2 May 2010

திரையைக் கிழித்த சுறா...!

வணக்கம் மக்களே...

தல வாழ்த்து
மே 1 அன்று பிறந்தநாளை கொண்டாடிய (கொண்டாடவே இல்லை) எங்கள் அண்ணன் அஜித் குமார் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம். ஏற்கனவே தல தரப்பில் இருந்து இருந்து வெளியான செய்திக்குறிப்பில் தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாமென அன்புக்கட்டளை இட்டிருந்தார் தல. எனவே, தலைவர் திருநாள் எந்தவித ஆரவாரமும் இல்லாமலே கழிந்துவிட்டது.
சில தொலைக்காட்சி சேனல்கள் தலையைப் பற்றி துண்டுச்செய்தி கூட வெளியிடாத நிலையில் தொடர்ந்து ஆதரவளித்து வரும் விஜய் டிவிக்கும் ஜெயா டிவிக்கும் கோடானு கோடி நன்றிகள். அதிலும் குறிப்பாக நாள் முழுவதும் தலப்பாடல்களை ஒளிப்பரப்பி ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சி அரும்பணி ஆற்றியது. இங்கு நிலை இப்படியிருக்க மொரோக்கோவில் நடந்துவரும் பார்முலா-2 பந்தயத்தில் கலந்துவரும் அஜித் தனது பிறந்தநாளன்று நடந்த ரேஸில் 21வது இடத்தில் இருந்து 13வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார். தல தொடர்ந்து தடம் பதிக்க வாழ்த்துக்கள்.

பதிவர்கள் கவனத்திற்கு 
அங்காடித் தெரு படத்தை உங்களில் பலர் பார்த்திருக்கலாம். விமர்சனங்கள் எழுதியிருக்கலாம். அவ்வாறு உங்கள் மனதில் படத்தினைப் பற்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் அவற்றி நீங்கள் என்னோடு பகிர்ந்துக்கொள்ளலாம் என்று அந்தப்படத்தின் இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்திருக்கிறார்.
பேஸ்புக்கில் அங்காடித் தெரு படம் பற்றிய உங்கள் எண்ணங்களை பேசிக்கொள்ள கீழே கொடுக்கப் பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.
பேஸ்புக் கணக்கு இல்லாத பதிவர்கள் "vasantabalan@yahoo.co.in" என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
ரசிகர்கள் ரகளை
"இளையதளபதி" விஜயின் அபாரமான நடிப்பில் (!!!) "சுறா" திரைப்படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக (!!!) ஓடிக்கொண்டிருப்பது நாமெல்லாம் அறிந்ததே.
இந்நிலையில் திண்டுக்கல் ஆர்.எஸ்.ரோட்டில் அமைந்துள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்கள் பேன், டியுப்லைட் (விஜய்யை குறிப்பிடவில்லை) ஆகியவற்றை அடித்து நொறுக்கியதோடு நில்லாமல் திரையைக் கிழித்து ரகளையில் ஈடுப்பட்டிருக்கின்றனர். படத்தின்போது ஏற்பட்ட ஒளிப்பரப்பு கோளாறினால் தான் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதாக வெளியில் பேசிக்கொண்டாலும் விஷயம் வேறுமாதிரியாக இருந்ததால் திண்டுக்கல் போலீசாரை ரகசியமாக சந்தித்தோம். "படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் ஒவ்வொருவருக்கும் மறை கழன்டுபோக ஆரம்பித்திருக்கிறது. ஒரு கட்டத்தில் பரவச நிலை அடைந்த ரசிகர்கள் திரையை கிழித்திருக்கிறார்கள்". இவ்வாறு திண்டுக்கல் போலீசார் நம்மிடம் தெரிவித்தனர்.

சிறந்த கிரிக்கெட் வீரர் விருது
நீங்கள் நினைப்பது போல ஆஸ்திரேலிய வீரருக்கோ இந்திய வீரருக்கோ லலித் மோடிக்கோ சசி தரூருக்கோ அல்லாமல் ஒரு நேபாள வீரனை சென்றடைகிறது. செய்தி இதுதான். நேற்று முன்தினம் இரவு சென்னையில் பெய்த மழையில் சென்னை மேடவாக்கத்தில் தேங்கிய மழை நீரில் மின்சாரம் பாய்ந்திருக்கிறது. விவரம் தெரியாமல் தேங்கிய மழை நீரில் காளை வைத்திருக்கிறார் ஒரு தாய்க்குலம். தாயும் சேயும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க அந்த வழியாக சென்றவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கூர்க்கா "வீராஜ் குமார்" இரண்டு போரையும் கிரிக்கெட் மட்டையால் அடித்து காப்பாற்றியிருக்கிறார். இப்போது வீராஜ் குமார் தான் "மேன் ஆப் மேடவாக்கம்"


இந்த வார கவிதை 
தேநீர்க் கடையில்
இரட்டைக் குவளை - அதே
கடையில் ஒரே
கல்லாப்பெட்டி...
- வெங்கட. ராசா, ம.பொடையூர்


இந்த வாரப் பூச்செண்டு
லஞ்சம் வாங்குவதையும் கொடுப்பதையும் எதிர்த்து நூதன பிரச்சாரம் செய்த இளைஞர்களுக்கு. சில நாட்களுக்கு முன் சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில், "லஞ்சம் கொடுக்கவும் செய்யாதீர்கள், வாங்கவும் செய்யாதீர்கள் ப்ளீஸ்" என்று கூறி துண்டு பிரசுரங்களை விநியோகித்த அந்த இளைஞர்கள், இந்தக் கருத்தை வலியுறுத்துவதற்காக பொதுமக்கள் கால்களில் விழுந்து மன்றாடியிருக்கிறார்கள். தங்களது இயக்கத்தின் பெயர் சத்தியாகிரக இயக்கம் என்றும் இதுவரை 26 லட்சம் மக்கள் காலில் விழுந்திருப்பதாக கூறிய அந்த இளைஞர்களை மனமார பாராட்டுவோம்.


இந்த வார வலைப்பூ
அயராத எழுத்துப்பணி (!!!) காரணமாக அடுத்தவர்களது வலைப்பூக்களை தொடர்ந்து படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் வாரம் ஒரு விடுமுறை நாளை ஒதுக்கி விடிய விடிய வலைப்பூக்களை மொய்ப்பதுண்டு. அவ்வாறு சில நாட்களுக்கு முன்பு ஓரிரவில் "சேட்டைக்காரன்" வலைப்பூவை படிக்கும் வாய்ப்பு கிட்டியது.
நகைச்சுவையாக பதிவிடுவார் என்று நான் எண்ணிக்கொண்டிருந்த சேட்டையின் மறுப்பக்கத்தை அன்றுதான் உணர்ந்துக்கொண்டேன். அதிலும் சேட்டை சமீபத்தில் எழுதிய இரண்டு பதிவுகள் என்னை கடுமையாக பாதித்தது. ஒன்று, பராசக்தி கோர்ட் வசனக்காட்சியை அவர் உல்டா செய்து எழுதியிருந்த பதிவு. இந்தப் பதிவு ஒரு வரலாற்று பதிவு என்றுகூட சொல்லலாம். எல்லோரும் படித்தே ஆகவேண்டிய இந்தப் பதிவை நீங்கள் படிக்க இந்த இணைப்பை (பராசக்தி ரிப்பீட்டேய்...!) சொடுக்கி படிக்கலாம். "அவிய்ங்க" ராசா, "தேவடியா பசங்க..." என்னும் தலைப்பில் எழுதியிருந்தார். அதே கருத்தை சேட்டை இன்னும் உருக்கமாகவும் நாகரீகமாகவும் எழுதியிருந்தார் மற்றுமொரு பதிவில். அந்தப் பதிவை படிக்க விரும்புவோர் இந்த இணைப்பை (பயணத்தில் ஒரு நாள்...!) சொடுக்கி படிக்கலாம். சேட்டை உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.


படம் சொல்லும் செய்தி என்ன...?
இதோட பன்னிரண்டு வருஷமாச்சு.

என்ன ஒன்னும் புரியலையா...?

மேற்படி அம்மணி வயசுக்கு வந்து பன்னிரண்டு வருஷமாச்சு...
எப்படி நம்ம பினிஷிங் டச். சும்மா தமாசுங்க சீரியஸா எடுத்துக்காதீங்க.
என்றும் அன்புடன்,
N R PRABHAKARAN

Post Comment

4 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

அழகிய தொகுப்பு!!! வாழ்த்துக்கள் பிரபாகர்.

settaikkaran said...

நண்பா, எனது வலைப்பதிவைப் பற்றி குறிப்பிட்டதற்கு எனது இதயம் கனிந்த நன்றி! சகபதிவர்களின் அன்புக்குப் பாத்திரமாக இருப்பதைக் காட்டிலும் பெரிய பெருமை இருக்க வாய்ப்பில்லை. உங்களது பெருந்தன்மைக்கு கோடி நன்றிகள்!

manjoorraja said...

சமீபத்திய பதிவர்களில் மிகவும் குறுகிய காலத்தில் தன் எழுத்துத் திறமையால் அதிக வாசர்களை அடைந்தவர் சேட்டைக்காரன் என்பதில் சந்தேகம் இல்லை.

தம்பி சேட்டை மேன்மேலும் வெற்றியடைய வாழ்த்துகள்.

பிரபாகர் said...

சேட்டையைப்பற்றி அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்...

பிரபாகர்...