4 November 2010

கோலி அப்டேட்ஸ் - தீபாவளி ஸ்பெஷல்

நந்தலாலா ரிலீஸ்
சில நாட்களுக்கு முன்பு எனது பதிவொன்றில் நந்தலாலா ரிலீஸ் ஆகாததை பற்றி புலம்பித் தள்ளியிருந்தேன். அது யாருடைய காதிலாவது கேட்டுவிட்டதா என்று தெரியவில்லை. நேற்றைய செய்தித்தாளை பிரித்ததும் ஓர் இன்ப அதிர்ச்சி.

நவம்பர் 26ல் இந்தக் குழந்தை பிறக்கின்றது என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள். தீபாவளிக்கு கேட்காமலே புதுத்துணி வாங்கி கொடுத்தது போல இருந்தது. ஒரே ஒரு குறை என்னவென்றால் குறிப்பிட்ட நாளன்று சில ஆணிகள் இருப்பதால் முதல் நாள் முதல் காட்சி பார்க்கமுடியாது. நைட் ஷோ பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டேன். இன்னமும் தியேட்டர் பெயர்கள் எதுவும் அறிவிக்கப்படாததால் கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது. ம்ம்ம்... நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை.

25வது நாள் வெற்றி விழா
முன்பெல்லாம் ஒரு படம் நன்றாக ஓடியதென்றால் 175வது நாளை வெள்ளிவிழா என்ற பெயரில் விழா எடுத்து கொண்டாடுவார்கள். பிறகு தொலைகாட்சியின் தாக்கம் அதிகரித்ததால் 100வது நாளையே விமரிசையாக கொண்டாட ஆரம்பித்தார்கள். இப்பொழுதெல்லாம் முதலுக்கே மோசம், போட்ட காசை எடுத்தாலே போதும்னு சொல்றாங்க. ஆனா இங்கே ஒருத்தங்க அவங்க படம் 25 நாள் ஓடினதை விழா எடுத்து கொண்டாடியிருக்காங்க. என்ன படம்னு கேக்குறீங்களா... கலைத்தாயின் தங்கபுதல்வன் அமரேஷ் கணேஷ் நடித்த நானே என்னுள் இல்லை தான். இந்த படம் வெளிவந்த ஒரு தியேட்டர் ஆபரேட்டரிடம் படம் பற்றி கருத்து கேட்டபோது நானே தியேட்டருக்குள் இல்லை என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார். என்னவோ... இவங்களே படம் எடுத்து, இவங்களே இயக்கி, இவங்களே நடிச்சு, இவங்களே விழாவும் கொண்டாடுறாங்க. காக்கைக்கும் தன குஞ்சு பொன்குஞ்சு.

குமுதத்தின் Xclusive
நேற்று வெளிவந்த குமுதத்தில் கமலின் Xclusive பேட்டி என்று கடைகளில் விளம்பரப்படுத்தியிருந்தார்கள்.

கமல் மீதுகொண்ட காதலில் பத்து ரூபாய் கொடுத்து புத்தகத்தை வாங்கினேன். முதலில் கமலைப் பற்றி நாலு வரிகள்... அதன்பிறகு மூன்று பக்கங்களுக்கு விளம்பரம். மறுபடி ஒரு அரைப்பக்கத்திற்கு கமல் பேட்டி... அதன்பிறகு ஒரு பக்க விளம்பரம். கடைசியாக ஒரு முக்கால் பக்க பேட்டியை போட்டுவிட்டு முடிவில் கவிதை, கலைஞர், லட்சியம், மன்மதன் அம்பு அடுத்த இதழில்... என்று அடைப்புக்குறிகளுக்குள் போட்டிருந்தார்கள். எனக்கு முழு போதையிலிருக்கும்போது மோர் குடித்தது போல இருந்தது. அப்போ என்ன மயித்தை தான் இந்த இதழில் கேட்டார்கள் என்று தெரியவில்லை.

தீபாவளி ரேஸ்
தீபாவளிக்கு உத்தமப்புத்திரன், வ, மைனா, வல்லக்கோட்டை ஆகிய நான்கு தமிழ் படங்கள் உட்பட Action Replay என்ற ஹிந்தி படமும் Street Dance 3D என்ற ஆங்கிலப் படமும் வெளியாகிறது. இந்தப் படங்கள் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களை எல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தபோது தீபாவளியோடு எந்திரன் என்னும் நரகாசுரன் ஒழிந்துவிடுவான் என்றே தோன்றுகிறது. தீபாவளி படங்களில் வ பார்க்கலாமா அல்லது மைனா பார்க்கலாமா என்று ஒரே குழப்பமாக இருக்கிறது. உங்கள் கருத்துக்களை இந்த வலைப்பூவில் ஓரத்தில் இருக்கும் ஓட்டுப்பெட்டியில் பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்.

உலகப்பட ஆர்வம்
கேபிள் சங்கர், பார்த்ததும் படித்ததும், அட்ராசக்க இவர்களின் பதிவுகளை அடிக்கடி படித்து படித்து தமிழ் சினிமாவின் மொக்கை படங்களை பார்க்கும் ஆர்வம் அதிகரித்துவிட்டது. நேற்று ஒரு நண்பனை நீதானா அவன் படத்தை பார்க்கக் கூப்பிட்டதற்கு அவனா நீ என்றுக் கேட்டான். அதோடு விடாமல் அசிங்க அசிங்கமாக வசைமொழி பாடினான். சரி, இந்த ஒருமுறை விட்டுவிடுவோம் மேதை அல்லது லத்திகா ரிலீஸ் ஆகும்போது நிச்சயம் பையனை கடா வெட்டிவிடவேண்டுமென மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.

மேலே குறிப்பிட்ட மேதை மற்றும் லத்திகா படங்கள் எப்போ ரிலீசாகும்னு யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

டிஸ்கி: பதிவ படிச்சிட்டு பின்னூட்டம் போடாம போறவங்களுக்கு சாம் ஆண்டர்சனின் யாருக்கு யாரோ ஸ்டெப்னி படத்தின் டி.வி.டி பரிசாக அனுப்பி வைக்கப்படும். நல்ல பதிவு, நல்ல தொகுப்பு, நல்ல பகிர்வு, nice, :) இந்த மாதிரியெல்லாம் டெம்ப்ளேட் பின்னூட்டம் போட்டீங்கன்னா டாகுடர் லத்திகா சீனிவாசனை வச்சி கடிக்க விட்ருவோம்.

Post Comment

28 comments:

ஜெய்லானி said...

//கமலின் Xclusive பேட்டி//

Xclusive பேட்டின்னு சொன்னா என்னன்னு உங்களுக்கு இப்ப புரிஞ்சிருக்குமே..!! :-))

Philosophy Prabhakaran said...

@ ஜெய்லானி
வாங்க ஜெய்... சீக்கிரமே வந்து பின்னூட்டம் போட்டதற்கு நன்றி... நல்லாவே புரிஞ்சிடுச்சு... இனி வார இதழ்களை வாங்குறதாகவே இல்லை...

சைவகொத்துப்பரோட்டா said...

//தமிழ் சினிமாவின் மொக்கை படங்களை பார்க்கும் ஆர்வம் அதிகரித்துவிட்டது.//

உங்க மன வலிமை அபாரம்!

தீபாவளி வாழ்த்துக்கள் பிரபாகர்.

Philosophy Prabhakaran said...

@ சை.கொ.ப
பாராட்டுக்கு நன்றி நண்பரே... நீங்களும் அது மாதிரியான படங்களை பாருங்கள்... தன்னம்பிக்கை வளரும்...

Anonymous said...

oh My god !!!!!!! what a still at the end?????????????? I am scared , Don't do it again pls...........Happy Diwali

Philosophy Prabhakaran said...

@ Anonymous
Thanks for posting comments... I thought to publish close up shot... Keeping ur wellness in mind avoided it...

கேரளாக்காரன் said...

maina paakkalam supera irukkumnu thonuthu fulla enga oorla than shooting nadanthuchi(MUNNAR)

எம் அப்துல் காதர் said...

'வா' பார்க்க வேணாம் (தள்ளாடிக்கிட்டே வெளியே வருவீங்க) 'மைனா' பாருங்க (பேரே அழகா இருக்குல்ல) சும்மா ஹி.. ஹி..

N R பிரபாகரன் தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் இனிய 'தீபாவளி' நல் வாழ்த்துகள்!!

அருண் பிரசாத் said...

நல்ல பதிவு,

நல்ல தொகுப்பு,

நல்ல பகிர்வு,

nice,

:)

சரி சரி சீக்கிரம் டிவீடி அனுப்புங்க.... என் பிரெண்டு ஒருத்தனுக்கு கல்யாணம் வருது

எஸ்.கே said...

அழகான தொகுப்பு! நந்தலாலா வரப்போகிறதா சந்தோசம். பேட்டிகள், செய்திகள் என எதையாவது காட்டி புத்தகம்கங்களை விற்கிறார்கள். பலமுறை ஏமாந்துள்ளேன். ஒன்றும் இருக்காது.\

உடல்நிலை சரியில்லை. அதனால் அதிகமாக/உடனடியாக இப்போதெல்லாம் பின்னூட்டங்கள் இட முடிவதில்லை நண்பரே!

nis said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்
நண்பர் prabhakaran

'பரிவை' சே.குமார் said...

தீபாவளி வாழ்த்துக்கள் பிரபாகர்.

அலைகள் பாலா said...

எம் அப்துல் காதர்
November 4, 2010 11:52 AM 'வா' பார்க்க வேணாம் (தள்ளாடிக்கிட்டே வெளியே வருவீங்க) 'மைனா' பாருங்க (பேரே அழகா இருக்குல்ல) சும்மா ஹி.. ஹி..

repaet...

Philosophy Prabhakaran said...

@ கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன்)
ம்ம்ம்... பார்க்கலாம்... ஆனா நம்ம மைனா "அனாகா (எ) அமலா" மேக்கப் இல்லாமல் வருவது தான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது...

Philosophy Prabhakaran said...

@ எம் அப்துல் காதர்
ம்ம்ம்... சரிங்க... முயற்சி பண்றேன்...
தீபாவளி வாழ்த்துக்கு நன்றி... நீங்கள் தீபாவளி கொண்டாடுவீர்களா என்று தெரியவில்லை... எனினும் வாழ்த்துக்கள்...

Philosophy Prabhakaran said...

@ அருண் பிரசாத்
பாஸ்... டிஸ்கியை ஒழுங்கா படிங்க... பின்னூட்டம் போடாம போறவங்களுக்கு மட்டும்தான் டி.வி.டி... டெம்ப்ளேட் பின்னூட்டம் போடுறவங்களை டாகுடர் லத்திகா சீனிவாசனை விட்டு கடிக்க வைப்போம்... எங்க தலைவர் ஆட்டோவுல வந்துகிட்டு இருக்கார்... கடி வாங்க ரெடியா இருங்க...

Philosophy Prabhakaran said...

@ எஸ்.கே
பரவாயில்லை நண்பரே பின்னூட்டம் போடமுடியவில்லை என்றாலும் பரவாயில்லை... பதிவு போடாமல் இருந்துவிடாதீர்கள்... வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...

Philosophy Prabhakaran said...

@ nis, சே.குமார்
உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் நண்பர்களே...

Philosophy Prabhakaran said...

@ அலைகள் பாலா
நன்றி பாலா... முயற்சி செய்கிறேன் பாலா... மைனாவைப் பார்க்க...

ILA (a) இளா said...

கடைசிப் படம் பார்த்தவுடனே, பேதியாகுற ஃபீலிங்... ஏன் .. ஏன் ஏன் ஏன் ஏன்

Philosophy Prabhakaran said...

@ ILA(@)இளா
எங்கத் தலைவர பத்தி யாராவது ஏதாவது பேசினீங்கன்னா பிரச்சனை ஆயிடும்... ஆட்டோ வரும் ஜாக்கிரதை...

அன்பரசன் said...

//டிஸ்கி: பதிவ படிச்சிட்டு பின்னூட்டம் போடாம போறவங்களுக்கு சாம் ஆண்டர்சனின் “யாருக்கு யாரோ ஸ்டெப்னி” படத்தின் டி.வி.டி பரிசாக அனுப்பி வைக்கப்படும். “நல்ல பதிவு, நல்ல தொகுப்பு, நல்ல பகிர்வு, nice, :) இந்த மாதிரியெல்லாம் டெம்ப்ளேட் பின்னூட்டம் போட்டீங்கன்னா டாகுடர் லத்திகா சீனிவாசனை வச்சி கடிக்க விட்ருவோம். //

அப்ப என்னன்னுதான் பின்னூட்டம் போடுறது?

தீபாவளி வாழ்த்துக்கள்.

ரஹீம் கஸ்ஸாலி said...

தீபாவளி நல் வாழ்த்துக்கள் நண்பரே...

Unknown said...

உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

Philosophy Prabhakaran said...

@ அன்பரசன்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே... பதிவை முழுமையாக படித்துவிட்டு குறைந்தது மூன்று வர்களுக்காவது பின்னூட்டமிட வேண்டும் :)

Philosophy Prabhakaran said...

@ அன்பரசன், ரஹீம் கஸாலி, சிநேகிதி
உங்களுக்கு மிகவும் தாமதப்படுத்தப்பட்ட தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

Unknown said...

உங்க அன்பு கமலால தான் சார் கிளைமாக்ஸ் மாத்தி புட்டாங்க. அந்த ஆள் சொல்றது தான் விளங்கலன்னு பார்த்தா எவன்னா கஷ்டப்பட்டு படம் எடுத்தா அதுலயும் போய் கிளைமாக்ஸ் காட்சி மாத்த சொன்ன என்ன பண்றது. எல்லாம் விதி

Philosophy Prabhakaran said...

@ விக்கி உலகம்
மைனா படம் பத்தி சொல்றீங்களா... கமல் சொன்னதால எப்படி மாத்தி இருக்காங்கன்னு தெரியலையே...