27 April 2010

கட்டிலறை கட்டளைகள் (18+)

வணக்கம் மக்களே...

(பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோர் மட்டுமே படிக்க வேண்டுமென சொன்னால் கேட்கவா போகிறீர்கள். படியுங்கள். படித்து தொலையுங்கள்)

எழுதலாமா கூடாதா என்று தெரியவில்லை. ஒரு வித தயக்கத்துடனே இந்தப் பதிவை வெளியிடுகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, உங்கள் எண்ணங்களை ஓரத்தில் இருக்கும் ஓட்டுப்பெட்டியில் சொல்லிவிடுங்கள். தொடர்ந்து இதுப்போன்ற பதிவுகளை எழுதலாமா என்பது நீங்கள் சொல்லும் முடிவில் தான் இருக்கிறது.

நாதியற்ற ஒரு மாலைப்பொழுதில் மெரீனா கடற்கரைக்கு சென்றிருந்தேன். அங்கொன்றும் இங்கொன்றுமாக காதலர்கள் ஆன்மிக ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். கண்கள் என் பேச்சை கேட்கமாட்டேன் என்று அடம் பிடித்தது. ஒரு வழியாக கட்டுபடுத்திக்கொண்டு ஆளரவமற்ற ஒரு கட்டுமரத்தில் ஏறி மல்லாந்து படுத்தேன். பறந்து விரிந்த ஆகாயத்தை பார்த்து வியந்துக் கொண்டிருந்தேன். ஆகாயத்தை மறைத்தபடி என் தலைக்கு நேரே ஒரு உருவம் தென்பட்டது. கடலை விற்கும் சிறுவன் பல்லைக் காட்டினான். என் தனிமைக்கு தடையாய் இருந்த அவனை அப்புறப்படுத்துவதற்காக கடலை பொட்டலத்தை கையில் வாங்கினேன். கடலை போட்டுக்கொண்டிருந்தவர்களை ரசித்தபடி கடலையை கொறித்தேன், கடலலையை வெறித்தேன். கடலை காலியான பின் தான் கவனித்தேன், கடலை மடித்து தந்த காகிதத்தில் அட்டகாசமான ஒரு பெண்ணின் ஓவியம் தீட்டப்பட்டிருந்தது. ஓவியத்தை ஒதுக்கிவிட்டு செய்தி என்னவென்பதை படித்தேன். சில வருடங்களுக்கு முன்பு வந்த ஆனந்த விகடனின் பக்கம் அது. எழுத்துருக்கள் இடாலிக்ஸில் இருந்ததால் கவிதையாக இருக்குமென்று எண்ணிக்கொண்டேன். ஏதோவொரு படத்தின் பாடல் வரிகள் அவை. வைரமுத்துவின் வரிகள் விளையாடி இருப்பதாக குறிப்பிட்டிருந்தனர். வரிகளை படித்து முடித்தபோது ஒரு மிகப்பெரிய வாழ்க்கை தத்துவத்தை உணர்ந்துவிட்டதாகவே தோன்றியது.

*****
ஆண்:
மீசை முத்தம் வேண்டுமா...?
மீசையில்லாத முத்தம் வேண்டுமா...?

பெண்:
அப்படின்னா...?

ஆண்:
மீசை முத்தம் என்றால் பெண்ணே
நான் உனக்கு தருவது
மீசையில்லாத முத்தம் என்றால்
நீ எனக்கு தருவது...

*****
பெண்: 
தண்ணீர் முத்தம் வேண்டுமா...?
தரையின் முத்தம் வேண்டுமா...?

ஆண்:
அப்படின்னா..?

பெண்:
தண்ணீர் முத்தம் என்றால் அன்பே
தடயமில்லாமல் இடுவது
தரையின் முத்தம் என்றால்
கொஞ்சம் தடயத்தோடு விடுவது...

*****
பெண்: 
கட்டில் மேலே பத்துக் கட்டளை
கட்டளைப்படியே செய்வாயா...?

ஆண்:
என்ன கட்டளை இடு பார்ப்போம்...

பெண்:
என்னை மெதுவாய்த் துடிக்கவிடு...
எச்சில் மாற்றி உண்டுவிடு...
உடையை மெல்ல உதறிவிடு...
உன்னை எனக்கு உடுத்திவிடு...
சிவந்த பாகம் வெளுக்கவிடு...
கறுத்த பாகம் சிவக்கவிடு...
எந்தன் உயிரை உறிஞ்சிவிடு...
உந்தன் உயிரால் நிரப்பிவிடு...
எந்த நிலையிலே நான் கிடப்பெனோ
அந்த நிலையிலே தூங்கவிடு...
இந்த நிம்மதி நிரந்தரமென்று
எனது காதிலே ஒதிவிடு...

*****
ஆண்:
கட்டில் மேலே பத்துக் கட்டளை
கட்டுப்பட்டு நடப்பாயா...?

பெண்:
என்ன கட்டளை இடு பார்ப்போம்...

ஆண்:
நயனம் இரண்டும் மூடிவிடு...
நான்கு புலன்கள் திறந்துவிடு...
கூறைப் புடவை கலைந்துவிடு...
கூந்தல் சேலை உடுத்திவிடு...
என்னைக் கொஞ்சம் ஆளவிடு...
எதிர்ப்பது போல வளைந்துகொடு...
கவிதைபோல் சில உளறிவிடு...
கட்டில் கடன்கள் திருப்பிக் கொடு...
எந்த சுகங்களை நீ ரசித்தாயோ
அந்த சுகங்களைப் பேசிவிடு...
அந்த சுகங்கள் மீண்டும் தொடர
அரைமணி நேரத் தவணை கொடு...

*****
என்ன ஒரு ரசனை. இப்படி ஒரு ரசனையுடன் தாம்பத்தியத்தை அனுபவிக்க தமிழனால் (உண்மைத் தமிழன் பற்றி நான் எதுவும் சொல்லலைங்கோ...) மட்டுமே முடியும். நானும் ரசித்தேன். அட... கவிதையை சொன்னேங்க...

வாசகர்களுக்கு ஒரு சின்ன போட்டி. வைரமுத்து எழுதி திரைப்பட பாடலாக வெளிவந்த இந்த வாழ்க்கை தத்துவம், எந்த திரைப்படத்தில் இடம் பெற்றதென யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.சரியான விடையை முதலில் குறிப்பிடும் அதிர்ஷ்டசாலி அல்ல... புத்திசாலி நேயருக்கு சுஜாதா எழுதிய "என் இனிய எந்திரா..." புத்தகத்தின் PDF பதிப்பு இ-மெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும். இந்தப் பதிவுக்கும் சுஜாதா எழுதிய புத்தகத்துக்கும் சம்பந்தமே இல்லையே என்று பதிலை சொன்னவர் விரும்பினால் அவர் எதிர்பார்க்கும் அந்த மாதிரியான புத்தகம் ஒன்றும் இலவச இணைப்பாக அனுப்பப்படும்.
என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment

12 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

எனக்கு விடை தெரியலையே. (வடை போச்சே)

VELU.G said...

எனக்கும் தெரியலைங்க (2வது வடையும் போச்சே)

உமர் | Umar said...

படம்: பாசக்கிளிகள்
பாடியவர்கள்: சுஜாதா, திப்பு
இசை: வித்யாசாகர்.
தகவல் உதவி: Thiraipaadal.com (நான் ரொம்ப நேர்மையானவன். :-))

ஜெய்லானி said...

படம்: பாசக்கிளிகள்
பாடியவர்கள்: சுஜாதா, திப்பு
இசை: வித்யாசாகர்.
பாடல் வரி : வைர முத்து.

Ameer Hasshan said...

படம்: பாசக்கிளிகள்
பாடியவர்கள்: சுஜாதா, திப்பு
இசை: வித்யாசாகர்.

Ponmahes said...

thambi thanks for saved my money.....thambi i want to say onething...i dont like your kattilarai kattalaikal.. herefter dont try to like this blog....

Ponmahes said...

aval oru pattampoochi part two was very nice to read...all the best for your love future....

சியா said...

சகலதும் நன்று... என்ன வைரமுத்து எழுதலாம் ஏன் நீங்கள் இதில் பிரசுரித்தால் தான் தவறோ? எல்லாம் எமது கண்ணோட்டத்தில் தான் உள்ளது..வாழ்க்கை என்றால் நாலும் இருக்கும்.. பிடித்தவர் படிக்கட்டும் பிடிக்கதவர்கள் விடட்டும்.. இதில் என்ன தவறு? உங்கள் பணி தொடரட்டும் மன்னவனே. வாழ்க வளமுடன்.

Philosophy Prabhakaran said...

@ சைவகொத்துப்பரோட்டா, VELU.G
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே...

@ கும்மி
போட்டி சுவாரஸ்யத்தை குறைச்சுட்டீங்களே... BUT, உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...

@ ஜெய்லானி, Ameer Hasshan
என்ன copy & paste-ah

@ magesh
ஆரம்பகாலத்தில் இருந்து என் வலைப்பூவை தொடர்ந்து படித்து வரும் நண்பரே... வலைப்பூவை தொடர்ந்ததற்கும் பின்னூட்டம் போட்டதற்கும் நன்றி... சம்பந்தப்பட்ட பதிவுக்கு நேராக பின்னூட்டம் போட்டால் சிறப்பாக இருக்கும்...

@ சியா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே... உங்கள் தமிழ் இனிக்க இனிக்க இருக்கிறது...

INDIA 2121 said...

ARUMAI NANPARE
NAANUM TIRUVOTRIYUR,CHENNAI THAAN
ANBUDEN
www.vaalpaiyyan.blogspot.com
JUNIOR VAALPAIYYAN

தென்னவன் said...

vairamuthu playing the below song also,
Movie: Samurai
Song: Oru nadhi oru pournami

Unknown said...

akashkasthuri06@gmail.com