5 December 2010

இது என்ன மாற்றம்...? – தமிழ்மணம்

வணக்கம் மக்களே...

தொடர்ந்து மூன்றாவது வாரமாக எனது பதிவை TOP 20 பட்டியலில் சேர்த்து என் வயிற்றில் வோட்காவை வார்த்திருக்கிறது தமிழ்மணம். அநேகமாக தமிழ்மணம் TOP 20 பட்டியல் வெளியிடுவது இது நான்காவது வாரம் என்றே நினைக்கிறேன். முதல் வாரத்தில் எனது பதிவு பட்டியலில் இல்லை. அப்போ ச்சீ... இந்த பழம் புளிக்கும் என்று பாவலா காட்டிக்கொண்டேன். இரண்டாவது வாரம் சில அசம்பாவிதங்களால் எனக்கு ஆயிரக்கணக்கில் ஹிட்ஸ் கிடைத்து பதிமூன்றாவது இடத்தை பெற்றேன். இது ஒருவித போதையைத் தர அடுத்த வாரம் உற்சாகமாக எழுதி பதினோராவது இடமும் கடந்த வாரம் பதினாறாவது இடமும் பெற்றிருக்கிறேன். தமிழ்மணம் தளத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை பட்டியலை வெளியிடும் தமிழ்மணம் இந்த வாரத்தில் இருந்து சனிக்கிழமை பட்டியல் வெளியிட ஆரம்பித்துவிட்டது என்று கருதுகிறேன்.

தமிழ்மணம் நான் தவறிப்போய் படிக்காமல் விட்ட சில பதிவர்களை வாராவாரம் அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறது. கிரி, மானங்கெட்ட தமிழன், ஜோதிஜி என்று இந்த வாரமும் எனக்கு மூன்று முத்தான பதிவர்களை தமிழ்மணம் அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழ்மணத்திற்கு நன்றிகள், பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். கடந்த வாரம் மாற்று என்ற பதிவினை அறிமுகப்படுத்தியது. இந்த வாரம் மாற்று, தமிழ்மணத்தின் மொத்த தர வரிசையையும் மாற்றி முதலிடம் பிடித்திருக்கிறது. அவருக்கு ஒரு பூச்செண்டு.

எனக்கு மிகவும் பிடித்தமான பதிவர்களில் ஒருவரான அட்ராசக்க செந்தில்குமார் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பது மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால் அட்ராசக்க என்ற அவரது பதிவின் பெயர் சிபி பக்கங்கள் என்று வெளியாகி உள்ளது. அவருக்கு மட்டுமல்ல நான் உட்பட பலருக்கு தமிழ்மணம் கணக்கை தொடங்கும்போது என்ன பெயர் கொடுத்தோமோ அதுவே இன்றுவரை தொடர்கிறது. நான் ஆரம்ப ஆர்வக்கோளாறில் Philosophies Redefined என்று ஆங்கிலத்தில் தலைப்பு கொடுத்திருந்தேன். அது இன்றுவரை தொடர்கிறது. தமிழ்மணம் தளத்திற்கு சென்று ஆராய்ந்தும் பார்த்துவிட்டேன் பலனளிக்கவில்லை. இது சம்பந்தமாக தமிழ்மணத்திற்கு மெயில் அனுப்பலாமா என்று தோன்றுகிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்...?

தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கும் தமிழ்மருத்துவம் துமிழுக்கு கூடிய விரைவில் முதலிடம் பிடிக்க வாழ்த்துக்கள். நீங்கள் இல்லாத ஒரு பதிவுலகத்தை நினைத்துப் பார்க்கமுடியவில்லை. இங்கே நிறைய பகுத்தறிவாளர்கள், ஆன்மிகவாதிகள், கம்யூனிஸ்டுகள் இருக்கலாம். ஆனால் உங்களைப்போல ஒரு மருத்துவர் கிடைப்பது அரிது. உங்கள் சேவை எங்களுக்கு தேவை. மற்றொரு மருத்துவ பதிவரான அலைகள் பாலா அதிக ஆணி காரணமாக அதிகம் எழுதுவதில்லை. அவரை கூடிய விரைவில் வலையுலகம் திரும்ப வேண்டுகிறேன்.

நான் வலையுலகம் வந்த புதிதில் இருந்து தொடர்ந்து விரும்பி படித்துவரும் பதிவு சுடுதண்ணி. முன்பைப் போல முழுவேகத்தில் எழுதாமல் இருந்திருந்தார். இப்பொழுது மறுபடி ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவருக்கும் வாழ்த்துக்கள். அவரது சிஷ்யர் ஜில்தண்ணியும் ஒரு காலத்தில் ஓஹோவென்று பொழிந்துக்கொண்டிருந்தவர் இப்பொழுது ஐஸ்கட்டியாக மாறிவிட்டார். அவரும் பழையபடி ஜில்லென்று எழுதினால் நன்று.

வாராவாரம் எனக்கு முன்னால் என்னுடைய தர வரிசையை பார்த்து வாழ்த்து தெரிவிக்கும் ரஹீம் கஸாலிக்கு முதலில் நன்றிகள். நீங்கள் சொல்லாமல் இருந்திருந்தால் நான் ஞாயிறு காலைதான் பட்டியலை பார்த்திருப்பேன். மீண்டும் TOP 20க்குள் நுழைந்திருக்கும் உங்களுக்கு ஒரு பொக்கே.

பிச்சைக்காரன் (இதுவும் பதிவரின் பெயர்தான்) கடந்த வாரமும் இந்த வாரமும் பதினெட்டாவது இடத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்கிறார். என்ன நண்பா மேலே போகும் எண்ணம் இல்லையா...? கூடிய சீக்கிரம் முதல் பத்திற்குள் நுழையுற வழிய பாருங்க.

பெயர் சொல்ல விருப்பமில்லை (இருந்துவிட்டு போகட்டும்). இவரும் நான் நீண்டகாலமாக விரும்பி படிப்பவர்களில் ஒருவர். கடந்த மூன்று வாரங்களாக 21வது இடத்திலேயே நிலையாக இருந்து வந்தவர் ஒரு படி முன்னேறி 20வது இடத்தை பிடித்திருக்கிறார். வாழ்த்துக்கள்.

மேலும் தொடர்ந்து TOP 20 பட்டியலில் இடம்பெற்றுவரும் பிரபல பதிவர்கள் வினவு, கே.ஆர்.பி.செந்தில், ஜாக்கி, தீராத பக்கங்கள், டோண்டு, உண்மைத் தமிழன், வேல் தர்மா, வெட்டிப்பேச்சு சித்ரா, கேபிள், நண்டு@நொரண்டு, ரிலாக்ஸ் ப்ளீஸ், மங்குனி அமைச்சர், ராஜ நடராஜன் போன்றவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

டிஸ்கி: தலைப்பு தேடி அலைந்துக்கொண்டிருக்கும் வேளையில் வாராவாரம் மிகவும் சுலபமாக ஒரு தலைப்பை ஏற்பாடு செய்துகொடுக்கும் தமிழ்மணமே... உன் மணம் உலகெங்கும் கமழட்டும்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

60 comments:

ஹரிஸ் Harish said...

present...

ஆமினா said...

வாழ்த்துக்கள்

Chitra said...

அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! உங்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

Unknown said...

வாழ்த்துக்கள்

மோகன்ஜி said...

பிரபாகரன்! மனமுவந்த பாராட்டுக்கள் உங்களுக்கும் ஏனைய வெற்றியாளர்களுக்கும்! கலக்குங்க!

Madhavan Srinivasagopalan said...

//கடந்த மூன்று வாரங்களாக 21வது இடத்திலேயே நிலையாக இருந்து வந்தவர் ஒரு படி முன்னேறி 20வது இடத்தை பிடித்திருக்கிறார். வாழ்த்துக்கள். //

HA.. Ha. HA...

Vaazhththukkal.. PP

டிலீப் said...

வாழ்த்துக்கள் நண்பா
தகவல் உலகம்

சி.பி.செந்தில்குமார் said...

>>>தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கும் தமிழ்மருத்துவம் துமிழுக்கு கூடிய விரைவில் முதலிடம் பிடிக்க வாழ்த்துக்கள். தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கும் தமிழ்மருத்துவம் துமிழுக்கு கூடிய விரைவில் முதலிடம் பிடிக்க வாழ்த்துக்கள்....

ரிப்பீட்டு

சி.பி.செந்தில்குமார் said...

தொடர்ந்து மூன்றாவது வாரமாக எனது பதிவை TOP 20 பட்டியலில் சேர்த்து என் வயிற்றில் வோட்காவை வார்த்திருக்கிறது தமிழ்மணம்.>>>

எஸ் நான் சனிக்கிழ்மையே உங்க பதிவுல கமெண்ட் போட்டு வாழ்த்து சொன்ன்னேனே

சி.பி.செந்தில்குமார் said...

>>>தமிழ்மணம் TOP 20 பட்டியல் வெளியிடுவது இது நான்காவது வாரம் என்றே நினைக்கிறேன்.


இல்லை இது 5 வது வராம்

சி.பி.செந்தில்குமார் said...

>>>வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை பட்டியலை வெளியிடும் தமிழ்மணம் இந்த வாரத்தில் இருந்து சனிக்கிழமை பட்டியல் வெளியிட ஆரம்பித்துவிட்டது என்று கருதுகிறேன்.>>

இல்லை,இந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவே வெளியிட்டது

ஜெயந்த் கிருஷ்ணா said...

வாழ்த்துக்கள் நண்பா

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள் நண்பா.

அன்பரசன் said...

வாழ்த்துக்கள்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

உங்களுக்கு வாழ்த்துக்கள்...!! தொடர்ந்து கலக்குங்க..!

சிவராம்குமார் said...

வாழ்த்துக்கள் பிரபா, உங்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும்!

a said...

வாழ்த்துக்கள்...........

துமிழ் said...

நன்றிங்க நண்பரே ...

Kousalya Raj said...

வாழ்த்துக்கள்...!!

Unknown said...

அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

pichaikaaran said...

பட்டியலில் இஅட்ம் பெற்றதற்கு பாராட்டு,,

படத்துக்கு என்னுடன் வராமல், இன்னொருவருடன் செல்வதற்கு குட்டு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்துக்கள், உங்களுக்கும் மற்ற அனைவருக்கும்!

மாணவன் said...

உங்களுக்கும் மற்ற அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

வாழ்க வளமுடன்

எப்பூடி.. said...

அனைவருக்கும் பாராட்டுக்கள்.

எல் கே said...

ஹ்ம்ம் இடம்பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். எந்த அடிப்படையில் சொல்கிறார்கள் என்பது புரியவில்லை. பின்னூட்டம் / ஒட்டு அடிப்படையில் என்றால் அது தவறு.

தினேஷ்குமார் said...

கலக்குங்க நண்பரே ....
அனைவருக்கும் மனமார்ந்த வணக்கங்கள் ! உங்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

Unknown said...

வாழ்த்துக்கள் பிரபா

வெங்கட் said...

ஹி., ஹி., ஹி..!!

இந்த வாரம் நம்ம Formula தப்பா
போச்சு.. கூடிய விரைவில் புதிய
Formula கண்டுபிடித்து
தமிழ்மணம் Top 20 -க்குள் வர
முயற்சி செய்கிறேன்..!!

Jackiesekar said...

வாழ்த்துக்கள் தம்பி.

ம.தி.சுதா said...

வாழ்த்துக்கள் சகோதரா... தங்கள் நிலை அப்படியெ இருக்க என் வாழ்த்துக்கள் சேரட்டும்...

karthikkumar said...

வாழ்த்துக்கள் நண்பரே

உண்மைத்தமிழன் said...

ஜோதியில் கலந்திருக்கும் தம்பிக்கு எனது வாழ்த்துக்கள். இந்த வரிசை இப்படியே மென்மேலும் தொடர்ந்து நீடிக்கும்படி செய்யும்வகையில் தங்களுடைய உழைப்பை வலையுலகில் காட்ட வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வாழ்த்துக்கள்...!!

ஜில்தண்ணி said...

VAAZTHUKKALA MAAMS :)

Riyas said...

வாழ்த்துக்கள் நண்பா...

NaSo said...

வாழ்த்துக்கள் பாஸ்!

யோ வொய்ஸ் (யோகா) said...

உங்களது தொடர் பதிவு அழைப்பை ஏற்று எழுதியுள்ளேன்.


கமல் படங்களில் பிடித்த 10 படங்கள்
http://yovoicee.blogspot.com/2010/12/10.html

எஸ்.கே said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்!

குறையொன்றுமில்லை. said...

வாழ்த்துக்கள்.

ஜோதிஜி said...

பிரபாகரன் நலமா?

உங்கள் பெயரைப் பார்த்து (?) உள்ளே வந்தேன். அந்த நிமிடம் வரைக்கும் கீழே இருக்கும் என் பெயரை பார்க்கவில்லை. நம்பித்தான் ஆக வேண்டும். காரணம் இது போன்ற ஒரு அமைப்பை உருவாக்கிய தமிழ்மண குழுவினருக்கு காரசாரமாய் ஒரு கடிதம் கூட எழுதினேன்.

ஆனால் உங்களின் பாராட்டுரைகளும் வார்த்தைகளையும் பார்க்கும் போது தமிழ்மண வரிசைப்பட்டியலில் வந்ததை விட சற்று மகிழ்ச்சியாய் இருக்கிறது.

காரணம் இந்த பட்டியலை நான் எப்போதும் பார்ப்பதில்லை.

Unknown said...

டாப் இருபது பதிவர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்..
பிரபாகரன் முந்துவதற்கும் வாழ்த்துக்கள்.

THOPPITHOPPI said...

வாழ்த்துக்கள்
இயல்பான உங்கள் எழுத்துக்கே அதில் இடம் கொடுக்கலாம்.

Anonymous said...

வெற்றிக்கொடி கட்டுங்கள் பிரபா!

idroos said...

Ennanga mapla harish perai uttuteengale

Philosophy Prabhakaran said...

@ ஹரிஸ், ஆமினா, Chitra, கலாநேசன், மோகன்ஜி, Madhavan Srinivasagopalan, டிலீப், சி.பி.செந்தில்குமார், வெறும்பய, சே.குமார், அன்பரசன், Ananthi, சிவா என்கிற சிவராம்குமார், வழிப்போக்கன் - யோகேஷ், துமிழ், Kousalya, பதிவுலகில் பாபு, பார்வையாளன், பன்னிக்குட்டி ராம்சாமி, மாணவன், எப்பூடி.., LK, dineshkumar, நா.மணிவண்ணன், வெங்கட், ஜாக்கி சேகர், ம.தி.சுதா, karthikkumar, உண்மைத் தமிழன், பிரஷா, உலவு.காம், ஜில்தண்ணி - யோகேஷ், Riyas. நாகராஜசோழன் MA, யோ வொய்ஸ் (யோகா), எஸ்.கே, Lakshmi, ஜோதிஜி, பாரத்... பாரதி..., THOPPITHOPPI, சிவகுமார், ஐத்ருஸ்

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவை சிறப்பியுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
// எஸ் நான் சனிக்கிழ்மையே உங்க பதிவுல கமெண்ட் போட்டு வாழ்த்து சொன்ன்னேனே //
ஆமாம்.... சொல்லியிருந்தீங்க... அதற்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்...

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
// இல்லை இது 5 வது வராம் //
// இல்லை,இந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவே வெளியிட்டது //
அப்படியா... இருக்கட்டும்...

Philosophy Prabhakaran said...

@ பார்வையாளன்
// படத்துக்கு என்னுடன் வராமல், இன்னொருவருடன் செல்வதற்கு குட்டு //

மூன்று பெரும் ஒன்றாக செல்லலாம் என்றுகூட எனக்கு ஒரு எண்ணம் இருந்தது... சரிவர organize செய்ய இயலாமல் போய்விட்டது...

Philosophy Prabhakaran said...

@ LK
// எந்த அடிப்படையில் சொல்கிறார்கள் என்பது புரியவில்லை. பின்னூட்டம் / ஒட்டு அடிப்படையில் என்றால் அது தவறு. //

பின்னூட்டம் + ஓட்டு + ஹிட்ஸ் வைத்து கணக்கிடுவதாக குறிப்பிட்டிருக்கின்றனர்...

Philosophy Prabhakaran said...

@ வெங்கட்
// கூடிய விரைவில் புதிய
Formula கண்டுபிடித்து
தமிழ்மணம் Top 20 -க்குள் வர
முயற்சி செய்கிறேன்..!! //

நல்லது... அடுத்த வாரத்திற்குள் நீங்கள் பார்முலா கண்டுபிடித்து முதல் இருபதிற்குள் இடம் பிடிக்க வாழ்த்துக்கள்...

Philosophy Prabhakaran said...

@ உண்மைத் தமிழன்
// ஜோதியில் கலந்திருக்கும் தம்பிக்கு எனது வாழ்த்துக்கள் //
ஜோதியில் என்னையும் இணைத்துக்கொண்டதற்கு நன்றி அண்ணே...

// இந்த வரிசை இப்படியே மென்மேலும் தொடர்ந்து நீடிக்கும்படி செய்யும்வகையில் தங்களுடைய உழைப்பை வலையுலகில் காட்ட வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..! //
நிச்சயம் தீயாக வேலை செய்கிறேன்...

Philosophy Prabhakaran said...

@ யோ வொய்ஸ் (யோகா)
// உங்களது தொடர் பதிவு அழைப்பை ஏற்று எழுதியுள்ளேன். //

தொடர்பதிவு எழுதியமைக்கு மிக்க நன்றி நண்பரே...
உங்கள் தேர்வுகளில் விக்ரம், மூன்றாம் பிறை படங்களை நான் பார்த்ததில்லை... அது தவிர மற்ற படங்கள் அனைத்தும் எனக்கும் பிடிக்கும்...
இணைத்துள்ள படங்கள் அருமை...
லோஷன், கன்கொன் என்று பிரபல பதிவர்களை எழுத அழைத்திருக்கிறீர்கள்... இதனால் இந்த தொடர்பதிவு நன்கு பரவும் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி...

Philosophy Prabhakaran said...

@ ஜோதிஜி
// இது போன்ற ஒரு அமைப்பை உருவாக்கிய தமிழ்மண குழுவினருக்கு காரசாரமாய் ஒரு கடிதம் கூட எழுதினேன் //
உங்களுக்கு இதுபோல பட்டியலிடும் முறை பிடிக்கவில்லையோ... அப்படி காரசாரமாக என்ன எழுதினீர்கள்...

// ஆனால் உங்களின் பாராட்டுரைகளும் வார்த்தைகளையும் பார்க்கும் போது தமிழ்மண வரிசைப்பட்டியலில் வந்ததை விட சற்று மகிழ்ச்சியாய் இருக்கிறது //
ம்ம்ம்... தமிழ்மணம் பட்டியலால் உங்களுக்கு ஒரு நல்ல அறிமுகம் கிடைத்திருக்கிறது என்பதே உண்மை...

Philosophy Prabhakaran said...

@ ஐத்ருஸ்
// Ennanga mapla harish perai uttuteengale //

மன்னிக்கணும் நண்பரே... நான் வெள்ளிக்கிழமை இரவு வெளியான பட்டியலை வைத்து எழுதினேன்... ஆனால் தமிழ்மணம் ஞாயிறு காலை பட்டியலில் சில மாற்றங்களை செய்துவிட்டது...

சி.பி.செந்தில்குமார் said...

@ LK
// எந்த அடிப்படையில் சொல்கிறார்கள் என்பது புரியவில்லை. பின்னூட்டம் / ஒட்டு அடிப்படையில் என்றால் அது தவறு. //

பின்னூட்டம் + ஓட்டு + ஹிட்ஸ் வைத்து கணக்கிடுவதாக குறிப்பிட்டிருக்கின்றனர்...

டாப் 20 யில் வரும் [பிளாக்குகளில் ஹிட்ஸ்,பின்னூட்டம்,கமெண்ட்ஸ் அடிப்படியில் 10 பிளாக்குகளும் ,குவாலிட்டி அடிப்படைய்ல் 10 பிளாக்குகலும் தேர்வு செய்யப்படுகின்றன.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

வாழ்த்துக்கள்.

அஸ்மா said...

வாழ்த்துக்கள் சகோ!

Admin said...

முதலிடம் பெற வாழ்த்துக்கள், நண்பா..!

Prabu Krishna said...

வாழ்த்துக்கள், உங்களுக்கும் மற்ற அனைவருக்கும்

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
அப்படியா... இந்த தகவலை தெரிவித்ததற்கு நன்றி நண்பரே...

@ ஜெஸ்வந்தி - Jeswanthy, அஸ்மா, Abdul Basith, பலே பாண்டியா
வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவை சிறப்பியுங்கள்...