14 October 2013

பிரபா ஒயின்ஷாப் – 14102013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நய்யாண்டியை முன்வைத்து சில விஷயங்கள்...
நய்யாண்டி படத்திற்கு இணையத்தில் எழுதப்பட்டிருக்கும் விமர்சனங்களின் முதல் பத்தியை மட்டும் படித்துப்பார்த்தால் நம்மையறியாமல் ஒரு நமுட்டுச்சிரிப்பு வந்து விடுகிறது. களவாணி ஒரு சிறந்த பொழுதுபோக்கு சித்திரம், வாகை சூட வா சமூக சிந்தனையுடன் கூடிய அருமையான திரைப்படம் என்றெல்லாம் எழுதுகிறார்கள். உண்மைதான். ஆனால் இப்போது ஏன் அதையெல்லாம் எழுதுகிறார்கள் என்றால் பெரிதாக ஒன்றுமில்லை, அடிப்பதற்கு முன்னால் தெளிவாக இருப்பதற்காக நடைபெறும் வழக்கமான சோடா தெளிப்பு சடங்கு தான்.

இயக்குநரின் களவாணி வணிக ரீதியில் வெற்றிப்படம் தான் என்றாலும் அதை நல்ல சினிமா என்று சொல்லிவிட முடியாது. கடைசியில், அதுவும் ஒரு வேலை வெட்டியில்லாத பொறுக்கியின் கதை தான். இறுதிக்காட்சியில் நாயகனுக்கு திடீர் பொறுப்பு வெளக்கெண்ண துளிர் விடுவதால் மட்டுமே அதை நல்ல சினிமாவாக ஏற்றுக்கொள்ள முடியாது. இயக்குநரின் அடுத்த படமான வாகை சூட வா முதல் படத்திலிருந்து முற்றிலுமாக மாறுபட்டிருந்தது. படம் முடிந்ததும் எழுந்து நின்று கை தட்ட வேண்டிய மரியாதைக்குரிய படைப்பு. அதிலும் வணிக ரீதியான வெற்றிக்கு தேவைப்பட்ட நகைச்சுவை காட்சிகள், கதைக்கு தேவையே இல்லாத இனியா போர்ஷனெல்லாம் இருந்தது. ஆனாலும் படம் ஓடவில்லை.

விமல் என்று ஒரு அற்புதமான கலைஞன். ஹீரோயினை ரொமாண்டிக்காக சைகையில் அழைக்க வேண்டிய காட்சியில் கூட, அய்யே பாஸ் மூச்சா போயிட்டாரு என்பது போன்ற ரியாக்சன் கொடுப்பவர். அவர் சற்குணத்தின் படங்களில் மட்டும் நல்ல நடிப்பை வழங்கிவிடுவது ஒரு புதிராக இருக்கிறது. அதைப்பற்றி பிறிதொரு நாளில் பேசுவோம்.

வாகை சூட வா படத்தை நான் வெளியான இரண்டாவது நாள் திரையரங்கில் பார்த்தேன். திரையரங்கில் அதிகபட்சம் இருபது பேர் இருந்திருக்கக்கூடும். வாகை சூட வா சமூக சிந்தனையுள்ள படம். தேசிய விருது பெற்ற அற்புதமான காவியம் என்றெல்லாம் நய்யாண்டி விமர்சனத்தில் எழுதுபவர்களெல்லாம் அந்த படத்தை விஜய் டிவியிலோ அல்லது டவுன்லோட் செய்தோ தான் பார்த்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன். ஏனென்றால் இவர்களெல்லாம் திரையரங்கில் பார்த்திருந்தால் வாகை சூட வா ஏன் தோல்வியடைய வேண்டும் ? அந்த தோல்வி தந்த விரக்தியின் காரணமாகத் தான் சற்குணம் தற்பொழுது கமர்ஷியல் சாக்கடையில் குதித்திருக்கிறார். வாகை சூட வா படத்தை தோல்வியடையச் செய்த சினிமா ரசிகர்களுக்கு நய்யாண்டியை காரணம் காட்டி சற்குணத்தை வசை பாட எந்த தகுதியும் இல்லை !

*********************************************

சனிக்கிழமை மாலை, மணலி அருகே ஒரு அரசாங்க மதுக்கூடம். நானும் சிங்கமும் ஒரு பியரை வாங்கிக்கொண்டு அமர்ந்தோம். ஏற்கனவே காலையிலிருந்து நிறைய சர்பத் சாப்பிட்டிருந்ததால் பியரை தேர்ந்தெடுத்தோம். எங்களுக்கு எதிரே ஒரு முதியவர் கார்டினல் குவாட்டருடன் வந்து அமர்ந்தார். எனக்கு பொதுவாக இதுபோன்ற அனானி ஆசாமிகளிடம் பேச்சு கொடுப்பதில் ஒரு சுவாரஸ்யம். ஆனாலும் பெரும்பாலும் சிங்கம் சொல்லும் நேரு மாமா, காந்தி தாத்தா, ராஜீவ் காந்தி கொலை, அமெரிக்க உளவுத்துறை, ஐரோப்பிய நாடுகளின் சதி போன்ற கதைகளையே கேட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறது. அரிதாக எப்பொழுதாவது தனியாளாக மதுக்கூடம் சென்றால் அங்கே ஏற்கனவே ஒத்தையில் இருக்கும் யாருடனாவது சென்று அமர்ந்துக் கொள்வேன். நாமாக பேச்சு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அங்கே சென்று அமர்ந்ததும் அவர்களே புலம்பத் துவங்கிவிடுவார்கள். சரி, எதிரே கார்டினல் முதியவர் அமர்ந்தார் இல்லையா ? பாட்டிலை திறந்தவர் ஒரே மூச்சில் ஒரு கட்டிங்கை காலி செய்தார். பெரியவர் முக சாயலிலும், மதுக்கூட பணியாளரை விரட்டிய விதமும் என்னுடைய செத்துப்போன தாத்தாவை நினைவூட்டியது. செத்துப்போன தாத்தா என்றதும் உங்களுக்கு நகைச்சுவையாக இருந்திருக்கலாம். ஆனால், நான் செண்டிமெண்ட் ஆகிவிட்டேன். முன்னர் குறிப்பிட்டது போல ஏற்கனவே நிறைய சர்பத் சாப்பிட்டிருந்ததால் செண்டிமெண்ட் ஆகியிருக்கலாம். இதில் நகைமுரண் என்னவென்றால் சிங்கம் இருக்கிறாரே, அவர் மதுக்கூடத்தில் எளியவர்கள் யாராவது வந்து சைட் டிஷ் கடன் கேட்டாலே கோபப்படுவார். அவருக்கும் அந்த பெரியவரை பார்த்ததும் அவருடைய தாத்தா ஞாபகம் வந்துவிட்டது. எல்லாம் எம்.சி செய்கிற வேலை. தாத்தா எஞ்சியிருந்த கட்டிங்கையும் ஒரே மடக்கில் குடித்து முடித்துவிட தாத்தாவிற்கு இன்னொரு குவாட்டர் வாங்கிவரும் படி பணித்தார் சிங்கம். இந்தமுறை ஒரு கட்டிங்கை மட்டும் துரிதமாக குடித்துவிட்டு பாட்டிலை இடுப்பில் சொருகிக்கொண்டார் தாத்தா. அவருக்கு வயது 99. குடிப்பதற்கு யாராவது நோபல் பரிசு தருவார்களானால் அதை அந்த தாத்தாவிற்கே தர வேண்டுமென்று ஒரு கோரிக்கையை வைக்கிறேன். 

*********************************************

அதே சனிக்கிழமை காலை, ஆரூர் மூனா வீட்டிற்கு சென்றோம். மனிதர் தீவிர இலக்கியத்திலிருந்து சரோஜா தேவி புத்தகங்கள் வரை ஒரு பெரிய திரட்டு வைத்திருக்கிறார். இந்த இடத்தில் ஒரு ஃப்ளாஷ்பேக். ஆரூர் மூனாவை ஆரம்பத்திலிருந்து படித்து வருபவன் நான். சும்மா போனேன் வந்தேன் பிரியாணி சாப்பிட்டேன் என்று பொதுவான விஷயங்களை சுமாரான எழுத்துநடையில் எழுதுவார். ஆனால் அவருடைய தளத்தின் பக்கவாட்டில் சே குவேரா படம் இருக்கும். சரி, எல்லோரும் ஃபேஷனுக்காக வைத்துக்கொள்கிறார்களே அப்படியிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். அவரிடம் அதுபற்றி கேட்கவில்லை. மற்றொரு நாள் அவரை புத்தக சந்தையில் வைத்து பார்த்தபோது கைநிறைய புத்தகங்களை வாங்கி வைத்திருந்தார். கொஞ்ச நேரம் அவரிடம் பேச்சு கொடுத்ததில் அவர் எவ்வளவு பெரிய வாசிப்பாளர் என்பதை புரிந்துக்கொள்ள முடிந்தது. கிட்டத்தட்ட தமிழின் முக்கியமான புத்தகங்கள் எல்லாவற்றையும் படித்திருப்பார் போல. பாவம் புத்தகங்களை அடுக்கி வைக்க இடமில்லாமல் சிரமப்படுகிறாரே என்று அவரிடமிருந்து சில சுஜாதா நாவல்களையும், சில நக்கீரன் பதிப்பக கிசுகிசு ரக புத்தகங்களையும் லவட்டிக்கொண்டு வந்தாயிற்று.

*********************************************

பார்த்த படம்... யா யா !
தன்ஷிகா இருக்கிறாரே என்ற ஒரு நம்பிக்கையில் தான் படம் பார்த்தேன். படுமொக்கை. சிரிப்பே வரவில்லை. ஆனால் சீரியஸ் என்று நினைத்து எடுத்திருக்கும் காட்சியெல்லாம் சிரிப்பு மூட்டுகிறது. ஒரு காட்சியில் தன்ஷிகா “விளையாட்டா நினைச்சேன்... திரும்பிப் பார்த்தா மனசு பூரா அவன்தான் இருக்கான்...” என்று சிவாவுடனான காதலை விவரிக்கிறார். தன்ஷிகாவை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. காதல் சந்தியா காமெடி சந்தியா ஆகிவிட்டார். முதன்முறையாக சொந்தக்குரலில் பேசி நடித்திருப்பார் போல. அவருடைய குரலில் செம கிக். குரலில் மட்டும்தான். சந்தானம் காமெடியெல்லாம் பெரிதாக எடுபடவில்லை. யாரோ ஒரு நண்பர் விமர்சனத்தில் எழுதியிருந்தது போல, படத்தில் பவர் ஸ்டார் வரும் பதினைந்து நிமிடங்கள் மட்டுமே ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது. 

யா யா படத்தில் எல்.ஐ.சி ஏஜென்ட்டாக ஒரு துணை நடிகை நடித்திருக்கிறார். பெயர் ரிதி மங்கள். அவரை இதற்குமுன்பு ஏதோவொரு பி-கிரேடு படத்தில் பார்த்திருக்கிறேன். சும்மா அவரை கூகுள் செய்ய அவர் நடித்த சைலன்ட் வேல்லி (Silent Valley) என்ற மலையாள படத்தைப் பற்றி சில தகவல்கள் கிடைத்தன. ஏதோ லெஸ்பியன் சம்பந்தப்பட்ட சைக்கோ த்ரில்லர் கதை போலிருக்கிறது. இணையத்தில் தரவிறக்க கிடைத்தால் பார்க்க வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

13 comments:

Unknown said...

சனிக்கிழமையன்று மாலை/////


நான் இது குறித்து நிறைய விஷயங்கள் கேள்விப்ப்டேனே,எடிட்டிங் வேலை நடந்திருப்பதன் காரணமெண்ணவோ?

Manimaran said...

//வாகை சூட வா படத்தை தோல்வியடையச் செய்த சினிமா ரசிகர்களுக்கு நய்யாண்டியை காரணம் காட்டி சற்குணத்தை வசை பாட எந்த தகுதியும் இல்லை !// இது பன்ச் ....!

திண்டுக்கல் தனபாலன் said...

பேச்சை வைத்தோ, எழுத்தை வைத்தோ ஒருவரை கணிப்பது கடினம் தான்... ஆனால் எதையும் மறைக்காமல் (நல்லதை அல்ல) சொல்பவர்களிடம் பல ஆச்சரியங்களை கண்டு வியக்கலாம்... அந்த வகையில் நம்ம நண்பர் ஆனா... மூனா... வாழ்த்துக்கள்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சமீரா ரெட்டியையும், பார்வதி ஓமனக்குட்டனையும் சேர்த்துப் பிசைந்த கலவை போல இருக்கிறார் ரிதி மங்கள்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சிங்கம் சொல்லும் நேரு மாமா, காந்தி தாத்தா, ராஜீவ் காந்தி கொலை, அமெரிக்க உளவுத்துறை, ஐரோப்பிய நாடுகளின் சதி போன்ற கதைகளையே கேட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறது////

பிராண்டையும் மிக்சிங்கையும் மாற்றிப் பார்க்கலாம்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// மனிதர் தீவிர இலக்கியத்திலிருந்து சரோஜா தேவி புத்தகங்கள் வரை ஒரு பெரிய திரட்டு வைத்திருக்கிறார். ////

சரோஜாதேவியெல்லாமா கலக்சன்ல வெச்சிருக்காரு? அந்த மாதிரி புக்ஸ் வாங்கி படிச்சிட்டு அதே கடைல திரும்ப கொடுத்து வேற புக் வாங்குறதுதானே வழக்கமா நடக்குறது?

'பரிவை' சே.குமார் said...

நய்யாண்டி குறித்த கருத்து நச்...

ஒயின்ஷாப் அருமை...

Anonymous said...

டேய் லூசு கால் செண்டர் வேலையே ஏதோ சாப்டெவேர் வேலை போல சீன் போட்ட நாய் தானே நீ
நீ எல்லாம் ஒரு ஆளு

தூ தூ

சீனு said...

நல்லா இருந்தது பிரபா... ( இதே நடையில் வேறு ஏதாவது அனுபவப் பதிவு எழுதுங்களேன்... வாசகன் விருப்பமாகக் கூட இருக்கலாம்.. இதனை அனுபவப் பதிவு என்று சொல்லாதீர்கள், அனுபவப்பத்தி என்று எடுத்துக் கொள்கிறேன் :-) )

Ponmahes said...

நஸ்ஸீ குட்டியை பற்றி எழுதாதது ஏமாற்றம் அளிக்கிறது தம்பி

மற்ற படி சரக்கு நல்லா மிக்ஸ் ஆயிருக்கு....

வாழ்த்துக்கள்......

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தனி நடை என்று சொல்லிக் கொண்டு சுஜாதாவின் நடையை பின்பற்ற முயல்பவர்களை அதிகமாக இணையத்தில் காண முடிகிறது ஆனால் எழுத்தில் எந்த வித நகாசு வேலைகளையும் காட்டாமல் Plain ஆக எழுதுவதே ஆ.மூ. வின் ப்ளஸ் பாயிண்ட்

வெற்றிவேல் said...

உண்மை தான்...

Anonymous said...

படம் தரவிறக்கனா நமக்கும் ஒரு காப்பி அனுப்பி விடுப்பா.....ஹி ஹி...