25 October 2011

AZAD – வேலாயுதம்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஆயிரம் அறிவு வந்தாலும் வேலாயுதத்தின் வெற்றியை தடுக்க முடியாது என்று முந்தாநாள் கர்ஜித்திருக்கும் தானே சிந்தித்து படமெடுக்கும் தன்மானச் சிங்கம் “ஜெயம்” ராஜாவிற்கு இந்த இடுகையை எருமையுடன் சமர்ப்பிக்கிறேன்.

விடிஞ்சா தங்கச்சி மூஞ்சியில தான் முழிப்பேன்னு வைராக்கியத்துடன் இருக்கும் பாசக்கார அண்ணன் நாகார்ஜுன். அப்புறம் அம்மா செண்டிமன்ட் இல்லாமலா. அதுவும் கலைராணி அம்மாவா நடிச்சிருக்காங்க. (இவங்க வந்தாலே படத்துல கதறியழுகிற சீன் ஒன்னு கண்டிப்பா இருக்கும்). ரெண்டாவது சீன்லையே அம்மாவும் தங்கச்சியும் “லா... லா...” பேக்ரவுண்ட் மியூசிக்கோட சென்டிமென்ட்டை கரைச்சி அடிக்கிறாங்க. நாகார்ஜுனின் முறைப்பெண்ணாகவும் கடைந்தெடுத்த லூசுப்பெண்ணாகவும் ஷில்பா ஷெட்டி. 

இங்கிட்டு சென்னையில் பத்திரிக்கையாளராக மறைந்த நடிகை செளந்தர்யா. அநியாயத்தைக் கண்டு பொங்கவும் இயலாமையால் வேகவும் செய்யும் செளந்தர்யா, ஆசாத் என்ற கற்பனை கேரக்டரை உருவாக்குறாங்க. ஆசாத் நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை ரப்பர் வைத்து அழிப்பதாக ஒரு சீன் க்ரியேட் பண்றாங்க. சிட்டி முழுக்க ஆசாத் புகழ் பரவுகிறது. அதாங்க ஷங்கர் படத்துல எல்லாம் காட்டுவாங்களே, அதே மாதிரிதான்.

தங்கச்சி கல்யாணத்துக்காக நாகார்ஜுன் சிட் பண்டில் சேர்த்து வைத்த ஐந்து லட்ச பணத்தை எடுக்க சென்னை வர்றாரு. அப்ப ரயில்வே ஸ்டேஷனில் ஒரு அப்பாவிப்பொண்ணு கதறக்கதற ஓடிவந்து நாகார்ஜுன் பின்னாடி ஒளிஞ்சிக்கிறாங்க. அதுக்கு மேல அங்க என்ன நடக்கும்ன்னு நான் சொல்லித்தான் தெரியணுமா...???

எதிர்பாராத திருப்புமுனையாக (!!!) நாகார்ஜுனின் பெயரும் ஆசாத்தாக இருக்க, அவனா நீ என்று ஊரே அல்லோலப்படுகிறது. அப்படியே செளந்தர்யாவோட ஒரு ஒன்சைடு லவ்வு, டூயட். செளந்தர்யா நாகார்ஜுனிடம் ஆசாத் கேரக்டரை தொடரச் சொல்லி கடுப்பை கிளப்புகிறார். ஆனால் ஹீரோ ஆணியே புடுங்க வேணாம்னு தலைதெறிக்க ஓடுகிறார். அங்கே சிட் பண்ட் கம்பெனிக்காரன் தலையில் துண்டைப் போடுகிறான். இந்த இடத்தில் மறுபடி ஒரு பப்ளிக் செண்டிமன்ட். ஏமாந்தவர்கள் கதறியழுகிறார்கள். ஹீரோவுக்கு புடைக்கிறது. (என்னன்னு கேட்கப்பிடாது)

அப்புறமென்ன வில்லன் கும்பலை துவம்சம் செய்துவிட்டு ஊருக்கே திரும்பிப்போய் தங்கச்சி கல்யாணத்தை நடத்துகிறார். விடுவாரா வில்லன். ஹீரோவின் தங்கச்சியை போட்டுத்தள்ளி சென்டிமென்ட் முறுக்கை பிழிகிறார். சொன்னதுபோலவே கலைராணி கதறிங். 

க்ளைமாக்ஸ் – ஹீரோ Assassin’s Creed ஸ்டைலில் வில்லனுடன் சண்டை போட்டு, உண்மைத்தமிழன் பதிவு சைஸில் வசனம் பேசியே அவரை சாவடிக்கிறார். க்ளைமாக்ஸ் முடிஞ்சதும் மறுபடி பப்ளிக் என்ட்ரி. (டேய் இந்த பப்ளிக்க பப்பாளிக்கா அக்குற பழக்கத்தை நிறுத்தி தொலைங்கடா... இதெல்லாம் எங்க தாத்தா காலத்து டெக்னிக்...)

பிரகாஷ் ராஜ் – நல்ல போலீஸ், ரகுவரன் – கெட்ட தொழிலதிபர் கம் தீவிரவாதி. இதுல கூத்து என்னன்னா ஹிந்து மத பக்தகேடியாக அறிமுகமாகும் ரகுவரன் பின்பாதியில் இஸ்லாமிய தீவிரவாதின்னு ஒரு மேட்டரை ஒப்பன் பண்றாங்க. (ஆகக்க, மாத்தி மாத்தி டவுசரை கிழிச்சிக்கோங்க சனங்களே...)

இந்த இத்துப்போன கதையில் நாகார்ஜுனாக – விசை, ஷில்பா ஷெட்டியாக – ஹன்சிகா மோத்வானி, செளந்தர்யாவாக – ஜெனிலியா, தங்கச்சி சுஜிதா கேரக்டரில் சரண்யா மோகன் இம்புட்டுதான். இதுக்கு மேலயும் இந்தப்படத்தை பார்க்கணுமான்னு யோசிச்சு முடிவு பண்ணுங்க. ஆனா ஒன்னு தியேட்டரில் படம் பார்த்தா இரண்டரை மணிநேர முழுநீள நகைச்சுவை உத்தரவாதம்.

என்சாய்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

40 comments:

சேட்டைக்காரன் said...

இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்! :-)

விக்கியுலகம் said...

மாப்ள எனக்கென்னமோ எதோ கருகுற ஸ்மெல் வருதுய்யா ஹிஹி!இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

மனசாட்சி said...

அப்படியா?????


இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

Chitra said...

HAPPY DEEPAVALI!

Dr. Butti Paul said...

//ஆனா ஒன்னு தியேட்டரில் படம் பார்த்தா இரண்டரை மணிநேர முழுநீள நகைச்சுவை உத்தரவாதம்.//

இது பன்ச் டயலாக்..

சார்வாகன் said...

Nice post
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இனி ஆறுமாசத்துக்கு தமிழ்நாட்ல கலாய்க்கறதுக்கும் காமெடிக்கும் பஞ்சமிருக்காது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மொதல்ல இந்த தயாரிப்பாளர்களை புடிச்சு போட்டுத் தள்ளனும்..... இதெல்லாம் ஒரு கதைன்னு இதுக்கு ரீமேக் ரைட்ஸ் வேற வாங்கி வெச்சிருக்காங்களே....? ஆமா இதுக்கு எதுக்கு ரீமேக் ரைட்ஸ் வாங்குனாங்க? டாகுடரே இந்த (மாதிரி) கதைல பலதடவ நடிச்சிருக்காரே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஆனா ஒன்னு தியேட்டரில் படம் பார்த்தா இரண்டரை மணிநேர முழுநீள நகைச்சுவை உத்தரவாதம்.
என்சாய்./////

டிவிடில பார்த்தா முழுநீள சித்திரவதைக்கு உத்தரவாதம்?

பாலா said...

அப்போ விஜய்க்கு மற்றுமொரு வெற்றிப்படம்னு சொல்லுங்க. இனிமேல் அவரோட புகழ் பேஸ்புக், யுடியூப்னு பரவப்போகுது.

நா.மணிவண்ணன் said...

துத்தேறி வேலாயுதமாவது வெங்காயுதமாவது.இருநூறு நாட்களையும் கடந்து வெற்றிகரமாக ஓடும் எங்களது பவர்ஸ்டாரின் லத்திகாவிற்கு கால் தூசி வருமா


இவன்
பவர் ஸ்டாரின் பரம பக்தன்

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா படம் ஊத்திக்கப்போவுதா?

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஓஹோ, இந்த படம்தானா?
ஓகே ..

அந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல.
நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.

உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

முழு நீள நகைச்சுவையா சித்திரவதையா? ஹா ஹா ஹா


தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//
ஹீரோவுக்கு புடைக்கிறது. (என்னன்னு கேட்கப்பிடாது)
//

எது அண்ணா ?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

பாவம் ரசிகர்கள்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்றுஎன் வலையில்

இந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா?.

சேலம் தேவா said...

நானும் பாத்துட்டேன். நல்ல படம் எடுக்கறவங்க இந்த மாதிரி பில்டப் கொடுக்கறதே இல்ல... காப்பியடிச்சே காலத்த ஓட்ற இவங்கல்லாம் ஏன்தான் இப்டி பண்றாங்களோ..?!காலம்(படம்) பதில் சொல்லும்.


//வில்லனுடன் சண்டை போட்டு, உண்மைத்தமிழன் பதிவு சைஸில் வசனம் பேசியே அவரை சாவடிக்கிறார்.//
நீ பாட்டுக்கு பதிவு போடாம என்னை வம்புக்கு இழுக்கறியா ராஸ்கல்...
by உண்மைத்தமிழன் :)

சேலம் தேவா said...

உடான்ஸ் பதிவை இணைங்க பிரபா..

N.H.பிரசாத் said...

உங்களுக்குள்ள இருக்குற அந்த 'அஜித் வெறியன்' இன்னும் உயிரோட தான் இருக்காங்கறது இந்த பதிவின் மூலமா தெரியுது. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

சேலம் தேவா said...

சாரி..."ல" மிஸ் ஆயிடுச்சு...

உடான்ஸ்ல பதிவ இணைங்க பிரபு. :)

Jayadev Das said...

Happy Diwali, Machchi.

அப்பு said...

வேலாயுத வெடி வாழ்த்துக்கள் பிரபா

MANO நாஞ்சில் மனோ said...

ஹி ஹி சரவெடி......!!!

MANO நாஞ்சில் மனோ said...

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மயிலன் said...

வாந்தி மாத்திரைகள் கிடைக்குமிடம்...காட்டுப்பூச்சி அண்ட் கோ..

அஞ்சா சிங்கம் said...

இதுக்கு ஏன்யா இவ்ளோ நீளமா கதை சொல்லிக்கிட்டு ?

விஜய் இந்த படத்துல மாறு வேஷம் போட்டு தயாரிப்பாளரை காலி பண்றார் .

அப்படின்னு ஒன் லைன்ல சொல்லிட்டு போகிறது தானே ........................

Anonymous said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...

middleclassmadhavi said...

இந்திய தொல்லைக்காட்சிகளில் முதல் முறையாக திரைக்கு வந்து சில நாட்களில் போடும் போது பார்த்துக் கொள்ளலாம் இல்லையா?!! :-))

தீபாவளி வாழ்த்துக்கள்!

ILA(@)இளா said...

இதை ரொம்ப நாளைக்கு முன்னாடியே எழுதியாச்சுங்களே தமிழோவியம்- வேலாயுதம்

சென்னை பித்தன் said...

பாவம்தான் டாக்டரு.
தீபாவளி வாழ்த்துகள்.

prasanth s said...

boss tomorrow theriyum thalapathi film result. kochin,karnataka velayutham promote panradhuke evlo kootamnu uruke theriyum.

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// டிவிடில பார்த்தா முழுநீள சித்திரவதைக்கு உத்தரவாதம்? //

நல்ல கேள்வி தல... டிவிடியில பார்த்தா உங்களுக்கு அல்டிமேட் FUN கிடைக்காது... தியேட்டரில் விஜய் ரசிகர்கள் லுச்சாத்தனமாக கதறுவதையும் சேர்த்து பார்க்கும்போது ஆனந்தம் பன்மடங்கு பெருகும்...

Philosophy Prabhakaran said...

@ சேலம் தேவா
// உடான்ஸ்ல பதிவ இணைங்க பிரபு. :) //

நீங்க எழுத்துப்பிழை இல்லாமல் கேட்டால் கூட இணைக்க முடியாது... கடந்த சில தினங்களாகவே உடான்ஸில் பதிவுகள் இணைய மறுக்கிறது... என்னைத் தள்ளி வச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன்...

Philosophy Prabhakaran said...

@ ILA(@)இளா
// இதை ரொம்ப நாளைக்கு முன்னாடியே எழுதியாச்சுங்களே //

நீங்க மட்டும் இல்ல நிறைய பேர் எழுதியிருக்காங்க... ஆனா படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முந்தின நாள் வார்னிங் கொடுக்குறது நம்ம ஸ்டைல்...

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் சகோ,
இனிய இன்பத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

காலையில் மொபைலில் இப் பதிவினை படித்தேன்.
நடு நிலையாக அலசியிருக்கிறீங்க.
இப்போது தான் படத்திற்குப் போய் கொண்டிருக்கிறேன்.

yeskha said...

கடவுளே... வேலாயுதம் நல்லாயிருக்குன்னு சொல்றாய்ங்களே...

கார்த்தி said...

மொத்தத்தில் வேலாயுதம் விஜய் ரசிகர்கள் இல்லாதவர்களுக்கு ”பரவாயில்லை- Average" ரகப்படம். விஜய் ரசிகர்களுக்கு நல்ல-Good படம்.
சுறா மாதிரி படங்களே Collectionல பரவாயில்லாம போன படியா இந்தப்படம் நிச்சயம் collectionல அள்ளும்.

bala said...

அவங்க மக்காகு துள் படன்னு சொல்றனுங்க பாவிங்க என்னக்கி திருந்துவானுங்க திருந்த விடுவானுங்க

tamilan daa.. said...

itellam oru padamunu ithukku oru vimarchanam, comments. pooi veelaya paarunkada en vengaayangala....