவது எவ்வளவு அழகாக இருக்கும் ?

அக்கால கிரேக்கத்தில் ஆண்கள் மத்தியில் ஓரினச்சேர்க்கை சகஜமாக புழங்கியதாகவும், சரியாக சொல்வதென்றால் ஹோமோ செக்ஸ் இல்லாத ஆண்களை கிரேக்க சமுதாயம் இளக்காரமாக பார்த்ததாகவும் குறிப்பிடுகிறார். அச்சமயம் கிரேக்கத்தில் வாழ்ந்த பேச்சுக்கலையின் தந்தை என்று வர்ணிக்கப்பட்ட டெமஸ்தினீஸ் “மகிழ்ச்சிக்கு விலை மாதர்கள், காதலுக்கு நண்பன், குழந்தைக்காக மனைவி !” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படி ஆங்காங்கே சுவாரஸ்யமான விஷயங்கள் வருகின்றன. மற்றபடி இதனை உலக வரலாற்றின் சுருக்க வடிவம் என்றெல்லாம் சொல்வது அபத்தம் !

**********

ரெஜோவாசனின் அவள் – சில அழகிய குறிப்புகள் என்கிற கவிதைத்தொகுப்பை கிண்டிலில் ராயபுரத்திலிருந்து பேருந்து பாரிஸ் கார்னர் அடைவதற்குள்ளாக வாசித்து முடித்தேன். பழைய வலைப்பதிவர்களுக்கு ரெஜோவாசனை தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். பட்டாம்பூச்சி விற்பவன் என்கிற வலைப்பூவின் உரிமையாளர் !

இக்கவிதை தொகுப்பைப் பற்றி நெகட்டிவாக குறிப்பிட நான் விரும்பவில்லை. ஆனாலும் வேறு வழியில்லை. நூறு குறுங்கவிதைகள் அடங்கிய இப்புத்தகத்தில் பெரும்பாலும் காதலிக்கத் துவங்கும் காலத்தில் எழுதப்படும் ஆர்வக்கோளாறு கவிதைகள். சில உதாரணங்களை கவனியுங்கள் –

உன் நினைவுகள் தோன்றுகையில் எல்லாம்
ஒரு துளி மழை
சேர்த்துக் கொண்டிருக்கிறேன்..
கடல் மட்டம் உயர்வதாக
யாரோ சொல்லிச் செல்கிறார்கள்...

இன்னொன்று – 

உன்னுடன் பேச
ஒத்திகை எடுக்கும் போதுதான்
உணர்கிறேன்
இத்தனை சிறிய மொழியா
தமிழ்...

வலைப்பூ வந்தபிறகு எழுத்தின் தரம் குறைந்துவிட்டது என்பார்கள். பத்திரிக்கைகளுக்கு அனுப்பி அனுப்பி நிராகரிக்கப்படும் நிலையெல்லாம் இல்லாமல் தாமே எழுதி தாமே பப்ளிஷ் செய்துகொள்வதால் ஏற்பட்ட வினை. அதே நிலை இப்போது புத்தகங்களை வெளியிடுவதிலும் வந்துவிட்டதாக தோன்றுகிறது. வாசகர்கள் பாவம் !

ரெஜோவாசனின் வலைப்பூவை இடையிடையே கொஞ்சம் வாசித்துப் பார்த்தேன். கவிதைகளை விட உரைநடை நன்றாக வருகிறது. நேரமிருந்தால் முகவரி தொலைத்த கடிதங்கள் என்கிற தலைப்பில் ரெஜோ எழுதியிருப்பதை படியுங்கள்.

*********

ஐ.பி.எல். போட்டிகளுக்கிடையே ஒளிபரப்பப்படும் விளம்பரங்களில் இரண்டு விளம்பரங்கள் தனிப்பட்ட முறையில் விரும்பத்தக்கதாக இருக்கின்றன.

முதலாவது, ஃப்ரூட்டி !

முதல் முதலாக வீட்டில் கம்ப்யூட்டர் வாங்கியபோது விண்டோஸ் எக்ஸ்.பி. ஹோம் பேஜில் வருகின்ற நிலப்பரப்பில் வாழ வேண்டும் என்று கனவு காண்பேன். ஃப்ரூட்டி விளம்பரத்தில் வரும் நிலமும் அதைப் போலவே இருக்கிறது. மேலும் இவ்விளம்பரத்தில் வரும் பின்னணி இசை, அனிமேஷன் இரண்டும் ரசிக்கும் வண்ணம் உள்ளன. இதன் தேசிய வெர்ஷனில் ஆலியா பட் வருகிறார்.

இரண்டாவது விளம்பரம், ஜியோ.

தீபிகா படுகோனின் நேர்த்தியான அழகு ! மறுபடியும் பின்னணி இசை மற்றும் ப்ளேயர்ஸின் க்வெர்கியான நடன அசைவுகள். முதலில் ஒருநாள் ஜியோ விளம்பரம் பார்த்துவிட்டு, பாரேன் இன்னைக்கு விளையாடுகிற இரண்டு டீமுக்கும் ஜியோதான் ஸ்பான்சராம் என்று நினைத்துக்கொண்டேன். அடுத்து இன்னொரு நாள் வேறு இரு அணிகளுக்கு ஒளிபரப்பினார்கள். அதன்பிறகுதான் ஜியோ எல்லா டீமுக்கும் ஸ்பான்சர் என்று தெரிந்தது. இதிலே கொடுமை என்னவென்றால் கிரிக்கெட் ப்ளேயர்கள் அனைவரையும் க்ரீன் மேட்டில் தனியாக ஆட வைத்து பின் தீபிகாவுடன் ஓட்ட வைத்திருக்கிறார்கள்.

மற்ற சில விளம்பரங்கள் –

ஆமிர் கான் தோன்றும் விவோ வி9 சீரிஸ் விளம்பரங்களில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை கூர்ந்து கவனித்தாலொழிய புரிய மாட்டேன் என்கிறது.

ஸ்விகி விளம்பரம் கான்செப்ட் சுமாராக இருந்தாலும் இந்திய தாயை காண்பிக்காமல் ஒரு ஆங்கிலோ இந்தியன் ஆயாவைக் காட்டுவதால் பிடிக்கவில்லை.

டாக்டர்.ஃபிக்ஸிட் விளம்பரம் கண்டிப்பா தாறுமாறா தாறுமாறா ஆக்கிட்டாங்க !

பாலிகேப் போட்டால் மின்சாரம் சேமிக்கலாம், ஏசியன் பெயிண்ட்ஸ் வீட்டுக்கு மூன்று வருட வாரண்டி போன்றவை மொக்கைகள்.

கோ ஐபிபோவில் (மறுபடியும் தீபிகா டார்லிங்) மும்பை இந்தியன்ஸ் அடிக்கும் ரன்களுக்கு தகுந்தபடி கேஷ்பேக் தருகிறார்களாம். ஒருவர் ஹோட்டல் புக் செய்வேன் என்கிறார், இன்னொருவர் கோவாக்கு போவேன் என்கிறார். இவர்களைப் பார்த்து ரோஹித்தும் மற்ற இரண்டு வீரர்களும் நக்கலாக சிரிக்கிறார்கள். சுயபகடி !

**********

ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால் ஏழரை சனி என்பார்களே. அது நம் மாநிலத்திற்கு பிடித்திருக்கிறது. மத்தியில் பி.ஜே.பி, மாநிலத்தில் அ.தி.மு.க. (தற்போதைய அ.தி.மு.க.வை நியாயமாக பி.ஜே.பி. என்றுதான் அழைக்க வேண்டும் - ப்ளோ ஜாப் பார்ட்டி). நிறைய பேர் முன்னாள் முதல்வர் ஜெ. இருந்திருந்தால் என்று துவங்கி எழுதுகிறார்கள். என்னைக்கேட்டால் சசிகலா முதல்வராகியிருந்தால் கூட இவ்வளவு கேவலமாக ஆட்சி நடத்தியிருக்க மாட்டார். கொஞ்சம் கூட வெ.மா.சூ.சொ. இல்லாதவர்களாக இருக்கிறார்கள் ப்ளோ ஜாப் பார்ட்டியின் அமைச்சர்கள். அநேகமாக இவர்களுடைய ஆட்சி முழுமையாக நிறைவடையும்போது நாம் எல்லா உரிமைகளையும் மொத்தமாக இழந்திருப்போம்.

இவ்வளவு களேபரத்தில் நடக்கும் ஒரே நல்ல விஷயம் – சில இழிபிறவிகள் தங்களை வெளிக்காட்டிக் கொள்வதுதான். முன்பெல்லாம் இணையத்தில் பார்ப்பனர்கள் என்று துவங்கினாலே நடுநிலையாளர்கள் சொன்னவர் மீது பாயத்துவங்குவார்கள். அவர்களுக்கெல்லாம் பார்ப்பனர்களைப் பற்றி சரிவர தெரிந்துகொள்ள வரலாறு ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது. பார்ப்பனர்களின் பேட்டர்னை கவனியுங்கள். தமிழர்கள் நீட் தேர்வை எதிர்த்தபோது அவர்கள் ஆதரவாக பேசினார்கள். ஆல்ரைட் ! அதில் ஒரு சுயநலம் இருந்தது. விவசாயிகள் போராட்டம், ஸ்டெர்லைட், காவிரி மேலாண்மை வாரியம் அல்லது தமிழர்களின் ஏதோவொரு பிரச்சனையில் இவர்களுடைய நிலைப்பாடு என்ன என்று கவனியுங்கள். போராட்டத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பது கூட கட்டாயமில்லை. ஆனால் இவர்கள் ஒரு படி கீழே இறங்கி எல்லா போராட்டங்களையும் கொச்சைப் படுத்திக்கொண்டும் ஆபாசமாக பேசிக்கொண்டும் இருக்கிறார்கள். இவர்களுடைய அஜெண்டா தமிழர்கள் ஒரு விஷயத்தை ஆதரித்தால் அதனை எதிர்ப்பது, எதிர்த்தால் ஆதரிப்பது. சுருங்கச் சொல்வதென்றால் தமிழர்களை எதிர்ப்பது !

பெரியார் பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டுவிடு; பார்ப்பானை அடி என்று சொல்லியிருந்தால் கூட தவறில்லை !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

5 comments:

Ponmahes said...

அருமை யான பதிவு. வாழ்த்துகள் தம்பி.....

திண்டுக்கல் தனபாலன் said...

கவிதைகள் அட...!

ப்ளோ ஜாப் பார்ட்டி ரைட்டு...

Dr.Dolittle said...

துள்ளல் எழுத்து...திண்டுக்கல் தனபாலனின் கமெண்ட் (த. ம. ஒட்டு என் மிஸ்ஸிங்) . பிளாகின் வசந்த காலம் திரும்புகிறது

Avargal Unmaigal said...

ஹீஹீ நல்லாத்தான்யா பெயர் வைக்கிறீங்க //ப்ளோ ஜாப் பார்ட்டி ///

Ramesh DGI said...

அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
For Tamil News Visit..
மாலைமலர் | தினத்தந்தி