19 December 2011

ஈரோட்டு சங்கமத்தை திட்டி எழுத பத்து தலைப்புக்கள்...!


அன்புள்ள வலைப்பூவிற்கு,

ம்ம்ம்... எப்படியும் இன்னும் பத்து நாளைக்கு நீங்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம் பதிவர்கள் எழுத இருக்கும் ஈரோடு சங்கமம் குறித்த தொடர் இடுகைகளை படித்துதான் ஆகவேண்டும். எல்லோரும் போனோம்... ஆஃப் அடிச்சோம்... (ஆப்பு இல்லை) ஆட்டுக்கறி சாப்பிட்டோம்... வந்தோம்ன்னு போடுறதுக்கு பதிலா வித்தியாசமா ஏதாவது எழுதனும்ன்னு நினைச்சா கீழிருக்கும் பத்து தலைப்புகளில் ஒன்றை பயன்படுத்திக் கொள்ளலாம். (First Come First Serve. No Offence)

1. வேர்ட்பிரஸ் பதிவர்களை புறக்கணிக்கிறதா ஈரோடு...???
2. அக்கினிக்குஞ்சு ஆடத்தான் செய்யும்...!
3. தண்டோரா மணிஜி சாதனைப்பதிவர் இல்லையாமாம்...!
4. முட்டையில் பூரி எங்கே...? எங்கே...? எங்கே...?
5. சென்னை ஹோட்டல் பதிவருக்கும் ஈரோடு ஹோட்டல் பதிவருக்கும் லடாய்...!
6. எழுபது ரூவா சரக்கு...!
7. ஈரோடு சங்கமத்திற்கு “நல்ல நேரம்” இல்லையா...???
8. கில்மா பதிவரின் அளப்பறைகள்...!
9. புதிய பதிவர்களை கண்டுகொள்ளாத ஈரோடு சங்கமம்...!
10. மயிலுக்கு போர்வை கொடுத்தான் பேகன்...!

பதிவர்களே... எந்த தலைப்பை தேர்ந்தெடுத்தாலும் சரி, தலைப்பை தொடர்ந்து வரும் மூன்று புள்ளிகள், ஆச்சர்யக்குறி, கேள்விக்குறி போன்ற அயிட்டங்கள் அதிமுக்கியமானவை... அப்புறமென்ன என்சாய்...!

செய்தி: பொதிகை சேனல் டி.ஆர்.பி ரேட்டிங் அதிரடி முன்னேற்றம்...!
டிஸ்கி: மேலே உள்ள புகைப்படம் சார்பாக பின்னூட்டம் போடுபவர்கள் ஒரு பெண்ணைப் பெற்ற தகப்பன் ஸ்தானத்தில் இருந்து பின்னூட்டமிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

31 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

இந்த கேள்விகளை அங்கேயே கேட்டிருக்கலாமே.... உடனே பதில் கிடைத்திருக்குமே...

ப.கந்தசாமி said...

//தமிழ்வாசி பிரகாஷ் said...
இந்த கேள்விகளை அங்கேயே கேட்டிருக்கலாமே.... உடனே பதில் கிடைத்திருக்குமே...//

எல்லாத்தையும் அப்படி சட்டுப்புட்டுன்னு முடிச்சிட்டா அப்புறம் எதப் பத்திங்க பதிவு எழுதறது?

துரைடேனியல் said...

Unga Style thani than anne! Superunko!

Unknown said...

ஆரம்பமே அமக்களமா இருக்கேய்யா ஹிஹி!

நிரூபன் said...

வணக்கம் மச்சி,

உங்களுக்குள்ளே இப்படியும் ஒரு கொல வெறியா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


உங்க போட்டோ சிபி ப்ளாக்கில பார்த்தேன்!
நம்பவே முடியலை! சின்னப் பையனாக இருக்கிறீங்க.

அப்புறம் தகப்பன் ஸ்தானத்தில இருந்து.......
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Prem S said...

உங்களுக்குள் இருக்கும் கொலைவெறியை ரசிக்கிறேன்

வெளங்காதவன்™ said...

:-)

Unknown said...

ரொம்ப டெர்ரா இருப்பீங்கன்னு பாத்தா ரொம்ப அம்பியா இருக்கீங்களே சார்....நானும் சிபி ப்ளாக்'ல தான் பாத்தேன் ...அவர போட்டு தள்ளுங்க :P

Unknown said...

ரொம்ப டெர்ரா இருப்பீங்கன்னு பாத்தா ரொம்ப அம்பியா இருக்கீங்களே சார்....நானும் சிபி ப்ளாக்'ல தான் பாத்தேன் ...அவர போட்டு தள்ளுங்க :P

முத்தரசு said...

போட்டு தாக்கு

Unknown said...

பிலாசபி பிரபாகரனின் பத்து தத்துப்பித்துக்கள் !

கோகுல் said...

இப்படி தலைப்பு கொடுத்துட்டு ஒதுங்கிட்டா எப்படி?

கோவை நேரம் said...

உங்களை முதல் முதலாய் பார்க்கிறேன்.எழுத்துக்கும் உருவத்திற்கும் சம்பந்தமே இல்லாதது போல் இருக்கிறது நண்பரே....உங்க ப்ளாக் படிக்கும் போது எப்படியும் உங்களுக்கு 40 + இருக்கும் என்று நினைத்து இருந்தேன்....பதிவர் சந்திப்பு அவ்ளோதானா..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யம்மாடி.... என்னம்மா இதெல்லாம்..... ?
(போதுமா தகப்பன் ஸ்தானம்?)

கொக்கரக்கோ..!!! said...

சங்கமத்தில் கலந்துகொள்ளாத நாங்களெல்லாம் என்ன தலைப்பில் எழுதறது பிரபா?!

ஆமினா said...

//சங்கமத்தில் கலந்துகொள்ளாத நாங்களெல்லாம் என்ன தலைப்பில் எழுதறது பிரபா?! //

எங்களை புறக்கணித்த ஈரோடு பதிவர் சங்கம்

அதென்ன ஈரோடு பதிவர் சங்கம்?

இந்த தலைப்பு ஓக்கேங்களா சகோ :-)


@பிரபா
தனி ஸ்டைல் உங்களுக்கு
வாழ்த்துகள்

Unknown said...

ஆளு கடுகு பதிவு சரி காரமப்பா...
தென்காசிபைங்கிளி தோழியாகதான் நான் நினைப்பேன் (முகபுத்தகத்தில் தோழியப்பா)தங்கையாக கூட நினைக்கலாம்... தகப்பனா நினைக்க முடியாது
ஏன்னா...நான் யூத்..ஹஹஹ எனக்கு கிடைத்த நல்ல நண்பனில் நீங்களும் ஒருவர் என்பதில் எனக்கு பெருமைதான்.....

நானும் பதிவிட்டிருக்கிறேன் நண்பா கருத்து கூறவும்

நல்ல நண்பர்களை தந்த ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு

கும்மாச்சி said...

பிரபா அருமையான தலைப்புகள், எழுபது ரூபா சரக்கு, என்ன லோக்கலா?

MANO நாஞ்சில் மனோ said...

அவ்வ்வ்வ்வ்வ்வ் முடியல மக்கா ஒரு கட்டிங் சொல்லேன்...!

N.H. Narasimma Prasad said...

//மேலே உள்ள புகைப்படம் சார்பாக பின்னூட்டம் போடுபவர்கள் ஒரு பெண்ணைப் பெற்ற தகப்பன் ஸ்தானத்தில் இருந்து பின்னூட்டமிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்//

எனக்கு 26 வயசு தான் ஆகுது பிரபா. இன்னும் கல்யாண கூட ஆகல. நான் என்னன்னு பின்னோட்டம் போடுறது?

அனுஷ்யா said...

பத்தாவது தலைப்பு என்ன பிரபா அது? நா பாட்டுக்கு என்னையே பத்தி எழுதிட போறேன்...
அப்பறம் நேத்துதான் சிபி அண்ணனோட வலைப்பூவுல உங்க போட்டோ பாத்தேன்...என்னோட பால்ய கால நண்பன் ஒருவன் போல இருக்கீங்க..

அனுஷ்யா said...

அப்பறம் ஒரு டவுட்..இந்த சந்திப்புக்கு நானெல்லாம் வரலாமா? இல்ல உறுப்பினர் சங்கம் ன்னு ஏதும் தனிய இருக்கா?

நாய் நக்ஸ் said...

பிரபா ....
நீ நடத்து ....
நான் அப்புறம் வரேன் ....

பிரவீன் said...

http://tamil.oneindia.in/movies/review/2011/12/20-mambattiyan-movie-review-aid0136.html


பிரசாந்தின் மம்பட்டியான் நல்லா இருக்கு!அதை பற்றி ரிவ்யூவ் எழுதுங்க

மழை said...

எல்லாரும் எஞ்சாய் பன்றீங்க..ச்ச அதான் இந்தியா:)

சமுத்ரா said...

hope you enjoyed there

Anonymous said...

chilledbeers
வணக்கம் சார்! புது கடை திறந்திருக்கேன். மட்டையாகாம எழுதுவேன்னு ரநினைக்கிறேன்.
chilledbeers.blogspot.com

கதறிய தோழி!

ரவி said...

டேம் 999 படத்தின் ஒரு பாடலுக்காவது ஆஸ்கர் விருது கிடைக்க கடவுளை வேண்டுகிறேன்- "உண்மை" தமிழன் ஏஆர் ரகுமான் பாரீர்!! http://tinyurl.com/bwwpd7g

Anonymous said...

மம்பட்டியான் வெற்றி!நல்ல படம்!பாருங்க!

http://www.tamilcreation.com/forum/showthread.php?99507-%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B7&p=885824#post885824

நெல்லை கபே said...

இன்று என் வலையில்;

மாயன் : அகமும் புறமும்: திருச்சி துவாரகையில் இருந்து ரொம்ப தூரமோ?

மாயன் : அகமும் புறமும்: ஒஸ்தி

ceecoms said...

வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!

தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....

ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....

அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....


மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
95666 61214/95666 61215