20 December 2010

எனக்குப் பிடித்த பாடல்கள் - பாகம் 1

வணக்கம் மக்களே...
எனக்குப் பிடித்த பாடல்கள் என்ற தலைப்பில் கலியுகம், மாறும்லோகம் dinesh kumar அண்ணன் அழைத்திருந்தார். அநேகமாக அவர் அழைத்து ஒரு மாதம் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன். மேலும் நண்பர் எப்பூடி..
பத்தாண்டுகளில் எனக்குப் பிடித்த பத்து பாடல்கள் என்ற தலைப்பில் தொடர்பதிவிற்கு அழைத்திருந்தார். இருவருக்கும் பொதுவாக இந்தப் பதிவினை எழுதுகிறேன். ஆனால் பிடித்த பாடல்கள் என்று ஆயிரக்கணக்கான பாடல்கள் இருக்கும்போது அவற்றில் சில பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்து பதிவெழுதுவது சுலபமான விஷயமல்ல. எப்படியோ எப்படியோ யோசித்து கடைசியாக எனக்குப் பிடித்த பாடல்களை இருபது பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு பிரிவிலும் எனக்கு அதிகம் பிடித்த பாடல்களை தேர்வு செய்திருக்கிறேன். முதல் பத்து பாடல்கள் மட்டும் இந்த பகுதியில்.

1. காதல்:
இந்த பிரிவில் மட்டும் எப்படி வடிகெட்டினாலும் பத்து பாடல்களுக்கு மேல் குறைக்க முடியவில்லை.
-          உன்னை பார்த்த பின்பு நான் (காதல் மன்னன)
-          சின்னக் கண்ணன் அழைக்கிறான் (கவிக்குயில்)
-          நறுமுகையே (இருவர்)
-          அந்த நெலாவத்தான் (முதல் மரியாதை)
-          காதல் சொல்வது உதடுகளல்ல (பத்ரி)
-          நீதான் என் தேசிய கீதம் (பார்த்தாலே பரவசம்)
-          என் அன்பே என் அன்பே (மெளனம் பேசியதே)
-          களவாணியே (மாயாண்டி குடும்பத்தார்)
-          சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே (பூவெல்லாம் கேட்டுப்பார்)
-          ஸ்ட்ராபெர்ரி கண்ணே (மின்சார கனவு) [இதுல கொஞ்சம் உள்குத்து இருக்கு]

2. செண்டிமெண்ட்:
இந்த பிரிவில் இருக்கும் நான்கு பாடல்களுமே எப்போது கேட்டாலும் என் கண்களை கலங்க வைக்கும் பாடல்கள்.
-          நிழலினை நிஜமும் (ராம்)
-          ஒரே ஒரு ஊரிலே (அபியும் நானும்)
-          தீயில் விழுந்த தேனா (காட்பாதர்)
-          தாலாட்டு கேட்க நானும் (நந்தலாலா)

3. கதாநாயகன் அறிமுகம்:
வழக்கமாக இத்தகைய பாடல்களை ரசிப்பதில்லை எனினும் சில பாடல்கள் மட்டும் விதிவிலக்கு.
-          வத்திக்குச்சி பத்திக்காதுடா (தீனா)
-          ஒருவன் ஒருவன் முதலாளி (முத்து)
-          நான் தருமன்டா (குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்)
-          ஆசை தோசை அப்பளம் வடை (பரமசிவன்)

4. திருவிழா / திருமணம்:
மனமகிழ்ச்சி தரக்கூடிய பாடல்கள். ஒருவேளை இந்த பாடல்களை அடிக்கடி தொலைகாட்சியில் ஒளிபரப்பியிருந்தால் அவை பிடித்திருக்கிறது.
-          டங்கா டுங்கா தவிட்டுக்காரி (பருத்திவீரன்)
-          அடிடா நையாண்டிய (கோவா)
-          ஆஜா மேரே சோனியே (சரோஜா)
-          வைத்த கண் வைத்ததுதானோடி (போஸ்)

5. (தேவ)கானா:
கானா என்றாலே தேவா, தேவா மட்டும்தான். நான்காவது பாடலை சிலர் பக்திப்பாடல் என்று சொல்லக்கூடும் என்னை பொறுத்தவரையில் அதுவும் கானா தான்.
-          கவலைப்படாதே சகோதரா (காதல் கோட்டை)
-          கொத்தால்சாவடி லேடி (கண்ணெதிரே தோன்றினாள்)
-          குன்றத்திலே கோயிலக்கட்டி (நேசம்)
-          மேற்குச் சீமையிலே (எட்டுப்பட்டி ராசா)

6. போதை:
ஹீரோ சரக்கடிச்சிட்டு பாடும் ஆடும் பாடல்கள்.
-          தண்ணிதொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான் (சிந்து பைரவி) [அது நானேதான்]
-          தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு (அவள் ஒரு தொடர்கதை) [இன்னும் வீட்டை விட்டு விரட்டலை]

7. எழுச்சி:
தன்னிம்பிக்கையூட்டும் அல்லது வேட்டைக்காரன் விஜய்யை போல நரம்புகளை புடைக்க வைக்கும் பாடல்கள்.
-          உன்னால் முடியும் தம்பி (உன்னால் முடியும் தம்பி)
-          மேற்கே விதைத்த (சிட்டிசன்)
-          தூங்கும் புலியை பறை கொண்டெழுப்புவோம் (புரட்சிக்காரன்) [பாரதிதாசன் கவிதை]
-          கர்ப்பகெரகம் விட்டு சாமி வெளியேருது (சண்டியர்)

8. கறுப்பு வெள்ளை:
அப்பா எம்.ஜி.ஆர் ரசிகர் என்பதால் இரண்டு எம்.ஜி.ஆர் பாடல்கள். அம்மா சிவாஜி ரசிகர் என்பதால் இரண்டு சிவாஜி பாடல்கள்.
-          மாசிலா உண்மைக்காதலே (அலிபாபாவும் 40 திருடர்களும்)
-          நெஞ்சமுண்டு நேர்மையுண்டு (என் அண்ணன்)
-          அத்திக்காய் காய் காய் (பலே பாண்டியா)
-          இரவினில் ஆட்டம் (நவராத்திரி)

9. காதல் தோல்வி
கிட்டத்தட்ட எல்லோருமே இந்த கட்டத்தை கடந்திருப்போம். நானும்தான். அதெல்லாம் ஒரு காலம்.
-          நினைவுகள் நெஞ்சினில் (ஆட்டோகிராப்)
-          காதல் வந்தால் சொல்லியனுப்பு (இயற்கை)
-          மின்னலே நீ வந்ததேனடி (மே மாதம்)
-          ஒரு நிமிஷம் (குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்)

10. ஐட்டம்
ஒரே ஒரு பாடலுக்கு நடிகைகள் யாராவது தோன்றி குத்தாட்டம் போட்டு உற்சாகமூட்டும் பாடல்கள்.
-          நிலா அது வானத்து மேல (நாயகன்) [இப்ப சீரியல்ல குயிலி மேடமை பார்த்தால் கூட பழைய ஞாபகம்தான் வரும்]
-          கோடான கோடி (சரோஜா)
-          ரோஸ் மேரி (பள்ளிக்கூடம்) [என்னுடைய பேவரிட் சுஜா]
-          ஆப்பிரிக்கா காட்டுப்புலி (ஆளவந்தான்)

ரொமான்ஸ், தத்துவம், சோகம், காமம் உட்பட மீதமுள்ள பத்து பிரிவு பாடல்கள் இரண்டாம் பாகத்தில்...

டிஸ்கி: குயிலி ஸ்டில் போடலாமென்று கூகிளில் தேடியபோது ஒரு 18+ ஸ்டில் கிடைத்தது. நீங்களும் பார்க்க விரும்பினால் Google Images தளத்திற்கு சென்று "kuyili" என்று டைப்படித்து குளிர் காயவும்.
என்றும் அன்புடன், 
N.R.PRABHAKARAN

Post Comment

45 comments:

Unknown said...

சரிப்பா ரைட்டு

THOPPITHOPPI said...

நல்ல ரசனைதான்

எப்பூடி.. said...

நல்ல தெரிவுகள், வித்தியாசமாக தொகுத்துள்ளீர்கள்.

kirush said...
This comment has been removed by the author.
kirush said...

- நட்பு
தாங்கள் அஜித் ரசிகர் என்பது உண்மைதானா...
ஆசை தோசை அப்பளம் வடை (பரமசிவன்)!!......

தினேஷ்குமார் said...

வணக்கம் பிரபா
அழைத்து ஒரு மாதமானாலும் மறக்காமல் பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள் பதிவை விசித்திரமாக வித்தியாசமாக அமைத்தமைக்கு இன்னுமொரு வாழ்த்துக்கள் புரட்ச்சிக்காரன் படத்திலிருந்தும் பாடல் தேர்ந்தெடுத்து என் மனம் கவர்ந்து விட்டீர்கள்
புரட்ச்சிகாரனில் இன்னுமொரு பாடலும் உண்டு " மண்ணுக்கும் நீங்க தான் சொந்தகாரங்க அந்த மரத்துக்கும் நீங்கதான் சொந்தகாரங்க " புரட்ச்சிகாரன் படம் ரிலீஸ் ஆனபோது கல்லூரியை கட் அடித்துவிட்டு 3 ஷோவும் பார்த்தேன் ஒரே நாளில். ஒரு திருத்தம் பிரபா மர்மலோகம் அல்ல "மாறும் லோகம் "

Unknown said...

டங்கா டுங்கா தவிட்டுக்காரி (பருத்திவீரன்)

இப்படி ஒரு பாட்டு பருத்திவீரன்ல இருக்கா?

Unknown said...

குயிலி டைப் பண்ணி பார்த்தேனே அப்படி ஒன்னும் குளிர் காயிர ஸ்டில் இல்லையே . ஏமாற்றியதுக்கு என் கண்டனம்

Anonymous said...

suriya : இதெல்லாம் சரி பா ஆனா அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல பாட்ட கானா ல யோ இல்ல காதல் தோல்வி பாடல் ல சேத்து இருகலாமே

pichaikaaran said...

பரவாலாக எல்லா வகை பாடல்களையும் ரசிக்கிறீர்கள் என்பது தெரிகிறது..

நைஸ் ...
நல்ல தொகுப்பு

ம.தி.சுதா said...

நல்ல தெரிவுகள்... வித்தியாசமான முறையில் அதிக நேரம் செலவழித்திருப்பத தெரிகிறது வாழ்த்துக்கள்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
எனைக் கவர்ந்த கமல் படம் 10

அருண் பிரசாத் said...

ரைட்டு

Chitra said...

:-)

Unknown said...

நல்ல தெரிவு நண்பா, ஓட்டு போட்டு விட்டேன்.

Anonymous said...

பாடல்கள் தேர்வு ரொம்ப நல்லாருக்கு

விஜய் said...

நல்ல கலெக்ஷன்ஸ்

வாழ்த்துக்கள் தம்பி

விஜய்

Anonymous said...

R u Ajith Fan?

Anonymous said...

very nice taste

Unknown said...

உங்கள் பட்டியலில் நல்ல பாடல்களை காண முடிந்தது. தலைப்பு வாரியாக பிரித்து இருந்தது nice...

Unknown said...

முதல்முறை முறிந்த கிளையொன்று பூக்குதே... இந்த வரிகள் வரக்கூடிய கற்றது தமிழ் பாடலை சொல்லவில்லையே ஏன்?
கற்றது தமிழ் படத்திலுள்ள ஏதேனும் ஒரு பாடல் இருக்கும் என எதிர்பார்த்தோம்..

Unknown said...

//ஒரு திருத்தம் பிரபா மர்மலோகம் அல்ல "மாறும் லோகம் "//
Aha... bulb..

சுதன் said...

நினைவுகள் நெஞ்சினில் (ஆட்டோகிராப்)

இந்த பாடல் பிடித்த இன்னொரு மனிதரை இப்போது தான் பார்க்கிறேன். சந்தோசமாக இருக்கிறது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல தொகுப்பு

அந்நியன் 2 said...

தப்பா நெனைச்சுக்காதப்பா..நீ இன்னாத்துக்கு குயிலினு போட்டே ?

இப்ப பாரு தம்மத்துண்டுலாம் குயிலிக்குப் பதிலா கைலீனு டைப் பண்ணுது.பொது வாழ்வுக்கு வந்து விட்டால் அதைலாம் தள்ளி வச்சுட்டுத்தான் எழுதனும்ப்பா.

மற்றபடி பாட்டு செலக்சன் எல்லாம் அருமை வாழ்த்துக்கள்.

அன்பரசன் said...

வரிசைப்படுத்தல் வித்தியாசமாய்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருமையான பாடல் கலக்சன்..............!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

காதல் பாடல்களில், பத்ரி-காதல் சொல்வது...செலக்ட் பண்ணியது ஆனனத அதிர்ச்சி.... எனது நெ.1 சாங், அதுதான்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கானா சாங், குன்றத்துல கோயில் கட்டி,பாடலின் படம் நேசம், உல்லாசம் அல்ல (ரெண்டும் அஜித் படம் தான்)

எம் அப்துல் காதர் said...

// உன்னை பார்த்த பின்பு நான் (காதல் மன்னன)//

பாஸ் இந்தப் பாட்டு என் செலக்சனிலும் உண்டு.
அத பற்றி இப்படி எழுதி இருந்தேன்.

(தல சும்மா அசால்ட்டா பாடி அசத்திய பாட்டு. பரத்வாஜ் முதல் முதலாக தமிழுக்கு அறிமுகமாகி துள்ள வைத்தப் பாட்டு. பாலு சார் அனாயாசமாய் குரலை வருத்திக் கொண்டு பாடியப் பாட்டு.
இதைப் பாடினால் எங்கே நமக்கும் காதல் வந்து விடுமோ என்று ஐயப்பட வைத்தப் பாட்டு.)

Philosophy Prabhakaran said...

@ விக்கி உலகம், THOPPITHOPPI, எப்பூடி.., Kirush, dineshkumar, நா.மணிவண்ணன், suriya, பார்வையாளன், ம.தி.சுதா, அருண் பிரசாத், Chitra, இரவு வானம், ஆர்.கே.சதீஷ்குமார், விஜய், Anonymous, christy, பாரத்... பாரதி..., சுதன், T.V.ராதாகிருஷ்ணன், அந்நியன் 2, அன்பரசன், பன்னிக்குட்டி ராம்சாமி, எம் அப்துல் காதர்

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவை சிறப்பியுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ Kirush
// நட்பு
தாங்கள் அஜித் ரசிகர் என்பது உண்மைதானா...
ஆசை தோசை அப்பளம் வடை (பரமசிவன்)!!...... //

ஆமாம் உண்மைதான்... அந்தப் பாடல் அஜித் ரசிகர்கள் தவிர்த்து மற்றவர்களுக்கு பிடிப்பது கடினம்... அந்தப் பாடலில் தலையின் அறிமுகமும் சிகையலங்காரமும் செமையாக இருக்கும்...

Philosophy Prabhakaran said...

@ dineshkumar
// புரட்ச்சிக்காரன் படத்திலிருந்தும் பாடல் தேர்ந்தெடுத்து என் மனம் கவர்ந்து விட்டீர்கள் //

உங்களுக்கும் புரட்சிக்காரன் படம் பற்றி தெரிந்திருப்பது முதல் சர்ப்ரைஸ்... மேலும் உங்களுக்கும் அந்தப்பாடல் பிடித்திருப்பது அதைவிட பெரிய சர்ப்ரைஸ்....

// புரட்ச்சிகாரனில் இன்னுமொரு பாடலும் உண்டு " மண்ணுக்கும் நீங்க தான் சொந்தகாரங்க அந்த மரத்துக்கும் நீங்கதான் சொந்தகாரங்க " //

ஆஹா உங்களைத்தான் தேடிக்கிட்டு இருந்தேண்ணே... இந்த படம் வெளிவருவதற்கு முன்பே பாடல் கேசட் வாங்கிவைத்து திரும்ப திரும்ப பாடல்களைக் கேட்டுக்கொண்டிருப்பேன்... அப்பொழுதெல்லாம் சி.டி., டி.வி.டி புழக்கம் அதிகம் இல்லை... இப்போதும் என்னிடம் அந்த கேசட் இருக்கிறது... ஆனால் பாருங்கள் இணையத்தில் எவ்வளவோ தேடித் பார்த்துவிட்டேன்... நீங்கள் சொன்ன அந்த "மண்ணுக்கு நாமதான்..." பாடல் மட்டும் கிடைக்க மறுக்கிறது... உங்களிடம் இருந்தால் எனக்கு மெயில் மூலம் அனுப்ப முடியுமா...?

// புரட்ச்சிகாரன் படம் ரிலீஸ் ஆனபோது கல்லூரியை கட் அடித்துவிட்டு 3 ஷோவும் பார்த்தேன் ஒரே நாளில் //

நான் ஒருமுறை தான் பார்த்தேன்... அப்போ நான் சின்ன பையன்... தனியா திரையரங்கம் போக மாட்டேன்... அப்பாதான் அழைத்து சென்றார்...

// ஒரு திருத்தம் பிரபா மர்மலோகம் அல்ல "மாறும் லோகம் " //

அடடே... மன்னிக்கவும்... மாற்றிவிடுகிறேன்...

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன்
// டங்கா டுங்கா தவிட்டுக்காரி (பருத்திவீரன்)
இப்படி ஒரு பாட்டு பருத்திவீரன்ல இருக்கா? //

ஆமாம் இருக்கு... அது படத்தின் ஆரம்பத்தில் வரக்கூடிய திருவிழா பாடல்...

// குயிலி டைப் பண்ணி பார்த்தேனே அப்படி ஒன்னும் குளிர் காயிர ஸ்டில் இல்லையே . ஏமாற்றியதுக்கு என் கண்டனம் //

டோவ்... தேடும்போது "kuyili" என்று ஆங்கிலத்தில் டைப்படித்து தேடவும்... உங்களுக்கு இணைப்பு கொடுத்து உதவலாமென்று நினைத்தேன்... ஆனால் அதற்குள்ளாக அந்நியன் 2 கொஞ்சம் சீரியசாக அட்வைஸ் செய்ததால் இதை இத்துடன் நிறுத்திக்கொள்ளலாம்...

Philosophy Prabhakaran said...

@ suriya
// இதெல்லாம் சரி பா ஆனா அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல பாட்ட கானா ல யோ இல்ல காதல் தோல்வி பாடல் ல சேத்து இருகலாமே //

ஏனோ தெரியவில்லை... அந்தப் பாடல் என் மனம் கவர மறுத்துவிட்டது...

Philosophy Prabhakaran said...

@ Anonymous
// R u Ajith Fan? //

ஆமாம் அஜித் ரசிகனேதான்... லிஸ்டில் அஜித் பாடல்கள் கொஞ்சம் ஓவராக இருப்பதை வைத்து கண்டுபிடித்துவிட்டீர்கள் போலும்... ஆனால் கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யும் ரசிகன் அல்ல...

Philosophy Prabhakaran said...

@ பாரத்... பாரதி...
// முதல்முறை முறிந்த கிளையொன்று பூக்குதே... இந்த வரிகள் வரக்கூடிய கற்றது தமிழ் பாடலை சொல்லவில்லையே ஏன்? //

கவலை வேண்டாம்... அந்தப் பாடல் அப்திவின் இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றுள்ளது...

Philosophy Prabhakaran said...

@ சுதன்
// நினைவுகள் நெஞ்சினில் (ஆட்டோகிராப்)
இந்த பாடல் பிடித்த இன்னொரு மனிதரை இப்போது தான் பார்க்கிறேன். சந்தோசமாக இருக்கிறது. //

இந்தப் பாடல் ஒன்றும் அரிதான பாடல் இல்லை என்று எனக்கு தோன்றுகிறது... என் நண்பர்கள் வட்டத்தில் நிறைய பேருக்கு இந்தப் பாடல் பிடிக்கும்...

Philosophy Prabhakaran said...

@ அந்நியன் 2
// இப்ப பாரு தம்மத்துண்டுலாம் குயிலிக்குப் பதிலா கைலீனு டைப் பண்ணுது.பொது வாழ்வுக்கு வந்து விட்டால் அதைலாம் தள்ளி வச்சுட்டுத்தான் எழுதனும்ப்பா. //

முதலில் ஸ்டில்லையே இணைக்கலாம் என்று கருதினேன்... ஆனால் அது மிகவும் அநாகரிகமாக இருக்கும் என்பதால் டிஸ்கி மட்டும் போட்டேன்... இனி இதுபோல நிகழாமல் பார்த்துக்கொள்கிறேன்...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// காதல் பாடல்களில், பத்ரி-காதல் சொல்வது...செலக்ட் பண்ணியது ஆனனத அதிர்ச்சி.... எனது நெ.1 சாங், அதுதான்....! //

ஆம் அது ஒரு அருமையான பாடல்... மெல்லிய இசை... மேலும் பாடல் வரிகள் எல்லாம் அநியாயத்துக்கு கவித்துவமாக இருக்கும்...

// கானா சாங், குன்றத்துல கோயில் கட்டி,பாடலின் படம் நேசம், உல்லாசம் அல்ல (ரெண்டும் அஜித் படம் தான்) //

ரெண்டு படத்துக்கும் ஒரே நாயகி என்பதால் குழம்பிவிட்டேன்... இப்போ மாத்திடுறேன்... சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி...

Philosophy Prabhakaran said...

@ எம் அப்துல் காதர்
// உன்னை பார்த்த பின்பு நான் (காதல் மன்னன) - இதைப் பாடினால் எங்கே நமக்கும் காதல் வந்து விடுமோ என்று ஐயப்பட வைத்தப் பாட்டு //

அப்படின்னா இன்னும் வரலையா... வாழ்த்துக்கள்...

இக்பால் செல்வன் said...

என்ன பிரபா குயிலி என ஆங்கிலத்தில் தேடினேன், இறுதியில் குயிலி வந்த்தோ இல்லையோ, உன்னை நான் அறிவேன் என வந்தது, படங்களைப் பார்த்து இங்கிருக்கும் - 10 டிகிரி குளிரிலும் வியர்த்து விட்டது, ஹஹஹா

சி.பி.செந்தில்குமார் said...

குட் போஸ்ட்

சி.பி.செந்தில்குமார் said...

அடேங்கப்பா டைப் பண்ணவே 1 மணி நேரம் ஆகி இருக்குமே

சி.பி.செந்தில்குமார் said...

>>>
டிஸ்கி: குயிலி ஸ்டில் போடலாமென்று கூகிளில் தேடியபோது ஒரு 18+ ஸ்டில் கிடைத்தது. நீங்களும் பார்க்க விரும்பினால் Google Images தளத்திற்கு சென்று "kuyili" என்று டைப்படித்து குளிர் காயவும்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்?

அம்பாளடியாள் said...

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே..........