20. பொன்னர் சங்கர்
அய்யகோ...! கஸாலி என்னும் கயவனால் இந்த காவியத்தை காண வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டேன். திவ்யா பரமேஸ்வரனுக்காக மட்டும் லைட்டா ரசித்தேன்.
19. கோ
இது படமல்ல பாடம்...!
18. லத்திகா
எப்பேர்ப்பட்ட காமெடி படமாக இருந்தாலும் இந்த அளவிற்கு சிரித்திருக்க மாட்டேன். அல்டிமேட் ஃபன். வெயிட்டிங் ஃபார் ஆனந்த தொல்லை.
17. கருங்காலி
வித்தியாசம் ஆனால் வக்கிரம், பிடிச்சிருந்தது ஆனால் தப்பு, போன்ற வாக்கியங்களை உதாரணமாக கூறலாம். அஞ்சலியின் ஒரு ஜில்பான்ஸ் காட்சிக்காக லைக்கிங்.
16. நடுநிசி நாய்கள்
கருங்காலிக்கு எழுதிய அதே வாக்கியங்கள் இதற்கும் பொருந்தும். படம் முழுக்க தப்புதண்டா செய்துவிட்டு கடைசியில் இப்படியெல்லாம் பண்ணக்கூடாதுன்னு ஸ்லைடு போடுறது அயோக்கியத்தனம்.
15. பதினாறு
ஒரே புத்தகத்தில் இரண்டு ஃபீல் குட் நாவல்கள் படித்த திருப்தி. ஆனால் தியேட்டருக்கு போய் பார்க்கக் கூடிய அளவுக்கு வொர்த் இல்லை.
14. சாந்தி அப்புறம் நித்யா
குறும்படமாக எடுக்க வேண்டிய சமாச்சாரத்தை குறும்புப்படமாக எடுத்திருந்தார்கள். மற்ற சாப்ட் போர்ன் படங்களை விட ஒருபடி மேல். மார்கெட்டிங் ஜாலம் அபாரம்.
13. ஏழாம் அறிவு
எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக இருக்கும்போது ஏமாற்றம் வருவது சகஜம்தான். காசுக்காக தமிழுணர்வு ஜல்லியடிப்பது கண்டிக்கத்தக்கது.
12. முரண்
ஆர்ப்பாட்டமில்லாத படம். ஆனால் ஒரிஜினல் வெர்ஷனோடு ஒப்பிடும்போது தோற்றுவிடும்.
11. அழகர்சாமியின் குதிரை
மூடநம்பிக்கைகளை சாடும் நறுக் வசனங்கள் ப்ளஸ் பாயிண்ட். கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
10. குள்ளநரி கூட்டம்
நல்லதொரு பொழுதுபோக்கு படம். ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்தாமல் அதே சமயம் அழகாக மார்கெட்டிங் செய்தது படத்தின் மிகப்பெரிய பலம்.
9. வித்தகன்
பார்த்திபனின் மொக்கை காமெடி வசனங்களுக்காகவும், குட்டி அசின் பூர்ணாவிற்காகவும் ரசித்தேன். மற்றபடி ஒன்றும் புதுசில்லை.
8. காஞ்சனா
இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி. (லத்திகாவுக்கு அப்புறம்) தமிழில் திகில் படமெடுப்பது சாதாரண விஷயமல்ல. கொஞ்சம் பிசகினாலும் செம காமெடியாகிவிடும். காஞ்சனா உண்மையாகவே பயம் காட்டிவிட்டாள்.
7. எங்கேயும் எப்போதும்
ரிலீசாகி ரொம்ப நாள் கழித்து தான் பார்த்தேன். ஆஹா, ஓஹோ என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் சுவாரஸ்யமான திரைக்கதை, நச்சுன்னு ஒரு கருத்து அதுக்காக ரசித்தேன்.
6. மயக்கம் என்ன
செய்கிற வேலையை ரசித்து செய்யச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். அதிக எதிர்பார்ப்போடு போகாமலிருந்தால் இன்னும் பிடித்திருக்கும்.
5. வாகை சூட வா
பழைய பாரதிராஜா டைப் படம். ஆனாலும் சலிப்பூட்டாமல் ரசிக்க முடிந்தது. நல்லதொரு கருத்து சொன்னதற்காக இயக்குனரை பாராட்டலாம்.
4. மங்காத்தா
தல படம். வேறென்ன சொல்ல.
3. யுத்தம் செய்
புத்திசாலி போலீஸ் கதைகள் ஒருவித சலிப்பை ஏற்படுத்தினாலும் ஏதோ ஒரு வகையில் ரசிக்க வைக்கின்றன. இதுதான் கதை என்று தெரியாமல் பார்த்ததால் இன்னும் ரசிக்க முடிந்தது.
2. 180
பொழுதுபோக்கு படம் என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் இதுதான். கவலையில் இருக்கும் ஒரு மனிதனுக்கு சிரிக்க கற்றுக்கொடுக்கும் இந்தப்படம். நிறைய காட்சிகள் போரடித்தாலும் கடைசியில் சொன்ன கருத்துக்காக லைக்கோ லைக்.
1. ஆரண்ய காண்டம்
அட்டகாசமான விளம்பர யுக்தி, கொடுக்காப்புலி, காளையன் கேரக்டர்களின் பிரமாதமான நடிப்பு, சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் வசனங்கள், அருமையான திரைக்கதை, பின்னணி இசை. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, படத்தில் Strategy Management, Decision Making என்று பாடமெடுத்தது சூப்பர்.
தவறவிட்டு வருந்தியவை: ஆடுகளம், வானம், உயிரின் எடை 21 அயிரி, வேலாயுதம், வெங்காயம், போராளி, மெளனகுரு
தவறவிட்டு மகிழ்ந்தவை: சிறுத்தை, காவலன், அவன் இவன், தெய்வதிருமகள், வெடி, ஒஸ்தி, ராஜபாட்டை
பிளாஷ்பேக்: நான் பார்த்த தமிழ் சினிமா - 2010
தவறவிட்டு வருந்தியவை: ஆடுகளம், வானம், உயிரின் எடை 21 அயிரி, வேலாயுதம், வெங்காயம், போராளி, மெளனகுரு
தவறவிட்டு மகிழ்ந்தவை: சிறுத்தை, காவலன், அவன் இவன், தெய்வதிருமகள், வெடி, ஒஸ்தி, ராஜபாட்டை
பிளாஷ்பேக்: நான் பார்த்த தமிழ் சினிமா - 2010
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
77 comments:
காவலன், வேலாயுதம் ஆகிய இரு படங்களையும் திட்டமிட்டு புறக்கணித்து இருப்பதை கடுமையாக ஆட்சேபிக்கிறேன். இதைக் கண்டித்து நாளை கேப்டன் தலைமையில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தபடும்.....! (பவர் ஸ்டாரை விடவா மோசமாக இருக்கிறார் எங்க டாகுடர்?)
சொம்பு எஸ்டிஆரின் படங்களையும் (வானம், ஒஸ்தே?) புறக்கணித்திருப்பது கண்டிக்கத்தக்கது!
மம்பட்டியான் படத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடாததற்கு பிரசாந்த் ரசிகர்களுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டிவரும் என எச்சரிக்கிறேன்.....!
விசாலின் வெடி படமும் மிஸ்சிங்......!
தன்னிகரில்லா தங்கத்தலைவி, வெள்ளித்தாரகை சினேகா நடித்த பவானி ஐபிஎஸ் படம் இல்லாதது வியப்பளிக்கிறது....!!!
ஆடுகளம்
@ பன்னிக்குட்டி ராம்சாமி
உங்க ஒட்டுமொத்த எண்ணமும் என்னை எப்படி கொல்வது என்பதிலேயே இருக்கிறதே...
கலைஞர் கதைவசனத்தில் உருவான இளைஞன்
சிறுத்தை
@ கோவை நேரம்
// ஆடுகளம் //
பதிவின் இறுதியில் சில வரிகளை சேர்க்க தவறிவிட்டேன்... சுட்டிக்காட்டியமைக்கு நன்றி... இப்போது சேர்க்கிறேன்...
சன் டிவியின் கொலை வெறி படம் மாப்பிள்ளை
ஓகே இனிசீரியஸ், ஆடுகளம், அவன் இவன் ரெண்டையும் காணோம், ஆனா மிஸ் பண்ணி இருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன், பிடிக்கலையா? (இந்த மாதிரி மிஸ்சாகுன படங்களை போட்டு அதுகளை ஏன் பிடிக்கலைன்னு ஒரு பதிவை தேத்திடலாமே?)
பாலாவின் அவன் இவன் ...
பேசாம தொடரும்னு போட்டு இருக்கலாம்
/////Philosophy Prabhakaran said...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
உங்க ஒட்டுமொத்த எண்ணமும் என்னை எப்படி கொல்வது என்பதிலேயே இருக்கிறதே...////
யோவ் லத்திகா பாத்தே ஒண்ணும் ஆகல, அப்புறம் என்ன?
@ பன்னிக்குட்டி ராம்சாமி, கோவை நேரம்
இப்ப சேர்த்துட்டேன்... பாருங்க...
தமிழகத்தின் விடி(யா)வெள்ளி சின்ன டாகுடர் அவர்களின் படங்களை சேர்த்துக் கொண்டதற்கு பாராட்டு தெரிவித்து மூத்த தளபதி எஸ்.ஏ.சி அவர்கள் தலைமையில் நாளை பொதுக்கூட்டம் நடைபெறும்...!
அடடா..போராளி எதுலயும் வரலையே ....
இன்னும் ஒரு முக்கியமான படம் மிஸ்சிங்...... அது டாகுடரின் நைனா எஸ்.ஏ.சி இயக்கியது...... சட்டப்படி குற்றம்!
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// இன்னும் ஒரு முக்கியமான படம் மிஸ்சிங்...... அது டாகுடரின் நைனா எஸ்.ஏ.சி இயக்கியது...... சட்டப்படி குற்றம்! //
நைனாவின் படம் எந்த ஆண்டு வந்தது ஓய்...
@ கோவை நேரம்
// அடடா..போராளி எதுலயும் வரலையே .... //
கீழே இருக்குற லிஸ்ட்ல பாருங்க சார்...
அப்புறம் ...ஜீவா நடித்த மூணு படம் வரவே இல்லையே...
////Philosophy Prabhakaran said...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// இன்னும் ஒரு முக்கியமான படம் மிஸ்சிங்...... அது டாகுடரின் நைனா எஸ்.ஏ.சி இயக்கியது...... சட்டப்படி குற்றம்! //
நைனாவின் படம் எந்த ஆண்டு வந்தது ஓய்.../////
அது 2011 இல்லியா? (நைனா கொஞ்சம் பழைய படம் மாதிரி உல்டா பண்ணித்தான் எடுத்தாரு, இருந்தாலும் படம் இப்பத்தானே ரிலீஸ் ஆச்சு....?)
@ கோவை நேரம்
// அப்புறம் ...ஜீவா நடித்த மூணு படம் வரவே இல்லையே... //
பத்தொன்பதாவது இடத்தில் கோ இருக்கே... ரெளத்திரம் குப்பை... சிங்கம் புலி, வந்தான் வென்றான் இரண்டையும் நான் பார்க்கவில்லை... பார்க்க விரும்பவும் இல்லை...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// அது 2011 இல்லியா? (நைனா கொஞ்சம் பழைய படம் மாதிரி உல்டா பண்ணித்தான் எடுத்தாரு, இருந்தாலும் படம் இப்பத்தானே ரிலீஸ் ஆச்சு....?) //
ம்ம்ம் விக்கிபீடியா பார்த்தேன்... இந்த வருஷம்தானாம்... இருந்தாலும் அந்தப்படத்தை பத்தி எழுதுறது கூட சட்டப்படி குற்றம்...
நம்ம கரு பழனியப்பன் சதுரங்கம்,,,,
விமர்சனம் பண்ணி இருக்கிற பாலை யை விட்டுடீங்களே ...
@ கோவை நேரம்
// நம்ம கரு பழனியப்பன் சதுரங்கம்,,,, //
நான் பார்க்கலை... நீங்க 124 படத்தையும் சொல்லாம விட மாட்டீங்க போல...
/////Philosophy Prabhakaran said...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// அது 2011 இல்லியா? (நைனா கொஞ்சம் பழைய படம் மாதிரி உல்டா பண்ணித்தான் எடுத்தாரு, இருந்தாலும் படம் இப்பத்தானே ரிலீஸ் ஆச்சு....?) //
ம்ம்ம் விக்கிபீடியா பார்த்தேன்... இந்த வருஷம்தானாம்... இருந்தாலும் அந்தப்படத்தை பத்தி எழுதுறது கூட சட்டப்படி குற்றம்...//////
அதெல்லாம் நாளைக்கு சரித்திரத்துல வரும், பாடத்துல படிப்பாங்க... அப்புறம் பாருங்க.....!
@ கோவை நேரம்
// விமர்சனம் பண்ணி இருக்கிற பாலை யை விட்டுடீங்களே ... //
பாலை படத்தை ஒன்னு, ரெண்டுன்னு நம்பர் போட்டு கமர்ஷியல் கட்டத்திற்குள் அடைக்க முடியாது...
காஜல் நடித்த மாவீரனையும் பத்தி எழுதி இருக்கலாம் ...
@ கோவை நேரம்
// காஜல் நடித்த மாவீரனையும் பத்தி எழுதி இருக்கலாம் ... //
ஆமால்ல... விடுங்க கனவுக்கன்னி போஸ்ட்ல சரி கட்டிடலாம்...
இருவரிகளில் நீங்கள் பார்த்த படத்துக்கு சிறப்பான விமர்சனம் . பகிர்வுக்கு நன்றி
பன்னிக்குட்டியார் போட்டு தாக்கியிருக்காரே...
பிரபா... நீங்க குறிப்பிட்ட பல படங்கள் நான் பார்க்கவில்லை... அவற்றை பற்றி சில வரிகளில் அறிந்து கொண்டேன்...
நச்!விமர்சனம்.... தல படம் வேறென்ன சொல்ல....செல்லாது...செல்லாது...நாட்டாமை தீர்ப்பை மாத்திசொல்லு....
இரு வரிகளில் அனைத்து படத்தையும் விமர்சித்திருப்பது அருமை .//தவறவிட்டு வருந்தியவை:
தவறவிட்டு மகிழ்ந்தவை//என தலைப்பிட்டு உங்கள் ஸ்டைல் கலக்கிட்டிங்க
"இதுதான் கதை என்று தெரியாமல் பார்த்ததால் இன்னும் ரசிக்க முடிந்தது."
>>>>>
இதை ஒவ்வொரு விமர்சகனும் புரிஞ்ஜிக்கனுமுங்க...அதாவது ஒவ்வொருத்தரு பார்வை ஒவ்வொரு வழியில்...ஹிஹி...என்ன இருந்தாலும் வகைப்படுத்திய விதம் நல்லா இருக்கு!
இப்படி படம் பார்க்க எல்லாம் நேரம் இருக்கா கொடுத்து வைத்த மனுஷன் ஹிம்.
இருப்பினும் இரு வரி விமர்சனம் பிடிச்சிருக்கு.
என்னாது ஆடுகளம் மிஸ் பண்ணிட்டீங்களா?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
இன்னும் ஒரு முக்கியமான படம் மிஸ்சிங்...... அது டாகுடரின் நைனா எஸ்.ஏ.சி இயக்கியது...... சட்டப்படி குற்றம்!//
நைனா இன்னமும் விடறதா இல்லை! என்ன கொடுமை சார்!
Mozhi illatha...padam partheengalla.......
athai pathium ezhuthunga
thalai.....
ஒரு நல்ல விஷயம் சின்ன சின்ன வரிகள்ல tweets மாதிரி சொன்னது. இல்லேன்னா இந்தகட்டுரை போரடிச்சுருக்கும். 'கடந்த வருடத்தில்' என்று வருகிற பதிவுகளுக்கு முன்மாதிரி...
என்னோட வலையில்;
மலையாளிகளின் airlines
திருவள்ளுவரின் Tweets
@ Mahan.Thamesh
// இருவரிகளில் நீங்கள் பார்த்த படத்துக்கு சிறப்பான விமர்சனம் . பகிர்வுக்கு நன்றி //
நன்றி தலைவரே...
@ தமிழ்வாசி பிரகாஷ்
// பன்னிக்குட்டியார் போட்டு தாக்கியிருக்காரே... //
ஆமாம் பிரகாஷ்... நேத்து என்ன ஆச்சுன்னு தெரியல... பன்னிக்குட்டி பிரிச்சு மேஞ்சுட்டார்...
// பிரபா... நீங்க குறிப்பிட்ட பல படங்கள் நான் பார்க்கவில்லை... அவற்றை பற்றி சில வரிகளில் அறிந்து கொண்டேன்... //
நல்லது...
@ veedu
// நச்!விமர்சனம்.... //
நன்றி...
// தல படம் வேறென்ன சொல்ல....செல்லாது...செல்லாது...நாட்டாமை தீர்ப்பை மாத்திசொல்லு.... //
நான் ஏதாவது சொன்னாலும் செயற்கையா இருக்கும்... விடுங்க...
@ பிரேம் குமார் .சி
// இரு வரிகளில் அனைத்து படத்தையும் விமர்சித்திருப்பது அருமை .//தவறவிட்டு வருந்தியவை:
தவறவிட்டு மகிழ்ந்தவை//என தலைப்பிட்டு உங்கள் ஸ்டைல் கலக்கிட்டிங்க //
நன்றி நண்பா...
@ விக்கியுலகம்
// இதை ஒவ்வொரு விமர்சகனும் புரிஞ்ஜிக்கனுமுங்க...அதாவது ஒவ்வொருத்தரு பார்வை ஒவ்வொரு வழியில்...ஹிஹி...என்ன இருந்தாலும் வகைப்படுத்திய விதம் நல்லா இருக்கு! //
புரியல... விமர்சனம் என்ற பெயரில் கதையை எழுதக்கூடாதுன்னு சொல்றீங்களா....
@ மனசாட்சி
// இப்படி படம் பார்க்க எல்லாம் நேரம் இருக்கா கொடுத்து வைத்த மனுஷன் ஹிம்.
இருப்பினும் இரு வரி விமர்சனம் பிடிச்சிருக்கு. //
இருபது படத்துக்கே இப்படியா... அதுலயும் பதினைந்து மட்டும்தான் தியேட்டரில் பார்த்தது...
@ ஜீ...
// என்னாது ஆடுகளம் மிஸ் பண்ணிட்டீங்களா? //
ஆமாம்... அந்த படம் வந்த சமயத்தில் நான் படம் பார்க்கும் மனநிலையில் இல்லை...
@ NAAI-NAKKS
// Mozhi illatha...padam partheengalla.......
athai pathium ezhuthunga
thalai..... //
தலைப்புல தமிழ் சினிமான்னு போட்டிருக்கேன் பாருங்க...
@ Chilled beers
// ஒரு நல்ல விஷயம் சின்ன சின்ன வரிகள்ல tweets மாதிரி சொன்னது. இல்லேன்னா இந்தகட்டுரை போரடிச்சுருக்கும். 'கடந்த வருடத்தில்' என்று வருகிற பதிவுகளுக்கு முன்மாதிரி... //
ஹி... ஹி... நன்றி பீர்...
ரொம்ப அழகா தொகுத்திருக்கிங்க பிரபா. பகிர்தலுக்கு நன்றி.
// கலைஞர் கதைவசனத்தில் உருவான இளைஞன்//
இளைஞன்,லத்திகா எல்லாம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது...
பயணம் எந்த லிஸ்டுலயும் வரலையே?
சும்மா, கேக்கனும்னு தோணுச்சு.
லத்திகா,பொன்னர் சங்கர் பார்த்த உங்க மன தைரியத்தை பாராட்டி தமிழ் சினிமா உலகம் சார்பில் உங்களுக்கு ஆனந்த தொல்லை டிக்கெட் இலவசமா தரலாம்.
hi friend i m kolly........Tamil actor news gallerys and trailers dailly update please visit :http://www.kollywoodthendral.in/
good.. but 2010 la neenga sonna aravaan padam release aggavey illai...
@ N.H.பிரசாத்
// ரொம்ப அழகா தொகுத்திருக்கிங்க பிரபா. பகிர்தலுக்கு நன்றி. //
நன்றி நண்பா...
@ Chilled beers
// இளைஞன்,லத்திகா எல்லாம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது... //
வெளங்கிடுச்சு...
@ கோகுல்
// பயணம் எந்த லிஸ்டுலயும் வரலையே?
சும்மா, கேக்கனும்னு தோணுச்சு. //
பயணம்... நடுநடுவே கொஞ்ச நேரம் பார்த்தேன்... நன்றாகவே இருந்தது...
// லத்திகா,பொன்னர் சங்கர் பார்த்த உங்க மன தைரியத்தை பாராட்டி தமிழ் சினிமா உலகம் சார்பில் உங்களுக்கு ஆனந்த தொல்லை டிக்கெட் இலவசமா தரலாம். //
கொடுங்க... அதுக்குத்தான் காத்துக்கிட்டு இருக்கேன்...
@ Anonymous
// good.. but 2010 la neenga sonna aravaan padam release aggavey illai... //
ஒரு வருடமாக என்னை விடாப்பிடியாக பின்தொடரும் உங்களுக்கு என்னுடைய பாராட்டுகளும் நன்றிகளும்...
அரவான் வரும் வெள்ளி ரிலீஸ் ஆகவேண்டியது... தியேட்டர் கிடைக்கவில்லை போலும்... அடுத்து பொங்கல் ரிலீஸ் படங்கள் வர இருப்பதால் அரவான் பிப்ரவரி களமிறங்கலாம்...
லிஸ்ட் போடும் உங்கள் பணி தொடரட்டும்... வாழ்த்துக்கள்..
//தவறவிட்டு வருந்தியவை: தவறவிட்டு மகிழ்ந்தவை://
புரியலையே?!
aஆரண்ய காண்டம் எல்லாம் மனுஷன் பாப்பாநா?
ஆடுகளம் தேசிய விருது வாங்கியது கேடி பிரதர்ஸ் ஆள் மட்டுமே!
last week i saw உயிரின் எடை 21 அயிரி.
starting super but finally waste.
mokka rowdisam.....
180 sema mokka padam!onnoda rasanaiyil theeya vakka!
எம் ஆர் ராதா சிநிமாகாரனை கடுமையாக எதிர்த்தவர்!அனால் நீயோ அவரின் படத்த போட்டுகினு கேரளன் அஜீத்துக்கு ஜால்ரா போடுவது நியாயமா?
இனியும் கோவிலில் போய் தன்னியடித்தோம் எண்பது போன்ற கட்டுரைகளை இட வேண்டாம்!சிநிமாகரனை நீ கடவுளா பார்க்கலியா?
@ ஷர்மி
// லிஸ்ட் போடும் உங்கள் பணி தொடரட்டும்... வாழ்த்துக்கள்.. //
நன்றி மேடம்...
@ ஆதி மனிதன்
// புரியலையே?! //
சாரே...
தவறவிட்டு வருந்தியவை: சில படங்கள் பார்க்க வேண்டாம்ன்னு விட்டுருப்போம்... இல்லைன்னா அதிக வேலையிருந்து பார்க்க முடியாம போயிருக்கும்... ஆனா நண்பர்கள் யாராவது பார்த்துட்டு சூப்பரா இருக்குன்னு சொல்லும்போது அடடே மிஸ் பண்ணிட்டோமேன்னு தோணுமே அந்தப் படங்கள்...
தவறவிட்டு மகிழ்ந்தவை: சில படங்கள் பார்க்கனும்ன்னு முடிவு பண்ணியிருப்போம் ஆனா அதிக வேலையிருந்து பார்க்க முடியாம போயிருக்கும்... நண்பர்கள் யாராவது பார்த்துட்டு மொக்கையா இருக்குன்னு சொல்லும்போது அப்பாடான்னு பெருமூச்சு விடுவோமே அந்தப் படங்கள்...
@ சொறியார்
// ஆரண்ய காண்டம் எல்லாம் மனுஷன் பாப்பாநா? //
சொறியார்... சும்மா பொத்தாம் பொதுவா இந்தமாதிரி சொல்லாம அந்த படத்தோட குறைகளை சொன்னீங்கன்னா உங்களுக்கு பதில் சொல்ல வசதியா இருக்கும்...
// ஆடுகளம் தேசிய விருது வாங்கியது கேடி பிரதர்ஸ் ஆள் மட்டுமே! //
அதைப்பத்தி எனக்கு தெரியாது... நான் ஆடுகளம் பார்க்கவில்லை...
@ Ganesh
// last week i saw உயிரின் எடை 21 அயிரி.
starting super but finally waste.
mokka rowdisam..... //
அப்படிங்களா... நான் பார்த்த சில காட்சிகள் வரை நன்றாக இருந்தன...
@ Anonymous
// 180 sema mokka padam!onnoda rasanaiyil theeya vakka! //
உங்க ரசனையில் அப்படி இருக்கலாம்... நான் சொன்னபடி அந்தப்படத்தில் சில விஷயங்கள் மொக்கையாக இருக்கலாம்... ஆனால் படம் கற்றுக்கொடுத்த விஷயம் உயர்வானது... அதுதான் எனக்கு தேவை...
// எம் ஆர் ராதா சிநிமாகாரனை கடுமையாக எதிர்த்தவர்!அனால் நீயோ அவரின் படத்த போட்டுகினு கேரளன் அஜீத்துக்கு ஜால்ரா போடுவது நியாயமா? //
எம்.ஆர்.ராதாவும் சினிமாக்காரர் தானே... நான் எம்.ஆர்.ராதாவை மதிக்கிறேன்... அதனால் அவரது புகைப்படத்தை ப்ரோபைலில் வைத்திருக்கிறேன்... ஆனால் நான் ஒன்றும் அவரது ஜெராக்ஸ் காப்பி அல்ல... எனக்கென்று தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் உள்ளன... தவிர எம்.ஆர்.ராதா சினிமாக்காரர்கள் பற்றி என்ன சொன்னாரோ அதையே தான் அஜித்தும் தன்னுடைய பேட்டிகளில் சொல்லி வருகிறார்...
அஜித்துக்கு நான் ஜால்ரா அடிக்கிறேனா... நான் என்ன கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தேனா... அல்லது அஜீத் படமெல்லாம் சூப்பரா இருக்கு எல்லோரும் பாருங்கன்னு சொன்னேனா... அல்லது எல்லோரும் வேலைப் பொழப்பை விட்டுட்டு அஜீத் பின்னாடி ஓடுங்கன்னு சொன்னேனா....
// இனியும் கோவிலில் போய் தன்னியடித்தோம் எண்பது போன்ற கட்டுரைகளை இட வேண்டாம்!சிநிமாகரனை நீ கடவுளா பார்க்கலியா? //
ஏன் எழுதக்கூடாது...? அனானியாரே... அடிக்கடி வெவ்வேறு பெயர்களிலும் அனானியாகவும் வந்து இப்படி மொன்னையான பின்னூட்டங்களை போடும் நீங்கள் யாரென்று எனக்கு நன்றாகவே தெரியும்... ஒரிஜினல் பெயரோடு வந்தால் கிழிப்பதற்கு இன்னும் வசதியாக இருக்கும்...
நல்ல செலக்ட் பன்னிதான் பார்த்துருகிங்க. ஆனா தவறவிட்டு மகிழ்ந்தவை: ல சிறுத்தையும் கவலனுமா? சிறுத்தை சந்தானம் காமெடிக்காக பார்க்கலாம்.. காவலன் விஜய ஹீரோயிசம் இல்லாம பார்க்கலாம்..
உங்க பார்வையில சொல்லியிருகிங்க.. ஓகே
siruthai - good(comedy) movie
Post a Comment