அன்புள்ள வலைப்பூவிற்கு,
ஆடியோ போஸ்ட் வெளியிட வேண்டுமென்பது என்னுடைய நீண்டநாள் அவா. ஏற்கனவே
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருமுறை முயற்சி செய்தேன். தோல்வி. மொத்தம் நூற்றி
எழுபத்தைந்து முறை அந்த ஆடியோ கேட்கப்பட்டிருப்பதாக தரவு சொல்கிறது. அதில் நானே
ஐம்பது முறை கேட்டிருப்பேன். எத்தனை பேர் முழுவதுமாக கேட்டிருப்பார்கள் என்று
சொல்ல முடியாது. அதற்குப் பிறகு ஆடியோ முயற்சி ஏதும் செய்யவில்லை.
ஆடியோ போஸ்ட் வெளியிடுவதில் நிறைய சிரமங்கள் உள்ளன. முக்கியமானது இரைச்சல்.
நள்ளிரவில் அறையில் மின்விசிறியை எல்லாம் கூட நிறுத்திவிட்டு பதிவு செய்ய தயாரானேன்.
சி.பி.யூவிலிருந்து ஒரு சத்தம், கடிகாரம் டிக் டிக் என்று அடிக்கிறது. ‘நிசப்தத்தை’
புறக்கணித்துவிட முடியாத இடத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன். கடிகாரத்தை
நிறுத்தியிருந்தால் இன்னும் கூட சத்தம் குறைந்திருக்கும். அதிகம் அலட்டிக்கொள்ள
வேண்டாமென விட்டுவிட்டேன். அடுத்தது குரல். சென்ற முறை பதிவிட்டபோது வாய்ஸ் சர்பத்
சாப்பிட்டு பேசியது போல இருக்கிறது என்று சிலர் சொன்னார்கள். என்னுடையது இயல்பிலேயே
அப்படித்தான். சாதாரணமாக பேசும்போது பிரச்சனையில்லை. ஏதாவது திட்டமிட்டு பேசினால்
நாக்கு குழறும். ஒவ்வொரு பத்தியாக பதிவு செய்து அடோசிட்டியில் ஒன்று
சேர்த்திருக்கிறேன்.
இரண்டு நிமிடங்களுக்குள் முடிக்க விரும்பினேன். ஆனால் அநியாயத்துக்கு
ஐந்தரை நிமிடங்கள் வரை நீண்டுவிட்டது. விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...!
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
N.R.PRABHAKARAN
|