அன்புள்ள வலைப்பூவிற்கு,
இன்று ஃபேஸ்புக்கில் பிரபலமாக செயல்படும் அராத்து என்பவருடைய இரண்டு
புத்தகங்கள் வெளியாகின்றன. இதற்கென சென்ற மாதத்திலிருந்தே விளம்பரப்படுத்துகிறேன்
பேர்வழி என்று அல்லோல கல்லோலப் படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அராத்து என்ன அவ்ளோ
பெரிய அப்பாட்டாக்கரா...?
அராத்து எப்போதிலிருந்து ரெளடியானார் என்று எனக்கு தெரியவில்லை.
ஆரம்பகாலத்தில் டிவிட்டரில் அவரை பின்தொடர்ந்துக் கொண்டிருந்தேன். ட்விட்டர்
எனக்கு அவ்வளவு பழக்கமில்லை. அங்கே யார் பெரிய வஸ்தாது...? எத்தனை குரூப்புகள்
உள்ளன...? போன்ற விவரங்கள் எல்லாம் எனக்குத் தெரியாது. இரவு வந்ததும் ஒரு க்ளான்ஸ்
டைம்லைனை ஸ்க்ரோல் செய்து படிப்பேன். அவற்றில் குறிப்பாக ராஜன், தோட்டா, அராத்து
போன்றவர்களின் ட்வீட் ரசிக்கும் வகையில் இருக்கும். அவ்வளவுதான். பெரும்பாலும்
டிவிட்டரில் ராஜா / ரஹ்மான், ஐபோன் / அண்டிராய்ட் என ஏதாவது விவாதங்கள்
நடந்துக்கொண்டிருக்கும். அல்லது ஏதாவதொரு டாபிக் கொடுத்து அதையொட்டியே எல்லோரும்
ட்வீட்டிக் கொண்டிருப்பார்கள். நான் இரவில் வந்து அன்றைய ட்வீட்டுகளை பின்னோக்கி
படிப்பதால் இவ்வாறான விவாதங்கள் அவ்வளவாக பிடிபட்டதில்லை. காலப்போக்கில்
ட்விட்டரை மறந்துபோனேன்.
திடீரென ஒருநாள் ஃபேஸ்புக்கில் அராத்து இருப்பதையும், அங்கே அவர் ஆயிரக்கணக்கான
அடிபொடிகளுடன் பெரிய வஸ்தாது ஆகியிருப்பதைக் கண்டேன். அவருக்கு நட்பு கோரிக்கை
அனுப்பினேன். நீண்ட நாட்களாக அது கிடப்பிலேயே இருந்தது. ஆயினும் ஃபாலோயர் என்ற
முறையில் அவருடைய நிலைத்தகவல்கள் எனக்குத் தெரிந்து நானும் அவற்றை விரும்பி
வாசித்துக்கொண்டிருந்தேன். பின்னர் ஒருநாள் அவர் என்னுடைய நட்பு கோரிக்கையை
கவனித்திருக்கவில்லையோ என்றெண்ணி பழைய கோரிக்கையை கேன்சல் செய்துவிட்டு மறுபடி
நட்பு கோரினேன். இம்முறை என்னுடைய கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அராத்து மிக
நன்றாக எழுதுவார் என்றாலும், மிகுந்த தலைக்கனம் கொண்டவர் என்பதும், தனக்கு வரும்
எதிர்வினைகளை நேர்மையற்ற முறையில் அவர் கையாண்டு வந்ததும் காரணமாகி நான் லைக்,
கமெண்ட் போன்ற எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளாமல் அவருடைய எழுத்துகளை மட்டும்
ரசித்து வந்தேன். ஒரு தனிப்பட்ட மனிதரை பிடிக்காது என்பதற்காக அவருடைய எழுத்துகளை
புறக்கணிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அது மட்டுமில்லாமல் அவருடைய எழுத்துகளை நான்
தவறவிட விரும்பவில்லை.
அராத்து போன்றவர்கள் தங்களுக்கு வரும் எதிர்வினைகளை எப்படி
எதிர்கொள்கிறார்கள் என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம். அதைப் பற்றி எழுதுவதென்றால்
அராத்து மேனேஜ்மென்ட் கான்செப்ட் போல தனி புத்தகமாகவே எழுதலாம். சுருக்கமாகச்
சொல்வதென்றால் ‘யாரோட கண்ணுக்கெல்லாம் கடவுள் தெரியுறார்...?’ என்கிற வடிவேலு
நகைச்சுவை காட்சியைப் போன்ற டெக்னிக் தான். ஒரு எழுத்தாளர் என்றால்... ஏன் ஒவ்வொரு
மனிதனுக்குமே திமிர் என்பது கட்டாயம் இருக்கும். இருக்க வேண்டும். ஆனால் அந்த
திமிர் ‘நான் இப்படித்தான்’ என்று சொல்லும் வகையில் அமைந்தால் நலம். அராத்துவின்
திமிரோ ‘என்னைத்தவிர எல்லாரும் முட்டாப்பயலுக’ (அவருடைய மொழியில் வேறொரு வார்த்தை)
என்பதாக அமைந்துள்ளது. இதுவரையில் தனக்கு வரும் எதிர்வினைகளுக்கு அராத்து
பொறுப்பாக பதில் சொல்லி நான் பார்த்ததே இல்லை. சில சமயங்களில் பெண்களுக்கு பதில்
சொல்லியிருக்கலாம். மற்றபடி பெரும்பாலான நேரங்களில் கேள்வி கேட்பவனை கெட்டவார்த்தையில்
அர்ச்சனை செய்து, ஒரு மாதிரியாக மனோதத்துவ முறையில் அவருடைய செயலுக்கு நியாயம்
கற்பித்து, அடிபொடிகளையும் தூண்டிவிட்டு கும்மி அடிப்பதே அவருடைய ஸ்பெஷாலிட்டி
கிக்.
அராத்துவின் தற்கொலை குறுங்கதைகள் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு
டாபிக். கதைகளுக்கென இருக்கும் வரைமுறைகளை பின்பற்றாமல், எல்லைகள் மீறி, ஒரு மாதிரியாக
கை போன போக்கில், செக்ஸ் கலந்து எழுதும் அவருடைய தற்கொலை குறுங்கதைகளில் ஒரு கிக்
இருக்கிறது. அது புத்தகமாக வெளிவரப்போகிறது என்றதும் கண்டிப்பாக வாங்க வேண்டிய
லிஸ்டில் அதனை சேர்த்துக்கொண்டேன். ஆனால் சாரு போன்றவர்கள் தற்கொலை குறுங்கதைகள்
என்பது ஆகச்சிறந்த இலக்கியம் என்னும் வகையில் ப்ரொமோட் செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ள
முடியாது. அப்படி யாரேனும் அதுதான் இலக்கியம் என்று கூறினால் ஒன்று, அப்படிச்
சொல்பவர் போலியாக இருக்க வேண்டும். அல்லது இலக்கியம் என்பதே போலியாக இருக்க
வேண்டும். என்னளவில், தற்கொலை குறுங்கதைகள் என்பது விகடன் டைம்பாஸ் போல ஒரு
ரசிக்கவைக்கும் ஜாலியான புத்தகம். அவ்வளவுதான். இதே விதி அராஜகம் ஆயிரம் என்னும்
அவருடைய ட்வீட் புத்தகத்திற்கும் பொருந்தும். ஜாலியான ஒன்லைனர்கள் கொண்ட ஒரு
புத்தகத்தை திருக்குறளோடு ஒப்பிடுவது உச்சக்கட்ட அபத்தம். ஒரு மாதமாக அவர்கள்
இப்படியெல்லாம் உதார் விட்டதன் விளைவு:- மூன்றாவது பத்தியிலுள்ள என்னுடைய கொள்கையைத் தாண்டி, அவருடைய எந்த புத்தகத்தையும் நான் விலை
கொடுத்து வாங்குவதாக இல்லை என்று முடிவு செய்துவிட்டேன். அதனால் எனக்குத்தான்
இழப்பு என்றாலும் கவலையில்லை.
நிற்க. அராத்து செக்ஸியாக எழுதுவதோ, கெட்ட வார்த்தைகள் பயன்படுத்துவது
குறித்தோ எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அது அவர் அவருடைய தனிப்பட்ட விருப்பம்,
கருத்து சுதந்திரம். சொல்லப் போனால் அவ்வாறாக கிளுகிளுப்பாக எழுதப்படும் விஷயங்களை
நான் கூடுதல் கவனம் கொடுத்து படிக்கிறேன். ஆனால் சன்னி லி’யோனி’யை பற்றி
எழுதிவிட்டு இது குறியை சுத்தமாக வைத்திருப்பதைப் பற்றிய விழிப்புணர்வு
நிலைத்தகவல் என்று சொல்வது, வித்தியாச மசுறா ஸ்டேட்டஸ் போடுகிறேன் பேர்வழி என்று
கற்பழிப்பு செய்தியை வைத்து காமெடி செய்துவிட்டு உள்ளூர் கற்பழிப்புகளை
கண்டுகொள்ளாமல் இருக்கும் மீடியா, மக்களை பகடி செய்தேன் என்று சொல்வது போன்ற ‘டகுல்
பாச்சா’ வேலைகளில் எனக்கு உடன்பாடு இல்லை. என்னைப் பொறுத்தவரையில் அஜக்கு’ன்னா
அஜக்குதான், குமுக்கு’ன்னா குமுக்குதான்...!
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|