15 July 2013

அந்தப்பக்கம் போயிட்டுவா நீ


அன்புள்ள வலைப்பூவிற்கு,

இருவருமே மும்பையில் பிறந்தவர்கள், வெண்ணெய்க்கட்டி நிறம், கொழுக் மொழுக் உடல்வாகு, கொஞ்சம் ஒரே மாதிரியான முக அமைப்பு. கவனிக்க: கொஞ்சம் தான். இவ்வளவுதான் குஷ்பூவுக்கும் ஹன்சிகாவுக்கும் உள்ள ஒற்றுமைகள். அதற்காக எல்லாம் ஹன்சிகாவை ‘சின்ன குஷ்பூ’ என்று அழைப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குஷ்பூவுடன் ஒப்பிடும்போது மன்னிக்க அந்த வார்த்தையை பயன்படுத்த என் மனம் ஒப்பவில்லை. உடல் வாகிற்காக வேண்டுமானால் ஹன்சிகாவை சின்ன குஷ்பூ என்று சொல்லலாம். அதில் கூட கூடிய விரைவில் குஷ்பூவை சின்ன ஹன்சிகா என்று அழைக்கும் நிலை ஏற்படலாம். குஷ்பூ ஆரம்பத்திலிருந்தே அழகுப்பதுமையாக மட்டுமில்லாமல் நடிப்புத்திறனையும் பெற்றிருந்தார். உடல் வனப்புடன் கூடிய வசீகரமான முக லட்சணமும் அவரிடம் அமைந்திருந்தது. எல்லாவற்றையும் விட குஷ்பூவிடம் ஒரு ஆளுமை இருந்தது. அதுதான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற பிரதான அம்சம். அத்தகைய குஷ்பூவின் சிறப்புத்தன்மைகள் அனைத்திலும் ஹன்சிகா சுமார் என்று கூட சொல்ல முடியாது. அப்படியிருக்கும் போது ஹன்சிகாவை சின்ன குஷ்பூ என்று அழைப்பதில் துளியேனும் நியாயம் இருக்கிறதா ? வேண்டுமென்றால் கொஞ்சூண்டு குஷ்பூ என்று அழைத்துக்கொள்ளலாம். சரி குஷ்பூவுடனான ஒப்பிடலை ஒதுக்கிவிடலாம். பொதுவாக ஹன்சிகாவிடம் அப்படியென்ன தான் இருக்கிறது.

ஹன்சிகா தமிழில் நடித்த முதல் படமான “மாப்பிள்ளை” பார்த்திருக்கிறீர்களா ? சூப்பர்ஸ்டாருக்கு வந்த சோதனை. தனுஷ் நல்ல நடிகர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், முழுநீள ஆக்குசன் திரைப்படம் என்றால்தான் மனிதர் முருங்கைமரம் ஏறிவிடுகிறார். அதிலும் பஞ்ச் டயலாக் பேசுவதெல்லாம் உச்சக்கட்ட வன்முறை. அதசரி, தனுஷ் கதை நமக்கெதற்கு. ஹன்சிகாவிடமே வருவோம். லைஃப்பாய் பயன்படுத்தினால் அழிந்துபோகக்கூடிய கிருமிகளின் சதவிகித நடிகைகள் தமிழில் தங்கள் சொந்தக்குரலில் பேசி நடிப்பதில்லை. அதற்கு முதலில் தமிழ் தெரிய வேண்டும். போய்த் தொலையட்டும். குறைந்தபட்சம் வாயசைப்பதையாவது ஒழுங்காக செய்யலாம் இல்லையா ? மாப்பிள்ளை படத்தில் ஹன்சிகாவின் உதட்டசைவை பார்த்தால் ஓங்கி சுவற்றில் போய் முட்டிக்கொள்ள தோன்றும். உதாரணத்திற்கு, ‘திருவண்ணாமலை’ என்ற சொல்லுக்கு ஹன்சிகா உதடசைத்தால் ஏதோ கெட்டவார்த்தையில் திட்டுவது போல தெரியக்கூடும். பாடல்காட்சிகளில் அதைவிட மோசம். ஒருவேளை ஹன்சிகாவின் உதட்டசைவு சிக்கலின் காரணமாகத்தான் அவரை படம்பிடிக்கும் கேமராக்கள் கழுத்துக்கு கீழேயே படம் பிடிக்கின்றனவோ என்னவோ ?

சச்சின் படத்தில் விஜய் ஒரு வசனம் பேசுவார். “...ஓசியில கிடைக்குதுன்னு சீஸ் பர்கர், சீஸ் பீட்சால்லாம் தின்னு தின்னு தின்னு இப்படி அஞ்சரையடி பீப்பா மாதிரி இருந்துக்கிட்டு...” என்று போகிற வசனம். நியாயமாக ஸ்லிம் ஜெனிலியாவிற்கு கொஞ்சம் கூட பொருந்தாத வசனம் அது. இருப்பினும் நடைமுறையில் ஹன்சிகாவிற்கு கனக்கச்சிதமாக பொருந்தும். வெண்ணையினால் செய்யப்பட்ட ஐந்தரையடி உருவமாகத்தான் ஹன்சிகா என் கண்களுக்கு தோன்றுகிறார். கெளதம் மேனன் படப்பாடல்களின் இடையிடையே மேலைநாட்டு பெண்கள் வந்து சம்மர்சால்டெல்லாம் அடிப்பார்களே, அவர்களில் ஒருவராக வேண்டுமென்றால் ஹன்சிகாவை ஏற்றுக்கொள்ளலாம். “இவ்வளவு பேசுகிறாயே... ஹன்சிகாவையும் உன்னையும் தனியறையில் வைத்து அடைத்தால் என்ன செய்வாய் ?” என்றொரு குரூர மனப்பான்மையுடைய கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்டால், சாரி பாஸ் அப்போதைக்கு சுப்பையா என்கிற மானஸ்தன் உங்கள் கண்களுக்கு அகப்பட மாட்டான். நிஜவாழ்க்கையில் நாம் சந்திக்கும் சுமார்மூஞ்சிகளோடு ஒப்பிடும்போது, ஆமாம் ஹன்சிகா அழகாகத்தான் இருக்கிறார். ஆனால் சினிமா நடிகை என்ற தளத்தில் யோசித்துப்பார்க்கும்போது தான் சிக்கல் துவங்குகிறது.

தமிழன் எப்போது ஹன்சிகாவிடம் தன்னை ஒப்புவித்தான் என்று சிந்தித்துப் பார்க்கும்போது மாப்பிள்ளை, எங்கேயும் காதல் ஏன் வேலாயுதம் வெளிவந்தபோது கூட தமிழன் தடுமாறாமல் தான் இருந்திருக்கிறான் என்று தெரிய வருகிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி என்றொரு பாழாய்ப்போன சினிமா வந்து தொலைத்தது. அதில் இடம்பெற்ற அழகே அழகே என்ற பாடலில் இறுக்கமான மஞ்சள்நிற உடையணிந்து பாலைவனத்தில் ஓடிவந்து தமிழர்களுக்குள் கிறக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் ஹன்சிகா. “பார்ப்பதற்கே மெத்து மெத்து என்று இருப்பதால், தன் பெயரை ஹன்சிகா மெத்துவானி என்று அவர் மாற்றி வைத்துக் கொள்வதுதான் சரியாக இருக்கும்.” – ஒ.க.ஒ.க.வில் ஹன்சிகாவைக் கண்டு மயங்கிய ஒரு பிரபல எழுத்தாளர் இப்படி எழுதியிருக்கிறார். என்னுடைய சந்தேகம் என்னவென்றால் பார்ப்பதற்கு மெத்து மெத்து என்றால் என்ன அர்த்தம் ? “மெத்து மெத்து” என்பது காட்சியுணர்வா அல்லது தொடுவுணர்வா ? ஒருவேளை அந்த பிரபலம் அதனை தொட்டுப்பார்த்து மெத்து மெத்து என்று இருக்கிறதே என்று உணர்ந்திருப்பாரோ ? ம்ம்ம்... அப்படியே இருந்தால் தான் என்ன செய்ய முடியும். சரி, மறுபடியும் கட்டுரையின் சாரத்திற்கு வருவோம். ஆமாம், ஒ.க.ஒ.க படப்பாடலில் ஹன்சிகாவின் கழுத்துக்கு கீழே பகுதிகள் கிறங்கடிக்கத்தான் செய்தன. ஆனால் முகலட்சணம் என்று ஒன்று இருக்கிறதே.

அதே ஒ.க.ஒ.க படத்தில் ஒரு கதாபாத்திரம் ஹன்சிகாவின் BMI, உடையலங்கார உணர்வு, பல் தெரிகிற சிரிப்பையெல்லாம் பார்த்து அலறுகிறது. ஹன்சிகா தலப்பாக்கட்டு பிரியாணி சாப்பிடத்தான் லாயக்கு என்றி எள்ளி நகையாடுகிறது. நாம் BMI லெவலுக்கெல்லாம் போக வேண்டிய அவசியமில்லை. ஆனால், ஹன்சிகாவின் பல்லு தெரிகிற சிரிப்பை பற்றி யோசிக்கும்போது சின்ன கவுண்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி நகைச்சுவை காட்சி தான் நினைவுக்கு வருகிறது – “ஆத்தா... பையனை கூட்டிட்டு போய் வேப்பல அடிக்கணும் போல இருக்குது... நீ சிரிக்காத ஆத்தா...!”

திடீரென எனக்கு ஹன்சிகாவின் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு ? சமீபத்தில் வெளிவந்த தீ.வே.செ.கு திரைப்படம் ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு மென்பொருள் நிறுவனம். அங்கே பணிபுரியும் ஆண் ஊழியர்கள் யாரும் அழகான பெண்களையே பார்த்திருக்க மாட்டார்கள் போலும். ஹன்சிகாவை கண்டதும் கிலோலிட்டர் கணக்கில் ஜொள்ளு வடிக்கிறார்கள். லிப்ட் திறந்துவிடுவது தொடங்கி வாகனத்தில் லிப்ட் கொடுப்பது வரை விழுந்தடித்து ஊழியம் செய்கிறார்கள். ஐ.டி இளைஞர்கள் என்ன அப்படியா காய்ந்துபோய் இருக்கிறார்கள். எனக்கென்னவோ தீ.வே.செ.கு ஒட்டுமொத்த தகவல்தொழில்நுட்ப ஊழியர்களையும் அவமானப்படுத்தியிருப்பதாகவே தோன்றுகிறது. ஹன்சிகாவைப் போன்ற வட இந்திய மைதாநிற அழகிகளை ரசிப்பதைவிட திராவிட பாரம்பரியத்தில் வந்த கோதுமை நிற தன்ஷிகாவை ரசிக்கலாம்.

ஹன்சிகா மோத்வாணி – அந்தப்பக்கம் போயிட்டுவா நீ !

தொடர்புடைய சுட்டி: அமலா பால்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

12 comments:

aavee said...

இந்தப் பதிவை முழுமையாக ஆதரிக்க முடியாவிட்டாலும் கடைசி பாராவை கம்ப்ளீட்டா ஒத்துக்கறேன்..

இப்படிக்கு நஸ்ரியாவுக்காக நாஸ்டா துண்ணாம வெயிட் பண்ணுவோர் சங்கம்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

தன்ஷிகாவுக்கு இந்த பதிவா????

சரி...சரி....

sathishsangkavi.blogspot.com said...

ஹன்சிகா மனசு தடுமாறுது மச்சி...

சீனு said...

//ஒருவேளை ஹன்சிகாவின் உதட்டசைவு சிக்கலின் காரணமாகத்தான் அவரை படம்பிடிக்கும் கேமராக்கள் கழுத்துக்கு கீழேயே படம் பிடிக்கின்றனவோ என்னவோ ?// :-)

cheena (சீனா) said...

அன்பின் பிரபாகரன் - ஹன்சிகாவைப் பிடிக்கவில்லை எனக் கூறுவதற்கு இவ்வளவு நீளப் பதீவா....... ம்ம்ம் - அலசை ஆராய்ந்து துவைத்துக் காயப் போட்டாச்சு - பலே பலே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.

Ponmahes said...

கவலை படாத தம்பி சமீபத்தில் வெளி வந்த animal-II மாதிரி இன்னும் ரெண்டு படத்துல நடிச்சா யாரும் சொல்லாமலே அது பாட்டுக்கு ஊர பாத்து போய்டும் ...தேவை இல்லாம உங்க எனர்ஜிய வேஸ்ட் பண்ணி உச்சி யில தூக்கி வச்சிராத சரியா .............

பதிவு சரியான லொள்ளு ( ஹன்சிகாவின் பல்லு தெரிகிற சிரிப்பை பற்றி யோசிக்கும்போது சின்ன கவுண்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி நகைச்சுவை காட்சி தான் நினைவுக்கு வருகிறது – “ஆத்தா... பையனை கூட்டிட்டு போய் வேப்பல அடிக்கணும் போல இருக்குது... நீ சிரிக்காத ஆத்தா...!”)....அருமை ....வாழ்த்துக்கள் ...

Unknown said...

ஆமா ஆமா நம்ம ஆளுங்க ஜோஇங் ஜக் போட்டே உசுப்பேதிருவாணுங்க

”தளிர் சுரேஷ்” said...

நல்லாவே ஆராய்ச்சி பண்ணி எழுதி இருக்கிங்க உங்க வாதத்தை ஒத்துக்கறேன் பாஸ்!

Riyas said...

i agree with you..

//ஹன்சிகா மோத்வாணி – அந்தப்பக்கம் போயிட்டுவா நீ !//

அந்தப்பக்கம் பார்க்க சகிக்காமத்தான் இந்தப்பக்கம் துறத்தி விட்டாங்க!

MANO நாஞ்சில் மனோ said...

இன்னைக்கு யாரெல்லாம் கம்பை தூக்கிட்டு வரப்போராயிங்களோ அவ்வ்வ்வ்வ்....!

தளபதியின் வாரிசு ஹையாத் ஹோட்டல்ல ரூம் போட்டு விளையாடுன ஃபிகர் ஆச்சே....!

வெற்றிவேல் said...

பாவம் அந்த பொண்ணு... படிச்சா உங்கட அரைஞான் கயித்துல தூக்கு மாட்டிக்கும்.... கஷ்ட்டம் தான்....

சேக்காளி said...

ஒ.க.ஒ.க எதோ தப்பா தெரியுது.
அப்புறம்
//ஹன்சிகாவையும் உன்னையும் தனியறையில் வைத்து அடைத்தால்//
எப்டியெல்லாம் வெளிப்படுத்த வேண்டிருக்கு.
அப்புறம் அது சின்ன குஷ்பு இல்லையா.சின்ன நமீதா.