29 December 2011

கனவுக்கன்னி 2011 – பாகம் 2


அன்புள்ள வலைப்பூவிற்கு,

பதிவின் முதல் பாகத்தை படிக்க பார்க்க:

5. “தங்க தமிழச்சி” தன்ஷிகா (சென்ற ஆண்டு 1வது இடம்)
இந்த ஆண்டில் அம்மணியின் ஒருபடம் கூட வராதது ஏமாற்றமே. அரவான் படத்திற்கான காத்திருப்பு நீள்கிறது. ஆனாலும் தன்ஷிகா மீதுள்ள கிரேஸ் குறையவே இல்லை. விகடனின் தீபாவளி போட்டோ ஷூட், அரவான் ஆடியோ வெளியீட்டு விழா என்று அவ்வப்போது திவ்யதரிசனம் காட்டி குளிர்வித்துள்ளார்.

4. “வெண்ணைக்கட்டி” லக்ஷ்மி ராய்
இதுவரை தோல்விப்படங்களில் தோன்றியவர், காஞ்சனா, மங்காத்தா என்று வரலாற்றை திருப்பியிருக்கிறார். காஞ்சனா படத்தின் கருப்பு வெள்ளை பாடலையும், மங்காத்தா படத்தின் ரயில்வே ஸ்டேஷன் காட்சியையும் இந்த நூற்றாண்டில் மறந்துவிட முடியாது. ஆனால் பார்ட்டி மலையாள கரையோரம் ஒதுங்கிவிட்டது என்பது வருத்தமான செய்தி.

3. “அடுத்த வீட்டுப்பெண்” அஞ்சலி (சென்ற ஆண்டு 8வது இடம்)
ராஜமுந்திரியில் பிறந்த ராணிமுந்திரி. அவார்டு பட்டியலிலும் இடம் பிடிப்பார், ரசிகர்கள் மனதிலும் இடம் பிடிப்பார். இந்த ஆண்டில் மட்டும் ஐந்து படங்களில் நடித்திருந்தாலும் எங்கேயும் எப்போதும் எல்லோருடைய ஃபேவரிட். மங்காத்தா, கருங்காலி, த.வெ.சுந்தரம் படங்களில் செம ஹாட் மச்சி.

2. “கேரளத்து கப்பக்கிழங்கு” இனியா
வாகை சூட வா அறிமுகப்படம் போல தெரிந்தாலும் சென்ற ஆண்டே பாடகசாலை என்ற தமிழ்ப்படத்தில் அறிமுகமாகி யுத்தம் செய் படத்தில் சேரனின் தங்கையாக தோன்றியவர். ஒரிஜினல் பெயர் ஸ்ருதி சவந்த். தமிழ் சினிமா ஹீரோயிங்களுக்கே உரித்தான வெட்கத்திலும், கஞ்சா இழுக்கும் ரியாக்ஷனிலும்* ஸ்பெஷலிஸ்ட். 

1. “புன்னகை பூச்செண்டு” காஜல் அகர்வால் (சென்ற ஆண்டு 2வது இடம்)
மாவீரர்களையும் மடிய வைக்கும் அழகுப்பதுமை. இந்த ஆண்டு நேரடி தமிழ்ப்படங்கள் எதிலும் தோன்றவில்லை என்றாலும் மாவீரன் படத்தின் மூலம் மகாராணியாக வலம் வந்தார். அதுமட்டுமில்லாமல் காஜல் தோன்றிய சில விளம்பரப்படங்களை பார்த்த இளைஞர்கள் லக்ஸ் சோப்பு போட்டு குளிப்பதாகவும், காபி போட கற்றுக்கொள்வதாகவும் அழகுத்துறை தகவல் சொல்கிறது. அதே சமயம் பப்பி ஷேம் போஸ், "நான் தென்னிந்திய நடிகை அல்ல" போன்ற சர்ச்சைகளிலும் சிக்கினார். பட்சி பாலிவுட் பக்கம் பறக்க பார்த்தாலும் மாற்றான், துப்பாக்கி என்று தன்வசம் வைத்திருக்கிறது தமிழ் சினிமா. காஜலின் அடுத்த படங்களில் ஒன்று கே.வி.ஆனந்த் படம், மற்றொன்று விஜய் படம் என்பது வேதனையான விஷயம்.

* கஞ்சா இழுக்கும் ரியாக்ஷன் – ஹீரோ ஹீரோயினுக்கு முத்தமிட நெருங்கும்போதோ அல்லது அந்தமாதிரி நேரத்திலோ ஹீரோயின் காட்டும் முகபாவம்.

தொடர்புடைய சுட்டிகள்:

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

31 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தன்சிகாகிட்டேயும் என்னமோ ஒரு அட்ராக்சன் இருக்குய்யா.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

காஜல் மயக்கம் இன்னும் தீரலியாக்கும்........?

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// தன்சிகாகிட்டேயும் என்னமோ ஒரு அட்ராக்சன் இருக்குய்யா....... //

நிறையவே இருக்கு...

Philosophy Prabhakaran said...

// காஜல் மயக்கம் இன்னும் தீரலியாக்கும்........? //

ம்ஹூம்... ஒருவேளை நிஷா வந்தா தீரலாம்...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
தல... மாலையில் உங்களை தாக்கி ஒரு பின்னூட்டம் வந்தது...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Philosophy Prabhakaran said...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
தல... மாலையில் உங்களை தாக்கி ஒரு பின்னூட்டம் வந்தது.../////

இதெல்லாம் நம்மளை மாதிரி வீரர்களுக்கு ஜகஜமப்பா.......

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஒரு வழியா கனவுகன்னிகளை வரிசைப்படுத்திடிங்க.....

தமிழ்வாசி பிரகாஷ் said...

லட்சுமிராய் ஏனோ?

sarujan said...

இன்று என் கனவுல யாரும் வரல்ல பதிவு சூப்பர்

Philosophy Prabhakaran said...

@ தமிழ்வாசி பிரகாஷ்
// ஒரு வழியா கனவுகன்னிகளை வரிசைப்படுத்திடிங்க..... //

ஆமாம் தல படுத்தி எடுத்தாச்சு...

// லட்சுமிராய் ஏனோ? //

அவங்க கலரை பார்த்துட்டு இப்படியொரு கேள்வியை கேட்கலாமா...

Philosophy Prabhakaran said...

@ ♥ !முனைங்♥ ! ♥ ! (சாருஜன்) ♥ ! ♥ !

// இன்று என் கனவுல யாரும் வரல்ல பதிவு சூப்பர் //

இப்ப தூங்குனீங்கன்னா கண்டிப்பா காஜல் வருவாங்க...

தமிழ்வாசி பிரகாஷ் said...

Philosophy Prabhakaran said...
@ தமிழ்வாசி பிரகாஷ்
// ஒரு வழியா கனவுகன்னிகளை வரிசைப்படுத்திடிங்க..... //

ஆமாம் தல படுத்தி எடுத்தாச்சு...///

ஆமா தல... படுத்தா தான் கனவு வரும்?

Anonymous said...

//தொடர்புடைய சுட்டிகள்:
கனவுக்கன்னி 2010 – பாகம் 1
கனவுக்கன்னி 2010 – பாகம் 2//

சுட்டே புடுவேன்....

துரைடேனியல் said...

Profile la unga photo vecha enna Sir?

(Athan Sangamathula ellarum paarthuttangalla. Appuram enna) Younga vera iruppingalaame?

நிரூபன் said...

சுவையான தொகுப்பு நண்பா,

தன்ஷிகா படம் தான்.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

CS. Mohan Kumar said...

என்னது அனுஷ்காவிற்கு டாப் 5-ல் இடம் இல்லையா? எடுங்க அருவாளை !!

முத்தரசு said...

ம்...ம்

Unknown said...

//தொடர்புடைய சுட்டிகள்:
கனவுக்கன்னி 2010 – பாகம் 1
கனவுக்கன்னி 2010 – பாகம் 2//

சுட்டே புடுவேன்....//

ஹலோ...காசா..பணமா....சுட்டுக்கங்க!System ல
Save பன்னிக்குங்க....!

Unknown said...

இம்புட்டு நடிகையை பார்த்தாலே கஞ்சா குடிச்ச மாதிரிதான் இருக்கு...!கஞ்சாவுக்கு அர்த்தம் இப்படி வேற இருக்கா......? எல்லாமே கலக்கல் அஞ்சலி போட்டாவுக்கு ஒரு ஷொட்டு!லட்ச்மி ராய்க்கு ஒரு கொட்டு! கலரா இருந்தாலும்.....பழைய சோறு பிரபா!

MANO நாஞ்சில் மனோ said...

கேரளத்து கப்பை கிழங்கு செம ஹாட் மச்சி...ஹி ஹி....!!!

Rizi said...

உங்க ரசனையே தனி! லிஸ்ட்ல த்ர்ஷா இல்லாதது கண்டிக்கத்தக்கது..

மற்றபடி ஓக்கே.. இனியாவுக்கு வேறொரு அழகான படம் போட்டிருக்கலாம்.. (சிபி பிளாக்ல சுட்டாவது)

அந்த தன்ஷிகா எந்த படத்துல நடிச்சிருக்கு..? (ஒரு ஜெனரல் நாலேஜுக்குத்தான்)

Rizi said...

//* கஞ்சா இழுக்கும் ரியாக்ஷன் – ஹீரோ ஹீரோயினுக்கு முத்தமிட நெருங்கும்போதோ அல்லது அந்தமாதிரி நேரத்திலோ ஹீரோயின் காட்டும் முகபாவம்.//

இதுக்கு இப்படியொரு அர்த்தமா? பயபுள்ள ரொம்பத்தான் அனுபவிச்சிருக்கு..

Unknown said...

என்னோட இந்த வருட கனவுகன்னி வித்யாபாலன் தான், சில்க் அளவுக்கு இருக்குதோ இல்லையோ ஆனா கண்டிப்பா வொர்த் இருக்குது :-)

Rizi said...

@இரவு வானம்.

//என்னோட இந்த வருட கனவுகன்னி வித்யாபாலன் தான், சில்க் அளவுக்கு இருக்குதோ இல்லையோ ஆனா கண்டிப்பா வொர்த் இருக்குது :-)//

கரெக்ட்! பிரபா மாதிரி சின்னப்பசங்களுக்கு அதெல்லாம் எங்க புரியப்போகுது.

Prem S said...

அனுஷ்காவை சேர்க்காததர்க்கு என் கண்டனங்கள் .காஜல் முதல் இடமா நல்ல ரசனை தான்

vimalanperali said...

கனவுக்கன்னிகள் எல்லாம் சரிதான்,நிஜத்தில்,,,,,,,?

Kumaran said...

தங்களது ரசிகன் என்று சொல்வதில் பெருமையடைகிறேன்..வலை தொடங்குவதற்கு முன்னமே தங்களுடைய நிறைய பதிவு படித்துள்ளேன்..முக்கியமாக சினிமா விமர்சனங்கள்..உலக சினிமாவின் மீது எனக்கு கொஞ்சம் நல்ல விருப்பம் ஏற்ப்பட மிக முக்கியமானவர்களில் நீங்களும் ஒருவர்..
வழக்கம் போல இந்த பதிவும் பெஸ்ட்..
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..

அனுஷ்யா said...

இதை நான் முழுமனதுடன் வழிமொழிகிறேன்...

அனுஷ்யா said...

ஆனால் அடிக்கடி காஜலுக்காக சண்டை போடுவதை வன்மையாய் கண்டிக்கிறேன்...ஹி ஹி..

அனுஷ்யா said...

கேரளத்து மண்ணில் ஐந்து அப்பாவி தமிழர்கள்.....இது நம் தலத்தில்.. ஆனா யாரும் இவன் ஏதும் புதுசா அரசியல் மேட்டர் பேசுறான்னு நெனச்சு வந்துடாதிங்க...

Anonymous said...

http://www.youtube.com/watch?v=aXLuHfMqAcM&feature=plcp&context=C3c58d21UAOEgsToPDskIY0heXcM6qwx5XXnmZ_Jno