29 January 2011

மீனவர்களுக்காக குரல் கொடுப்போம்...!!!


எல்லாருக்கும் வரும் ஒரு சந்தேகம். ஒரு வலைப்பதிவனால் என்ன செய்துவிட முடியுமென்று. ஒரு வலைப்பதிவனால் முடியாததாக இருக்கலாம். பத்து பதிவர்கள், நூறு பதிவர்கள், ஆயிரம் பதிவர்கள் ஒன்றாகச் சேர்ந்தால்... முடியாதது எதுவுமில்லை. டுவிட்டர், பேஸ்புக், ஆர்குட் என்று இணையவெளி எங்கும் குரல் கொடுத்தால்... கோட்டை கதவுகளும் திறக்கும்.

டுவிட்டரில் ஒரு உணர்வுத்தீ...
இந்த இணைப்பை கிளிக்கி தமிழக மீனவர்களுக்கு ஆதரவாகவும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

உங்கள் கருத்துகளுக்குப் பின்னால் #tnfisherman #indianfisherman #worldfisherman இவற்றை காப்பி பேஸ்ட் செய்து அனுப்புங்கள்.

உதாரணம்:
-          மானாட மயிலாட . அங்கே உயிரோடு ஊசலாட. நேவிக்காரன் விளையாட.. கண்டும் நாடகமாட..STOP THE KILLING! #tnfisherman #indianfisherman #worldfisherman
-          we are counting the death , and you can start counting the days in power.STOP THE KILLING! #tnfisherman #indianfisherman #worldfisherman

தமிழக மீனவர்களைக் காப்பாற்ற சில இணையதளங்கள்:

இது மட்டுமில்லாமல் இது சம்பந்தமான எழுதப்படும் தமிழ் இடுகைகள் http://savetnfisherman.blogspot.com என்ற வலைப்பூவில் தொகுக்கப்பட்டு வருகிறது.

பேஸ்புக் பயனாளர்களுக்கு:
பேஸ்புக் பயனாளர்கள் உங்களுடைய ஆதரவை தெரிவிக்க இந்த இணைப்பை சொடுக்குங்கள்:-

உங்கள் வலைப்பூவின் ஓரத்தில்:
டிவிட்டரில் தொடங்கிய அந்த தீயை உங்கள் வலைதளத்தில் இணைக்க விரும்பினால் [இந்த வலைப்பூவின் வலதுபுறம் போல] Dashboard --> design --> page template --> add a gadget --> HTML/Java script என்ற விட்ஜெட்டில் கோடிங்கை சேர்த்து சேமிக்கவும்.

கோடிங்குக்கு:
http://ethirneechal.blogspot.com/2011/01/blog-post.html
http://vandhemadharam.blogspot.com/2011/01/blog-post_5945.html




ஒரு விண்ணப்பம்:
இந்த துயரை இந்தியா அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல இணைய படிவம் ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை படித்து நீங்களும் கையெழுத்துயிடலாம். http://www.petitiononline.com/TNfisher/petition.html கூடுதலான கோரிக்கைவைக்க விரும்பினாலும் அங்கே கருத்துரையில் தெரிவிக்கலாம். முன்னுரிமை தரப்படும். தற்போதைய குறைந்த பட்ச இலக்கு 1000 கையெழுத்து. இந்த படிவத்தை முக்கிய செய்தி நிறுவனங்களுக்கும் அரசுக்கும் அனுப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது. முந்துங்கள்!

மின்னஞ்சல் சங்கிலி:
பிடித்த விஷயங்கள், பிடித்த கருத்துகள் பிடித்த கேலி சித்திரங்கள் என கட்டி தவறவிட்ட இணையவாசிகளுக்கு வழங்கலாம். தவறான அணுகுமுறைகளை களைய அற்புதமான ஐடியாகளை சொல்லலாம். கீழுள்ள படிவத்தையும் மின்னஞ்சலில் சுற்றிவிடலாம்.

உணர்விருந்தும் என்னிடம் வலைப்பூவோ, டுவிட்டர் பேஸ்புக் கணக்குகளோ இல்லையே என்று வருந்துபவர்களுக்காக கீழே இரண்டு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன:-
http://164.100.47.132/LssNew/members/membershomepage.aspx
மக்களவை உறுப்பினர்கள் விவரம்
http://164.100.47.5/Newmembers/memberlist.aspx
மாநிலங்களவை உறுப்பினர் விபரம்
அப்பெயர்களை சொடிக்கி ஒவ்வொருவரின் மின்னஞ்சல் முகவரிகளைப் பெறலாம். யாருக்கு எப்படி அனுப்பினால் மீனவர்கள் அப்படி பாதிக்கப்படமாட்டர்கள் என்று நினைக்கிறீர்களோ அவர்களுக்கு முறைப்படி
ஒரு மின்னஞ்சலை அனுப்பிவிடுங்கள்.
இதை வலைப்பூ, டுவிட்டர், பேஸ்புக் கணக்குகள் வைத்திருப்போரும் செய்யலாம்.

இதை எல்லாம் செய்ய நீங்கள் இந்தியராகவோ, அரசியல் வாதியாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இறந்தவர்களை சகோதர உணர்வுடன் பார்ப்பவர்களாக இருந்தாலே போதும்.
நீங்கள் உண்மையிலேயே தமிழுணர்வு கொண்ட பதிவராக இருந்தால், உங்கள் உடம்பில் ஓடுவது தமிழ் ரத்தம் என்றால் தயவு செய்து தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக உங்கள் தளத்தில் ஒரு இடுகை எழுதுங்கள்.

எனக்கு சென்சிட்டிவான விஷயங்களைப் பற்றி எழுதத் தெரியாதே என்று நினைப்பவர்கள் குறைந்தபட்சம் மற்றவர்கள் பதிவில் இருக்கும் நல்ல கருத்துக்களை காப்பி பேஸ்ட் செய்து பதிவிடுங்கள்.

Post Comment

27 comments:

Unknown said...

நிருபமா இலங்கை பயணம் # அந்தாளு குடுக்குற டீய குடிச்சுட்டு விஷயத்த பேசாமா வந்துராதீங்க # பிரணாப் மாதிரி. #tnfisherman #TNfisherman

Anonymous said...

http://nekalvukal.blogspot.com/2011/01/blog-post_29.html

Unknown said...

தீ பரவட்டும்..

Anonymous said...

http://nekalvukal.blogspot.com/2011/01/blog-post_29.html

pichaikaaran said...

ஒளி பரவட்டும்

சக்தி கல்வி மையம் said...

தமிழக மீனவர்கள் படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்போம் வாருங்கள்.
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_29.html
தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி...

தினேஷ்குமார் said...

மீட்டெடுப்போம் மீளா துயரை

மாணவன் said...

உங்களின் பங்களிப்புக்கு நன்றி நண்பரே

நம்மால் முடிந்தவரை உணர்வுகளை வெளிபடுத்தி தீர்வு கிடைக்கும்வரை போராடுவோம்.....

செங்கோவி said...

நேற்றே ட்விட்டி விட்டேன்..பதிவும் போடுகிறேன்...

கவிதை பூக்கள் பாலா said...

எதை செஞ்சாலும் செவிடன் காதுல கூட ஒரு நாள் கருவி வைத்து கேட்டு விடும் என்று நினைக்கிறேன் இந்த கேடுகெட்ட அரசியல் வாதிகள் காதுகளுக்கு மட்டும் கேக்க மாட்டேங்குதே . எங்கேயாவது கமுசன்(கில்மா பெட்டி ) தறாங்கன்னா மட்டும் எப்படி தான் மூக்கு வேர்க்குமோ தெரியல... சொரனக்கெட்ட தமிழக அரசியல்வாதிகளுக்கு, என்னத சொல்றது, பிரச்சன பெருசா ஆச்சுனா உடனே இங்க இருந்து ஒரு கடிதம் எழுதிடுவாரு , அங்கே இருந்து இவருடைய பங்காளி பதில் கடிதம் எழுதுவாரு( இவனுங்க என்ன ஆட்சி நடத்துரானுங்களா இல்ல, மந்திரி பதவி கிடைக்கலன்னா அடுத்த பிளைட்டுள பறந்து உருண்டுகிட்டவது போய் வாங்காம திரும்ப மாட்டாரு ) ,ஒரு கை தடிய பிளைட்டுள இலங்கைக்கு அனுப்பிட வேண்டியது , அவன் குடுக்கற டி, பன்ன நக்கிட்டு வந்துடவேண்டியது ( பச்ச பச்சைய வருது வாயில ) . தமிழன் என்றாலே ஒரு எளக்காரம் தான் எல்லாருக்கும் http://redhillsonline.blogspot.com/2011/01/blog-post_26.html

ஜெய்லானி said...

டிவீட்டரில் எரியும் தீயை அனைக்க அதை முடக்க பிரதமருக்கு தமிழ் தலைவர் தந்தி அனுப்பியுள்ளார்..கேட்டால் இந்திய இறையான்மைக்கு இது எதிராம் ஹா..ஹா..

Muthu Kumar said...

உணர்வு பெருகட்டும் , உணர்ச்சி பொங்கட்டும் , கயவர்கள் அழியட்டும் ,,, மீனவர்களும் வாழட்டும்

Anonymous said...

>>> மீனவர்களுக்காக பதிவுலகம் ஒன்றாக போராடட்டும். நம் பலம் உலகுக்கு தெரியட்டும்.

எப்பூடி.. said...

மத்திய அரசு நினைத்தால் ஒரு நொடியில் தீர்வை எட்ட முடியும்.

Anonymous said...

Please read துனிசிய புரட்சி வென்றது எப்படி ? தமிழர்கள் அறிய வேண்டியவை #tnfisherman

Angel said...

I DON'T HAVE A BLOG , BUT I VE SIGNED THE PETITION .THANKS THAMBI.

Unknown said...

உங்கள் பகிர்வுக்கு நன்றி நாம் ஊதறத ஊதுவோம் நல்லதா நடக்கும்னு நெனப்போமுங்க........உங்கள் அன்புக்காக இந்த சிறியோன் இன்று இட்டுவிட்டேன் பதிவு....

http://vikkiulagam.blogspot.com/2011/01/blog-post_30.html

Unknown said...

//இதை எல்லாம் செய்ய நீங்கள் இந்தியராகவோ, அரசியல் வாதியாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இறந்தவர்களை சகோதர உணர்வுடன் பார்ப்பவர்களாக இருந்தாலே போதும்//
உண்மை!

'பரிவை' சே.குமார் said...

ஒன்று படுவோம்... வென்று காட்டுவோம்...

வைகை said...

எதிர்ப்பு தீ அணையாமல் பார்த்துக்கொள்வோம்!

NKS.ஹாஜா மைதீன் said...

நம் மீனவனை காப்போம்....சிங்கள நாய்களை ஓய்ப்போம்

ராம் குமார் said...

இது தமிழனுக்கு நடந்தது நாலதான் ஒரு பயலுக்கும் அக்கறை இல்லை.
அது ஆளும் கட்சி ஆனாலும்,எதிர் கட்சியா இருக்கும் முன்னால் ஆளும் கட்சி ஆனாலும் சரி.
இதுவே இந்தியால பஞ்சாப் சிங் கோ,மராதியனுக்கோ, கொல்கத்தா காரனுகோ ஏன் கேரளா காரனுகோ நடந்துருந்தா இந்நேரம் இந்தியா முழுதும் எதிர்ப்பு குரல் ஒலிசுருக்கும்.
இது தமிழன் உயிர். அரசியலுக்கும் வோட்டு கு மட்டும் தான் தேவை.

சி.பி.செந்தில்குமார் said...

>>>>>எனக்கு சென்சிட்டிவான விஷயங்களைப் பற்றி எழுதத் தெரியாதே என்று நினைப்பவர்கள் குறைந்தபட்சம் மற்றவர்கள் பதிவில் இருக்கும் நல்ல கருத்துக்களை காப்பி பேஸ்ட் செய்து பதிவிடுங்கள்.

karekt.கரெக்ட்..

Unknown said...

நம்ம தலைவரு இன்னைக்கு கூட்டணி பத்தி பேச போயிருக்காரு அப்ப இத பத்தியும் கொஞ்சம் கடேசில பேசுவாரு

Riyas said...

http://riyasdreams.blogspot.com/2011/01/tnfisherman.html

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ட்விட்டிற்கு இன்னும் நிறைய பேர் வரவேண்டும்...... இப்போது இருக்கும் ட்விட்டுகள் போதாது, தயவு செய்து ஒருநாளைக்கு ஒருவர் 10 ட்வீட்களாவது #tnfisherman க்கு செய்யுங்கள்!
thanks!

sarujan said...

புதிய புரட்சிகான தேவை கருதிய பதிவு வாழ்த்துகள்