29 December 2013

கனவுக்கன்னி 2013 - பாகம் 2

05. காஜல் அகர்வால்
ன்னுக்குட்டி காஜலுக்கு தமிழில் அழகுராஜா மட்டும் தான் வெளிவந்திருக்கிறது. அதிலும் மகா மட்டமான கேரக்டர். பாடல் காட்சியில் கூட சேலையை கட்டிக்கொண்டு தங்கு புங்கு'ன்னு குதிக்க விட்டிருக்கிறார்கள். கன்னுக்குட்டியின் குத்தமில்லை என்றாலும் வருந்தக்கூடிய விஷயம். மற்றபடி தெலுங்கில் காஜல் நடித்து வெளிவந்த பாட்ஷா, நாயக் இரண்டும் விஷுவல் விருந்து. ஜில்லாவில் மறுபடி துப்பாக்கியில் இருந்து வெளிவரும் தோட்டா போல சீறணும்...!

04. நஸ்ரியா
ல்ல நேரத்தில் அறிமுகம் ஆகியிருக்கிறார். மீண்டுமொரு கேரள வரவு. தமிழ் சினிமாவில் துரிதமாக பிரபலமாகி அதைவிட துரிதமாக சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் நஸ்ரியா. நேரம், ராஜா ராணி, நையாண்டி என அடுத்தடுத்து படங்கள். ஜெனிலியா ரக குறும்புத்தனம் நஸ்ரியாவின் சிறப்பம்சம். சிலருடைய முகவெட்டு புகைப்படங்களுக்கு பொருந்தாது. அதுபோல நஸ்ரியாவின் முகவெட்டு புகைப்படங்களிலும், குறும்புத்தனம் காட்டும்போதும் மட்டுமே ஈர்க்கிறது. தொப்புள் சர்ச்சையில் சிக்காமல் இருந்திருந்தால் இன்னும் உயரத்தை எட்டியிருப்பார்.
03. டிம்பிள் சொபேட்
ராத்திய மண்ணில் பிறந்த மல்லிகைப்பூ. நல்லவேளையாக மராத்தி சினிமாவில் டிம்பிளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கோலிவுட்டிலும் வத வத'ன்னு வந்து போகும் நடிகைகள் போல ஒரே படத்தில் காணாமல் போய்விடுவார் போல டிம்பிள். துரதிர்ஷ்ட வசமாக டிம்பிளின் நடிப்பில் வெளிவந்த யாருடா மகேஷும் கவனிக்கப் படவில்லை. எடுப்பான முகம், அளவான உடல், தாராள கவர்ச்சி என எல்லாம் இருந்தபோதும் கூட டிம்பிளை கண்டு கொண்டாரில்லை. இதுபோல கைவிடப்பட்டவர்கள் தெலுங்கில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு மீண்டும் தமிழுக்கு வருவது வழக்கம். பார்க்கலாம். பிஸ்கட் நமத்துப் போகாமல் இருக்கணும்.

02. மனிஷா யாதவ்
ழக்கு எண்ணில் கவனித்து, பேசப்படக்கூடிய வேடம் இல்லை என்றாலும் மனிஷா தனக்கென சில வாய்ப்புகளுடன் தமிழ் சினிமாவில் செட்டில் ஆகிவிட்டார். மனிஷா நடிப்பில் வெளிவந்த ஆதலால் காதல் செய்வீர் வருடத்தின் சிறந்த படங்களுள் ஒன்று மட்டுமல்ல தனிப்பட்ட முறையில் என் மனம் கவர்ந்த படமும் கூட. ஜன்னல் ஓரம் பார்க்கவில்லை. தோற்றம் காரணமாக இவரைத் தேடி ஒரு மாதிரி சின்னப்பெண் கேரக்டரே கிடைக்கிறது போல. தமிழ் சினிமாவின் லோ பட்ஜெட்டு படங்களுக்கென நேர்ந்து விடப்பட்ட நடிகையாக மாறிவிடும் அபாயம் வேறு இருக்கிறது. பட்டைய கெளப்பணும் மனிஷா...!

01. பார்வதி
ரு படம். அவரா இவர் என்று எல்லோரையும் தோற்ற மாற்றம் காரணமாக மிரள வைத்துவிட்டார். என்னதான் பூ நல்ல படம் தான் என்றாலும், பார்வதி அவார்டுகளை அள்ளினார் என்றாலும் அப்படி ஒன்றும் யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. தற்போது சில பல டிங்கரிங் வேலைகள் செய்து சிக்கென திரும்பி வந்திருக்கிறார். அவருடைய நடிப்பில் வெளிவந்த மரியான் தோல்வியடைந்தாலும் அவர் தோல்வி அடையவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன ? என்று கேட்ட குத்தத்திற்காக மனதில் டெண்ட் அடித்துவிட்டார்.

Post Comment

6 comments:

Jayadev Das said...

பார்வதிக்கு மகுடமா......!! மாப்பு.......... என்ன அநியாயம் இது!! ஹும் ............மனசுக்குள்ள இருக்கிறது புரியுது!!

உலக சினிமா ரசிகன் said...

‘மதமத மனிஷாவுக்கு’முதலிடம் இல்லையா!
‘காய்ஞ்சு போன கருவாடு’ பார்வதி ‘பட்டத்து ராணியா?
விடமாட்டேன்...
வாருங்கள் பேஸ்புக் போராளிகளே!
‘பிரபாகரனின் புக்கை’ கொளுத்துவோம்.

வெற்றி வேல்...வீர வேல்.

'பரிவை' சே.குமார் said...

மனிஷா நம்ம சாய்ஸ்....

! சிவகுமார் ! said...

இதை எல்லாம் விக்கிபீடியாவில்லேயே படிச்சட்டோம்

Anonymous said...

இதை எல்லாம் விக்கிபீடியாவில்லேயே படிச்சட்டோம்

Ponmahes said...

ஏலே நயன் மற்றும் ஹன்ஸ் குட்டிய மறந்துட்டியா இல்ல அது எல்லாம் பழைய பீஸ் ஸா ஆயிடுச்சா???????அநேகமா அடுத்த வருடம் கன்னுக் குட்டி இந்த பட்டியல் ல இருந்து வெளியேற்ற படும் ன்னு நெனைக்கிறேன்....பொறுத்திருந்து பாப்போம்..... மத்த படி எல்லா பீஸ் ஸும் ஓகே ....