Showing posts with label #tnfisherman. Show all posts
Showing posts with label #tnfisherman. Show all posts

4 February 2011

ட்விட்டருக்கு வாருங்கள் பதிவர்களே...!


வணக்கம் மக்களே...


கடந்த ஒருவார காலமாக தமிழக மீனவர்களின் நலனுக்காக இணைய வழிப் போராட்டம் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. அதிலும் மையப்புள்ளியாக ட்விட்டர் சேவையும் #tnfisherman என்னும் ஹாஷ் குறியீட்டு போராட்டமும் சிறப்பாக இயங்கி வருகிறது. இந்நிலையில் ட்விட்டர் போராட்டத்தில் இன்னும் எழுச்சி தேவை என்று பன்னிக்குட்டி ராம்சாமி சில தினங்களுக்கு முன்பு ஒரு பதிவிட்டிருந்தார். உண்மையும் அதுதான். நம்மில் நிறைய பேரிடம் ட்விட்டர் கணக்கு இல்லாமல் இருக்கலாம். பெரும்பாலானோர் மீனவப் போராட்டத்திற்காக அவசர அவசரமாக ட்விட்டர் கணக்கை தொடங்கி இருக்கிறார்கள். நீங்களும் ஒன்றைத் தொடங்கலாமே. சில பேர் எனக்கு 140 எழுத்துக்களுக்குள் நறுக்கென்று ட்வீட்டடிக்க தெரியவில்லை என்று அலுத்துக்கொள்கிறார்கள். இருந்துவிட்டு போகட்டும், நானும் அப்படித்தான். நம்மைப் போன்றவர்களுக்காகத் தான் ரீட்வீட் (retweet) என்றொரு ஆப்ஷன் இருக்கிறது. அதாவது வேறு யாராவது சொன்னதை வழிமொழிவது. நம்முடைய பங்கிற்கு இதைச் செய்தாலே போதுமானது. கமெண்ட்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மீடியாக்களின் கவனம் நம் பக்கம் திரும்புவதற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆகவே மக்களே, இந்த இணைப்பை சொடுக்கவும். உங்கள் ட்வீட்டுக்கு பின்னால் #tnfisherman என்ற வார்த்தையை சேர்த்து அனுப்ப ஆரம்பியுங்கள்.

இதுவரைக்கும் நான் வழிமொழிந்த சில ட்வீட்ஸ் உங்கள் பார்வைக்காக.

அலைவரிசைக்கு ஒரு நியாயம் கிடைச்சிருக்கு.. இலங்கையின் கொலைவரிசைக்கு எப்ப நியாயம் கிடைக்கும்? #tnfisherman

சிற்றெறும்பு கடி போல டுவீட்டுகள் அரசியல்வாதிகள் தூக்கத்தைக் கலைக்கட்டும் #tnfisherman

Next time when you are ordering fish curry in a restaurant, remember its not the fish alone which is dead. #tnfisherman

மீனவர்கள் குடும்ப பிரச்சினைகளுக்காக தாங்களே கடலில் சென்று தற்கொலை செய்துகொள்கின்றனர்” -கருணாநிதி #tnfisherman

Dear KamalaHassan , you said that TN didnt care abt Mumbai Blasts. Did u see the plight of #tnfisherman . ?

ஒருவேளை தென் அமெரிக்க மீனவன் சுடப்பட்டு இருந்தால் @CharuNivedita குரல் கொடுத்து இருப்பாரோ? #TNfisherman

இது கல்யாண வீடல்ல கூவி கூவி அழைப்பதற்கு, சாவு வீடு கூப்பிடாமலேயே வாங்கப்பா #tnfisherman

தேர்தலை வச்சுக்கிட்டே இப்படி பண்றாங்களே, தேர்தல் முடிஞ்சிட்டா என்னென்ன அக்கிரமம் நடக்குமோ? #TNfisherman

விதவை கோட்டாவில் உங்க அன்னைக்கு இந்தியா. எங்காத்தாவுக்கு சத்துணவு கூடமா?” – மீனவனின் மகன் #tnfisherman

அடுத்து வரப்போற ஆட்சியை தீர்மானிக்கபோவது voter இல்லை twitter #tnfisherman

பிப்ரவரி 4 இலங்கையில் சுதந்திர தினம்...தமிழர்களுக்கு....? #tnfisherman

உங்களால என்ன முடியும்ன்னு கேட்டவங்கள்லாம் #tnfishermanக்கு வந்த ட்வீட்ஸ எண்ண முடியுமான்னு பாருங்கய்யா..

தமிழுக்காக, தமிழ்நாட்டுக்காக உயிரைக் கொடுப்பேன்என்றீர்களே.. யார் உயிரை என்று நாங்கள்தான் புரிந்துகொள்ளவில்லை! #tnfisherman

உங்க குடும்பத்துக்கு ஆயிரம் தொழில் இருக்கலாம். அவஙக்ளுக்கு இது ஒண்ணுதான்யா தொழில் #tnfisherman

காவு கொடுக்கவேண்டிய கசாபுக்கு இராஜ பாதுகாப்பு, பாதுகாக்க வேண்டிய மினவர்கள இந்த அரசாங்கம் பலிகொடுத்திட்டு இருக்கே. #tnfisherman

அருணாசலபிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதிதான் - பிரதமர் #அப்ப தமிழ்நாடு.? #tnfisherman

தப்பு செய்யுற மீனவர்கள கொல்லக்கூடாதாம், கைது செய்யணுமாம்-பிரணாப் முகர்ஜி. எங்க மீனவர்கள் என்ன சாராயமா காய்ச்சுராங்க? #tnfisherman

காங்கிரஸ் கட்சிக்கு ஆட்கள் தேவை. மானம்கெட்டவர்கள், கூட்டிக்கொடுப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் - சோனியா காந்தி #tnfisherman

சகதமிழர்களின் சாவைசடலங்களைஎந்தசலனமுமில்லாமல் பார்த்து கொண்டிருக்கும் சாத்தான்களே..உங்கள் உடம்பில் ஓடுவது என்ன சாக்கடையா..?#tnfisherman

எல்லை தாண்டி மீன் பிடிச்சான் என்பது சாக்குபோக்கு நிவாரணம் கொடுப்பது நேக்கு புரியாத தமிழன் பேக்கு #tnfisherman

உங்க அரிசில உங்க அடுப்புல சோறு பொங்கியாச்சு. சேந்து சாப்பிட புருசன் இல்லாம பண்ணிட்டீங்களேடா #TNfisherman


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

29 January 2011

மீனவர்களுக்காக குரல் கொடுப்போம்...!!!


எல்லாருக்கும் வரும் ஒரு சந்தேகம். ஒரு வலைப்பதிவனால் என்ன செய்துவிட முடியுமென்று. ஒரு வலைப்பதிவனால் முடியாததாக இருக்கலாம். பத்து பதிவர்கள், நூறு பதிவர்கள், ஆயிரம் பதிவர்கள் ஒன்றாகச் சேர்ந்தால்... முடியாதது எதுவுமில்லை. டுவிட்டர், பேஸ்புக், ஆர்குட் என்று இணையவெளி எங்கும் குரல் கொடுத்தால்... கோட்டை கதவுகளும் திறக்கும்.

டுவிட்டரில் ஒரு உணர்வுத்தீ...
இந்த இணைப்பை கிளிக்கி தமிழக மீனவர்களுக்கு ஆதரவாகவும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

உங்கள் கருத்துகளுக்குப் பின்னால் #tnfisherman #indianfisherman #worldfisherman இவற்றை காப்பி பேஸ்ட் செய்து அனுப்புங்கள்.

உதாரணம்:
-          மானாட மயிலாட . அங்கே உயிரோடு ஊசலாட. நேவிக்காரன் விளையாட.. கண்டும் நாடகமாட..STOP THE KILLING! #tnfisherman #indianfisherman #worldfisherman
-          we are counting the death , and you can start counting the days in power.STOP THE KILLING! #tnfisherman #indianfisherman #worldfisherman

தமிழக மீனவர்களைக் காப்பாற்ற சில இணையதளங்கள்:

இது மட்டுமில்லாமல் இது சம்பந்தமான எழுதப்படும் தமிழ் இடுகைகள் http://savetnfisherman.blogspot.com என்ற வலைப்பூவில் தொகுக்கப்பட்டு வருகிறது.

பேஸ்புக் பயனாளர்களுக்கு:
பேஸ்புக் பயனாளர்கள் உங்களுடைய ஆதரவை தெரிவிக்க இந்த இணைப்பை சொடுக்குங்கள்:-

உங்கள் வலைப்பூவின் ஓரத்தில்:
டிவிட்டரில் தொடங்கிய அந்த தீயை உங்கள் வலைதளத்தில் இணைக்க விரும்பினால் [இந்த வலைப்பூவின் வலதுபுறம் போல] Dashboard --> design --> page template --> add a gadget --> HTML/Java script என்ற விட்ஜெட்டில் கோடிங்கை சேர்த்து சேமிக்கவும்.

கோடிங்குக்கு:
http://ethirneechal.blogspot.com/2011/01/blog-post.html
http://vandhemadharam.blogspot.com/2011/01/blog-post_5945.html




ஒரு விண்ணப்பம்:
இந்த துயரை இந்தியா அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல இணைய படிவம் ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை படித்து நீங்களும் கையெழுத்துயிடலாம். http://www.petitiononline.com/TNfisher/petition.html கூடுதலான கோரிக்கைவைக்க விரும்பினாலும் அங்கே கருத்துரையில் தெரிவிக்கலாம். முன்னுரிமை தரப்படும். தற்போதைய குறைந்த பட்ச இலக்கு 1000 கையெழுத்து. இந்த படிவத்தை முக்கிய செய்தி நிறுவனங்களுக்கும் அரசுக்கும் அனுப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது. முந்துங்கள்!

மின்னஞ்சல் சங்கிலி:
பிடித்த விஷயங்கள், பிடித்த கருத்துகள் பிடித்த கேலி சித்திரங்கள் என கட்டி தவறவிட்ட இணையவாசிகளுக்கு வழங்கலாம். தவறான அணுகுமுறைகளை களைய அற்புதமான ஐடியாகளை சொல்லலாம். கீழுள்ள படிவத்தையும் மின்னஞ்சலில் சுற்றிவிடலாம்.

உணர்விருந்தும் என்னிடம் வலைப்பூவோ, டுவிட்டர் பேஸ்புக் கணக்குகளோ இல்லையே என்று வருந்துபவர்களுக்காக கீழே இரண்டு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன:-
http://164.100.47.132/LssNew/members/membershomepage.aspx
மக்களவை உறுப்பினர்கள் விவரம்
http://164.100.47.5/Newmembers/memberlist.aspx
மாநிலங்களவை உறுப்பினர் விபரம்
அப்பெயர்களை சொடிக்கி ஒவ்வொருவரின் மின்னஞ்சல் முகவரிகளைப் பெறலாம். யாருக்கு எப்படி அனுப்பினால் மீனவர்கள் அப்படி பாதிக்கப்படமாட்டர்கள் என்று நினைக்கிறீர்களோ அவர்களுக்கு முறைப்படி
ஒரு மின்னஞ்சலை அனுப்பிவிடுங்கள்.
இதை வலைப்பூ, டுவிட்டர், பேஸ்புக் கணக்குகள் வைத்திருப்போரும் செய்யலாம்.

இதை எல்லாம் செய்ய நீங்கள் இந்தியராகவோ, அரசியல் வாதியாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இறந்தவர்களை சகோதர உணர்வுடன் பார்ப்பவர்களாக இருந்தாலே போதும்.
நீங்கள் உண்மையிலேயே தமிழுணர்வு கொண்ட பதிவராக இருந்தால், உங்கள் உடம்பில் ஓடுவது தமிழ் ரத்தம் என்றால் தயவு செய்து தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக உங்கள் தளத்தில் ஒரு இடுகை எழுதுங்கள்.

எனக்கு சென்சிட்டிவான விஷயங்களைப் பற்றி எழுதத் தெரியாதே என்று நினைப்பவர்கள் குறைந்தபட்சம் மற்றவர்கள் பதிவில் இருக்கும் நல்ல கருத்துக்களை காப்பி பேஸ்ட் செய்து பதிவிடுங்கள்.

Post Comment