18 October 2010

தெரியலையே மச்சி... ஒரு குவார்ட்டர் சொல்லேன்...!

வணக்கம் மக்களே...!

மீண்டும் ஒரு பர்சனல் பதிவு. வழக்கமாக என் வாழ்க்கையில் முக்கியமான சம்பவம் எது நடந்தாலும் பதிவெழுதி விடுவது வழக்கம். அதுபோலத்தான் இந்த முறையும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு பதிவைப் போடலாம் என்று கணினி முன் வந்து அமர்ந்தேன். வேலையை விட்ட பிறகும் அந்த அலுவலகத்திற்கு அலப்பறையை கொடுக்க வேண்டாமென்று கொஞ்சம் தயங்கினேன். ஆனால் இது பற்றி கண்டிப்பாக ஏதாவது எழுத வேண்டுமென்று நண்பர்கள் சிலர் கேட்டுக்கொண்டனர். (யார் அந்த நண்பர்கள் என்றெல்லாம் கேட்கக்கூடாது - எல்லாம் ஒரு ப்லோவுல விடுற பீலா தான்).

ஏன் இந்த முடிவு...?
வேலையை விடப்போகிறேன் என்று சொன்னதில் இருந்து அலுவலக நண்பர்கள் யாரைப் பார்த்தாலும் இதே கேள்வியையே என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தனர். (எத்தனை பேருடா இதே கேள்வியை கேப்பீங்க...? என்று "சிவாஜி" ரஜினி ஸ்டைலில் மனதிற்குள் கறுவிக்கொண்டேன்). ஆனால் வெளிப்படையாக பதில் சொல்ல முடியாமல் மென்று முழுங்கினேன். அவ்வப்போது "அரசு" படத்தில் வரும் வடிவேலு காமெடி மனதிற்குள் வந்து செல்லும். ஆனால் அதற்காக அலுவலகத்தை குறை சொல்ல விரும்பவில்லை. ஒரு கட்டத்தில் யாரைப் பார்த்தாலும் இன்ஜினியரிங் படித்துவிட்டு ஏன் இந்த வேலையில் இருக்கிறாய் என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். பக்கம் பக்கமாக பேசுவது தானே அக்கம் பக்கத்தின் வேலை என்று தொடக்கத்தில் இது பற்றியெல்லாம் நான் ஒரு போதும் கவலைப்பட்டதில்லை. ஆனால் சமீப காலமாக reference என்ற பெயரில் ஒன்றும் தெரியாத கூட்டமொன்று ஓ.எம்.ஆர் பக்கம் சுற்றிக்கொண்டிருப்பதாக அறிந்துக்கொண்டேன். மனதிற்குள் எரிந்துக்கொண்டேன். கல்லூரி காலத்தில் கல்வியைத் தவிர மற்ற அனைத்து கருமத்தையும் கற்றுக்கொண்டிருந்த கழிசடைகள் சிலர் இன்று டேக் ஹோம் 25K டா மச்சான் என்று சொல்கின்றனர். இவனுக்கெல்லாம் யாருடா வேலை கொடுத்தது என்று யோசித்து முடிப்பதற்குள் எங்க மாமா மூலமா கெடச்சது, எங்க மச்சான் வாங்கித் தந்தார் என்று சொல்லி வயிற்றுக்கடுப்பை கிளப்பி விடுகின்றனர். இப்படியே போய்க்கொண்டிருந்தால் கலியுகத்தில் நாமொரு டம்மி பீஸாகிவிடுவோமென்று உணர்ந்துக்கொண்டு வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன்.

நானும் அலுவலகமும்...
இது வரை பணியாற்றிய அலுவலகத்தை பற்றி சில வார்த்தைகள். நான் அலுவலகத்தையும், அலுவலகம் என்னையும் 60% கூட பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம். என் மனதில் அலுவலகம் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும், அலுவலகத்திற்காக இதையெல்லாம் செய்யலாம் என்று சில புதுமையான எண்ணங்கள் தோன்றியதுண்டு. ஆனால் எனக்கே உரிய சோம்பேறித்தனத்தால் எதையும் செய்ய முடியாமல் போய்விட்டது. யாராவது தட்டி கொடுத்திருந்தால் கூட முட்டிமோதி எதையாவது செய்திருப்பேன்.

நைட் ஷிப்ட் பற்றி சில வரிகள்...?
அது ஒரு உன்னதமான அனுபவம். ஒட்டுமொத்த தமிழகத்து வாடிக்கையாளர்களுக்கும் சேர்த்து நாங்கள் நான்கு பேர் மட்டுமே பணிபுரிந்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கும்போதே மனதிற்குள் ஜில்லென்று இருக்கும். நைட் ஷிப்ட் பற்றி மற்றவர்கள் அலுவலகத்து நேரத்தில் தூங்கிக்கொண்டிருப்பவர்கள் என்று அனுமானிக்கக்கூடும். ஆனால் நைட் ஷிப்டில் குறைந்தது ஒரு மாத காலமாவது இருந்து பார்த்தால் தான் தெரியும் அந்த ஆணி எப்படியெல்லாம் குத்துமென்று.

வாடிக்கையாளர்கள்...?
பக்கம் பக்கமாக எழுதலாம். இது வரைக்கும் எங்க அப்பா அம்மா கூட என்னை அந்த மாதிரியெல்லாம் திட்டி இருக்க மாட்டாங்க. கால் கடுக்க கால் எடுத்துக்கொண்டிருக்கும்போது ஒருத்தன் ஜஸ்ட் லைக் தட் ஒரு கெட்ட வார்த்தையை உதிர்த்துவிட்டு போய்விடுவான். அந்த வார்த்தையில் இருந்து வெளியில் வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். கஸ்டமர் கேருக்கு கால் பண்ணி திட்டுவதில் அப்படி என்னதான் சந்தோஷமோ...!!!

கால் சென்டர் பற்றி ஒரு நாவல்...
ஏற்கனவே சில பதிவுகள் எழுதியிருக்கிறேன். ஆனால் இந்த 14 மாத அனுபவத்தை வைத்து ஒரு 200 பக்க நாவலையே தயாரித்து வைத்திருக்கிறேன். ஆனால் அதற்கு எவ்வாறு உரிமம் பெறுவது, பதிப்பகங்களை எவ்வாறு நாடுவது, யாரிடம் சென்று இதைப் பற்றியெல்லாம் கேட்பது என்று தெரியாததால் கிடப்பில் போட்டு வைத்துள்ளேன். பதிவர்கள் யாருக்காவது இது பற்றி தெரிந்தால் தயவு செய்து சொல்லிக்கொடுங்கள்.

வேலையை விடும் போது "ஏன் இந்த முடிவு...?' என்று நச்சரித்த சமூகம் இப்போது "அடுத்தது என்ன செய்ய போகிறாய்...?" என்று கேட்க ஆரம்பித்திருக்கிறது. அவர்களுக்கெல்லாம்  இப்போதைக்கு என்னுடைய ஒரே பதில்...

"தெரியலையே மச்சி... ஒரு குவார்ட்டர் சொல்லேன்...!!!"
என்றும் அன்புடன்,
N.R.பிரபாகரன்
பின் குறிப்பு: ராஜினாமா என்ற அகராதி பிடித்த வார்த்தைக்கு எத்தனையோ அகராதிகளில் தமிழ் அர்த்தம் தேடியும் கிடைக்கவில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள். மேலும் சில வார்த்தைகளுக்கு கூட தமிழர்த்தம் தேவைப்படுகிறது.

Post Comment

24 comments:

Chitra said...

வேலை சீக்கிரம் கிடைச்சுரும்ல.... அப்புறம் என்ன? relax.....

சேலம் தேவா said...

ஒரு சந்தேகம்..!! இதுக்கு ஓட்டு போட்டா உங்க வேலை போனத லைக் பண்ற மாதிரி ஆயிராது..?!

அருண் பிரசாத் said...

மனவலியுடன் எழுதி இருக்கிறீர்கள்

All the best for your future

Philosophy Prabhakaran said...

Chitra said...
வேலை சீக்கிரம் கிடைச்சுரும்ல.... அப்புறம் என்ன? relax.....

உண்மைதான்... ஆனா அது வரைக்கும் வீட்ல தண்டசோறு தானே...

Philosophy Prabhakaran said...

சேலம் தேவா said...
ஒரு சந்தேகம்..!! இதுக்கு ஓட்டு போட்டா உங்க வேலை போனத லைக் பண்ற மாதிரி ஆயிராது..?!

ஜி... வேலை போகலை... நானா தான் வெளியே வந்துருக்கேன்... நல்ல கெளப்புறீங்களே பீதிய....

Philosophy Prabhakaran said...

அருண் பிரசாத் said....
மனவலியுடன் எழுதி இருக்கிறீர்கள்

ம்ம்ம்ம்... நீங்களாவது புரிஞ்சுக்கிட்டீங்களே...

pichaikaaran said...

நல்ல முடிவு ... நம்மை பயன்படுத்தி கொள்ளாத இடத்தில் இருந்து பயன் இல்லை... நமக்கென இருக்கும் இடத்தை தேடி அடைய வேண்டும்..
கஷ்டம்தான்,,, ஆனால் இயலாதது அல்ல...

வாழ்வின் உன்னத இடத்தில் இருக்கிறீர்கள்.. எந்த சாலையில் செல்வது என்பதை தீர்மானிக்கும் நேரம்..
நல்ல சிந்தனைகளும், நல்ல முடிவுகளும் மனதில் உதிக்க வாழ்த்துக்கள்..

♔ℜockzs ℜajesℌ♔™ said...

முறை செய்ய வந்து இருக்கேன். அதன் சார் புதுசா வலைபூ எழுத தொடங்கி இருக்கேன் . எல்லாரும் நம்ப வலைபூவ வந்து படிகன்னும்ன ஏதோ முறை செய்யுற பண்பாடு , கலாச்சாரம் இருக்காமே . பெரியவங்க நெறைய பேரு வலைபூ படிக்கும் போதும் , நெறைய பின்னூட்டங்கள் படிக்கும் போதும் தெரிஞ்சுகிட்டேன் . அதன் முறை செய்ய வந்து இருக்கேன் .

அண்ணாச்சி உங்க பதிவு ரொம்ப சூப்பர் , கலக்கி புட்டிங்க , படிக்கும் போதே செம நகைசுவைய இருக்கு . ரொம்ப நன்றி.
(சரியாய் பண்ணிட்டேன? தெரிலப்பு .. . . )


அன்புடன்

ராக்ஸ் . . . . ( புதுசா ப்ளாக் எழுத வந்து இருக்கேன் )

http://rockzsrajesh.blogspot.com/

Philosophy Prabhakaran said...

பார்வையாளன் said...
நல்ல முடிவு ... நம்மை பயன்படுத்தி கொள்ளாத இடத்தில் இருந்து பயன் இல்லை... நமக்கென இருக்கும் இடத்தை தேடி அடைய வேண்டும்..
கஷ்டம்தான்,,, ஆனால் இயலாதது அல்ல...

வாழ்வின் உன்னத இடத்தில் இருக்கிறீர்கள்.. எந்த சாலையில் செல்வது என்பதை தீர்மானிக்கும் நேரம்..
நல்ல சிந்தனைகளும், நல்ல முடிவுகளும் மனதில் உதிக்க வாழ்த்துக்கள்..


நம்பிக்கையூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி பார்வையாளரே...

Philosophy Prabhakaran said...

rockzrajesh said...
முறை செய்ய வந்து இருக்கேன். அதன் சார் புதுசா வலைபூ எழுத தொடங்கி இருக்கேன் . எல்லாரும் நம்ப வலைபூவ வந்து படிகன்னும்ன ஏதோ முறை செய்யுற பண்பாடு , கலாச்சாரம் இருக்காமே . பெரியவங்க நெறைய பேரு வலைபூ படிக்கும் போதும் , நெறைய பின்னூட்டங்கள் படிக்கும் போதும் தெரிஞ்சுகிட்டேன் . அதன் முறை செய்ய வந்து இருக்கேன் .

அண்ணாச்சி உங்க பதிவு ரொம்ப சூப்பர் , கலக்கி புட்டிங்க , படிக்கும் போதே செம நகைசுவைய இருக்கு . ரொம்ப நன்றி.
(சரியாய் பண்ணிட்டேன? தெரிலப்பு .. . . )

முறை செய்ய வந்ததெல்லாம் OK தான்... ஆனால் வெறுமனே சம்பிரதாயத்துக்கு பின்னூட்டமெல்லாம் போட வேண்டாம்... இன்னமும் கூட நீங்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது... எழுத்துப்பிழையில்லாமல் எழுதினால் சிறப்பு... ஒரே நாளில் ஐந்து பதிவை வெளியிடுவதற்கு பதிலாக ஒவ்வொன்றாக வெளியிடலாமே...

pavi said...

good decision ... try for good job...

Unknown said...

Superb da! nee mama vaangi kudutha job nu sonnathu yaaranu therinjikalama?????????????

HEHEHEHEHE

எஸ்.கே said...

நமக்கு பிடித்தை செய்யும்போது கூட இந்த உலகம் நம்மை ஏராளமான கேள்விகள் கேட்கும். பிரச்சினைகளை விட பிரச்சினைகளை பற்றிய மற்றவர்களின் கேள்வியே பெரிய பிரச்சினையாக இருக்கிறது. வலிமிகுந்த வார்த்தைகளை எளிமையாக நகைச்சுவையாக எழுதியிருக்கிறீர்கள்.

Unknown said...

எனக்கும் சேர்த்து ஒரு குவார்ட்டர் சொல்லுங்க இங்கேயும் அதே தான்

Philosophy Prabhakaran said...

pavi said...
good decision ... try for good job...

Thanks da... and also thanks for visiting my blog and posting comments...

Philosophy Prabhakaran said...

maharajan.G said...
Superb da! nee mama vaangi kudutha job nu sonnathu yaaranu therinjikalama?????????????

HEHEHEHEHE


அது தனிமனித தாக்குதல் இல்லை நண்பா... பொதுவாகவே குறிப்பிட்டேன்... ஆனால் நீ யாரை மனதில் நினைத்துக்கொண்டு இப்படி சிரிக்கிறாய் என்று எனக்கு நன்றாகவே புரிகிறது...

Philosophy Prabhakaran said...

எஸ்.கே said...
நமக்கு பிடித்தை செய்யும்போது கூட இந்த உலகம் நம்மை ஏராளமான கேள்விகள் கேட்கும். பிரச்சினைகளை விட பிரச்சினைகளை பற்றிய மற்றவர்களின் கேள்வியே பெரிய பிரச்சினையாக இருக்கிறது. வலிமிகுந்த வார்த்தைகளை எளிமையாக நகைச்சுவையாக எழுதியிருக்கிறீர்கள்.

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எஸ்.கே... தொடர்ந்து வருகை தாருங்கள்...

Philosophy Prabhakaran said...

வாழ்க்கை வாழ்வதற்கே said....
எனக்கும் சேர்த்து ஒரு குவார்ட்டர் சொல்லுங்க இங்கேயும் அதே தான்

என் இனமடா நீ...

vim said...

Hi, Dont worry da!! you are capable to get right job for you...
Choose perfect job.for this time ...

-Ramesh cse

விஜய் said...

தம்பி, கூடிய விரைவில் நல்லதொரு பணிகிடைக்கும்.

ராஜினாமா - பதவி விலகல்

விஜய்

Philosophy Prabhakaran said...

vim said...
Hi, Dont worry da!! you are capable to get right job for you...
Choose perfect job.for this time ...

-Ramesh cse

Hmmm thanks da... and also thanks for visiting my blog...

Philosophy Prabhakaran said...

விஜய் said...
தம்பி, கூடிய விரைவில் நல்லதொரு பணிகிடைக்கும்.

ராஜினாமா - பதவி விலகல்

விஜய்


நன்றி அண்ணா...

சைவகொத்துப்பரோட்டா said...

கூடிய விரைவில் சிறப்பான வேலை கிடைக்க வாழ்த்துக்கள் பிரபாகர்.

Philosophy Prabhakaran said...

சைவகொத்துப்பரோட்டா said...
கூடிய விரைவில் சிறப்பான வேலை கிடைக்க வாழ்த்துக்கள் பிரபாகர்.

நன்றி சை.கொ.ப... தொடர்ந்து வாருங்கள்...