9 December 2010

Blogger – சில சந்தேகங்கள்

வணக்கம் மக்களே... 

பிளாக்கர் நிமித்தமாக சில சமயங்களில் யாருக்கும் தோன்றாத பல விசித்திரமான சந்தேகங்கள் தோன்றுகின்றன. எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று அலுத்துக்கொள்கிறேன். இந்தவாரம் அந்த சந்தேகங்களை உங்களுடன் பகிர்கிறேன். யாருக்காவது வடிகால் தெரிந்தால் சொல்லிக்கொடுங்கள்.

1. முன்னூறுக்கு மேல் முடியாதா...?
முன்பெல்லாம் நான் பின்தொடரும் வலைப்பூக்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. ஒருமுறை நண்பர் எஸ்.கே பின்தொடரும் வலைப்பூக்களின் எண்ணிக்கையை பார்த்து மிரண்டு போனேன். அன்றிலிருந்து யாருடைய வலைப்பூவினை புதிதாக பார்த்தாலும் அவற்றை பின்தொடர்ந்துவிடுவேன். இப்பொழுது எனது பட்டியலில் முன்னூறுக்கும் (329) மேற்பட்ட வலைப்பூக்கள் உள்ளன. இந்நிலையில் Followers Widget இல்லாத சில தளங்களை எனது பிளாக்கர் பக்கத்தில் உள்ள ADD பட்டன் மூலம் இணைக்க முயன்றால் மேலே படத்தில் உள்ளதுபோல பிழைச்செய்தி வருகிறது. படத்தை பெரிதாக பார்க்க ரைட் கிளிக் செய்து தனி விண்டோவில் பார்க்கவும்.

2. பின்தொடர்பவர்களுக்கு மரியாதை
நம் வலைப்பூக்களுக்கு தூணாக விளங்குவதே followers தான். சிலர் அவர்களது வலைப்பூக்களில் Followers Widgetஐ பெரிதாக வைத்திருக்கிறார்கள். மேலே இருக்கும் படத்தில் உள்ளதுபோல. எனக்கும் அதேபோல பெரிதான Followers Widget வைக்க ஆசை. இதுபற்றி சம்பந்தப்பட்டவர்களை கேட்டபோது Widgetன் ஜாவாஸ்க்ரிப்ட்டை மாற்றியமைக்கும் படி சொன்னார்கள். ஆனால் எனது Followers Widgetல் ஜாவாஸ்க்ரிப்ட் என்ற ஒரு மேட்டரே இல்லை.

3. டெம்ப்ளேட் தேங்க்ஸ்
எனது டெம்ப்ளேட்டை மாற்றுவது குறித்து நீண்ட நாளாக ஆராய்ச்சி செய்துவருகிறேன். இது சம்பந்தமாக ஏராளமான சந்தேகங்கள் உள்ளன. நண்பர் LK அவரது பதிவோன்றின் மூலம் ஓரளவு சந்தேகங்களை தீர்த்து வைத்தார். அவருக்கு எனது தேங்க்ஸ். இப்பொழுது என்ன கலரில் டெம்ப்ளேட் மாற்றுவது என்று குழப்பமாக இருக்கிறது. எனக்கு இப்போது உள்ளதுபோலவே கறுப்பு நிற பிண்ணனி கொண்ட டெம்ப்ளேட் அமைப்பதே விருப்பம். ஆனால் நண்பர்கள் சிலர் இது கண்ணை உறுத்தும் விதம் இருப்பதாக கருத்து தெரிவிக்கின்றனர். எனவே புது டெம்ப்ளேட் கலர் குறித்து உங்களின் ஆலோசனைகளை வழங்குங்கள்.

4. பதிவை வெளியிட ராகுகாலம், எமகண்டம் பார்க்கவேண்டுமா...?
பொதுவாக பதிவை வெளியிடும்போது நேரம் காலம் எல்லாம் பார்ப்பது இல்லை. ஆனால் பதிவுலகத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் சிலர் ஞாயிற்றுக்கிழமை பதிவை வெளியிட்டால் வரவேற்பு கிடைக்காது, அலுவலக நேரத்தில் வெளியிடுவது நல்லது என்று பல கோணங்களில் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் இந்தியாவில் பகல் பத்து மணி என்றால் பிற நாடுகளில் வெவ்வேறு நேரமாக இருக்கிறது. ஒன்றும் விளங்கவில்லை. இப்பொழுது எனது கேள்வி - பதிவை வெளியிட உகந்த நேரம் எது...?

5. எல்லாமே என் Dashboard தான்...
நான் எப்பொழுதுமே பதிவுகளை படிக்க திரட்டிகளை நாடுவது இல்லை. தினமும் எனது dashboardல் வரும் அப்டேட்களை படித்துவிடுவேன். இந்த நிலையில் சில வாரங்களாக ஜாக்கி சேகர் மற்றும் வந்தே மாதரம் போன்ற தளங்களின் அப்டேட்ஸ் வராமல் இருந்தது. இதுகுறித்து ஆராய்ந்து பார்த்ததில் மேலே படத்தில் இருப்பது போன்ற பிழைச்செய்தி வந்தது. ஒருமுறை unfollow செய்துவிட்டு follow செய்ததில் அந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. ஆனாலும் இதற்கு நிரந்தர தீர்வு காண்பது எப்படி...?

டிஸ்கி: மேற்கண்ட சந்தேகங்களுக்கு சிறந்த முறையில் விளக்கம் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

62 comments:

Unknown said...

இதுக்கு தான் பிரபலம் ஆகிட்டாலே நெறய உழைக்க மற்றும் தெரிஞ்சிக்க வேணும் போல (ஸ்டார்ன்ன சும்மாதானா)

எல் கே said...

௧. கூகிள் கட்டுபடுத்தினால் நாம் ஒன்னும் பண்ண முடியாது


௨ தெரியலை நண்பா

௩ உங்களுக்கு பிடிச்ச கலர் நீங்களே தேர்வு செய்ங்க. ஆனால் கருப்பு வேண்டாம்

௪ பொதுவா என் பதிவு அனைத்தும் அதிகாலையில் போடுவேன். எல்லா நாடுகளையும் கவர் செஞ்சுடலாம்

௫ இது எனக்கு சில சமயம் நடந்து இருக்கு . ஏன்னு தெரியல . மே பே ஆர் எஸ் எஸ் பீட் பிரச்சனை என்று நினைக்கிறேன்

எஸ்.கே said...

முதல் விஷயம் அதிகமான ஃபாலோயர் விஷயம் என்பது டேஷ்போர்டில் நீங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் சேர்க்க முடியாதுதான். எனவே நான் பதிவுகளின் அப்டேட் காண கூகிள் ரீடரை உபயோகிக்கிறேன். எனவே ஃபோலோ செய்கிற வலைப்பூக்களை டெலீட் செய்ய வேண்டிய அவசியமில்லை!

pichaikaaran said...

கறுப்பு கலர் சிரமமாக இருக்கிறது. வேறு கலர் ஓகே

ஞாயிறு பதிவுக்கு வரவேற்பு இருக்காது என்பது தவறு. அலுவலக லேப்டாப்பை வீட்டில் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது .

ஹரிஸ் Harish said...

எனக்கும் இந்த சந்தேகம் எல்லாம் இருக்கு..யாராவது பதிலளித்தால் தெரிஞ்சிக்குவோம்...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

டெம்ப்ளேட் வேற கலர் இருந்தா நல்லா இருக்கும்... :-))

எஸ்.கே said...

இரண்டாவது விஷயம்: பெரிய ஃபாலோயர் விட்ஜட் மிக எளிது!
http://www.google.com/friendconnect/
இங்கே செல்லுங்கள்!(sign in செய்துள்ளதா என பார்க்கவும்) membersஐ கிளிக் செய்யுங்கள்! பிறகு width மற்றும் row ஐ விருப்பம்போல் தேர்வு செய்து பெரிதாக்கிக் கொள்ளலாம். அந்த பக்கத்திலேயே உங்கள் விட்ஜட் தெரியும் அதனால் எளிதில் மாற்றங்கள் செய்யலாம். நிறம் கூட மாற்றலாம்!

எப்பூடி.. said...

//எனது டெம்ப்ளேட்டை மாற்றுவது குறித்து நீண்ட நாளாக ஆராய்ச்சி செய்துவருகிறேன். இது சம்பந்தமாக ஏராளமான சந்தேகங்கள் உள்ளன. நண்பர் LK அவரது பதிவோன்றின் மூலம் ஓரளவு சந்தேகங்களை தீர்த்து வைத்தார். அவருக்கு எனது தேங்க்ஸ். இப்பொழுது என்ன கலரில் டெம்ப்ளேட் மாற்றுவது என்று குழப்பமாக இருக்கிறது.//

முடிந்தவரை வெள்ளை பாக் ரவுண்டில் கருப்பு எழுத்துக்களால் எழுதினால் வாசிப்பவர்களுக்கு சுலபமாக இறக்கும்.


நீங்கள் பதிவை இடும் நேர்ரம் இதுவல்ல என்று எனக்கு நீங்கள் கூறியது இப்போதுதான் ஞாபகம் வருகிறது. நன்றி.

//ஒன்றும் விளங்கவில்லை. இப்பொழுது எனது கேள்வி - பதிவை வெளியிட உகந்த நேரம் எது...?//

எனக்குய் எழுதியதை வைத்திருக்கு மளவிற்கு பொறுமையில்லை, எத்தனை மணிக்கு எழுதி முடிகிறதோ அத்தினை மணிக்கே போஸ்ட் செய்து விடுவேன். :-)

Romeoboy said...

Try Google reader .. Its easy to read

எஸ்.கே said...

மூணாவது உங்கள் விருப்பம்!

நான்காவது
//பதிவுலகத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் சிலர் ஞாயிற்றுக்கிழமை பதிவை வெளியிட்டால் வரவேற்பு கிடைக்காது, அலுவலக நேரத்தில் வெளியிடுவது நல்லது என்று பல கோணங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.//
இதற்கு காரணம் பெரும்பாலான பிளாக்கர்கள் அலுவலகங்களிலேயே பதிவுகளை படிக்கின்றனர். அதான்! லீவ் நாளில் வரவேற்பு கிடைப்பது குறைவு!
// மேலும் இந்தியாவில் பகல் பத்து மணி என்றால் பிற நாடுகளில் வெவ்வேறு நேரமாக இருக்கிறது. // இது கொஞ்சம் கடினமான விஷயம் நீங்கள் மதியம் பதிவு போட்டால் எப்படியிருந்தாலும் எல்லோரும் பார்ப்பார்கள் ஆனால் அது எப்போது சாத்தியப்படும் என சொல்ல முடியாது! இதை தள்ளி விடுங்கள்!

nis said...

நியாஜமான கேள்விகள் , உங்களின் சந்தேகங்களை தீர்க்க பலர் உள்ளார்கள்

எஸ்.கே said...

மன்னிக்கவும் இரண்டாவது விஷயத்தை முழுமையாக எழுதவில்லை மாற்றங்கள் செய்த பின் generate codeஐ கிளிக் செய்து கிடைப்பதை காபி செய்து உங்கள் பிளாக் html-ல் பேஸ்ட் செய்யவும்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

நண்பரே template மாற்றுவதற்கு நிறைய தளங்கள் உள்ளன..

ww.allblogtools.com

www.bttemplates.com

www.blogskins.com

www.blogger-templates.blogspot.com

www.bloggertemplates.org

www.bloggerstyles.com

ராஜ நடராஜன் said...

// எல்லாமே என் Dashboard தான்...//

எனக்கு தமிழ்மணமே சரணமப்பா:)

Unknown said...

மேற்கண்ட சந்தேகங்களுக்கு சிறந்த முறையில் விளக்கம் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.

தக்க சன்மானம்னா எவ்வளவு குடுப்பிங்க ?
நீங்க எவ்வளவு குடுத்தாலும் நாலாம் சொல்லி குடுக்கிற மாதிரி இல்லை .ஏன்னா எனக்கு எதுவும் தெரியாது .உங்கள விட எனக்கே நிறைய டவுட் இருக்கு

Chitra said...

நல்ல டவுட்டு... கிளியர் ஆச்சுனா, அடுத்த பதிவுல போடுங்க... தெரிஞ்சிக்கிறோம். ஹி,ஹி,ஹி,ஹி....

அமுதா கிருஷ்ணா said...

கருப்பு வேண்டாமே மற்றபடி சித்ரா சொன்னது தான் நானும் கேட்கிறேன்..

Unknown said...

உங்க டவுட்ட தீர்த்து வைக்கற அளவுக்கு எனக்கு விஷயம் பத்தாது, ஆனா இப்ப இருக்குற டெம்ப்ளேட் கண்ண உறுத்துதுங்கறதுதான் நிஜம், ஆனா சொன்னா தப்பா நினைச்சிக்குவீங்கன்னுதான் சொல்லல, வெள்ளை பேக்ரவுண்டுல கருப்புல எழுதுனா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.

karthikkumar said...

கருப்ப தவிர உங்களுக்கு புடிச்ச கலர போடுங்க என்ன நாஞ் சொல்றது?

அருண் பிரசாத் said...

1. dashboard ல் ADD என்பதை கிளிக் செய்து... மற்ற பதிவுகளை சேர்க்கலாம்
2. SK சொன்னது போல google connect try பண்ணுங்க
3. blogger website தரும் டெம்ப்பிளேட் உபயோகிங்க... என்னுடையதும் கருப்பு backgroundதான் ஆனால் வெள்ளை எழுத்துக்கள்... முயற்சி செய்யுங்கள்... இது வரை என்னுடைய டெம்பிளேட் பற்றி யாரும் குறை சொல்லவில்லை
4. பதிவு வெளியிட 10 - 11 சரியான நேரம்... நான் அதைதான் செய்கிறேன்... கண்டிப்பாய் ஞாயிறு போட வேண்டாம்
5. follow point 1

NaSo said...

சன்மானம் எவ்வளவுன்னு சொல்லுங்க நான் பதில் சொல்லறேன்.

துமிழ் said...

இப்போது இருக்கிற பிளாக்கர் டிசைன் மூலம் ஒருநாளைக்கு ஒரு கலராய்ப் போட்டு பிடித்ததை எடுத்துக்கலாமே நண்பா

Unknown said...

மேக்சிமம் இதெல்லாம் டெக்னிக்கல் ஃபால்ட்தான்..

Geetha6 said...

nice questions!!

Admin said...

//1. முன்னூறுக்கு மேல் முடியாதா...?//

உங்கள் வலைப்பதிவுகளை எத்தனை நபர்கள் வேண்டுமானாலும் Follow செய்யலாம். ஆனால் நீங்கள் அதிகபட்சமாக 300 வலைப்பதிவுகளை மட்டும் தான் Follow செய்ய முடியும். இதை மாற்ற முடியாது (எனக்கு தெரிந்த மட்டும்).

//2. பின்தொடர்பவர்களுக்கு மரியாதை//
அது நீங்கள் எந்த இடத்தில் followers gadget-ஐ வைக்கிறீர்கள் என்பது பொறுத்து அளவு மாறும்.

Dashboard => Design => page elements பக்கத்திற்கு சென்று, sidebar-ல் இல்லாமல், Blog Posts என்பதற்கு மேலேயோ அல்லது கீழேயோ Add g Gadget என்று இருந்தால் அங்கு வைக்கவும். அப்படி வைத்தால் பெரிதாக வரும்.

அப்படி இல்லையென்றால் நீங்கள்
http://www.google.com/friendconnect பயன்படுத்திக் கொள்ளலாம்.

//3. புது டெம்ப்ளேட் கலர் குறித்து உங்களின் ஆலோசனைகளை வழங்குங்கள்.//

நண்பர் சொன்னது போல்
//முடிந்தவரை வெள்ளை பாக் ரவுண்டில் கருப்பு எழுத்துக்களால் எழுதினால் வாசிப்பவர்களுக்கு சுலபமாக இறக்கும்.//

//4. பதிவை வெளியிட ராகுகாலம், எமகண்டம் பார்க்கவேண்டுமா...?//

அப்படியெல்லாம் எதுவுமில்லை. நீங்கள் என்று பதிவிடுகிறீர்களோ அன்று அதிக நபர்கள் வருவார்கள், ஞாயிற்றுக்கிழமையாயினும்.. முடிந்தவரை இந்திய நேரப்படி காலையில் பதிவிடுவது சிறந்தது. (இது எனது பிளாக்கை வைத்து கணக்கிட்டது)

//5. எல்லாமே என் Dashboard தான்...//

தெரியவில்லை. அது அவர்கள் தளத்தின் FEED-ல் தவறு ஏற்பட்டிருக்கலாம்.

ம.தி.சுதா said...

எனக்க பிரபாவை பிடிக்க இது ஒரு காரணம் தான் முக்கியமானது...

நீங்க எந்த நிறத்தில் பிண்ணணி போட்டாலும் பரவாயில்லை கறுப்பில் போட வேண்டாம்.. (என் நிறம் தான் அதற்காக இலகுவாக படிக்க வேண்டுமல்லவா..)

கூகுல் ரீடரை பாவித்து வாசியுங்கள் இலகுவானதாக இருக்கும்..


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
கருத்தடை முறை உருவான கதை - contraception

Thirumalai Kandasami said...

Boss,,,athukakka en blogyai vittu poirathinga..ungaloda serthe en sangathu alunga motham 5 peru thaan..


http://enathupayanangal.blogspot.com

Anonymous said...

இப்பொழுது என்ன கலரில் டெம்ப்ளேட் மாற்றுவது என்று குழப்பமாக இருக்கிறது//
வெள்ளை பிண்ணனி கறுப்பு எழுத்து இதுதான் அடிப்படை...

Anonymous said...

பதிவை வெளியிட ராகுகாலம், எமகண்டம் பார்க்கவேண்டுமா...?//
காலையில் 6 மணிக்கு வெளியிட்டு விட்டால் இரவு 12 மணி வரை நல்ல ஹிட்ஸ் இருக்கும்..காலை 11 மணிக்குள் வெளியிட்டு விட்டால் மற்ற பதிவர்கள் ஓட்டு ,கமெண்ட் போட வசதியா இருக்கும்..மொய்ய வெச்சிட்டு அடுத்த வேளைய பார்க்க போலாம் இல்ல..ஞாயிற்று கிழமையும் ஹிட்ஸ் கிடைக்கிறது..கொஞ்சம் குறைவு அவ்வளவுதான்...மதியத்துக்கு மேல் ரொம்ப கம்மி..பீச்சுக்கு காத்து வாங்க..தண்ணி அடிக்க போயிடுவாங்களாக்கும்.

Anonymous said...

இப்பொழுது என்ன கலரில் டெம்ப்ளேட் மாற்றுவது என்று குழப்பமாக இருக்கிறது//
பல வெற்றிகரமான இணையதளங்களை பார்வை இடுங்கள்...சுலபமாக புரியும்...மெஜாரிட்டி என்ன கலர் என்று

NKS.ஹாஜா மைதீன் said...

நம் வலைப்பூக்களுக்கு தூணாக விளங்குவதே followers தான்.....

இந்த அருமையான கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.....

Philosophy Prabhakaran said...

@ விக்கி உலகம், LK, எஸ்.கே, பார்வையாளன், ஹரிஸ், Ananthi, எப்பூடி.., ♥ RomeO ♥, எஸ்.கே, nis, வெறும்பய, ராஜ நடராஜன், நா.மணிவண்ணன், Chitra, அமுதா கிருஷ்ணா, இரவு வானம், karthikkumar, அருண் பிரசாத், நாகராஜசோழன் MA, துமிழ், பதிவுலகில் பாபு, Geetha6, Abdul Basith, ம.தி.சுதா, Thirumalai Kandasami, ஆர்.கே.சதீஷ்குமார், NKS.ஹாஜா மைதீன்

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவை சிறப்பியுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ விக்கி உலகம்
// இதுக்கு தான் பிரபலம் ஆகிட்டாலே நெறய உழைக்க மற்றும் தெரிஞ்சிக்க வேணும் போல //

பிரபலம் எல்லாம் ஆகலை நண்பா... ஆனா பிரபலம் ஆகணும்னு ஆசை...

Philosophy Prabhakaran said...

@ LK
// ௩ உங்களுக்கு பிடிச்ச கலர் நீங்களே தேர்வு செய்ங்க. ஆனால் கருப்பு வேண்டாம்

௪ பொதுவா என் பதிவு அனைத்தும் அதிகாலையில் போடுவேன். எல்லா நாடுகளையும் கவர் செஞ்சுடலாம் //

உங்களுடைய பதில்களில் இந்த இரண்டும் பயனுள்ளதாக அமைந்தது நண்பரே... நன்றி...

Philosophy Prabhakaran said...

@ எஸ்.கே
// முதல் விஷயம் அதிகமான ஃபாலோயர் விஷயம் என்பது டேஷ்போர்டில் நீங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் சேர்க்க முடியாதுதான். எனவே நான் பதிவுகளின் அப்டேட் காண கூகிள் ரீடரை உபயோகிக்கிறேன். எனவே ஃபோலோ செய்கிற வலைப்பூக்களை டெலீட் செய்ய வேண்டிய அவசியமில்லை! //
// இரண்டாவது விஷயம்: பெரிய ஃபாலோயர் விட்ஜட் மிக எளிது!
http://www.google.com/friendconnect/
இங்கே செல்லுங்கள்!(sign in செய்துள்ளதா என பார்க்கவும்) membersஐ கிளிக் செய்யுங்கள்! பிறகு width மற்றும் row ஐ விருப்பம்போல் தேர்வு செய்து பெரிதாக்கிக் கொள்ளலாம். அந்த பக்கத்திலேயே உங்கள் விட்ஜட் தெரியும் அதனால் எளிதில் மாற்றங்கள் செய்யலாம். நிறம் கூட மாற்றலாம்! //

விரிவான விளக்கங்கள் எழுதியதற்கு நன்றி... கனவுகளுக்கு மட்டுமே விளக்கம் அளிப்பீர்கள் என்று கருதினேன்... உங்கள் பதில்களில் முதலிரண்டும் அருமையாகவும் பயனுள்ளதாகவும் அமைந்திருந்தன...

Philosophy Prabhakaran said...

@ எப்பூடி..
// முடிந்தவரை வெள்ளை பாக் ரவுண்டில் கருப்பு எழுத்துக்களால் எழுதினால் வாசிப்பவர்களுக்கு சுலபமாக இறக்கும். //

நன்றி நண்பரே... உங்களது இந்த பதில் பயனுள்ளதாக இருந்தது...

// எனக்குய் எழுதியதை வைத்திருக்கு மளவிற்கு பொறுமையில்லை, எத்தனை மணிக்கு எழுதி முடிகிறதோ அத்தினை மணிக்கே போஸ்ட் செய்து விடுவேன். //

நண்பரே... கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் நள்ளிரவில் வெளியிடுவதால் உங்களுடைய நல்ல பதிவிற்கும் சில நேரங்களில் போதிய வரவேற்பில்லாமல் போய்விடுகிறது...

Philosophy Prabhakaran said...

@ வெறும்பய
// நண்பரே template மாற்றுவதற்கு நிறைய தளங்கள் உள்ளன.. //

நீங்கள் கொடுத்துள்ள இணைய முகவரிகள் அனைத்துமே பயனுள்ளதாக இருக்குமென்று நம்புகிறேன்... ஹி... ஹி... இன்னும் பயன்படுத்தி பார்க்கவில்லை... இன்றிரவு பார்த்துவிடுகிறேன்...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அடடா பிலாசபியே கேள்வி கேட்டா நாங்க என்ன செய்ய? ஹா ஹா...ஜஸ்ட் கிட்டிங்... நான் ரெம்ப லேட்... எல்லாரும் பதில் சொல்லிட்டாங்க போல இருக்கே... ப்ளாக் நட்பு இருக்க பயமேன்...

Philosophy Prabhakaran said...

@ ராஜ நடராஜன்
// எனக்கு தமிழ்மணமே சரணமப்பா:) //

நல்லது... ஆனால் டேஷ்போர்டில் படித்தால் நம் தளத்திற்கு வழமையாக வரும்படி சில நண்பர்கள் கிடைப்பார்கள்...

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன்
// மேற்கண்ட சந்தேகங்களுக்கு சிறந்த முறையில் விளக்கம் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். //

ஒரு ப்லோவுல சொல்லிட்டேன்... இப்போ என்ன கொடுக்குறதுன்னே தெரியல...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Following more than 300? wow...

Philosophy Prabhakaran said...

@ அருண் பிரசாத்
// பதிவு வெளியிட 10 - 11 சரியான நேரம்... நான் அதைதான் செய்கிறேன்... கண்டிப்பாய் ஞாயிறு போட வேண்டாம் //

நன்றி நண்பரே... உங்களுடைய பதில்களில் இது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது...

Philosophy Prabhakaran said...

@ துமிழ்
// இப்போது இருக்கிற பிளாக்கர் டிசைன் மூலம் ஒருநாளைக்கு ஒரு கலராய்ப் போட்டு பிடித்ததை எடுத்துக்கலாமே நண்பா //

நல்ல ஐடியா... கருத்தில் கொள்கிறேன் நண்பரே...

Philosophy Prabhakaran said...

@ Geetha6
// nice questions!! //

ஆஹா... இதுக்கும் டேப்லெட் பின்னூட்டம் போடா ஆரம்பிச்சிட்டீங்களா... நீங்க திருந்தவே மாட்டீங்களா....

Philosophy Prabhakaran said...

@ Abdul Basith
விரிவான பதில்கள் எழுதியதற்கு மிக்க நன்றி நண்பரே...

// அப்படி இல்லையென்றால் நீங்கள்
http://www.google.com/friendconnect பயன்படுத்திக் கொள்ளலாம். //
//முடிந்தவரை வெள்ளை பாக் ரவுண்டில் கருப்பு எழுத்துக்களால் எழுதினால் வாசிப்பவர்களுக்கு சுலபமாக இறக்கும்.//

உங்கள் பதில்களில் இவை இரண்டும் சிறப்பு...

Philosophy Prabhakaran said...

@ ம.தி.சுதா
// எனக்க பிரபாவை பிடிக்க இது ஒரு காரணம் தான் முக்கியமானது... //

ம்ம்ம்... டெம்ப்ளேட் மாற்ற முடிவு செய்ததற்கு நீங்களும் ஒரு காரணம்... நன்றி...

// நீங்க எந்த நிறத்தில் பிண்ணணி போட்டாலும் பரவாயில்லை கறுப்பில் போட வேண்டாம்.. (என் நிறம் தான் அதற்காக இலகுவாக படிக்க வேண்டுமல்லவா..)

கூகுல் ரீடரை பாவித்து வாசியுங்கள் இலகுவானதாக இருக்கும்.. //

உங்களுடைய இந்த பதில்கள் பயனுள்ளதாக இருந்தன...

Philosophy Prabhakaran said...

@ Thirumalai Kandasami
// Boss,,,athukakka en blogyai vittu poirathinga..ungaloda serthe en sangathu alunga motham 5 peru thaan..//

பயப்படாதீங்க... தொடர்ந்து பதிவெழுதும் யாரையும் நான் விட்டுகொடுக்க மாட்டேன்...

Philosophy Prabhakaran said...

@ ஆர்.கே.சதீஷ்குமார்
// வெள்ளை பிண்ணனி கறுப்பு எழுத்து இதுதான் அடிப்படை... //
// காலையில் 6 மணிக்கு வெளியிட்டு விட்டால் இரவு 12 மணி வரை நல்ல ஹிட்ஸ் இருக்கும்..காலை 11 மணிக்குள் வெளியிட்டு விட்டால் மற்ற பதிவர்கள் ஓட்டு ,கமெண்ட் போட வசதியா இருக்கும்..மொய்ய வெச்சிட்டு அடுத்த வேளைய பார்க்க போலாம் இல்ல..ஞாயிற்று கிழமையும் ஹிட்ஸ் கிடைக்கிறது..கொஞ்சம் குறைவு அவ்வளவுதான்...மதியத்துக்கு மேல் ரொம்ப கம்மி..பீச்சுக்கு காத்து வாங்க..தண்ணி அடிக்க போயிடுவாங்களாக்கும். //

உங்களுடைய இந்த பதில்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தன... விரிவாக விளக்கம் தந்ததற்கு நன்றி நண்பரே...

Philosophy Prabhakaran said...

@ அப்பாவி தங்கமணி
தாமதமாக வருகை தந்ததற்கு ஒரு குட்டு... இதுவும் ஜஸ்ட் கிட்டிங்...

மோகன்ஜி said...

பிரபாகரன்! நீங்க இவ்வளவு பேருக்கு செல்லமா?! சந்தோஷமாய் இருக்கிறது. எல்லோரும் ஆலோசனைகளை குவிச்சிட்டாங்களே!

அப்பாவி தமிழன் said...

பதிவு எழுதறது நம்ம சந்தோசத்துக்காக தானே , நம்ம பதிவ படிக்கணும் நினைக்கறவங்க எப்ப எழுதினாலும் வந்து படிப்பாங்க , நீங்க ஞாயிற்றுக்கிழமை போட்டாலும் அத திங்கள் கிழமை படிப்பாங்க , ஆனா நீங்க ஹிட்ஸ் எதிர் பார்த்து போட்டிங்கன்னா 10 - 11 தான் நல்ல நேரம் ( இந்திய நேரப்படி )

அன்பரசன் said...

//நண்பர்கள் சிலர் இது கண்ணை உறுத்தும் விதம் இருப்பதாக கருத்து தெரிவிக்கின்றனர்.//

எனக்கும் அதே உணர்வுதான்.

Unknown said...

//பிரபாகரன்! நீங்க இவ்வளவு பேருக்கு செல்லமா?! சந்தோஷமாய் இருக்கிறது. எல்லோரும் ஆலோசனைகளை குவிச்சிட்டாங்களே!//

Philosophy Prabhakaran said...

@ மோகன்ஜி & பாரத்... பாரதி...
// பிரபாகரன்! நீங்க இவ்வளவு பேருக்கு செல்லமா?! சந்தோஷமாய் இருக்கிறது. எல்லோரும் ஆலோசனைகளை குவிச்சிட்டாங்களே! //

ஆம்... எல்லோரும் என்னுடைய உ.பிக்கள் மற்றும் ர.ரக்கள்...

Philosophy Prabhakaran said...

@ அப்பாவி தமிழன்
// பதிவு எழுதறது நம்ம சந்தோசத்துக்காக தானே , நம்ம பதிவ படிக்கணும் நினைக்கறவங்க எப்ப எழுதினாலும் வந்து படிப்பாங்க , நீங்க ஞாயிற்றுக்கிழமை போட்டாலும் அத திங்கள் கிழமை படிப்பாங்க //

சரிதான்.... ஆனால் நமக்கு ஹிட்ஸும் புதிய வாசகர்களின் வருகையும் தேவைப்படுகிறது...

Philosophy Prabhakaran said...

@ அன்பரசன்
//நண்பர்கள் சிலர் இது கண்ணை உறுத்தும் விதம் இருப்பதாக கருத்து தெரிவிக்கின்றனர்.//
எனக்கும் அதே உணர்வுதான்.

இன்னும் ஒரு வாரத்திற்குள் மாற்றி விடுகிறேன்...

Anonymous said...

எனக்கும் இது போல சில சந்தேகங்கள் உள்ளன ,,,, தங்கள் முலம், ஒரு சில சந்தேகத்திற்கு விடை கிடைத்துவிட்டது.. நன்றி

Anonymous said...

எப்படி எல்லாம் டெவெலப் ஆகி போயிட்டு இருக்காங்க இவிங்க! ஆத்தாடி!

சி.பி.செந்தில்குமார் said...

1.வெள்ளை பேக் கிரவுண்ட் ஓக்கே

2.பதிவிட உகந்த நேரம் காலை 6 மணி

3.ஞாயிறு ,சனி பதிவு போட்டா ஹிட்ஸ் 40% குறையும்.

Paul said...

உங்களுடைய ஐந்தாவது கேள்விக்கு ஒரு அழகான தீர்வு இருக்கிறது நண்பரே.. கூகிள் ரீடர் என்பதை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்று தெரியவில்லை. இந்த லின்க்கை http://www.google.com/reader/view/ உபயோகியுங்கள். நீங்கள் பின்பற்றும் எல்லா பிளாக்கின் புதிய பதிவுகளை உங்களுக்கு தெரிவிப்பதோடு, அந்த பிளாக்குகளை 'group' பண்ணி படிக்கவும் செய்யலாம்.. நிறைய உபயோகமான அம்சங்கள் இருக்கும் அதில்..!!

சாமக்கோடங்கி said...

//ஞாயிறு பதிவுக்கு வரவேற்பு இருக்காது என்பது தவறு. அலுவலக லேப்டாப்பை வீட்டில் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது .//

ஓ.. இது தான் சேதியா.. அவனவனுக்கு வேலை செய்யவே நேரம் போதவில்லை.. அப்ப எங்களமாறி மாசா மாசம் பணம் கட்டி நெட்டு வாங்கி படிச்சிகிட்டு இருக்கவங்க எல்லாம்...???

உழைக்க வேண்டிய நேரத்தில் ப்ளாக் படித்துக் கொண்டும் அரட்டை அடித்துக் கொண்டும், இருந்து விட்டு, நீதி நியாயம் தர்மம் என்று பேசுபவர்கள் தான் இங்கு அதிகமோ....

இராஜராஜேஸ்வரி said...

உங்களுக்கு வந்த பின்னுட்டாங்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனக்குக் கேட்கத்தெரியவில்லை. உதவிக்கு நன்றி.