அன்புள்ள வலைப்பூவிற்கு,
ஆயிரம் அறிவு வந்தாலும் வேலாயுதத்தின் வெற்றியை தடுக்க முடியாது என்று முந்தாநாள் கர்ஜித்திருக்கும் தானே சிந்தித்து படமெடுக்கும் தன்மானச் சிங்கம் “ஜெயம்” ராஜாவிற்கு இந்த இடுகையை எருமையுடன் சமர்ப்பிக்கிறேன்.
விடிஞ்சா தங்கச்சி மூஞ்சியில தான் முழிப்பேன்னு வைராக்கியத்துடன் இருக்கும் பாசக்கார அண்ணன் நாகார்ஜுன். அப்புறம் அம்மா செண்டிமன்ட் இல்லாமலா. அதுவும் கலைராணி அம்மாவா நடிச்சிருக்காங்க. (இவங்க வந்தாலே படத்துல கதறியழுகிற சீன் ஒன்னு கண்டிப்பா இருக்கும்). ரெண்டாவது சீன்லையே அம்மாவும் தங்கச்சியும் “லா... லா...” பேக்ரவுண்ட் மியூசிக்கோட சென்டிமென்ட்டை கரைச்சி அடிக்கிறாங்க. நாகார்ஜுனின் முறைப்பெண்ணாகவும் கடைந்தெடுத்த லூசுப்பெண்ணாகவும் ஷில்பா ஷெட்டி.
இங்கிட்டு சென்னையில் பத்திரிக்கையாளராக மறைந்த நடிகை செளந்தர்யா. அநியாயத்தைக் கண்டு பொங்கவும் இயலாமையால் வேகவும் செய்யும் செளந்தர்யா, ஆசாத் என்ற கற்பனை கேரக்டரை உருவாக்குறாங்க. ஆசாத் நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை ரப்பர் வைத்து அழிப்பதாக ஒரு சீன் க்ரியேட் பண்றாங்க. சிட்டி முழுக்க ஆசாத் புகழ் பரவுகிறது. அதாங்க ஷங்கர் படத்துல எல்லாம் காட்டுவாங்களே, அதே மாதிரிதான்.
தங்கச்சி கல்யாணத்துக்காக நாகார்ஜுன் சிட் பண்டில் சேர்த்து வைத்த ஐந்து லட்ச பணத்தை எடுக்க சென்னை வர்றாரு. அப்ப ரயில்வே ஸ்டேஷனில் ஒரு அப்பாவிப்பொண்ணு கதறக்கதற ஓடிவந்து நாகார்ஜுன் பின்னாடி ஒளிஞ்சிக்கிறாங்க. அதுக்கு மேல அங்க என்ன நடக்கும்ன்னு நான் சொல்லித்தான் தெரியணுமா...???
எதிர்பாராத திருப்புமுனையாக (!!!) நாகார்ஜுனின் பெயரும் ஆசாத்தாக இருக்க, அவனா நீ என்று ஊரே அல்லோலப்படுகிறது. அப்படியே செளந்தர்யாவோட ஒரு ஒன்சைடு லவ்வு, டூயட். செளந்தர்யா நாகார்ஜுனிடம் ஆசாத் கேரக்டரை தொடரச் சொல்லி கடுப்பை கிளப்புகிறார். ஆனால் ஹீரோ ஆணியே புடுங்க வேணாம்னு தலைதெறிக்க ஓடுகிறார். அங்கே சிட் பண்ட் கம்பெனிக்காரன் தலையில் துண்டைப் போடுகிறான். இந்த இடத்தில் மறுபடி ஒரு பப்ளிக் செண்டிமன்ட். ஏமாந்தவர்கள் கதறியழுகிறார்கள். ஹீரோவுக்கு புடைக்கிறது. (என்னன்னு கேட்கப்பிடாது)
அப்புறமென்ன வில்லன் கும்பலை துவம்சம் செய்துவிட்டு ஊருக்கே திரும்பிப்போய் தங்கச்சி கல்யாணத்தை நடத்துகிறார். விடுவாரா வில்லன். ஹீரோவின் தங்கச்சியை போட்டுத்தள்ளி சென்டிமென்ட் முறுக்கை பிழிகிறார். சொன்னதுபோலவே கலைராணி கதறிங்.
க்ளைமாக்ஸ் – ஹீரோ Assassin’s Creed ஸ்டைலில் வில்லனுடன் சண்டை போட்டு, உண்மைத்தமிழன் பதிவு சைஸில் வசனம் பேசியே அவரை சாவடிக்கிறார். க்ளைமாக்ஸ் முடிஞ்சதும் மறுபடி பப்ளிக் என்ட்ரி. (டேய் இந்த பப்ளிக்க பப்பாளிக்கா அக்குற பழக்கத்தை நிறுத்தி தொலைங்கடா... இதெல்லாம் எங்க தாத்தா காலத்து டெக்னிக்...)
பிரகாஷ் ராஜ் – நல்ல போலீஸ், ரகுவரன் – கெட்ட தொழிலதிபர் கம் தீவிரவாதி. இதுல கூத்து என்னன்னா ஹிந்து மத பக்தகேடியாக அறிமுகமாகும் ரகுவரன் பின்பாதியில் இஸ்லாமிய தீவிரவாதின்னு ஒரு மேட்டரை ஒப்பன் பண்றாங்க. (ஆகக்க, மாத்தி மாத்தி டவுசரை கிழிச்சிக்கோங்க சனங்களே...)
இந்த இத்துப்போன கதையில் நாகார்ஜுனாக – விசை, ஷில்பா ஷெட்டியாக – ஹன்சிகா மோத்வானி, செளந்தர்யாவாக – ஜெனிலியா, தங்கச்சி சுஜிதா கேரக்டரில் சரண்யா மோகன் இம்புட்டுதான். இதுக்கு மேலயும் இந்தப்படத்தை பார்க்கணுமான்னு யோசிச்சு முடிவு பண்ணுங்க. ஆனா ஒன்னு தியேட்டரில் படம் பார்த்தா இரண்டரை மணிநேர முழுநீள நகைச்சுவை உத்தரவாதம்.
என்சாய்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|