29 August 2011

பிரபா ஒயின்ஷாப் – 29082011


அன்புள்ள வலைப்பூவிற்கு,

வெங்காயம்:
சி.பி.செந்தில் எழுதிய “வெங்காயம்” பட விமர்சனத்தில் படத்தின் இயக்குனர் “சங்ககிரி” ராச்குமாரே வந்து பின்னூட்டம் போட்டிருந்தார். நிச்சயமாக இது பதிவுலகிற்கும், பதிவர்களுக்கும் கிடைத்துள்ள அங்கீகாரம் தான். இதற்காகவே வெங்காயம் படத்தை பார்த்துவிட வேண்டுமென்று முடிவு செய்திருந்தேன். ஆனால், ஏமாற்றமளிக்கும் வகையில் ஒரு வாரத்திலேயே படம் அனைத்து திரையரங்குகளில் இருந்தும் தூக்கப்பட்டுவிட்டது. இயக்குனரிடம் பேசியபோது தியேட்டர் கிடைக்காத காரணத்தினால் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாகவும் அடுத்த வாரத்தில் மீண்டும் வெளியாகும் என்று தெரிவித்தார். பெரிய பட்ஜெட் படங்களே தியேட்டர் கிடைக்க “மங்காத்தா” ஆடிக்கொண்டிருக்கும்போது வெங்காயம் போனியாவது என்னவோ சந்தேகம்தான். மகாலட்சுமியோ கிருஷ்ணவேணியோ மனது வைத்தால்தான் உண்டு.

போராட்டம்:
ராஜீவ் கொலையாளிகள் (என்று சொல்லப்படும்) மூவரின் தூக்குதண்டனையை நிறுத்தக்கோரி சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் போராடுவதாக செய்திகளில் படித்தேன். இதை இதை இதைத்தான் எதிர்பார்த்தேன். ஈவ் டீசிங், ரவுடியிசம், ஆராஜகம், பப்ளிக் நியூசன்ஸ் இதையெல்லாம் விட்டுவிட்டு இந்தமாதிரி முற்போக்கான செயல்களில் ஈடுபடும் அவர்களை பாராட்டவேண்டும். ஆனால், தூக்குதண்டனையை நிறுத்தக்கோரி செங்கொடி என்ற இளம்பெண் உயிர்தியாகம் செய்திருக்கும் விஷயத்தை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. மூன்று உயிர்களை காப்பாற்ற வேண்டுமென்ற நோக்கத்தில் ஒரு உயிரை கொடுப்பது அபத்தமாக இருக்கிறது. இனியும் தூக்குதண்டனையை நிறுத்தாவிட்டால் செங்கொடியின் தியாகம் அர்த்தமற்று போய்விடும்.

தமிழ் புத்தாண்டு:
"நித்திரையில் இருக்கும் தமிழா...!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்.
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு...!"

கலைஞர் “முயலுக்கு நாலு கால்” என்று சொன்னால் “இல்லையில்லை... கலைஞர் ஒரு தமிழன துரோகி, போலி நாத்திகவாதி, சுயநலவாதி... அவர் சொல்வது எல்லாவற்றையும் நான் கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பேன்... நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான்...” என்று சொல்பவர்களுக்கு மேலே உள்ள பாரதிதாசன் கவிதையை டெடிகேட் செய்கிறேன். எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டேன் என்பவர்கள் சமஸ்கிருத புத்தாண்டாம் ஏப்ரல் பதினான்கையே பிடித்து தொங்குங்கள்.

அன்னாயிசம்:
நேற்றிரவு ஃபேஸ்புக்கில் மாடர்ன் மங்கை ஒருவர் “Happy Anna-Pendence Day” என்று ஸ்டேட்டஸ் அப்டேட் விட்டிருந்தார். அவரை மடக்கி தங்கச்சி... ஜன் லோக்பால்ன்னா என்னன்னு கேட்டேன். பாப்பா பேந்த பேந்த முழிச்சது. அப்படின்னா இனிமேல் அன்னா-பென்டன்ஸ், ஆயா-பென்டன்ஸ்ன்னு எதையாவது உளறாதேன்னு சொன்னேன். சகோதரி சூடாயிட்டார். சில நிமிடங்களில் என்னுடைய கருத்துக்களை எச்சில் தொட்டு அழித்துவிட்டு என்னுடைய நட்பையும் முறித்துக்கொண்டார். (இந்த பொண்ணுங்களே இப்படித்தான்... குத்துங்க எஜமான் குத்துங்க...) தொடர்ந்து இதேமாதிரி பேஷனுக்காக அன்னாயிசம் பேசும் யூத்துகளை கலாய்க்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.

அறிவிப்பு:
சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் (அந்த இடத்தே விடவே மாட்டீங்களா) வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 4) பதிவர் சந்திப்பு நடக்க இருக்கிறது. இதுவரை பதிவர் சந்திப்புகளில் கலந்து கொள்ளாத, புதிய பதிவர்களுக்கு முன்னிலைபடுத்துவதே இந்த பதிவர் சந்திப்பின் நோக்கம். பிரபல பதிவர்களும் வரலாம். ஆனால் விட்டத்தை பார்த்து தாடி சொறிவது, பின்னவீனத்துவ இலக்கியம் பேசுவது இதெல்லாம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவர் சந்திப்பை பரப்புரை செய்வதற்காக பஸ்ஸிற்கு பலே பிரபுவும், டிவிட்டருக்கு ஜில்தண்ணியும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். சென்னை மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு மூலைகளில் இருந்தும் பதிவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். பயணச்செலவை சென்னை பதிவர் சங்கத்தலைவர் கே.ஆர்.பி.செந்தில் ஏற்றுக்கொள்வாராக. பதிவர் சந்திப்பின் மேலதிக விவரங்களை தெரிந்துக்கொள்ள இங்கே கிளிக்கவும்.

இந்த வார ஜொள்ளு:
(இந்த வாரத்துல ஒருமுறைதான் ஜொள்ளு விட்டியான்னு கேட்கப்பிடாது... இது இந்த வாரம் முழுக்க விட்ட ஜொள்ளு...)
மரண நேரத்தில்... உன் மடியின் ஓரத்தில்...
இடம் கிடைத்தால் இறந்தும் வாழுவேன்...

ட்வீட் எடு கொண்டாடு:
டிவிட்டரில் கடந்தவாரம் Famous Lies என்றொரு trending போய்க்கொண்டிருந்தது. அதன் வரிசையில் நான் ரசித்த சில ட்வீட்டுகள்... 
kaattuvaasi காட்டுவாசி
வாசன் ஐ கேர்.... நாங்க இருக்கோம்... #FamousLies (நீங்க இருப்பீங்கடா... நாங்க இருப்போமா????)

kaattuvaasi காட்டுவாசி
இப்பத்தான் நினைச்சேன்... நீங்களே வந்துட்டீங்க... #FamousLies

kaattuvaasi காட்டுவாசி
இதுதான் எனக்கு பர்ஸ்ட் டைம்... #FamousLies

iParisal Parisalkaaran
பெண்களுக்கு கடலளவு பொறுமை உண்டு. #FamousLies

iParisal Parisalkaaran
பொண்ணுகன்னாலே எனக்கு அலர்ஜிப்பா..! #FamousLies

iParisal Parisalkaaran
நாளைக்கு கண்டிப்பா குடுத்துடறேன்.. #FamousLies

2009ம் ஆண்டே வலைப்பூ தொடங்கிவிட்டார். ஆரம்பத்தில் ஐந்து இடுகைகளோடு நிறுத்திக்கொண்டவர் இப்போது ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். அநேகமாக நாம் எல்லோருமே பதிவுலகம் வந்த புதிதில் என்னங்கடா இந்த சீனியர் பதிவர்களின் தொல்லை தாங்க முடியலைன்னு நினைச்சிருப்போமே அந்த மாதிரி ஃபீல் பண்ணி ஒரு பதிவு எழுதியிருக்கிறார் பாருங்கள். வேலை தேடும் இளைஞர்களை விழிப்புணர்வுடன் இருக்கச்சொல்லும் இவர் எதற்காக சமச்சீர் கல்வியை குப்பையில் போடச் சொல்கிறார் என்று கேளுங்களேன்.

சிறப்பு அறிமுகப்பதிவர்: வடக்குபட்டி ராம்சாமி
பிரபல பதிவர் பன்னிக்குட்டி ராம்சாமியும் ஸ்டைலையும், அல்டிமேட் பதிவர் “மெட்ராஸ் பவன்” சிவகுமாரின் சிந்தனைகளையும் உரித்துவைத்தாற்போல பதிவுலகத்திற்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார் வடக்குபட்டி ராம்சாமி.

ஃபேஸ்புக்கில் பிரசித்தி பெற்ற வடக்குபட்டியார் கடந்தமாதம் தான் பதிவுலகில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். தமிழ்மணத்தை பற்றி கூட தெரியாத வெள்ளந்தியாக இருக்கிறார். (பார்த்து சூதானமா நடந்துக்கோங்கப்பு... இது கலவர பூமி...) இவர் இதுவரை எழுதியுள்ள பதினோரு இடுகைகளையும் பார்வையிட்டேன். அவற்றில் பாதி முழுப்பதிவாக இல்லாததாலும், மற்றவை எனது கருத்துக்களுக்கு முற்றிலும் எதிராக அமைந்திருப்பதாலும் வலைப்பூவின் இணைப்பு மட்டும் தருகிறேன்.

இந்த வார பாடல்:
மறுபடியும் பெண்களை டார்கெட் செய்து ஒரு ரொமாண்டிக் பாடல். களவாணி படத்தை இயக்கிய சற்குணத்தின் அடுத்த படைப்பான “வாகை சூட வா” படத்தில் இடம் பெற்றுள்ள “சரசர சாரக்காத்து...” என்று ஆரம்பிக்கும் பாடல். இயக்குனரின் நண்பரான புதுமுக இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், அநேகமாக நம் எல்லோருக்குமே பிடித்த சின்மயி குரலில் ஒலிக்கிறது இந்த பாடல். தொடக்கத்தில் அமைதியான நதியைப் போல மென்மையாக ஆரம்பிக்கும் பாடல் சில நிமிடங்களில் உற்சாகவெள்ளமாக கரைபுரண்டு ஓடுகிறது. வைரமுத்து வரிகளில் கிராமத்து மண்வாசம் வீசுவது மட்டுமில்லாமல் பாடலே படத்தின் கதையையும் சொல்கிறது. பாடலிலிருந்து எனக்கு பிடித்த வரிகள், தலைவி தலைவனிடம்: “மீனுக்கு ஏங்குற கொக்கு நீ... கொத்தவே தெரியல மக்கு நீ...”. போன வாரத்திலிருந்து சுமார் 300 முறைக்கு மேல் இந்தப்பாடலை கேட்டிருப்பேன். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

இந்த வார காணொளி:
உலகத்திலேயே நீளமான இந்த பாம்பு நம்முடைய அதிர்ஷ்டம் இப்போது இறந்து போயிருக்கிறது. A MUST WATCH VIDEO. தவற விட்டு விடாதீர்கள்.

இந்த வார புகைப்படம்:
பேச்சிலர்கள் ரூமில் ரங்கோலி கோலம் போட்டால் இப்படித்தான் இருக்கும்.
இந்த புகைப்படத்தை மணிஜிக்காகவும் இன்னபிற குடிமகன்ர்களுக்காகவும் அர்ப்பணிக்கிறேன்.

இந்த வார தத்துவம்:
முதலிரவில் மனைவி துறந்திடும் வெட்க ஆடையை அவள் வளைக்காப்பில் அணிந்து நிற்கிறான் கணவன்...!!! (இதுவும் டிவிட்டரில் படித்தது) - உபயம்: மாயவரத்தான்

இந்த வார மொக்கை:
கண்ணா... வாழ்க்கையில பேனாவை தொலைச்சா வேற பேனா வாங்கிக்கலாம்...
ஆனா பேனா மூடியை தொலைச்சிட்டா வேற வாங்க முடியாதுப்பா... வாங்க முடியாது...

அதனால எல்லாரும் “டிக்-டிக்” பேனாவையே வாங்குவோமாக...
என்றும் அன்புடன்,
N.R.Prabhakaran

Post Comment

43 comments:

Riyas said...

இது முதல் மழையா..?

Riyas said...

பிரபா.. ஒயின்ஷாப் போதையாத்தான் இருக்கு

ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்,,,

அண்ணா மேட்டர் சூப்பர்.. இப்போ உண்ணாவிரதம் என்ற சொல் அண்ணாவிரதமாக மாறிவிடும் என நினைக்கிறேன்..

அப்புறம் நீங்க டிக் டிக் பேனாவா யூஸ் பண்றிங்க..

கோகுல் said...

செங்கோடிக்கு வீர வணக்கங்கள்!
மரண தண்டனையே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு போராடிக்கொண்டிருக்கும் போது
மரணத்தையே அதற்க்கு விலையாக கொடுத்துள்ளார் இனியும் யாரும் இது போல் செய்யாமலிருக்க வேண்டும்!//

மாணவர்களின் போராட்டம் வரவேற்கத்தக்கது!பஸ் டே என்று கொஞ்ச நாளுக்கு முன் கொட்டமடித்தது போல் இல்லாமல் இது போன்ற நிகழ்வுகளில் ஈடுபடுவது பாராட்டத்தக்கது!
//
பதிவர் சந்திப்புஏற்பாட்டுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

தினேஷ்குமார் said...

விஸ்கி ரம்மு பிராந்தி எல்லாத்தையும் மிஃஸ் பண்ணி அடிச்ச மாதிரி கிக் இருக்கு பிரபா அசத்துங்க....

Unknown said...

கலக்கல் மாப்ள குத்திட்டேன் 7வது ரைட்டு!

சி.பி.செந்தில்குமார் said...

நன்றிகள்


ட்வீட்ஸ் கலக்கல்.


அறிமுகப்பதிவர் க்கு நன்றி

settaikkaran said...

அன்னாயிசம் என்றால் என்ன என்று விரைவில் தமிழ்கூறும் நல்லுலகுக்கு நவிலப்போகிறேன் நண்பா! :-)

காந்தி பனங்கூர் said...

அறிமுக பதிவர் பின்னி பெடலெடுத்திருக்கிறார். அவருக்கும் அவரை அறிமுகப்படுத்திய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

Jayadev Das said...

\\எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டேன் என்பவர்கள் சமஸ்கிருத புத்தாண்டாம் ஏப்ரல் பதினான்கையே பிடித்து தொங்குங்கள்.\\ நதிமூலம்ரிஷி மூலமெல்லாம் வேண்டாம்ப்பு, எங்க பாட்டன் முப்பாட்டன் காலத்தில இருந்து சித்திரை ஒன்றாம் தேதியைத்தான் தமிழ்ப் புத்தாண்டா கொண்டாடி வர்றாங்க, அதை ஏன் மாத்தனம். பஞ்சாங்கம் எல்லாத்திலேயும் சித்திரையைத்தானே முதல் மாதமா போட்டிருக்காங்க, அதில ஏன் மண்ணை வாரிப் போடணும்?

Jayadev Das said...

\\இந்த வார ஜொள்ளு:
(இந்த வாரத்துல ஒருமுறைதான் ஜொள்ளு விட்டியான்னு கேட்கப்பிடாது... இது இந்த வாரம் முழுக்க விட்ட ஜொள்ளு...)\\

ஊரோரம் புளிய மரம்... பாட்டுக்கு ஆடுனவங்க இவங்கதானே...???

Jayadev Das said...

\\பேச்சிலர்கள் ரூமில் ரங்கோலி கோலம் போட்டால் இப்படித்தான் இருக்கும்.\\ பார்த்தா சாருவின் ரூமு மாதிரியே இருக்கே!!

Prabu Krishna said...

பொறுப்பு எல்லாம் கொடுத்து கலவரம் பண்ணுறியே மாப்பு.

அந்த பாம்பு வீடியோ மாட்டேன் ஏற்கனவே எனக்கு அனுபவம்.

சர சர பாட்டு உண்மையிலேயே அருமைதான். அந்த லைன் எனக்கும் ரொம்ப பிடிச்சது.

சென்னை பித்தன் said...

பாம்பு காணொளி-ஒரு நொடி ஆடிப்போயிட்டேன்!

கும்மாச்சி said...

பிரபா பாரதிதாசன் கவிதை நினைவூட்டியதற்கு பாராட்டுகள். எல்லாமே கலக்கல் ரகம்தான், ஒருவார ஜொள்ளு அப்படி ஒன்னும் சரியில்லையே சாமீ.

N.Manivannan said...

நைஸ் டிக்கெட்

N.H. Narasimma Prasad said...

இந்த வார ஒயின்ஷாப் சரக்கு கொஞ்சம் ராவாவே (ரொம்ப நல்லாவே) இருக்கு. ஆமா, ஊர்காய் எங்கே பிரபா?

Anonymous said...

/ அல்டிமேட் பதிவர் “மெட்ராஸ் பவன்” சிவகுமாரின் சிந்தனைகளையும் //

ஏதோ எனக்குன்னு கொறஞ்சது நாலு,அஞ்சி ஓட்டாவது விழுது. அதுலயும் மண்ண அள்ளி போடறதுல அப்படி என்ன சந்தோஷம்!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒரு பிரபலபதிவர் என்னையும் சந்தடிசாக்குல அறிமுகப் படுத்திவிட்டிருக்கீங்க..... ம்ம்ம்... இருக்கட்டும் இருக்கட்டும்.......

goundamanifans said...

ஹல்லோ.. பாஸ்..இது தொடர்பாக தெளிவான அறிக்கையை அரசு அளித்துள்ளது. அதையும் படித்துவிட்டு சொல்லுங்கள். இல்லன்னா போன்ல சண்டைக்கு இழுப்போம்.

goundamanifans said...

இதுதொடர்பாகன்னா...சித்திரை புத்தாண்டு தொடர்பாகன்னு அர்த்தம். ஒயின் ஷாப்புக்குள்ள வந்தாலே தடுமாற்றம்தான்!!

sarujan said...

super

Mohamed Faaique said...

அந்த செத்த பாம்ப நாம பல முறை பார்த்தாச்சு...

Unknown said...

ரவுண்டு கட்டி அடிச்சிருகீங்க!!!
சூப்பர்

Anonymous said...

கலக்கலா இருக்கு பதிவு...

புதியவர்களை அறிமுகப்படுத்துற விஷயமும் பலே...

பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துக்கள்!

Philosophy Prabhakaran said...

@ Riyas
// இது முதல் மழையா..? //

அதேதான் தல... நனைஞ்சிடுங்க...

// அண்ணா மேட்டர் சூப்பர்.. //

அய்யய்யோ... என்ன இது அபத்தமான எழுத்துப்பிழை... அவர் அன்னா...

Philosophy Prabhakaran said...

@ கோகுல்
// பஸ் டே என்று கொஞ்ச நாளுக்கு முன் கொட்டமடித்தது போல் இல்லாமல் இது போன்ற நிகழ்வுகளில் ஈடுபடுவது பாராட்டத்தக்கது! //

மறக்க கூடிய நிகழ்வுகளா அவை...?

// பதிவர் சந்திப்புஏற்பாட்டுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்! //

நீங்களும் வரணும் தல...

Philosophy Prabhakaran said...

@ தினேஷ்குமார்
// விஸ்கி ரம்மு பிராந்தி எல்லாத்தையும் மிஃஸ் பண்ணி அடிச்ச மாதிரி கிக் இருக்கு பிரபா அசத்துங்க.... //

வாந்தி எடுக்காம இருந்தா சரி...

Philosophy Prabhakaran said...

@ சேட்டைக்காரன்
// அன்னாயிசம் என்றால் என்ன என்று விரைவில் தமிழ்கூறும் நல்லுலகுக்கு நவிலப்போகிறேன் நண்பா! :-) //

காத்திருக்கிறேன் உங்கள் இடுகைக்காக...

Philosophy Prabhakaran said...

@ காந்தி பனங்கூர்
// அறிமுக பதிவர் பின்னி பெடலெடுத்திருக்கிறார். அவருக்கும் அவரை அறிமுகப்படுத்திய உங்களுக்கும் வாழ்த்துக்கள். //

யாரைச் சொல்றீங்க... முதலாமவரா, இரண்டாமவரா...?

Philosophy Prabhakaran said...

@ Jayadev Das
// நதிமூலம்ரிஷி மூலமெல்லாம் வேண்டாம்ப்பு, எங்க பாட்டன் முப்பாட்டன் காலத்தில இருந்து சித்திரை ஒன்றாம் தேதியைத்தான் தமிழ்ப் புத்தாண்டா கொண்டாடி வர்றாங்க, அதை ஏன் மாத்தனம். பஞ்சாங்கம் எல்லாத்திலேயும் சித்திரையைத்தானே முதல் மாதமா போட்டிருக்காங்க, அதில ஏன் மண்ணை வாரிப் போடணும்? //

ஏன் சார் உங்க பாட்டன், முப்பாட்டனோட நிறுத்திட்டீங்க... இன்னும் ஏழெட்டு தலைமுறைகள் முன்னாடி போய் பார்க்க வேண்டியது தானே... பஞ்சாங்கமே அவாள் எழுதினது தானே... அதில் இருப்பது எல்லாம் சம்ஸ்கிருத வார்த்தைகள் தானே... ஸோ, உங்ககிட்டேயே பதில் இருக்கு... இதுதான் தமிழ் புத்தாண்டு என்று உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்...

Philosophy Prabhakaran said...

@ Jayadev Das
// ஊரோரம் புளிய மரம்... பாட்டுக்கு ஆடுனவங்க இவங்கதானே...??? //

நீங்க மட்டும் இல்ல சார் இன்னும் சில பேர் கூட இதே மாதிரி சொல்லக் கேட்டிருக்கேன்... ஒருவேளை ரொம்ப உயரமா இருக்காங்களோ...?

Philosophy Prabhakaran said...

@ Jayadev Das
// பார்த்தா சாருவின் ரூமு மாதிரியே இருக்கே!! //

பத்த வச்சிட்டியே பரட்டை...!

Philosophy Prabhakaran said...

@ Prabu Krishna (பலே பிரபு)
// பொறுப்பு எல்லாம் கொடுத்து கலவரம் பண்ணுறியே மாப்பு. //

நீங்க தீயா வேலை செஞ்சதையும் நம்ம நண்பர்கள் ரீ-ஷேர் செஞ்சதையும் பார்த்தேன் தல... நன்றிகள்...

Philosophy Prabhakaran said...

@ சென்னை பித்தன்
// பாம்பு காணொளி-ஒரு நொடி ஆடிப்போயிட்டேன்! //

மன்னிக்கவும் அய்யா... வயசான காலத்துல உங்களுக்கு இப்படி ஒரு அதிர்ச்சியை கொடுத்திருக்கக் கூடாது தான்... ஆனால் நான் விரித்த வலையில் நீங்கள் வந்து மாட்டுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை...

Philosophy Prabhakaran said...

@ கும்மாச்சி
// பிரபா பாரதிதாசன் கவிதை நினைவூட்டியதற்கு பாராட்டுகள். எல்லாமே கலக்கல் ரகம்தான், ஒருவார ஜொள்ளு அப்படி ஒன்னும் சரியில்லையே சாமீ. //

நன்றி நண்பா... அடுத்தவாரம் லிட்டர் கணக்குல விட்டுட்டா போச்சு...

Philosophy Prabhakaran said...

@ N.Manivannan
// நைஸ் டிக்கெட் //

நீர் மறுபடியும் சென்னை வாய்யா... கவனிச்சுக்குறேன்...

Philosophy Prabhakaran said...

@ N.H.பிரசாத்
// இந்த வார ஒயின்ஷாப் சரக்கு கொஞ்சம் ராவாவே (ரொம்ப நல்லாவே) இருக்கு. ஆமா, ஊர்காய் எங்கே பிரபா? //

ப்ரியா ஆனந்த் போட்டோ பார்க்கலையா...

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
// ஏதோ எனக்குன்னு கொறஞ்சது நாலு,அஞ்சி ஓட்டாவது விழுது. அதுலயும் மண்ண அள்ளி போடறதுல அப்படி என்ன சந்தோஷம்!! //

வருங்கால கேபிளார் நீங்களே இப்படி சொன்னா எப்படி...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// ஒரு பிரபலபதிவர் என்னையும் சந்தடிசாக்குல அறிமுகப் படுத்திவிட்டிருக்கீங்க..... ம்ம்ம்... இருக்கட்டும் இருக்கட்டும்....... //

நீங்க பிரபல பதிவர் தானே தல... அதிலென்ன சந்தேகம்...

Philosophy Prabhakaran said...

@ goundamanifans
// ஹல்லோ.. பாஸ்..இது தொடர்பாக தெளிவான அறிக்கையை அரசு அளித்துள்ளது. அதையும் படித்துவிட்டு சொல்லுங்கள். இல்லன்னா போன்ல சண்டைக்கு இழுப்போம். //

அதன் லிங்க் இருந்தால் அனுப்புவோம்... பாரதிதாசனை விட ஜெயலலிதாவை தான் அதிகமா நம்புறீங்க போல...

Philosophy Prabhakaran said...

@ Mohamed Faaique
// அந்த செத்த பாம்ப நாம பல முறை பார்த்தாச்சு... //

உஷார் ஆயிட்டீங்களே மக்கா...

”தளிர் சுரேஷ்” said...

அன்னா முதல் ட்விட்டர் வரை அலசிய பதிவு அருமை! நன்றிகள்

'பரிவை' சே.குமார் said...

ஒயின்ஷாப் ரொம்ப நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்.