28 October 2010

பதிவுலகில் philosophy prabhakaran - 50வது பதிவு

வணக்கம் மக்களே...

கிட்டத்தட்ட மொத்த பதிவுலகமே இந்த தொடர்பதிவை எழுதி முடித்தாகிவிட்டது. இப்போது நானும் எழுதுகிறேன். யாராவது தொடருவதற்கு அழைப்பார்கள் என்று காத்திருந்தேன். யாருமே அழைக்கவில்லை. வேறு வழியில்லாததால் அழைப்பில்லாமலே பதிவை தொடருகிறேன். அதுமட்டுமில்லாமல் இதனை ஐம்பதாவது பதிவாக வெளியிட வேண்டுமென்று விரும்பியதால் காத்திருந்தேன்.

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
ஆரம்பக்காலத்தில் "flying taurus" என்று வைத்திருந்தேன். (ஏன் அப்படி வைத்தேன் என்று எனக்கே தெரியவில்லை). தொடர்ந்து எழுத ஆரம்பித்த பின்பு "philosophy prabhakaran" என்று மாற்றிக்கொண்டேன். இப்போது எங்கு பார்த்தாலும் தமிழாக்கம் தலை விரித்து ஆடுவதால் "தத்துபித்துவங்கள் பிரபாகரன்" என்று தமிழில் மாற்றிக்கொள்ளலாமா என்று யோசித்து வருகிறேன்.

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?


எனது உண்மையான, முழு பெயர் பிரபாகரன். பெரும் பகுத்தறிவாளரான எம் தந்தை, விடுதலைப்புலி பிரபாகரனின் நினைவாக எனக்கு இந்த பெயரை வைத்ததாக ஒரு வரலாறு உண்டு. நான் எப்போதும் என் பெயரை N.R.Prabhakaran என்று இனிஷியலோடு சொல்லிக்கொள்ளவே விரும்புவேன். நண்பர்கள் சிலர் என்னை N R என்று அழைப்பதால் அதுவே கூட சமயங்களில் என் பெயராக மாறி விடுவதுண்டு.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி...?
பொழுது  போகாத ஒரு மாலைப்பொழுதில் கூகிள் அங்கிளை ஆராயந்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் ப்ளாக்கர் என்று ஒன்று இருப்பதை அறிந்தேன். காசா...? பணமா...? சும்மா ஒன்னு ஆரம்பிச்சு வைப்போம்னு ஆரம்பிச்சேன்.

ஆரம்பத்தில்  நான் ஆங்காங்கே படிக்கும், பார்க்கும் கதைகள், கவிதைகள், நகைச்சுவைகள், புகைப்படங்கள் இவற்றையெல்லாம் கொண்டு ஒரு பெட்டகமாக உருவாக்க வேண்டுமென்றே ஆரம்பித்தேன்.

நாளடைவில்  எனது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களையும், பிறரிடம் நேரில் சொல்ல முடியாத விஷயங்களை பதிவுகள் மூலமாக சொல்ல முற்பட்டேன்.

இறுதியாக  தல அஜித் நடிப்பில் வெளிவந்த அசல் படத்தின் விமர்சனம் எழுதியபோது தான் என் சமூகப்பயணம் ஆரம்பமானது.

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
முன்பெல்லாம்  ஒரு பதிவு எழுதியவுடன், ஆர்குட்டில் இருக்கும் 300 நண்பர்களுக்கும் தனித்தனியாக சென்று scrap அனுப்புவேன். அதில் ஒரு முப்பது பேர்  வந்துபோவார்கள். யாராவது பின்னூட்டம் போடமாட்டார்களா என்று ஏங்குவேன். முதல் பாலோயரை பெற நான் என்ன பாடுபட்டேன் என்று எனக்குத்தான் தெரியும்.

பின்னர்  எதேச்சையாக ஒரு நாள், தமிழ்மணம் தளத்தில் பதிவு செய்தேன். அப்போதுதான் நான் கேட்காமலே கேக் கிடைக்க ஆரம்பித்தது. உடனே தமிழிஷ், தமிழ் 10, போகி என்று திரட்டிகள் அனைத்திலும் பதிவு செய்தேன். எனக்கு யாரெல்லாம் பின்னூட்டம் போடுகிறார்களோ அவர்களுக்கெல்லாம் நான் பின்னூட்டம் போட ஆரம்பித்தேன். புதுபதிவர்களை தேடிச்சென்று பின்னூட்டம் போட்டு உற்சாகப்படுத்தினேன். இப்போது நூறை தாண்டி  நடைபோட்டுக்கொண்டிருக்கிறேன்.

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
நிறைய...  அலுவலகத்தில் நடந்த சம்பவங்களை வைத்து இரண்டு பதிவு எழுதினேன். இதன் மூலம் அலுவலக நண்பர்கள் மத்தியில் என்னுடைய பதிவு பிரபல்யமடைந்தது. எனது அணித்தலைவருக்கும் எனக்கும் நல்ல புரிந்துக்கொள்ளுணர்வு ஏற்பட்டது.

எனது  நண்பர்கள் பற்றிய பதிவொன்றினை எழுத முயற்சி செய்தேன். சில நண்பர்கள் நம்மைப் பற்றி என்ன எழுதப்போகிறான் என்ற ஆர்வத்தில் ஆதரவு தெரிவித்தார்கள். சில நண்பர்கள் நம்மைப் பற்றி எழுதிவிடுவானோ என்று பயந்து என்னிடம் பேசுவதையே நிறுத்திக்கொண்டார்கள்.

கல்லூரியின்  பட்டமளிப்பு விழா பற்றிய பதிவொன்றினை எழுதியபோது கல்லூரி விரிவுரையாளர்கள் மத்தியிலும் ஏனைய மாணவர்கள் மத்தியிலும் நன்மதிப்பு கிட்டியது.

எல்லாவற்றிற்கும் உச்சகட்டமாக எனது தற்காலிக தாயாரை தாளித்து ஒரு பதிவை போட்டபோது கடும் எதிர்ப்பை சந்தித்தேன். பதிவை delete செய்யுமாறு கூக்குரல்கள் கிளம்பின. எழுதிய பதிவை பின்வாங்கமாட்டேன் என்று பிடிவாதமாக கூறி என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றினேன்.

இப்போதுகூட காதலியை பற்றி ஒரு பதிவு எழுதப்போவதாக சொல்லி அவளிடம் செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொண்டேன்.

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
முழுக்க முழுக்க பொழுது போக்கத்தான். பதிவெழுதுவதின் மூலம் சம்பாதிப்பது எப்படி என்றுகூட எனக்கு தெரியாது.

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஒன்றே  ஒன்று மட்டும்தான். அலுவலக ஆணி அடிக்கடி அதிகம் ஆவதால் தூங்குவதற்கே நேரமில்லாமல் தவிக்கிறேன். இதில் இன்னொரு வலைப்பதிவு வேறையா...! அட போங்கப்பா...!

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
கோபம்: இது ஒரு சூழ்நிலை கேள்வி. பதிவுலகில் பெரிய சண்டையே நடந்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இதுபோன்ற கேள்விக்கு பதிலளிக்க விரும்பவில்லை.

பொறாமை என்று பார்த்தால் நிறைய இருக்கிறது. அதில் டாப்லிஸ்டில் இருப்பவர்கள் சேட்டைகாரனும், "அவிய்ங்க" ராசாவும். வரலாற்று சிறப்புமிக்க ஒரு பதிவை ஜஸ்ட் லைக் தட் எழுதி முடித்து விடக்கூடிய திறமைசாலிகள்.

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி...?
இதை  நான் சொல்லியே ஆகவேண்டும். நான் இந்த பதிவை தொடர்ந்ததே இந்த கேள்விக்காகத்தான்.

என்  கல்லூரி நண்பன். அவன் பெயர் பொன் மகேஸ்வரன். இன்று வரை நான் எழுதிய அனைத்து பதிவுகளுக்கும் முதல் ரசிகனும் விமர்சகனும் அவனே. அவனுக்கு பதிவுலகம் அதிகம் பழக்கமில்லை. அதனால் அதிகம் பின்னூட்டம் போட்டதில்லை. ஆனால் பதிவெழுதி அரைமணி நேரத்தில் கால் வந்துவிடும். வரிவரியாக மொத்த பதிவையும் விமர்சனம் செய்துவிடுவான். அவன் என் பதிவுகளை பாராட்டி அனுப்பிய குறுந்தகவல்களை இன்னமும் என் செல்பேசியில் சேமித்து வைத்திருக்கிறேன்.

10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...?
இது வரை என் புகைப்படத்தை வெளியிட்டதில்லை என்று நினைக்கிறேன். இப்போது உங்கள் பார்வைக்காக...


என்ன பாதி முகம் தான் தெரிகிறது என்று பார்க்கிறீர்களா...? மிச்சத்தை நூறாவது பதிவில் வெளியிடுகிறேன்...

கடைசியாக சொல்லிக்கொள்வது யாதெனில் சமூகப்பதிவுகளை தவிர்த்து இன்னும் நிறைய பர்சனல் பதிவுகள் எழுது வேண்டியிருக்கிறது. இன்னும் நிறைய பேரிடம் நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது. சொல்லுவேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN 

Post Comment

26 comments:

சுதர்ஷன் said...

நிச்சயமாக .. வாழ்த்துக்கள் தலைவரே ;)

விஜய் said...

வாழ்த்துக்கள் தம்பி

விஜய்

ரஹீம் கஸ்ஸாலி said...

50-ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள்

nis said...

50'வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பர் N.R.PRABHAKARAN .

100'வது பதிவு தொடர வாழ்த்துகள். அத்துடன் உங்கள் முழு படத்தையும் பார்க்க முடியும். ;)

Kousalya Raj said...

யதார்த்தமான, தெளிவான பதில்கள்....! 50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்......!

Chitra said...

ஐம்பதாவது பதிவுக்கு - வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!
அருமையான பதில்கள் மூலமாக உங்களை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

Muthu said...

Hey congrats....Continue your literary works..

அருண் பிரசாத் said...

50துக்கு வாழ்த்துக்கள்....

ஹி ஹி ஹி உங்க பாதி முகத்துல பாதி இடத்தை உங்க முடியே மறைச்சிடுத்து.... (சும்மா தமாசுக்கு)

Unknown said...

வாழ்த்துக்கள்

சைவகொத்துப்பரோட்டா said...

அரை சதத்துக்கு வாழ்த்துக்கள் பிரபாகர்.

Suganya Velappan said...

Hi Prabhakar..Happy to see your 50th blog..Congatulations..You have crossed many steps & stones and still you have to travel long way to reach your goal..Never get tired of your work..Let your thoughts flow over..I wish to see you as a flawless Writer.. ALL THE BEST

சர்பத் said...

வாழ்த்துக்கள்...தொடரட்டும் உங்கள் பதிவு மழை :)

//என்ன பாதி முகம் தான் தெரிகிறது என்று பார்க்கிறீர்களா...? மிச்சத்தை நூறாவது பதிவில் வெளியிடுகிறேன்...///

என்னங்ணா முக்காவாசி முகம் தெரியுது...பாதின்னு சொல்றீங்க :)

அலைகள் பாலா said...

வாழ்த்துக்கள்.

அலைகள் பாலா said...

///என்னங்ணா முக்காவாசி முகம் தெரியுது...பாதின்னு சொல்றீங்க :///

அதுக்காக 68.34% முகம் தெரியுதுன்னு போட சொல்றிங்களா? ஹா ஹா ஹா, ஜஸ்ட் கிட்டிங்...

தேவா said...

ஹால்ப் செஞ்சுரியா? வாழ்த்துக்கள் பிரபாகர் பாஸ்

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்த்துக்கள் பிரபாகரா

'பரிவை' சே.குமார் said...

50'வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

Riyas said...

வாழ்த்துக்கள் 50 வது பதிவுக்கு.. தொடர்ந்து எழதுங்கள்..

Philosophy Prabhakaran said...

@ S.Sudharshan, விஜய், ரஹீம் கஸாஸி, nis, Kousalya, கேரளாக்காரன், Chitra, Muthu, அருண்பிரசாத், நா.மணிவண்ணன், சைவகொத்துப்பரோட்டா, suganya, சர்பத், அலைகள் பாலா, தேவா, சி.பி.செந்தில்குமார், சே.குமார், Riyas
நன்றி... நன்றி... நன்றி...

Philosophy Prabhakaran said...

@ அலைகள் பாலா
சர்பத் அண்ணனுக்கு பதில் சொன்னதற்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்...

Philosophy Prabhakaran said...

@ suganya
மீண்டும் வருகை தந்ததற்கு நன்றி... நீங்கள் என்னுடன் உறுதுணையாக இருந்தால் நிச்சயம் கோல் போடலாம், கோபுரங்களையும் தொடலாம்...

Unknown said...

Hi brother.. I was waiting much to comment for your blog.. This blog is too good and it deserves to be your 50th.. Keep up the good work congrats !!

Unknown said...

வாழ்த்துக்கள் பிரபாகரன், கூடிய சீக்கிரமே 500 ஐ தாண்டிடனும், தீயா வேலை செய்யணும் பிரபாகரன், சும்மா தமாசுக்கு.

Philosophy Prabhakaran said...

@ prak
முதல் முறையாக வருகை தந்ததற்கும் பின்னூட்டம் போட்டதற்கும் மிக்க நன்றி... மட்டற்ற மகிழ்ச்சி...தொடர்ந்து வருகை தாருங்கள்...

@ இரவு வானம்
நன்றி நண்பரே...

madrasminnal said...

நெஞ்சார்ந்த வாழ்த்துகள் பிரபா! சமீபத்தில் பதிவுலகில் நுழைந்த என்னை ஆரம்பம் முதல் தொடர்ந்து ஊக்குவித்து வரும் நண்பர்களில் நீங்கள் முதன்மையானவர். கிட்டத்தட்ட என் அனைத்து பதிவுகளுக்கும் கருத்து கூறினீர்கள். ஒருவேளை நீங்கள் அதை செய்திருக்காவிட்டால் நான் எழுதுவதையே நிறுத்தி இருப்பேன். ஓட்டு வாங்கவும், பால்லோயர்ஸ் பெறவும் நான் பட்ட பாடு இருக்கே....! சீக்கிரம் செஞ்சுரி அடிங்க பாஸ். போட்டோல போஸ் குடுக்ரத பாத்தா அடுத்த ஹீரோ தமிழ் சினிமாவுக்கு ரெடின்னு நினைக்கிறேன். யுனிவெர்சிட்டி படத்துல வர்ற ஜீவன் மாதிரி ஒரு லுக்கு. வாழ்க வளமுடன்! (Madrasbhavan.blogspot.com and nanbendaa.blogspot.com)

karthikkumar said...

வாழ்த்துக்கள் பங்கு