2 January 2012

பிரபா ஒயின்ஷாப் – 02012012


அன்புள்ள வலைப்பூவிற்கு,

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புத்துணர்ச்சியோடு பிரபா ஒயின்ஷாப் திறக்கப்படுகிறது.

எப்படி இருக்கு நம்ம கடையோட அலங்காரம். நீண்ட நாள் திட்டம். எனக்காக முகம் சுளிக்காமல் இரண்டு பேனர்கள் (மேலே இருக்கும் ஆளவந்தான் பேனர் மற்றும் பக்கவாட்டில் இருக்கும் டாஸ்மாக் தோற்ற பேனர்) வடிவமைத்துக் கொடுத்த வலைமனை சுகுமார், டெம்ப்ளேட் வடிவமைக்க Artisteer என்ற மென்பொருளை அறிமுகப்படுத்திய பலே பிரபு, Feed Burner மற்றும் வைரஸ் சிக்கல்களை தீர்த்து வைத்த நிரூபன் என்று அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். Feed Burner அட்ரஸ் மாற்றியமைத்துள்ளமையால் முன்னரே பதிவு செய்திருந்த 33 பேருக்கும் மறுபடி Confirmation Mail அனுப்பியிருக்கிறேன், உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

பத்து நாட்கள் விடுமுறையில் உடல்நிலை சரியில்லாமல் போனது புத்தகங்கள் படிக்க நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது. சிலபல சுஜாதா நாவல்கள், லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும், தேகம், One Night @ The Call Center என்று நிறைய படித்தேன். சேத்தன் பகத்தின் கால் சென்டர் பற்றிய நாவல் சிறப்பாக இருந்தது. எளிமையான ஆங்கிலம், நிறைய படிப்பினைகள். கடைசி ஒன்பது அத்தியாயங்கள் மட்டும் கொஞ்சம் செயற்கையாக இருந்தது. அடுத்ததாக சேத்தன் பகத்தின் மற்ற நாவல்களையும் வாங்க வேண்டும்.

பஃப் கை வச்ச பிளவுஸ், பெல் பாட்டம் பேண்ட் போன்ற பேஷன் சமாச்சாரங்கள் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு அடுத்த தலைமுறைக்கு திரும்ப வந்து எட்டிப்பார்க்கும். தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா காலத்தில் ஹீரோக்களே சொந்தக்குரலில் பாடி நடிப்பார்களாம். அந்த டிரெண்ட் இப்போது மீண்டும் ஒரு ரவுண்ட் அடிக்கும் போல தெரிகிறது. சிம்பு, தனுஷ், விஜய், விக்ரம் என்று ஆளாளுக்கு பாடி நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நேரத்திற்கு அதுவும் ஹிட்டாகி தொலைக்கிறது. என்ன ஒன்று நடிகைகள் பாடி நடிப்பது மட்டும் இந்த ஜென்மத்தில் நடக்காது போல. ஸ்ருதி ஹாசன் மாதிரி நிறைய பேர் நடிக்க வந்தால்தான் உண்டு.

போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் அந்த சில நொடிகள் மனித வாழ்க்கையின் தர்ம சங்கடமான நொடிகள். நானெல்லாம் பல்லைக்காட்டாமல் ஒருமாதிரியாக செயற்கையாக சிரித்து வைப்பேன். இந்தமாதிரி அபத்தமான புன்னகைகளை தவிர்க்க சில புகைப்படக்காரர்கள் “Say Cheese” டெக்னிக்கை பயன்படுத்துகிறார்களாம். அதாவது போட்டோவுக்கு போஸ் கொடுப்பவர்கள் Cheese என்று உச்சரித்தால் அழகாக சிரிப்பது போல தெரியுமாம். பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இந்த டெக்னிக்கையே பயன்படுத்துவார் என்று படித்திருக்கிறேன். ஆனா ஒரு டவுட், அந்தமாதிரி புத்தகங்களுக்கு ஏன் சரோஜா தேவி புத்தகம்ன்னு பெயர் வந்தது யாராவது சொல்லுங்களேன்...???

ஜொள்ளு:
ஐ லவ் யூ ரஸ்னா...!
ட்வீட் எடு கொண்டாடு:
தவறான ஒரு விஷயத்தை/பழக்கத்தை திருத்திகொள்ள புத்தாண்டு வரை வைய்ட் பண்ணுவதே ஒரு மூட நம்பிக்கை தான்...

Kaniyen கனியன்
எந்தப்பத்திரிக்கையிலும் பெயர் வந்தாலும் சந்தோசப்படும் மனது, கல்யாணபத்திரிக்கையில் வந்தால் மட்டும் வருத்தப்படுவது ஏனோ ?

vandavaalam Manoj Reuben
விஜய்: சங்கர் இந்தியாவின் ஸ்பீல்பர்க்! சத்யராஜ்: தம்பி விஜய் இருக்காரே! நம்மள விட பயங்கர நக்கல் புடிச்ச ஆளு! :)

Ganesukumar கணேசு குமார்
கரப்பான் பூச்சி போல சுவரோரமாய் ஒட்டி நின்று அலைபேசிக் கொண்டிருந்தால் புதிதாய் காதலிக்கிறார்கள் என்று பொருள். 
g4gunaa குணா யோகசெல்வன்
முக்கியமா எந்திரனை மறந்துட்டு வாங்க - ஷங்கர் #அணில் படத்துக்கு நாங்க மனுஷங்க'ங்கரதையே மறந்துட்டுதான் சார் வருவோம்..

அறிமுகப்பதிவர்: Chilled Beers
இந்த பூனையும் பீர் குடிக்குமான்னு நினைக்காதீர்கள். செம ஹாட்டாக ஹன்சிகா, குஷ்பூ பற்றியெல்லாம் எழுதி ஈர்க்கிறார். (Very informative post). அதேமாதிரி மதுரக்காரைங்க சினிமா என்ற போஸ்ட் செம நக்கல். (அவரும் பாதிக்கப்பட்டிருக்கார்). ஒஸ்தி, மெளனகுரு என்று சமீப சினிமாக்களுக்கு விமர்சனங்கள் எழுதியிருக்கிறார். அதே சமயம் சாருவின் எக்சைல், வெற்றிலைக்கு அந்த வாசம் வந்த கி.ராவின் கதை என்று இலக்கியத்திலும் புகுந்து விளையாடுகிறார். இவருடைய எழுத்துத்திறமையை வைத்து பார்க்கும்போது பழைய பதிவர் யாரோ ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

கேட்ட பாடல்:
ஒருவாரமாக நண்பன் பாடல்களை தான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். எல்லாமே அருமை. இப்போதைக்கு அதிரடியாக ஆரம்பிக்கும் “என் பிரண்டை போல யாரு மச்சான்...” பாட்டு அதிகம் பிடிச்சிருக்கு.

அதன் வரிகள், இன்னொரு மூணு மாசத்துக்கு எல்லா இளைஞர்களுடைய ரிங்டோன் இதுவாகத்தான் இருக்கும். நேர்ல பார்க்கும்போது ஒருத்தனை ஒருத்தன் கேவலமா திட்டிப்பாங்க, இருந்தாலும் ரிங்டோனில் மட்டும் பாசம் பொங்கி வழியும். Crazy Buggers. 

பார்த்த காணொளி:
ஆரவாரமில்லாமல் ஒரு மிமிக்ரி புரட்சியே செய்துவருகிறார் நண்பர் சீனி பிரபு.

விஜய் டிவி – கோடீஸ்வரன் களவாணி கும்பல் பற்றி புரியும்படி அதே சமயம் சிரித்து ரசிக்கும் வகையில் சீனி பிரபு உருவாக்கியுள்ள மிமிக்ரி நிகழ்ச்சி.

ரசித்த புகைப்படம்:
பதறாதீங்க... மவுஸ் பேட் தான்...!
ஒருமாதிரி ஜில்பான்ஸாக இருக்கும் இந்த மவுஸ் பேட் Carpal Tunnel Syndrome என்ற நரம்பு சம்பந்தமான பிரச்சனை வராமல் தவிர்க்க உதவுகிறதாம்.

தத்துவம்:
“வீழ்ச்சியில் கலக்கமோ, எழுச்சியில் மயக்கமோ கொள்ளாதே...!”
-     படித்த புத்தகத்திலிருந்து

கடைசியா, ஒரு ஜோக்:
ஒரு தடவ சி.ஐ.ஏ (அமெரிக்க உளவுப் பிரிவு) ல இண்டெர்வியூ நடந்ததாம். முணு பேர் கடைசி ரவுண்டு வரைக்கும் வந்தாங்களாம்.

கடைசி ரவுண்ட்ல மொத ஆள்கிட்ட ஒரு துப்பாக்கிய குடுத்து உள்ள உங்க வைஃப்-அ கட்டிப் போட்டு வச்சிருக்கோம், போய் கொன்னுட்டு வாங்கன்னாங்களாம்

அதெல்லாம் முடியாதுங்க, பொண்டாட்டியெல்லாம் கொல்ல முடியாதுன்னுட்டானாம்.

ரெண்டாவது ஆள் வீராவேசமா துப்பாக்கிய வாங்கிட்டுப் போனானாம், கொஞ்ச நேரம் கழிச்சு திரும்பி வந்துட்டானாம், “என்னால முடிலீங்கன்னானாம்

உங்களுக்கும் சி ஐ ஏ ல சேர தகுதி இல்ல, வைஃப்ப கூட்டிட்டு போங்கன்னுட்டாங்களாம்.

மூணாவது ஆள்கிட்ட இதே மாதிரி சொன்னவுடனே துப்பாக்கி எடுத்துட்டு நேரா உள்ள போனானாம், கதவ சாத்துறதுக்குள்ள சுட்ற சத்தம் கேட்டதாம், வரிசையா 10 தடவ சுட்ற சத்தம் கேட்டதாம். வரிசையா கத்தற சத்தம், சேர்ல அடிக்ற சத்தம் கேட்டதாம்.

பதறிப்போய் எல்லாரும் உள்ள போனாங்களாம். சோர்வா வெளில வந்தானாம், “என்னாச்சு என்னாச்சுன்னு கேக்க, அவன் சொன்னானாம், “நீங்க குடுத்த துப்பாக்கில சுட்டேன், தோட்டா எல்லாம் போலி, சொன்னத செய்யணும்ல... உக்காந்திருந்த சேர எடுத்து அடிச்சு, சுவத்தில மோதி கஷ்டப்பட்டு கொல்ல வேண்டிதாப்போச்சு

டிஸ்கி: இந்த ஜோக் சம்பந்தமா பின்னூட்டம் போடுறவங்களோட வீட்டம்மாவுக்கு தகவல் போகும்ன்னு சொல்லிக்கிறேன். 
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

80 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டெம்ப்ளேட், பேனர், பிரபா வைன்ஷாப் போர்டு எல்லாம் நல்லா வந்திருக்கு.... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பத்து நாட்கள் விடுமுறையில் உடல்நிலை சரியில்லாமல் போனது புத்தகங்கள் படிக்க நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது. ////

சங்கமத்துல கண்ணு பட்டிருக்க போவுது.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சிம்பு, தனுஷ், விஜய், விக்ரம் என்று ஆளாளுக்கு பாடி நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ////

ஆல் அப்பாட்டக்கர்ஸ்.........! ங்கொய்யால இவனுங்க படத்தையே பாக்க முடில, இனி இதுவேறயா... வெளங்கிரும்யா......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ஆனா ஒரு டவுட், அந்தமாதிரி புத்தகங்களுக்கு ஏன் சரோஜா தேவி புத்தகம்ன்னு பெயர் வந்தது யாராவது சொல்லுங்களேன்...???////

அந்தக் காலத்துல புக்கு வந்த புதுசுல அந்தப் பேர்ல ஏதாவது கதை பேமசாகி இருக்கும்.... யாராவது பெருசுக வந்து க்ளாரிஃபை பண்ணா தேவலை...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஐ லவ் யூ ரஸ்னா...!////

அந்தப்புள்ளையா இது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மௌஸ் பேட் இன்னும் டெவலப் ஆகனும்......!

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// டெம்ப்ளேட், பேனர், பிரபா வைன்ஷாப் போர்டு எல்லாம் நல்லா வந்திருக்கு.... ! //

நன்றி தல...

// சங்கமத்துல கண்ணு பட்டிருக்க போவுது.....! //

ம்க்கும்...

// ஆல் அப்பாட்டக்கர்ஸ்.........! ங்கொய்யால இவனுங்க படத்தையே பாக்க முடில, இனி இதுவேறயா... வெளங்கிரும்யா......! //

வெயிட்டிங் ஃபார் தல வாய்ஸ்...

// அந்தக் காலத்துல புக்கு வந்த புதுசுல அந்தப் பேர்ல ஏதாவது கதை பேமசாகி இருக்கும்.... யாராவது பெருசுக வந்து க்ளாரிஃபை பண்ணா தேவலை...! //

என்னது... உங்களுக்கே தெரியலையா... சத்தியமா நான் இதை எதிர்பார்க்கலை....

// அந்தப்புள்ளையா இது? //

ம்ஹூம்... இந்த புள்ள பேரு ரஸ்னா or ரசானா...

// மௌஸ் பேட் இன்னும் டெவலப் ஆகனும்......! //

இதுவே அதிகம்...

Anonymous said...

ஆளவந்தான் ஃபோட்டோ அட்டகாசம். உண்மையைச் சொன்னால் நான் இதை பயன்படுத்தலாமான்னு யோசிச்சேன். என்னோட டயரி டெம்ப்ளேட்டுக்கு சரி வராது.

அந்த படத்த பார்த்ததும் பழசு ஞாபகம் வந்துருச்சு.பெரிய பெரிய போஸ்டரா அடிச்சு கலைப்புலி தாணு கலக்கியிருந்தார் ஆரம்ப விழாவுக்கு. கடைசில கமல் அழ அழ வச்சாரு அவரை...

Anonymous said...

மௌஸ்பேட்....வீடியோ கேம்ல இந்தமாதிரி ஏதாவது யூஸ் பண்ணலாமே ;-)

Anonymous said...

சொல்ல மறந்துட்டேன். அறிமுகப்படுத்தினதுக்கு மிக்க நன்றி!

Unknown said...

வாழ்த்துக்கள்

புது டிசைன்,
புது போர்டு,
கலக்குறிங்க பிரபா!

சில்க் சதிஷ் said...

என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

நாய் நக்ஸ் said...

Nadathungaiya....
Nadathungaiya........
Inga nanga current
illama avastha padurom.....

Nalla irungaiya.....
Nalla irunga.....
:)
:)
:)

நாய் நக்ஸ் said...

TO ALL MY DIEHARD
FANS......

HAPPY NEW YEAR......

நாய் நக்ஸ் said...

Ippadithan....
Intha blog-ku
thirushti suthanum...!!!!!!!!!!!!!

ஆதி மனிதன் said...

பொதுவாகவே இந்தியர்கள் (என்னையும் சேர்த்து தான். ஹி.. ஹி...)போடோவுக்கு உம்மென்று தான் போஸ் கொடுப்பார்கள். இப்போது இது பெருமளவு மாறி இருக்கிறது. அதற்க்கு பெரிதும் உதவுவுது "ச்சீஸ்" தான்.

Prem S said...

ஒயின் ஷாப்புக்கு ஏற்ற டாஸ்மாக் டிசைன் கலக்கல் .பின்னாடி போலீஸ் ஸ்டேஷன் டைப் செங்கல் பின்புலம் ஏன் பாஸ்?.உங்க தளம் வந்தா மனசுல சிறை வைச்சுடுவீங்கனு குறிப்பா காட்டுரீங்களா

ஹாலிவுட்ரசிகன் said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

புதிய டெம்ப்ளேட் அழகாகவே உள்ளது. பதிவுக்கு நன்றி.

Unknown said...

வணக்கம் ஆளவந்தான்...ஒயின்ஷாப் பார்டிஸன் நல்லாயிருக்கு....ஐ லவ் யூ ரஸ்னா படம் சூப்பர் நிறைய படம் மாட்டுங்க.....அப்பத்தா கிக் ஏறும்....மவுஸ் பேடு எங்க கிடைக்கும்...அவ்வ்வ்வ்வ்வ்

Unknown said...

மவுஸ் பேடு இன்னும் டெவலப் ஆகனுமா?பன்னிக்குட்டியண்ணனுக்கு அட இரண்டு தலையனை வச்சிக்குங்க....ஹிஹி

Unknown said...

Ippadithan....
Intha blog-ku
thirushti suthanum...!!!!!!!!!!!!!

யோவ் நீ...வந்தாவே...திருஸ்டி சுத்தின மாதிரிதான்.....ஃபிளாக்கை ஓப்பன் செய்து வச்சிட்டு மூனு சுத்து சுத்துங்க கம்யூட்டர

Unknown said...

செம்ம கிக் மச்சி! :-)

எக்கச்சக்கமா வாசிச்சிருக்கீங்க போல! என்னமோ போங்க இப்பல்லாம் உடல்நிலை சரியில்லாம போனாத்தான் வாசிக்க முடியுது! :-(

சூப்பர் மவுஸ் பேட்! :-)

இ லவ் யூ ரஸ்னா???????

Unknown said...

//ஸ்ருதி ஹாசன் மாதிரி நிறைய பேர் நடிக்க வந்தால்தான் உண்டு.//
ஆமா பாஸ் செம்ம ஜாலியா இருக்கும்! :-)

Unknown said...

//அறிமுகப்பதிவர்: Chilled Beers//
நானும் வாசித்தேன்!

எக்சைல் பற்றி...குட்டியா செம்ம நக்கல்ஸ்! :-)
தூள் கிளப்பிறார் பாஸ்!

Anonymous said...

பிரபா டிசைன் சூப்பரா இருக்கு, எனக்கும் முடிந்தால் அது போன்ற டிசைன் செய்வது என்று சொல்லவும், இத்தனை நாள் பதிவெழுதாததற்கு உடல்நலக்குறைவு தான் காரணமா, புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Philosophy Prabhakaran said...

@ Chilled beers
// ஆளவந்தான் ஃபோட்டோ அட்டகாசம். உண்மையைச் சொன்னால் நான் இதை பயன்படுத்தலாமான்னு யோசிச்சேன். என்னோட டயரி டெம்ப்ளேட்டுக்கு சரி வராது. //

டெம்ப்ளேட்டை மாத்திக்க வேண்டியது தானே...

// அந்த படத்த பார்த்ததும் பழசு ஞாபகம் வந்துருச்சு.பெரிய பெரிய போஸ்டரா அடிச்சு கலைப்புலி தாணு கலக்கியிருந்தார் ஆரம்ப விழாவுக்கு. கடைசில கமல் அழ அழ வச்சாரு அவரை... //

தாணுவை அழ வைத்தாலும் அந்தப்படம் என்னுடைய ஆல்-டைம் பேவரிட்...

// சொல்ல மறந்துட்டேன். அறிமுகப்படுத்தினதுக்கு மிக்க நன்றி! //

எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க...

Philosophy Prabhakaran said...

@ அப்பு
// வாழ்த்துக்கள்

புது டிசைன்,
புது போர்டு,
கலக்குறிங்க பிரபா! //

நன்றி அப்பு...

Philosophy Prabhakaran said...

@ சில்க் சதிஷ்
// என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் //

நன்றி சில்க்... உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

Philosophy Prabhakaran said...

@ NAAI-NAKKS
// Nadathungaiya....
Nadathungaiya........
Inga nanga current
illama avastha padurom.....

Nalla irungaiya.....
Nalla irunga..... //

நீங்கதான் ஒஸ்தியான மொபைல் வச்சிருக்கீங்களே... அப்புறமென்ன தல...

// TO ALL MY DIEHARD
FANS......

HAPPY NEW YEAR...... //

நன்றி தலைவரே...

Philosophy Prabhakaran said...

@ ஆதி மனிதன்
// பொதுவாகவே இந்தியர்கள் (என்னையும் சேர்த்து தான். ஹி.. ஹி...)போடோவுக்கு உம்மென்று தான் போஸ் கொடுப்பார்கள். இப்போது இது பெருமளவு மாறி இருக்கிறது. அதற்க்கு பெரிதும் உதவுவுது "ச்சீஸ்" தான். //

அப்படியா... பொறுமையை சோதிக்கும் போட்டோகிராபர்களிடம் சீஸ் கூட செல்லுபடியாவதில்லை... எவ்வளவு நேரம்தான் சீஸ்ன்னு சொல்லிட்டே இருக்குறது...

Philosophy Prabhakaran said...

@ பிரேம் குமார் .சி
// ஒயின் ஷாப்புக்கு ஏற்ற டாஸ்மாக் டிசைன் கலக்கல் //

நன்றி தல...

// பின்னாடி போலீஸ் ஸ்டேஷன் டைப் செங்கல் பின்புலம் ஏன் பாஸ்?.உங்க தளம் வந்தா மனசுல சிறை வைச்சுடுவீங்கனு குறிப்பா காட்டுரீங்களா //

எங்கம்மா அப்பவே சொன்னாங்க... கவிதை எழுதுற பசங்களோட சேராதன்னு...

Philosophy Prabhakaran said...

@ ஹாலிவுட்ரசிகன்
// புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். //

உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

// புதிய டெம்ப்ளேட் அழகாகவே உள்ளது. பதிவுக்கு நன்றி. //

நன்றி தல...

Philosophy Prabhakaran said...

@ veedu
// வணக்கம் ஆளவந்தான்...ஒயின்ஷாப் பார்டிஸன் நல்லாயிருக்கு.... //

நன்றி தல...

// ஐ லவ் யூ ரஸ்னா படம் சூப்பர் நிறைய படம் மாட்டுங்க.....அப்பத்தா கிக் ஏறும்.... //

ஒரு படத்துக்கே ஆளாளுக்கு கும்முறாங்க... ஏன்யா...?

// மவுஸ் பேடு எங்க கிடைக்கும்...அவ்வ்வ்வ்வ்வ் //

சத்தியமா எனக்கு தெரியாதுங்கோ...

// மவுஸ் பேடு இன்னும் டெவலப் ஆகனுமா?பன்னிக்குட்டியண்ணனுக்கு அட இரண்டு தலையனை வச்சிக்குங்க....ஹிஹி //

வெளங்கிடுச்சு...

// யோவ் நீ...வந்தாவே...திருஸ்டி சுத்தின மாதிரிதான்..... //

சரியா சொன்னீங்க...

Philosophy Prabhakaran said...

@ ஜீ...
// செம்ம கிக் மச்சி! :-) //

நன்றி தல...

// எக்கச்சக்கமா வாசிச்சிருக்கீங்க போல! என்னமோ போங்க இப்பல்லாம் உடல்நிலை சரியில்லாம போனாத்தான் வாசிக்க முடியுது! :-( //

என்ன தல... இந்த ஓட்டு ஓட்டுறீங்க...

// இ லவ் யூ ரஸ்னா??????? //

விஜய் டிவியில் பாரிஜாதம் சீரியல் பார்க்கவும்...

Philosophy Prabhakaran said...

@ ஆரூர் முனா செந்திலு
// பிரபா டிசைன் சூப்பரா இருக்கு, எனக்கும் முடிந்தால் அது போன்ற டிசைன் செய்வது என்று சொல்லவும் //

தல... டிசைன் செய்து கொடுத்தது யாரென்று எழுதியிருக்கிறேனே... அவரிடமே நேரடியாக கேட்கவும்...

// இத்தனை நாள் பதிவெழுதாததற்கு உடல்நலக்குறைவு தான் காரணமா //

ஆமாம்... இன்னமும் கூட முழுமையாக குணம் அடையவில்லை...

// புத்தாண்டு வாழ்த்துக்கள் //

உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Anonymous said...

உண்மைத்தமிழனை மிஞ்சிட்டப்பா!

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
// உண்மைத்தமிழனை மிஞ்சிட்டப்பா! //

அவ்வளவு நீ.... ளமாவா இருக்கு...

Anonymous said...

எதுக்குய்யா கமல் ஸ்டில்லு..?

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
// எதுக்குய்யா கமல் ஸ்டில்லு..? //

அது கமல் ஸ்டில் இல்லை... ஆளவந்தான் ஸ்டில்... அதுல மிகப்பெரிய வாழ்க்கை தத்துவம் அடங்கியிருக்கு...

Anonymous said...

//அது கமல் ஸ்டில் இல்லை... ஆளவந்தான் ஸ்டில்... அதுல மிகப்பெரிய வாழ்க்கை தத்துவம் அடங்கியிருக்கு...//

புக் பேர்ல அந்த தத்துவத்த கக்குங்க..

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
// புக் பேர்ல அந்த தத்துவத்த கக்குங்க.. //

ம்ம்ம் சொல்றேன்... ஆனா சிரிக்கப்பிடாது....

ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் விஜய் குமார், நந்த குமார் மாதிரி ரெண்டு கேரக்டர்கள் இருப்பாங்க... அதாவது ஒரு நல்லவன், ஒரு கெட்டவன்... கெட்டவனின் எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிப்பது சுலபம்... (படத்தில் நந்தகுமாரின் ரியாக்ஷனை பார்க்கவும்...) நல்ல எண்ணங்களால் அதனை முறியடிப்பது கஷ்டமே... (பார்க்க விஜயகுமாரின் ரியாக்ஷன்...) இப்படிப்பட்ட போராட்டமே வாழ்க்கை என்பதே அந்த தத்துவம்...

இப்ப சொல்லுங்க நான் பிலாசபி பிரபாகரன் தானே...

கும்மாச்சி said...

புதிய ஒயின்ஷாப் கலக்கல்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Anonymous said...

//இப்ப சொல்லுங்க நான் பிலாசபி பிரபாகரன் தானே..//

ஸ்ஸ்...ஆமாம். ஆமாம்.

MANO நாஞ்சில் மனோ said...

யப்பா ஜோக் படிச்சி வயிறும் குலுங்கி போச்சு, என்னை பார்த்தவனும் பதறி ஓடுறான் ஹா ஹா ஹா ஹா....

Anonymous said...

// சொல்ல மறந்துட்டேன். அறிமுகப்படுத்தினதுக்கு மிக்க நன்றி! //

//எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க... //

இதுல தப்பா ஒண்ணுமில்லங்கண்ணா...chilled bear பிரபாவின் wineshop ல் இடம் பிடித்தாகணுமில்ல...

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஒயின்ஷாப் புது இடத்துக்கு மாற்றம் பண்ணியிருகிங்க.... நல்லா இருக்கு....

ஐ லவ் யூ... ரஸ்னா..... ஆஆ...ண்டி

அனுஷ்யா said...

உடல்நிலை தேறி வந்திருப்பதில் மகிழ்ச்சி...புத்தாண்டு வாழ்த்துக்கள்...

mouse pad பார்த்ததும் கம்ப்யூட்டர் ஹேங் ஆய்டுச்சு நண்பா...:))) carpal tunnel syndrome அத பார்த்தாகூட வரும்..எப்புடின்னு மொபைல் மெசேஜ் அனுப்புறேன்..ஹி ஹி...

அனுஷ்யா said...

இரசனா...ஹ்ம்ம்..இரசன தான்...
மேல இருக்ற புது favicon பார்த்தாதான் பயபுள்ள மேல ஒரு டவுட் வருது...

அனுஷ்யா said...

chilled beersக்கு நாதான் முதல் கஸ்டமர்...நெஜமாவே கலக்குறார்...

Philosophy Prabhakaran said...

@ கும்மாச்சி
// புதிய ஒயின்ஷாப் கலக்கல்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். //

நன்றி தல... உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Philosophy Prabhakaran said...

@ MANO நாஞ்சில் மனோ
// யப்பா ஜோக் படிச்சி வயிறும் குலுங்கி போச்சு, என்னை பார்த்தவனும் பதறி ஓடுறான் ஹா ஹா ஹா ஹா.... //

உண்மையிலே அவ்வளவு சூப்பராவா இருக்கு... என்னமோ போங்க கல்யாணம் ஆனவங்களுக்கு தான் புரியும்...

Philosophy Prabhakaran said...

@ Chilled beers
// இதுல தப்பா ஒண்ணுமில்லங்கண்ணா...chilled bear பிரபாவின் wineshop ல் இடம் பிடித்தாகணுமில்ல... //

ஒரு சீனியரை ஜூனியர் அறிமுகப்படுத்துறது நாகரிகமில்லை அதுக்காக சொன்னேன்...

Philosophy Prabhakaran said...

@ தமிழ்வாசி பிரகாஷ்
// ஒயின்ஷாப் புது இடத்துக்கு மாற்றம் பண்ணியிருகிங்க.... நல்லா இருக்கு....

ஐ லவ் யூ... ரஸ்னா..... ஆஆ...ண்டி //

நன்றி பிரகாஷ்... நல்லா லவ் பண்ணுங்க...

Philosophy Prabhakaran said...

@ மயிலன்
// உடல்நிலை தேறி வந்திருப்பதில் மகிழ்ச்சி...புத்தாண்டு வாழ்த்துக்கள்... //

நன்றி நண்பா... உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

// carpal tunnel syndrome அத பார்த்தாகூட வரும்..எப்புடின்னு மொபைல் மெசேஜ் அனுப்புறேன்..ஹி ஹி... //

பார்த்தாலே வருமான்னு தெரியல... ஆனா மவுஸ்ல கை வைக்காம அதுல கை வச்சிட்டிருந்தா கண்டிப்பா வரும்... எதுக்கும் நீங்க மெசேஜ் அனுப்புங்க...

Philosophy Prabhakaran said...

@ மயிலன்
// மேல இருக்ற புது favicon பார்த்தாதான் பயபுள்ள மேல ஒரு டவுட் வருது... //

நான் முன்னாடியே இந்த favicon தான் வச்சிருந்தேன்... சில தொழில்நுட்ப சிக்கல்களால் மாறிவிட்டது... இப்போது மறுபடி கொண்டு வந்திருக்கிறேன்...

// chilled beersக்கு நாதான் முதல் கஸ்டமர்...நெஜமாவே கலக்குறார்... //

அப்படின்னா ரெண்டாவது கஷ்டமர் நானாத்தான் இருப்பேன்...

சென்னை பித்தன் said...

நன்று.

த.ம.4

நீண்ட வராமைக்கு மன்னிக்கவும்.இனி தொடர்ந்து வருவேன்.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

புத்தாண்டில் புதிய பொலிவோடு புறப்படட்டும் உங்கள் பதிவுகள்.

ப்ரியமுடன் வசந்த் said...

//ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் விஜய் குமார், நந்த குமார் மாதிரி ரெண்டு கேரக்டர்கள் இருப்பாங்க... அதாவது ஒரு நல்லவன், ஒரு கெட்டவன்... கெட்டவனின் எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிப்பது சுலபம்... (படத்தில் நந்தகுமாரின் ரியாக்ஷனை பார்க்கவும்...) நல்ல எண்ணங்களால் அதனை முறியடிப்பது கஷ்டமே... (பார்க்க விஜயகுமாரின் ரியாக்ஷன்...) இப்படிப்பட்ட போராட்டமே வாழ்க்கை என்பதே அந்த தத்துவம்... //

புத்தாண்டு வாழ்த்துகள்டா மச்சி..

ப்ரியமுடன் வசந்த் said...

டெம்ப்லேட் டிசைன் நல்லா இருக்கு..

நெல்லை கபே said...

புது டெம்ப்ளேட் நல்லாருக்கு. வலைப்பக்கம் வந்து நாளாச்சு.

என் வலையில்;

மாயன்:அகமும் புறமும்: சினிமாக் கனவுடன் அலைபவர்களுக்கு...! - டைரக்டர் மகேந்திரன்

நெல்லை கபே said...

ஒரு திருத்தம். உங்க வலைக்கு நான் வந்து நாளாச்சு!

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
டிசைனிங் எல்லாம் பக்காவா இருக்கு! அப்புறமா என் பேர் போட வேணாம் என்று சொல்லியதன் பின்னரும் போட்டிருக்கிறீங்க.
அதற்கு மான நஷ்ட வழக்கு போடப் போறேன்.
ஹே..ஹே..

ஏன் பாஸ் அப்படிப் பார்க்கிறீங்க.
சும்மா காமெடிக்கு சொன்னேன்.

நிரூபன் said...

மிமிக்கிரி, டுவிட்ஸ், அறிமுகப் பதிவர் பற்றிய குறிப்புக்கள், அந்த நடிகையின் பார்வை நண்பன் பாடல்கள் எல்லாவற்றையும் ரசித்தேன். ஆனால் அந்த நடிகையின் பார்வை தான் என்னமோ பண்ணுது. ஹே..ஹே..

நிரூபன் said...

ஒயின் ஷாப் வழமை போலவே சூப்பர். இம் முறை கவர்ச்சி நடிகையின் படம் இல்லாத குறையினை கடைசி ஜோக் நிவர்த்தி செய்து விட்டது. நன்றி நண்பா.

Philosophy Prabhakaran said...

@ சென்னை பித்தன்
// நீண்ட வராமைக்கு மன்னிக்கவும்.இனி தொடர்ந்து வருவேன். //

வாங்க தல...

உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Philosophy Prabhakaran said...

@ ப்ரியமுடன் வசந்த்
// புத்தாண்டு வாழ்த்துகள்டா மச்சி.. //

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்... என்ன தல இதையெல்லாமா நோட் பண்றது...

// டெம்ப்லேட் டிசைன் நல்லா இருக்கு.. //

நன்றி...

Philosophy Prabhakaran said...

@ மாயன்:அகமும் புறமும்
// உங்க வலைக்கு நான் வந்து நாளாச்சு! //

இனிமே வாங்க... நன்றி...

Philosophy Prabhakaran said...

@ நிரூபன்
// என் பேர் போட வேணாம் என்று சொல்லியதன் பின்னரும் போட்டிருக்கிறீங்க.
அதற்கு மான நஷ்ட வழக்கு போடப் போறேன். //

என்ன தல... நீங்க இவ்வளவு செய்தும் உங்க பெயரை வெளிப்படுத்தலைன்னா அது எவ்வளவு பெரிய நன்றிகெட்டத்தனம்...

// இம் முறை கவர்ச்சி நடிகையின் படம் இல்லாத குறையினை கடைசி ஜோக் நிவர்த்தி செய்து விட்டது. நன்றி நண்பா. //

என் ரஸ்னா கவர்ச்சியா இல்லையா...

துரைடேனியல் said...

Neenga Nenaicha romba tharamana pathivugal idalaame Prabha! Ean 18+ athigama use panringa?

Puththaandu Vaalthukkal!

துரைடேனியல் said...

How is your health Sago.?

Anonymous said...

good kutiy nice

சி.பி.செந்தில்குமார் said...

டெம்ப்ளேட், பேனர், பிரபா வைன்ஷாப் போர்டு சிம்பிள் & குட்

ஹேப்பி நியூ இயர்

Philosophy Prabhakaran said...

@ துரைடேனியல்
// Neenga Nenaicha romba tharamana pathivugal idalaame Prabha! Ean 18+ athigama use panringa? //

என்னது 18 பிளஸ்ஸா... எங்கே எங்கே...

// Puththaandu Vaalthukkal! //

உங்களுக்கும்...

// How is your health Sago.? //

ஓகே சகோ...

Philosophy Prabhakaran said...

@ angusamy
// சரோஜா தேவி பற்றி ஒரு கோனார் விளக்க உரை நோட்ஸ் லக்கி லுக் யுவா //

படித்தேன்... தெளிந்தேன்... ஓராண்டிற்கு முன்னர் எழுதிய இடுகையை எனக்காக தேடி தந்தமைக்கு நன்றி...

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
// டெம்ப்ளேட், பேனர், பிரபா வைன்ஷாப் போர்டு சிம்பிள் & குட்

ஹேப்பி நியூ இயர் //

நன்றி சிபி... ஹேப்பி நியூ இயர்...

சீனுவாசன்.கு said...

மவுசு பேடு எங்க கிடைக்குதுன்னு சொல்லவே இல்ல!

Riyas said...

சீனிபிரபு மிமிக்ரி சூப்பர்..

நன்பன் பாடல்கள் ஹிட்

புகைப்படம் எடுக்கும் போது உங்கள் நிலைமைதான் எனக்கும்..

“Say Cheese” சொன்னாலும் கன்றாவியாத்தான் இருக்கும்.

Riyas said...

கமெண்ட் POP UP WINDOW வில் வைத்தால் நல்லது பிரபா..

பாலா said...

அந்த காலத்திலே சரோஜா தேவி மட்டுமல்ல, நிறைய நடிகைகள் பெயரில் புத்தகங்கள் வருமாம். (இப்போ நடிகை சிடி என்று வருகிறதல்லவா அது போல). அதில் மிகவும் பிரபலமானதும், தரமானதும் மேற்படி புத்தகம் என்பதால், அது தலைமுறை தாண்டியும் நிற்கிறது(ஸ்‌ஸ்ப்பா..)அப்புறம் அந்த மாதிரி மவுஸ் பேட் இருந்தா, நம்மாளுங்க மவுஸ் பேடா யூஸ் பண்ணவே மாட்டாங்களே?

நெல்லை கபே said...

என் வலையில்;

வயசுப் பிள்ளைகளின் பெற்றோருக்கு... - பாலகுமாரன்

Brownnvmy said...

///ஐ லவ் யூ ரஸ்னா...!//// அந்தப்புள்ளையா இது?