21 April 2010

பட்டப்பகலில் பயங்கரம் - பட்டமளிப்புவிழா பகிர்வுகள்

வணக்கம் மக்களே...

(இது முழுக்க முழுக்க என் கல்லூரி நண்பர்களுக்காக எழுதப்பட்ட பர்சனல் பதிவு. மற்றவர்கள் படிக்க விரும்பவில்லை என்றால் இங்கேயே நிறுத்திக்கொள்ளலாம்.)

கிட்டத்தட்ட கல்லூரிக்காலம் முடிந்து ஓராண்டுக்குப் பின்னர் அந்த சம்பவம் நடந்தேறியது. ஏப்ரல் 10ம் தேதி நமது கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா பற்றிய எனது கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

- வழக்கமாக நண்பர்கள் என்றாலே தாமரை இலைதன் நீர்போல ஒட்டியும் ஒட்டாமலிருக்கும் நான் இந்த முறை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கப்போகிறோம் என்பதாலோ, என்னவோ, இரண்டு நாட்களுக்கு முன்பிலிருந்தே மிகுந்த ஆவலுடன் காத்திருந்தேன்.

- எப்போதும் என் குடும்பத்தில் யாரேனும் பட்டம் வாங்குகிறார் என்றால் அம்மா, அப்பா, பெரியம்மா, பெரியப்பா, அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா என்று ஒரு பெரிய குடும்ப கும்பலே ஆஜராகிவிடும். இந்த முறை நண்பர்களோடு செலவிடப்போகும் கடைசி நாளை வீணடிக்க வேண்டாமென்ற காரணத்தினாலும், இந்த பாழாய்ப்போன டிகிரியை வாங்குவதில் எனக்கு எந்தப் பெருமையும் இல்லை என்ற காரணத்தினாலும் குடும்ப கும்பலை முற்றிலுமாக தவிர்த்துவிட்டேன். தாய் - தந்தையையும் தடுத்துவிட்டேன்.
- இது நான் எதிர்ப்பார்த்த ஒன்றுதான். என்னைக் கண்ணால் கண்டதும் பிரின்சிபால் முதல் வாட்ச்மேன் வரை எல்லோருமே ஏதோ ஸ்பீல்ஸ்பெர்க் படங்களில் வரும் விசித்திர பிராணியைக் கண்டது போல உணர்ச்சி காட்டினார்கள். விமர்சனங்கள் ஒரு புறம் குவிந்தாலும் மறுபுறம் தோனி, டாவின்சி கோட், "அஞ்சாதே" பிரசன்னா, "காளை" சிம்பு, சவுரப் திவாரி, இஷாந்த் ஷர்மா என்று ஏதேதோ பாசிடிவ் கமெண்ட்ஸ் வந்து காதுகளில் விழுந்தது, குளிர்ந்தது. அதிலும் பிரின்சி, "ஜீசஸ் கிரிஸ்ட்" என்று கமென்ட் அடித்தது உச்சக்கட்டம்.

- நண்பர்களைக் கண்டதும் புன்னகைத்தேன், கை குலுக்கினேன், நலம் விசாரித்தேன். ஆனால் "என்ன செய்கிறாய்...?" என்று மட்டும் அறிந்தோ அறியாமலோ யாரிடமும் கேட்டு விடவில்லை. பதிலுக்கு அதே கேள்வியை அவர்கள் என்னிடம் கேட்டால் நான் எங்க போவேன்...? எனக்கு யாரத் தெரியும்...? (சிவாஜி கணேசன் ஸ்டைலில் படிக்கவும்)

- சில நண்பர்கள் விழாவிற்கு வருகை தராதது பெருத்த ஏமாற்றம். "சினிக்கூத்து சித்தன்" நூர்கான், எஸ்.பி.விஜய், சர்வேஸ்வரன், துலுக்காணம் உள்ளிட்ட நண்பர்கள் வராததால் விழா பெரிய அளவில் சோபிக்கவில்லை. வகுப்புத் தோழிகளில் பலகாரப்பெண்ணும், என் பேவரிட் சேவரிட்டும் வராதது வருத்தமளித்தது.

- படித்த நான்காண்டுகளில் பரிட்சயமாகாத, ஆனால் வலைப்பூவின் மூலமாக என்னை அறிந்துக்கொண்ட மனோஜ் குமார் (சி.எஸ்.இ), ரமேஷ் (சி.எஸ்.இ), மோகன் ராஜ் (ஐ.டி) உள்ளிட்டவர்கள் முகம் பார்த்தபோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். ஆர்குட்டில் சன் பிக்சர்ஸ் சினிமாவைப் போல எனது வலைப்பூவைப் பற்றி விரட்டிபிடித்து விளம்பரப்படுத்தி இருந்ததால் பெரும்பாலானவர்கள் எனது எழுத்துப்பணிகளை பற்றி அறிந்திருந்தார்கள்.

- மேடிட்ட வயிறுகளையும், மெட்டியிட்ட கால்களையும் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. 
"ஒரு குழந்தையே
குழந்தையை
சுமக்கின்றதே...!"
என்றெல்லாம் ஹைக்கூ கவிதை சொல்லத் தோன்றியது.

- டிகிரி வாங்கத் தயாரானபோது கந்தசாமி படத்தில் வடிவேலு மாட்டிக்கொண்டு வருவதைப் போல ஒரு கறுப்பு உடுப்பை கொடுத்தது மட்டுமில்லாமல் அதற்காக நூறு ரூபாயை ஆட்டையைப் போட்டதற்காகத்தான் இடுகைக்கு இப்படியொரு தலைப்பை வைக்க நேரிட்டது. பட்டப்பகலில் பயங்கரம். இருந்தாலும் ஒரு ஆங்கிளில் இருந்துப் பார்த்தால் சிட்டிசன் படத்தின் அறிமுகக் காட்சியில் வரும் அஜித்தைப் போல இருந்ததால் ஆறுதலடைந்தேன்.

- கேப்டன் டி.வி ஆரம்பக்கட்ட வேலைகளாலும், இடையறாத சமூகப்பணிகளாலும் (!!!) கேப்டன் அவர்கள் விழாவிற்கு வராததால் குழந்தைகள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. வழக்கமாக வந்துபோகும் அண்ணியாரும் இந்த முறை மிஸ்ஸிங். கேப்டன் டி.வியின் "மானாட மயிலாட" பாணி நிகழ்ச்சிக்கு மார்க் போட போய்விட்டார்போல.

- சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலையின் துணைவேந்தர் திரு. மன்னர் ஜவஹர் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார். "UNEMPLOYED, UNDER EMPLOYED, EMPLOYED" என்றெல்லாம் பாகுபாடுகளைச் சொல்லி அவர் ஆற்றிய சொற்பொழிவு உற்சாகமூட்டும் விதமாக இல்லாமல் பெரும்பாலானவர்கள் மனதைப் புண்படுத்தும் விதமாகவே அமைந்திருந்தது.

- அடுத்ததாக பட்டமளிக்கும் படலம். பல லட்சம் செலவிட்டு படிக்கவைத்த பெற்றோர்கள் பார்த்தால் ரத்தக்கண்ணீர் வடித்திருப்பார்கள். முன்னதாக துணைவேந்தர் கைகளிலிருந்து சான்றிதழ்களை வாங்குவது போல ச்சும்மா உல்லுல்லாயி போட்டோக்களை எடுத்துத் தள்ளினர். அதன்பிறகு ஈ.சி.ஈ. டிபார்ட்மென்டுக்கே உரிய ரேஷன் கடை வரிசை முறை அமலானது.

- பல போராட்டங்களுக்குப் பிறகு அந்த சான்றிதழை கையில் வாங்கிய நான் கொஞ்சம் அதிர்ந்துதான் போனேன். சான்றிதழில் இருந்த புகைப்படத்தில் நான் குங்குமப்பொட்டோடு அலங்கோலமாக காட்சியளித்ததுதான் அதிர்ச்சிக்கு காரணம். என் வாழ்வில் நடந்த எத்தனையோ வரலாற்று பிழைகளுள் இதுவும் ஒன்று. அந்த போட்டோவை மட்டும் குறிப்பிடவில்லை, அந்த போட்டோவில் நான் குங்குமம் வைக்க காரணமாக இருந்த சம்பவங்களையும்தான்.

- பல மாதங்கள் கழித்து நண்பர்களை சந்தித்த இந்த விழா ஆட்டம், பாட்டம், கல்யாணி, நெப்போலியன் என்று எதுவுமே இல்லாமல் சத்யஜித் ரே படம் மாதிரி இருந்ததால் சுத்தமாக மூட் ஸ்பாயில் ஆகிவிட்டது. இனிவரும் பட்டமளிப்பு விழாக்களிலாவது கல்லூரி நிர்வாகம் இவற்றை பரிந்துரை செய்ய வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

- நீண்ட நாட்களாகவே எனக்கு ஒரு புகைப்பட கனவு இருந்து வந்தது. அகாடெமிக் பிளாக்கின் மொட்டை மாடி, கல்லூரி நூலகம், டிபார்ட்மென்ட் வாசல், ஹாஸ்டல், டி.வி. ரூம், மெஸ் வராண்டா, இரவு வெளிச்சத்தில் பரோட்டா கடை என்று மாமண்டூர் மாநகரத்தையே வளைத்து வளைத்து கிளிக்க வேண்டுமென்பதே அந்தக் கனவு. அது கடைசிவரை நிறைவேறாமல் போனது.

- எனது தற்காலிக தாயைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இது முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட சிறுகதை என்று சொல்லிக்கொண்டாலும் என்னைப் பொறுத்தவரையில் அவள் ஒரு தொடர்கதையாகவே இருக்கிறாள். அவள் என்னை யாரென்றே தெரியாதது போல காட்டிக்கொண்டதும், நித்தியானந்தர் விவகாரத்தில் அவமானப்பட்ட அந்த பிரபல எழுத்தாளரின் பெயரில் முதல் பாதியைக் கொண்ட பெண்ணிடம் மணிக்கணக்கில் பேசிக்கொண்டதும் என்னுள் மரண வலியை ஏற்படுத்தியது.

- சில நாட்களாகவே நண்பர்களிடம் சொல்லிவிடு... சொல்லிவிடு... என்று என் உள் மனதில் முள் தைத்துக்கொண்டிருந்த அந்த விஷயத்தைப் பற்றி கடைசிவரை யாரிடமும் வாய் திறக்கவில்லை. பதிவாக எழுதிவிட முயல்கிறேன்.

- அன்றைய தினம் முழுவதையும் நன்பர்களுடனே செலவிட வேண்டுமென நினைத்தாலும் அன்றாடப் பணிகள் அழைத்ததால் மதியத்திற்குள்ளாகவே பிரிய நேரிட்டது.

- இரண்டு நாட்களுக்குப் பின்னர் விடுபட்டுப் போன ஒரு மதிப்பெண் சான்றிதழை வாங்குவதற்காக மீண்டும் கல்லூரிக்குச் சென்றிருந்தேன். சலனமற்று கிடந்தது கல்லூரி வளாகம். வரிசையாக பேருந்துகள், அவரவர் பணிகளில் ஊழியர்கள், ரெகார்ட் நோட்டோடு டிபார்ட்மென்ட்டுக்கு செல்லும் மாணவர்கள் என்று அவர்களைப் பொறுத்தவரையில் அது மற்றுமொரு நாளே...!

- நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், எனது புகைப்பட கனவு பலியானது பற்றி கூறியிருந்தேன். உங்களிடம் இருக்கும் நமது கல்லூரி, நண்பர்கள் பற்றிய அரிய புகைப்படங்களைத் தவறாமல் "nrflyingtaurus@gmail.com" என்ற முகவரிக்கு அனுப்பிவிடுங்கள்.

- மேற்கூறிய கருத்துக்கள் அனைத்தும் சம்பவம் நடந்த அன்று என் மனதில் தோன்றிய உணர்வுகள்...! இது போல ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு பீலிங் இருக்கும். உங்கள் உணர்வுகளை மறக்காமல் கமெண்ட்ஸ் எழுதி தெரிவித்துவிடுங்கள்.
என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment

11 comments:

Jackiesekar said...

மேடிட்ட வயிறுகளையும், மெட்டியிட்ட கால்களையும் கண்கொண்டு பார்க்க முடியவில்லை.
"ஒரு குழந்தையே
குழந்தையை
சுமக்கின்றதே...!"
என்றெல்லாம் ஹைக்கூ கவிதை சொல்லத் தோன்றியது.----//


சோக்கா சொன்ன தம்பி....

Jackiesekar said...

என் மருமகன் கூட அங்கதான் படிக்கிறான்..

Dinesh said...

fine comments da....that hikko is excellent but u forgot to write abt girls whose r waiting for their marrige on upcoming month....do u understand....?

karthik said...
This comment has been removed by the author.
Sweety said...

Eventhough i didnt cum fr the graduation ceremony, u picturised everything b4 my eyes. thank you. Unnoda payanam ipdiya continue aga ennoda valzhthukal:)

Philosophy Prabhakaran said...

@ ஜாக்கி சேகர்
என்னோட சொந்தக்கதையையும் சோகக்கதையையும் கூட படிச்சிருக்கீங்க... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்...

@ Dinesh
thanx for ur comments da... but i dont know what u r saying about that... who is waiting for her marriage... ஏதாவது கெட்ட செய்தியா...?

@ karthik
இது உங்களுக்கான இடம் நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதியிருக்கலாம்... Anyway, வருகைக்கு நன்றி...

@ Sweety
i think its sweetline preethi... thanx for ur comments... பலகாரப்பெண் என்ற வார்த்தை பிரயோகத்தைப் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லையே...

Mj said...

machi,,,said the truth here,, actually wat u said itz murmured in everybody's thought,, but no one was ready to express , Y? even me too,, but only thing s to felt happy is that after a long time v al meet once,,

dono whether it happen again but felt happy on dat day bcoz of meeting our friendz,,

conti ur philosophy

endrum anbudan
--Mj

Anonymous said...

machi i really appreciate your writings but i am expecting more from you da... write about some pleasant things around the galaxy...think big write new...

Anonymous said...

Hey sorry for the delayed reply.........
just read yo post.....

Really great in d way u shared yo experince. To be truth even I felt dull atmosphere in our gradution day. There was no things happened extraordinary.

I like to have an grand gradution day again. Here should bring all d missing person as u mentioned here.

Hope we have an alumni day again. Lets have a fun.

Continue writing...

Keep It UP!!!!!!!!!!!!!!!!!!!!!!
CHeeRZZZZzzzzzzzz Dude!!!!!!!!!!!!!!

Unknown said...

hai nr ,this is rajan u r realy great,all the best for ur future,

இப்னு அப்துல் ரஜாக் said...

nice